கர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.
இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா ? நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் ?
இவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன ? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.
“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.
அப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா ?
நக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா ? கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் ?
இந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகளை வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.
யார் இந்த காமராஜ் ? பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.
சென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.
1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.
இவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.
குறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.
தூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.
ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.
காட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.
அந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.
சிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.
இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.
காமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.
எப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.
இச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.
படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.
இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.
இந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே ?
இந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.
கருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.
இப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.
சென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
பெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.
இது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.
திருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.
ஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
இதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.
விரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ? ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.
மஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வேஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.
சாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.
காமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ? ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.
தமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”
இந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.
இந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
என்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே ?
சவுக்கு
18 comments:
ungal dhairiyathai paaraata vaarthaigalae ilai.......sir pls one request.....can u do an investigative report on fr.jegath casper....i would be realy grateful...because i just dunno what to believe
மலைப்பாக இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது, உங்களைப் போன்றோரை நண்பர் என்று கூறிக்கொள்வதில். மற்ற பத்திரிகையாளர்கள் தொடமுடியாததை, தொடத்தயங்குவதை நீங்கள் அனாயாசமாக தோலுரித்துக்காட்டுகிறீர்கள். தொடர்க உங்கள் பணி.
சிறந்த புலனாய்வுக் கட்டுரை. பத்திரிக்கை உலக தாதாக்களை வெளியுலகிற்கு காட்டியதற்கு வாழ்த்துகள் சவுக்கு.
நெகிழ்ந்து போனேன் அய்யா . உங்கள் பாராட்டில். நீங்கள் என்னை நண்பராகக் கருதுவது, எனக்கல்லவா பெருமை ?
முந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா ? அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு.
தோழர்.உங்கள் ஒவ்வொரு கட்டுரையும் தகவல் சுரங்கமாக இருக்கின்றன.பெருந்தலைகலையே உருட்டி போடும் இந்த தகவல்களை எங்கிருந்துதான் எடுக்கிறீர்களோ.சவுக்கு தமிழ்நாட்டின் தெஹல்காவாக உருவெடுத்து வருகிறது....(எப்படி புது பேரு)....இனியவன்..
சமூகம் இந்த மாதிரியான திருடர்களிடம்தான் அதிகமாக இழந்துள்ளது.
பொதுவான அரசியல்வாதிகளை எளிதாக குற்றம்சாட்ட முடியம் நம்மால் இது போன்ற புல்லுருவிகளை எப்படி இனம் காண முடியும் சொல்லுங்கள்?
உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை. உங்களை வெளிப்படுத்தாதவரை உங்களுக்கு நல்லது.
நவயுக நக்கீரன் இன்று இருந்தாரேயானால் முதலில் சுட்டெரிப்பது இந்த நாதாரி கோபாலையும் தெல்லவேரி காமராஜையும்தான்.
அதுசரி இப்போது பெரியவருக்கு கால்களில் உணர்ச்சி இல்லையாமே? உண்மையா?
Very Good. You are doing a nice job.
சவுக்கு said...
முந்தயை பதிவுக்கு ஒரு நண்பர், நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தலைப்பில் போட்டுக் கொள்கிறார்கள் என்று பின்னூட்டம் இட்டுள்ளார். நம் யாருக்கம் இல்லாத இந்த நெற்றிக்கண் நக்கீரனுக்கு எதற்குத் தெரியுமா ? அடுத்தவர் பெட்ரூமில் எட்டிப் பார்த்து பல சரோஜோதேவி கதைகளை உருவாக்குவதற்கு
உண்மை. ஆனால் இங்கே நக்கீரன் கோபாலனை பற்றி ஒன்றுமில்லையே. கருமவீரன் காமராஜ் தான் எல்லாவற்றுக்கும் காரணமா.
innum Eluthu vibacharikalin atuluyankal varuma?
savukku is having a very good intension to bring out scoup news.it is appreciatable.but for that,there is no need to show personal grudges on good people like Nakkheeran Gopal,Kamaraj and others.then please avoid using and defaming caste(s) of particular person(s).it will lead to unwanted happenings unnecessatily.in some areas u r violating ethics of journalism.u should be neutral when u indulge in criticism.but it is not followed in some areas,it seems.it is very obvious that out of sheer perrsonal grudge and prejudice only many article were penned by savukku.so please focus on issues not on persons and personal life.
it is a prejudiced story,it seems.please follow at least some ethics of journalism.dont use and defame caste names.it will lead to unwanted and unnecessary things.ur intension to bring out "shaddy area and shaddy things" to light is good and appreciatable.but for that u should be very neutral while criticising people.above all,better to focus on issues,not on persons and their personal life.it wont be decent and diplomatic.many of ur articles lose their values only because they were penned with personal grudges.dont use unparliamentary words in articles.
no neutrality in ur article.totally prejudiced story with personal grudge.
சத்தியமாக மிக்க சந்தோசமாக இருக்கு சவுக்கு...!!!! தில்லான ஆம்பள நீ....!!!
Really happy to see your articles. But Please be careful..Ungal sevai melum melum thevai.
வணக்கம் . . .
அருமையான புலனாய்வு படைப்பு . . .
வாழ்த்துகள்....
ஆனால்............
யார் இந்த காமராஜ் என்று அறிமுகப்படுத்துவதற்கு,
அவர் வகுப்போ, இனமோ, மதமோ தேவையில்லையே !!
அதனால் நீங்கள் கூற வருவது என்ன ??
மீண்டும் பிற்போக்கான சிந்தனைக்களுக்கே செல்கிறோம் என்கிற கவலை எனக்கு.
எனக்கான தங்கள் நேரத்திற்கு நன்றி ...
~ தமிழ் சிறுவன் ~
கோவையில் நடந்த மாநாட்டில் ஓசை காளிதாசனூடன் ஒன்றாக காமராஜ் இருந்தாக சொல்லப்படுகிறது. ஓசை காளிதாசன் டில்லியில் ஆ.ராசா மற்றும் சிலரை பார்க்கச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையும் கவனிக்கவும்.
Unmayileya naan unga Fan aagivitten
Post a Comment