நேற்று சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவரும், காங்கிரஸில் முக்கியப் புள்ளியுமான திரு.டி.சுதர்சனம் அவர்கள், கோவையில் மாரடைப்பால் காலமானார் என்று செய்தி வந்துள்ளது.
பொதுவாக இறந்தவர்களை விமர்சனம் செய்யக் கூடாது என்ற ஒரு கிறுக்குத்தனமான அரசியல் மரபு இந்தியாவில் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.
“இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர்போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்“
என்றுதானே கண்ணதாசன் சொல்லியிருக்கிறார் ?
ராஜீவ் காந்தி இறந்தவுடன், அவர் புனிதராகி விடுகிறார். போபர்ஸ் ஊழல், 4000 சீக்கியர்கள் வெட்டிப் படுகொலை செய்யப் பட்ட போது, ஆலமரத்தின் கீழே விழுந்தால் பூமி அதிரத்தான் செய்யும் என்ற ஆணவம், 20,000 பேரின் உயிர் போகக் காரணமாக இருந்த வாரன் ஆண்டர்சனை தப்ப விட்டது, ஈழத்தில் ஆயிரக்கணக்கான தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்டது, அதற்கு, ராணுவம் ஒரு இடத்திற்கு சென்றால் “அப்படி இப்படித்தான்“ இருக்கும் என்ற வியாக்கியானம் வேறு, இப்படி ராஜீவ் காந்தியைப் பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆனால் ராஜீவ் இறந்து போனவுடன் அவர் புனிதராகிறார். அவர் மனைவிக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கப் படுகிறது. அவர் அந்த வேலையை நிராகரித்து, வேறொருவரை நியமிக்கிறார். இந்த கேலிக்கூத்துக்கள், இந்தியாவுக்கே பிரத்யேகமானவை.
இப்பொழுது இறந்துள்ள டி.சுதர்சனத்தைப் பற்றி பேசுகையில், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் நடைபெற்ற ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத் தொடரில் “மக்களுக்காகவே உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்து போன எம்.எல்.ஏக்கள்“ அனைவரும் ஏழைகளாக இருப்பதால் அவர்களுக்கு வீட்டு மனை ஒதுக்கித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை முன்னெடுத்தது, இருப்பதிலேயே மிகவும் ஏழைக் கட்சியான காங்கிரஸ்தான்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன்தான் இந்த கோரிக்கையை வைக்கிறார்.
நவீன கர்ணணும், வாரி வழங்கும் வள்ளலுமான கருணாநிதி, “ஊரான் வீட்டு நெய்யே… என் பொண்டாட்டி கையே“ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைத்து எம்எல்ஏக்களுக்கும் சென்னை மகாபலிபுரம் அருகே 2400 சதுர அடி வீட்டு மனை என்று அறிவிக்கிறார்.
கொஞ்சூன்டு மான ரோஷத்தோடு இருக்கும் கம்யூனிஸ்ட்டுகள் இதை எதிர்த்தனர். குறிப்பாக எம்எல்ஏ பாலபாரதி, மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்காக அவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறோம், இங்கு வந்து எங்களுக்கு வீட்டு மனை ஒதுக்குங்கள் என்று கேட்டால் மக்கள் என்ன நினைப்பார்கள் என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
உடனடியாக பேச எழுந்த டி.சுதர்சனம் என்ன சொன்னார் தெரியுமா ? “விருப்பம் இல்லாவிட்டால் இடது சாரிகள் வெளியேறலாம். அவர்கள் வீட்டு மனை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று யாரும் கட்டாயப் படுத்தவில்லை“ என்று கூறினார்.
இவ்வாறு, வெள்ள நிவாரணம் பெற வரிசையில் நிற்கும் கூட்டம் போல முண்டியடித்துக் கொண்டு பேசிய டி.சுதர்சனத்தின், சொத்துக்களின் விபரம் என்ன தெரியுமா ?
இந்த விபரங்கள் மே 2006 அன்று உள்ளபடி. இப்போது இதன் மதிப்பு பல மடங்கு உயர்ந்திருக்கும். மேலும், இந்த சொத்தக் கணக்கு “வெள்ளை“. கருப்பு கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
1. ரொக்கம் கையிருப்பு
38,966
15,83,627
3, வங்கியில் பாண்டுகள்,
37,200
டிபென்சர்கள்4. கார் உள்ளிட்ட வாகனங்கள்
12,00,000
5. நகைகள்
11,66,000
6. செம்பரம்பாக்கம் விளை நிலம்
10,00,000
2 ஏக்கர்
7. புதுப்பாக்கம் கிராமம்
6,00,000
1.51 ஏக்கர்8. பொன்னேரி இருளிப்பட்டி
6,00,000
11.51 ஏக்கர்.
9. விலை நிலம் 42.51 ஏக்கர்
10. பண்ருட்டி 2.507 மற்றும் 3.170 ஏக்கர்
9,00,000
11. மணப்பாக்கம் கிராமம் 8.843 ஏக்கர்
5,00,000
12. நொலம்பூர் கிராமம் 1.753 ஏக்கர்
50,00,000
13. அண்ணாநகரில் வணிக வளாகம்
1,50,00,000
4250 சதுர அடி
14. ஷெனாய் நகர் வீடு 3950 ச.அடி
51,00,000
15. ஷெனாய் நகர் வீடு 2800 ச.அடி
25,00,000
மொத்தம்
3,64,74,814
ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நண்பர்களிடம் விசாரித்ததில், மேற்கூறிய மதிப்புகள் பத்தில் ஒரு பங்குதான். அசல் சந்தை மதிப்பு இதை விட பல மடங்கு கூடுதல் என்று கூறுகின்றனர். குறிப்பாக மணப்பாக்கத்தில் எல்லாம் ஒரு ஏக்கர் ஒரு கோடி என்று கூறுகின்றனர்.
சுதர்சனத்தின் மரணம் கூட, சர்ச்சைகளில்லாமல் இல்லை. சுதர்சனம் காங்கிரசில் ஜி.கே.வாசன் கோஷ்டி. 24 அன்று காலை, செம்மொழி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜி.கே.வாசன் கோவை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.
அப்போது அவரை வரவேற்பதற்காக ஜி.கே.வாசன் குழுவைச் சேர்ந்த மாநில இளைஞர் அணித் தலைவர் வி.யுவராஜும், எம்.எல்.ஏ கோவைத் தங்கமும் நின்று கொண்டிருக்கின்றனர். அப்போது திடீரென்று வாசன் வந்து விட, வரிசையில் முன்னால் நின்று கொண்டிருந்த யுவராஜை பின்னுக்குத் தள்ளி விட்டு கோவைத் தங்கம் முந்திக் கொண்டு சென்று சால்வை போர்த்துகிறார்.
இதைக் கண்டு கடும் கோபம் அடைந்த யுவராஜ், அவரை முறைக்கிறார். ஆனால் வாசன் அங்கே இருந்ததால், அமைதியாக இருந்தவர்களுக்குள், வாசன் சென்றவுடன் மோதல் தொடங்கி அது தள்ளுமுள்ளில் சென்று முடிகிறது. அருகில் இருந்த சுதர்சனம், பெரிய மனிதர் அல்லவா ? எப்படி அமைதியாக இருக்க முடியும் ? அதனால் இவர்கள் இருவருக்கிடையில் நுழைந்து சமாதானம் செய்ய முயற்சிக்கிறார்.
அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்தான் சுதர்சனத்திற்கு, வயிற்றின் கீழே அறுவை சிகிச்சை நடைபெற்றிருக்கிறது. இந்த குத்தை வாங்கிய சுதர்சனம், அன்று மாலையே ரத்த வாந்தி எடுக்கிறார்.
உடல்நிலை மிகவும் மோசமாக, உடனடியாக கோவையில் உள்ள கல்பனா மருத்தவமனையில் அனுமதிக்கப் படுகிறார். மறுநாள் 25 காலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப் படுகிறார். 25 காலையிலேயே, சுதர்சனத்தின் உயிர் பிரிந்து விட்டது என்று கூறுகிறார்கள்.
சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல் His condition is critical and he is under intensive treatment என்ற “அல்வாவை“ எல்லோருக்கும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். இறந்த பிறகும், வெளியில் தகவல் சொல்லாமல் இரண்டு நாட்கள் தள்ளிப் போடச் சொல்லி, அவர் குடும்பத்தை ஒத்துக் கொள்ளச் செய்தவர், ஆற்காடு வீராசாமி என்று சுதர்சனம் குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுதர்சனத்தின் குடும்பத்தினர் கொடுத்த நெருக்கடியினால்தான், நேற்று இரவு அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப் பட்டது.
சுதர்சனத்தின் சொத்துப் பட்டியலை பார்த்தீர்கள். இவ்வளவு சொத்துக்களை வைத்துக் கொண்டு, அரசு தரும் ஒரு க்ரவுண்ட் நிலத்துக்கு அலையும் டி.சுதர்சனம், இப்போது அவரோடு என்ன கொண்டு செல்லுகிறார் ?
“காதற்ற ஊசியும் வாராது கண் கடை வழிக்கே“ என்ற சித்தரின் பாடலை படித்திருக்க மாட்டாரோ ?
சவுக்கு
11 comments:
சுதர்சனத்தின் உயிர் பிரிந்தாலும், செம்மொழி மாநாடு நடக்கும் நேரத்தில் அமங்கலமான இந்தச் செய்தி வெளியானால், மாநாட்டின் சிறப்பு கெட்டு விடுமல்லவா ? இதனால், இறந்த செய்தியை வெளியே சொல்லாமல்
அரசியல்வாதி மணிவண்ணன், இதே வேலையை ஒரு திரைப்படத்தில் செய்வார். அது இப்போ உண்மையாயிடுச்சு.
SAVUKKU SIR, NEENGA EZHUDHIYADHIL ONDRUM THAPPILLAI ENDRALUM,IVVALAVU VIRAIVANA VIMARSANAM THEVAIYA? PADHIVU THEVAITHAN.AVASARAPADA VENDAM.......THOTTA.
நான் கூட அவர் உண்மையிலேயே ஏழை என்று நினைத்து விட்டேன். காமராஜர் காலத்தில்தான் மந்திரியாக இருந்தவர் ஏழையாகவே வாழ்ந்து இறந்தார் என்று படித்திருக்கிறேன். இப்போதெல்லாம் வெறும் வார்டு உறுப்பினராக இருப்பவர்களே பெரும் பணக்காரர்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. வெறும் சட்டமன்ற உறுப்பினரான இவரே இப்படியென்றால் அமைச்சர்கள், மற்றும் முதல்வர்? கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவுக்கு சொத்துகள் இருக்கும்.
இது மேட்டர்..
இறந்தவர்களை தியாகியாக்க ஒரு கூட்டமே இருக்கு பாஸ்.
நாட்டின் பாதுகாப்பை மதிக்காம..அதுல ஊழல் பண்ணின ராஜீவ் காந்திய..மக்கள் தியாகி ஆக்கலையா?
அவர் பண்ணிய துரோகங்கள்..ஊழல்களை எல்லாம் அவரோடவே எரிச்சுட்டாங்க..
அன்பு நண்பர் தோட்டா அவர்களே.... இப்போது பேசாமல் எப்போது பேசுவது ? சுதர்சனத்தின் அடுத்த ஆண்டு நினைவு நாளன்றா ? சுதர்சனத்தை ஆகா ஓகோ என்று புகழ்ந்து வந்திருக்கும் இரங்கல் செய்தியை பார்த்தீர்களா ?
மரணத்திற்குப்பின் ஒருவன் புகழ் எச்சத்தால் அறியப்படும்
என்றார் வள்ளுவர். இவர்கள், பாவம், உங்கள் 'ஏச்சினால்' அறியப்படும்.
இனிமேல் சவுக்கின் எழுத்துகளை அலுவலகத்தில் இருந்து கொண்டு படிக்கவே கூடாது என்று முடிவெடுத்து விட்டேன். காரணம், >>"அப்போது மோதிக் கொண்ட கோஷ்டிகள் விட்ட “குத்து“ ஒன்று சுதர்சனம் நெஞ்சில் விழுகிறது"<< என்று படித்த உடனேயே என்னையும் அறியாமல் ஹாஹ்ஹாஹாஹ்ஹாஹாஹ் என்று என்னால் அடக்கவே முடியாமல் மிகமிக சப்தமாக சிரித்து விட்டேன். ஒட்டு மொத்த அலுவலக ஊழியர்களும் என்னை வேடிக்கை பார்த்து, அவர்கள் அனைவரும் சிரித்து விட்டார்கள். என் சிரிப்பிற்கு காரணம் கேட்டார்கள், என்னால் சொல்லவே முடியாமல் என் சிரிப்பு இன்னமும் தொடர்கிறது... ஹாஹ்ஹா ஹாஹ்ஹா ஹாஹ்.... (Abdul Rahman - Dubai)
I salute Savukku for the whiplash.Congress is responsible for the ills of the country and all congressmen are now crorepatis.
DMK is king in Tamilnadu in this respect.Even though AIADMK was also corrupt we can assume they have learnt the lesson.For the sake of liberating Tamilnadu AIADMK,LEFT,VIJAYKANTH,MDMK alliance is must. Also we have to liberate Tamil Media which does not talk about one lakh crore spectrum scam
பரம ஏழைகளான எம்.எல்.ஏ.க்களுக்கு நிலம் வழங்குவதுதானே நல்லதுதானே. ஆனா ஓரு டவுட்டு. நிலத்தை அவுங்க தொகுதியில் வழங்காமல் சென்னை கொடுக்கிறார்களே. அது எதுக்குனுதான் புரியலை.
எல்லாத்துக்கும் மேலாக இந்த சுர்தர்சனம் ஒரு நாயுடு சாதி வெறியன் .ஆனாலும் சாதி வெறித்தனத்தை வெளியே காட்டி கொள்ளாமல் நாசுக்காக நடக்கும் மனிதர் . நாயுடுகள் என்று வந்து விட்டால் கட்சி பாகுபாடு எல்லாம் பார்ப்பது இல்லை ஆட்சியாளர்கள் மாறும்போது சம்பந்தப்பட்ட ஆளுங்கட்சியில் உள்ள நாயுடு பிரமுகர்களின் துணையோடு ஆட்சியாளர்களிடம் நெருங்குவதில் பெரிய கில்லாடி. அதுனால நாயுடுகளிடையே கட்சி வேறுபாடுகளை கடந்து இவருக்கு அபிமானிகள் உண்டு. நாயுடு தொழிலதிபர்களின் தொழில் அபிவிருத்திக்ககா எந்த விதமான பிராடுகளையும் செய்ய துணிந்தவர். ஆந்திராவில் காங்கிரசின் எதிரி கட்சயொயான தெலுங்கு தேச கட்சியின் தலைவரான சந்திரபாபு நாயுடுவோடு ஒரே சாதியை சேர்ந்தவர்கள் என்பதன் அடிப்படையில் மிகுந்த நெருக்கம் உண்டு . விசிய காந்தின் அரசியல் வளர்ச்சிக்கு டெல்லி காங்கிரஸ் மேலிடத்தொடு தொடர்புகளை ஏற்படுத்துவதிலும் திமுகா வால் விசியகாந்தோட கட்சிக்கோ தொழிலுக்கோ எந்த வித பிரச்சினையும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டி கலைஞரிடம் பரிந்து பேசுவதில் இவருக்கும் ஆர்காட்டாருக்கும் சம அளவில் உண்டு
சவுக்கு சவுக்குதான்.
Post a Comment