வீரப்பன். இந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் கர்நாடகக் கண்மணி ராஜ்குமாரை கடத்திய போது இருந்த பரபரப்புக்கும், அதிர்ச்சிகளுக்கும் கொஞ்சமும் பஞ்சம் இல்லை.
ராஜ்குமாரை வீரப்பன் கடத்தி வைத்திருந்த போது நடந்தது என்ன என்று, கர்நாடக டிஜிபி தினகர் ஒரு புத்தகம் எழுதியுள்ளா. நக்கீரனில் இது பற்றி விரிவாக செய்திகள் வந்துள்ளன. ஆனால் அது மட்டுமே உண்மையா என்றால் இல்லை.
இந்த விவகாரத்தில் புதைந்து கிடக்கும் மர்மங்கள் இன்னும் மர்மங்களாகவே உள்ளன.
நக்கீரனில் வந்த தொடர்களில், நக்கீரன் கோபால் காட்டுக்கு தூதுவராக போகாமல் இருந்திருந்தாலோ, தம்பி காமராஜ் சென்னையில் அதற்கான Coordination வேலைகளில் ஈடுபடாமல் இருந்திருந்தாலோ, ராஜ்குமார் உயிரோடு வெளியே வந்தே இருக்க மாட்டார் என்பது போலவும், கர்நாடக, தமிழக அரசுகளுக்கு இவர்கள் இருவரும் பாலமாக இருந்து செயல்பட்டார்கள் என்பது போலவும், பல்வேறு செய்திகளை படித்திருப்பீர்கள்.
ஆனால், இதெல்லாம் உண்மையா ? இது மட்டும்தான் நடந்ததா ? இந்த விவகாரத்தில், கோபால் மற்றும் காமராஜின் பங்கு என்ன, என்பது போன்ற விவகாரங்கள் நாட்டு மக்களுக்கு தெரிய வேண்டும் தானே ?
நக்கீரன் தொடர்களை படித்து விட்டு, உங்களைப் போலவே நானும், இவர்கள் ரொம்ப நல்லவர்கள் என்றுதான் சவுக்கும் ரொம்ப நாளைக்கு நம்பிக் கொண்டிருந்தது. ஆனால் விசாரித்தால் வெளி வரும் உண்மைகள், பல பேரின் முகத்திரையை கிழிக்கிறது. அதிர்ச்சியை அளிக்கிறது.
இந்த உண்மைகளை நாட்டு மக்களுக்கு சொல்வது தனது கடமை என்றே சவுக்கு கருதுகிறது.
இந்தத் தொடருக்கான ஆரம்பக் கட்ட வேலைகள் தொடங்கி விட்டன. வெகு விரைவில், சவுக்கு வாசகர்களுக்காக பல பேரின் முகத்திரைகளை கிழிக்கும் இந்தத் தொடர் வர இருக்கிறது.
சவுக்கு
4 comments:
உண்மைகளை தங்கள் வலைத்தளத்தில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல் - அந்த உண்மை தகவல்கள் நிறைய பேரை சென்றடைய நூலாக வெளியீடுங்கள். உண்மைகளின் குரல் பலவீனமாக இருந்தால் - பொய் சத்தம் போட்டு பேச துவங்கிவிடும்.
Kaththirukkirom
கிழியுங்கள் ...............
U r doing good Job
Post a Comment