Flash News

Showing posts with label சவுக்கு. Show all posts
Showing posts with label சவுக்கு. Show all posts

Thursday, July 29, 2010

அன்பார்ந்த தமிழக முதல்வரே … …. ….



சவுக்கின் கைதுக்கு முன்பு, தங்களிடம் சவுக்கு எழுதிய செம்மொழிப் பாடல், பதிவும், மற்றொரு பதிவும் காண்பிக்கப் பட்டு, சவுக்கு ஒரு தேசத் துரோகியாக சித்தரிக்கப் பட்டதாக சவுக்கு அறிகிறது.

தாங்களும் ஒரு எழுத்தாளர் என்ற முறையில், அந்தப் பதிவுகளை ரசித்திருப்பீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது. இத்தனை காலமாய் தங்களை விமர்சித்து சவுக்கு எழுதும் போதெல்லாம் அமைதியாக இருந்த ஜாபர் சேட், இப்போது சவுக்கைப் பற்றி தங்களிடம் கூறக் காரணம் என்று யோசித்தீர்களா ?

ஜாபர் சேட்டின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் சவுக்கு ஏற்றியதால் தான்.
உங்களை விமர்சித்த பதிவை காட்டினாரே ? இவர் எத்தனை இடத்தில் சொத்து வாங்கியுள்ளார் என்ற பதிவை காட்டினாரா ? காட்டமாட்டார்.



அய்யா என்னா அழகா இருக்கார் பாருங்க. பெண் சிங்கம் 2ம் பார்ட்ல ஹீரோ ஆக்கிடுங்கய்யா


முதல்வர் அவர்களே.. உங்களை அரசியல் சாணக்கியர் என்று கூறுகிறார்கள். மிகத் திறமையாக எதிரிகளைக் கையாண்டு சாணக்கியத்தனத்தோடு செயல்படுவதில் தாங்கள் வல்லவர் என்று கூறுகிறார்கள்.

ஆனால் அப்படிப் பட்ட சாணக்கியரான நீங்கள், ஒரு சகுனியை கூடவே வைத்துக் கொண்டு, அந்த சகுனியை நம்பி ஏமாந்து கொண்டு இருப்பதுதான் மிகுந்த வேதனையாகவும், ஆச்சர்யமாகவும் உள்ளது. உங்கள் உடனிருப்பவர்கள், உங்களிடம் உண்மையைச் சொல்கிறார்களா இல்லையா என்பது தெரியவில்லை. ஆனால், சாதுர்யம் மிக்க நீங்கள், இந்த ஜாபர் சேட் விஷயத்தில் ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்கிறீர்கள் என்பதுதான் புரியாத புதிராக உள்ளது.

இன்று உங்கள் கண்களாகவும், காதுகளாகவும் இருப்பது போல நடித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாபர் சேட் யார் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

இவர் பணியில் சேர்ந்த நாள் முதலாகவே ஒழுக்கமாக இருந்தது கிடையாது முதல்வர் அவர்களே. முதல் போஸ்டிங்கில், ஏஎஸ்பி யாக, கோவையில் இவர் நியமிக்கப் பட்டார். அப்போதே, அங்கே இருந்த ஒரு பெண் காவலருடன் நெருக்கமாகப் பழகியதாகவும், அந்தப் பெண் காவலர், ஜாபரை திருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்தியதாகவும், மறுத்தால் புகார் கூறப் போவதாகவும் கூறியதை அடுத்தே, ஜாபர் அவசர அவசரமாக திருமணம் செய்ததாக கோவை வட்டாரங்கள் கூறுகின்றன. பணியில் சேர்ந்த முதல் ஆண்டே தனது வேலையை காட்டத் தொடங்கியவர்தான் இந்த ஜாபர்.

1996 முதல் 2000ம் ஆண்டு வரை, தாங்கள் முதல்வராக இருந்த பொழுது ஜாபர் சேட் தங்களது பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர் என்பதை தாங்கள் அறிவீர்கள்.

அப்போதெல்லாம், இப்போது நடப்பது போன்று பல்வேறு விழாக்கள் தங்களுக்கு கிடையாது. காலையில் தலைமைச் செயலகம் வந்தால், மாலையில் அலுவலகம் முடியும் வரை அங்கேதான் இருப்பீர்கள். பாதுகாப்புப் பிரிவு எஸ்பி என்பதால், ஜாபருக்கு தாங்கள் எத்தனை மணிக்கு கிளம்புவீர்கள் என்ற விபரம் நன்கு தெரியும்.

அதனால், ஒரு ஜிப்ஸி ஜீப்பை எடுத்துக் கொண்டு, தானே அதை ஓட்டிச் சென்று, நேராக சென்னை விமான நிலையத்தின் சர்வதேச இறங்கு முனையின் விஐபி நுழைவாயிலுக்குச் செல்வார். அங்கே, இவரது நண்பர்கள் எடுத்து வரும் பொருட்களை கஸ்டம்ஸ் சோதனையின்றி, தன்னுடைய ஜீப்பிலேயே ஏற்றி அவர்கள் வீட்டுக்கு கொண்டு சேர்ப்பாராம். இதன் மூலமாக, சுங்க வரி ஏதும் செலுத்தாமல் இவர்களது பொருட்கள் வந்து சேரும்.


திருவான்மியூர் ப்ளாட் ஒரு சதுர அடி, 9000 ரூபா ஒரு தரம், ரெண்டு தரம்....



இதற்கான பிரதி பலனாக, இவருக்கு அரசு விருப்புரிமை கோட்டாவில் ஒதுக்கப் பட்ட, சென்னை முகபேர் ஏரித் திட்டத்தில் 10வது குறுக்குத் தெருவில் உள்ள மனையில், ஒரு பிரம்மாண்ட பங்களா கட்டினார் தெரியுமா ?

அந்த வீட்டை இவர் பொருள் எடுத்து வந்துக் கொடுத்த, செங்கல் சூளை முதலாளிகள் செங்கல் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களையும் இலவசமாக கொடுத்து, அந்த வீட்டை கட்டிக் கொடுத்தனர் என்பது உங்களுக்குத் தெரியுமா ?

அவ்வாறு கட்டிய வீட்டில் ஒரிரு ஆண்டுகளுக்குப் பிறகு, அதை 70 லட்ச ரூபாய்க்கு விற்று விட்டது தங்களுக்குத் தெரியுமா ?

பாதுகாப்புப் பிரிவு எஸ்பியாகவே இருந்து இவர் எப்படி சம்பாதித்தார் என்று பல போலீஸ் அதிகாரிகளுக்கு இன்னும் புதிராகவே உள்ளது. இப்படித்தான் சம்பாதித்தார்.
தங்களின் நள்ளிரவு கைதில் இவர் வகித்த பங்கு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா ?

உங்களின் பாதுகாப்பு அதிகாரியாக நான்கு ஆண்டுகள் இருந்த அனுபவத்தால் இவரிடம் தான், எந்த இடத்துக்கு எந்த போலீஸ் அதிகாரியை அனுப்ப வேண்டும் என்ற பொறுப்பு ஒப்படைக்கப் பட்டது.

உங்களின் நள்ளிரவு கைதின் போது இவருக்கு ஒதுக்கப் பட்ட இடம், முர்ரேஸ் கேட் ரோடு முனை. ஆனால், அங்கே இவர் நிற்காமல், ஆபாஷ் குமாரை நிற்க வைத்து விட்டு மைலாப்பூர் காவல் நிலையத்தில் சென்று ஒளிந்து கொண்டார்.

பிறகு, அங்கே திமுகவினர் வரப் போகிறார்கள் என்ற செய்தி கிடைத்ததும், ஓமந்தூரார் மாளிகைக்கு சென்று விட்டார்.


இந்தப் புன்னகை என்ன விலை ? (ஒரு சதுர சென்டி மீட்டர் 10,000 ரூபா)



உங்கள் கைது பற்றி முன் கூட்டியே தகவலைச் சொன்னது தான்தான் என்று உங்களிடம் புளுகியிருப்பார். ஆனால் சரியான நபரிடம் விசாரியுங்கள், அந்தத் தகவலை உங்களிடம் சொன்னது ஜாபர் சேட் இல்லை. சவுக்கு அந்த நபரின் பெயரை வெளியிட விரும்பவில்லை.

நள்ளிரவுக் கைதுக்குப் பின் என்ன நடந்தது தெரியுமா ? ஜாபர் சேட்தான் அந்தத் தகவலை உங்களுக்கு முன் கூட்டியே சொல்லி விட்டார் என்று அன்றைய முதல்வர் ஜெயலலிதாவு தகவல் கூறப்பட்டது.

உடனடியாக, தீண்டாமை ஒழிப்புப் பிரிவு டிஐஜியாக திருச்சிக்கு நியமிக்கப் பட்டார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட்டின் மனைவி பர்வீனும், உங்கள் நள்ளிரவு கைதின் நாயகன் முத்துக்கருப்பனின் மனைவி மல்லிகாவும் இணைந்தே ப்யூரிட்டா மினரெல் வாட்டர், பால் பண்ணை தொழில்களில் ஈடுபட்டு வந்தார்கள். அதனால் இவர்கள் இருவருக்கும் மிகுந்த நட்பு உண்டு.

உங்களை நள்ளிரவில் கைது செய்த பின், முத்துக் கருப்பன், ஒரு சக்கரவர்த்தியைப் போல இருந்தார் தெரியுமா ? இவர் வந்தால் மட்டும் செல்வி.ஜெயலலிதா உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுப்பார்.

இந்த நெருக்கத்தை பயன்படுத்தி சென்னைக்கே மாறுதல் வாங்க வேண்டும் என்று விரும்பிய ஜாபர் சேட் நேராக முத்துக் கருப்பன் வீட்டுக்குச் சென்று அவரிடம் மன்றாடியிருக்கிறார். முத்துக் கருப்பனிடம், என்னுடைய மகள் சென்னையில் படித்துக் கொண்டிருக்கிறாள், அவள் நலன் கருதியாவது எப்படியாவது சென்னைக்கு மாறுதல் வேண்டும் என்று மன்றாடியிருக்கிறார்.

மிகவும் தயங்கிய முத்துக் கருப்பன், ஜாபர் சேட்டும் அவரது மனைவியும் கெஞ்சிய கெஞ்சலைப் பார்த்து மிகவும் தயங்கிய படியே முதல்வரிடம் பேசுவதற்கு சம்மதித்திருக்கிறார்.
முத்துக்கருப்பனின் இந்த சிபாரிசைப் கேட்டு மிகவும் கோபம் அடைந்த ஜெயலலிதா, முடியவே முடியாது என்று மறுத்திருக்கிறார்.

உங்களின் நள்ளிரவு கைதுத் தகவலை முன் கூட்டியே சொன்னது ஜாபர் சேட்தான் என்று தனக்கு உறுதியான தகவல் வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். இதை மறுத்த முத்துக் கருப்பன், தகவலை வெளியிட்டதாக ஒரு அதிகாரியின் பெயரை கூறுகிறார். இதைக் கேட்டு சந்தேகம் தெளிந்த ஜெயலலிதா, பழைய மாறுதல் ஆணையை ரத்து செய்து விட்டு, ஜாபர் சேட்டை சென்னையில் ஆயுதப் படை டிஐஜியாக நியமித்தார் என்ற விபரம் உங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இப்படியொரு உதவியை முத்துக்கருப்பனிடம் பெற்றுக் கொண்ட ஜாபர் சேட், இன்று முத்துக் கருப்பன் மீதான குற்றச் சாட்டுகள் அனைத்தும் ரத்து செய்யப் பட்டாலும், முத்துக் கருப்பனை விட பணியில் இளைவர்களான 13 பேர் கூடுதல் டிஜிபிக்களாக ஆகி விட்ட நிலையில், இவரின் பதவி உயர்வு தொடர்பான கோப்பு கையெழுத்து ஆகாமல் நிறுத்தி வைத்திருப்பது ஜாபர் சேட்தான் என்பது உங்களுக்கு தெரியுமா முதல்வர் அவர்களே ?



முந்தைய ஆட்சியில் ஒரு துணை முதல்வரைப் போல செயல்பட்டு, இன்று வரை எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா உங்கள் அரசை மைனாரிட்டி அரசு என்று அழைப்பதற்கு காரணமான சிவனாண்டியையே மன்னித்து நல்ல பதவி கொடுத்து அழகு பார்க்கும் நீங்கள், முத்துக் கருப்பனுக்கு பதவி உயர்வு வழங்காததற்குக் காரணம், அவர் ஒரு தலித் என்பதால் என்று அதிகாரிகள் மட்டத்தில் இருக்கும் பரவலான பேச்சு உங்களுக்குத் தெரியுமா முதல்வர் அவர்களே ?

தலித் வீட்டில் பெண் எடுக்கும் அளவுக்கு பெரிய மனது கொண்ட நீங்கள், இப்படி ஒரு அவப்பெயருக்கு ஆளாகலாமா ?

2007ம் ஆண்டு முதல் பல்வேறு வேலைகள் காரணமாக 50 தடவைகளுக்கும் மேல் விமானத்தில், முதல் வகுப்பில் டெல்லி வந்திருக்கிறார் ஜாபர் சேட்.

ஒவ்வொரு முறை பயணத்திற்கும், உளவுத் துறையின் ரகசிய நிதியிலிருந்து பணம் கொடுக்கப் பட்டதை தாங்கள் அறிந்திருந்தாலும், இந்தத் தொகை இது வரை மீண்டும் ரகசிய நிதிக்கு வரவு வைக்கப் படவில்லை என்பதை தாங்கள் அறிவீர்களா முதல்வரே ? ஒரு முறை முதல் வகுப்பில் டெல்லி செல்வதற்கு ஏறக்குறைய 20,000 ஆகும் தெரியுமா முதல்வர் அவர்களே ?




மாதந்தோறும் இவர் தனது வீட்டு செலவுக்காக ரகசிய நிதியிலிருந்து எடுக்கும் ஒரு லட்ச ரூபாயையும், அறையை புதுப்பிப்பதற்காக கடந்த ஆண்டு எடுத்த ஐந்து லட்ச ரூபாயையும், இந்த ஆண்டு செலவிட்ட ஐந்து லட்ச ரூபாயையும் இவருக்கு வவுச்சர் போட்டு வாங்கிக் கொடுப்பது உளவுத் துறையின் நிர்வாகப் பிரிவில் பணியாற்றும் ராஜ்குமார் என்ற டிஎஸ்பி என்பது தங்களுக்குத் தெரியுமா முதல்வரே ?

இந்த ராஜ்குமார், ஜாபர் சேட் அடிக்கும் கொள்ளையில் தானும் ஒரு பங்கை எடுத்துக் கொள்கிறார் என்பதாவது உங்களுக்குத் தெரியுமா ?

முதலமைச்சராகிய நீங்கள் கையெழுத்து போட்டு ஒப்புதல் தராமலேயே, பல பொருட்களை ரகசிய நிதியிலிருந்து வாங்கியிருக்கிறார் ஜாபர் சேட் தெரியுமா முதல்வரே ?

சமீபத்தில் இவர் தனது அறையில் வாங்கிப் போட்டிருக்கும் மேசை மட்டும் ஒரு லட்ச ரூபாய். உளவு சேகரிப்பதற்காக ரகசிய நிதி கொடுத்தீர்களா அறையை சொகுசு படுத்துவதற்காகவா ?

ஒவ்வொரு முறை புதுதில்லி செல்லும் போதும், இவரை விமான நிலையத்திலிருந்து அழைத்துச் செல்ல பெரும் செல்வந்தர்களின் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கார்கள் வருகின்றன என்பதை அறிவீர்களா முதல்வரே ?



50 தடவைகளுக்கு மேல் புது தில்லி சென்றுள்ள ஜாபர் சேட், ஒரு முறை கூட நீங்களே தங்கும் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது இல்லை. ஒவ்வொரு முறையும் நட்சத்திர ஓட்டலில்தான் தங்குவார் என்று கூறுகிறார்கள்.

ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகிய நீங்களே தமிழ்நாடு இல்லத்தில் தங்குகையில், உங்களிடம் ஊதியம் பெறும் ஒரு சாதாரண காவல்துறை அதிகாரி ஐந்து நட்சத்திர ஓட்டலில் தங்கும் அளவுக்கு இவருக்கு செலவு செய்யும் நபர்கள், இவரிடம் என்னென்ன சலுகைகளை எதிர்ப்பார்ப்பார்கள் என்பது நீங்கள் அறியாதது அல்ல.

இந்த சலுகைகளைப் பெறுவதற்காக இவர் உங்களைப் பற்றியே உளவு சொல்ல மாட்டார் என்பது என்ன நிச்சயம் ?

இவர் மனைவி பெயரில் திருவான்மியூரில் கட்டி வரும் நான்கடுக்கு மாளிகையைப் பற்றித் தாங்கள் அறிந்திருப்பீர்கள். ஏனென்றால் இது தாங்கள் வழங்கியது தானே ? ஆனால், ஈஞ்சம் பாக்கத்தில் இவர் 2.5 கிரவுண்ட் இடத்தை ஜெய்சங்கர் என்ற பினாமி பெயரில் வாங்கியதை தாங்கள் அறிவீர்களா ?

இந்த இடத்தை இவர் சென்னை தேவி தியேட்டர் அருகில், பால்ஸ் என்ற காபரே நடனம் நடத்தும் நபரிடம் இருந்து வாங்கியிருக்கிறார் என்பது உங்களுக்கு உபரித் தகவல்.

இது தவிர பழைய மகாபலிபுரம் சாலையில் க்ளாசிக் ஃபார்ம்ஸ் என்ற இடத்தில் மேலும் 2.5 க்ரவுண்ட் இடத்தை பினாமி பெயரில் வாங்கியிருக்கிறார் என்பதாவது தெரியுமா உங்களுக்கு ?
உங்கள் பார்வையில் இவரை நல்ல அதிகாரி என்று வைத்துக் கொண்டால் கூட, இவருக்கு இட்ட வேலை எதையாவது ஒழுங்காகச் செய்திருக்கிறாரா இது வரை ?

ஏற்கனவே உளவுத் துறைக்கு சிதம்பரசாமி என்ற ஒரு அதிகாரி இருக்கையில் இவரை தாங்கள் நியமித்ததே வைகுண்டராஜனை கைது செய்வதற்காகத் தானே ? செய்தாரா இது வரை ? கைது செய்யாமல் இருப்பதற்காக வைகுண்டராஜனிடம் ஒரு பெரும் தொகையை பெற்றுக் கொண்டு, உங்களிடம் சாக்கும் போக்கும் சொல்லிக் கொண்டிருக்கும் இப்படிப்பட்ட அதிகாரியை நீங்கள் எப்படி இன்னும் நம்புகிறீர்கள் ?


உங்கள் அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே இருக்கும் இவரை எப்படி நீங்கள் இந்தப் பதவியில் வைத்திருக்கிறீர்கள் ? உமாசங்கர் ஐஏஎஸை பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் என்று இவர் செய்த பரிந்துரையை ஏற்றுக் கொண்டீர்களே ?


தேர்தல் நடக்க இன்னும் ஒரு ஆண்டுக்கு குறைவாகவே உள்ள சூழ்நிலையில், தேவேந்திரக் குல வேளாளர் என்று அழைத்துக் கொள்ளும் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த உமாசங்கரை இடைநீக்கம் செய்து எதற்காக இப்படி அந்நியப் படுத்தினீர்கள் ? இது ஒரு சரியான அரசியல் முடிவுதானா என்பதை சிந்தித்துப் பாருங்கள்.

தினமும் நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உமாசங்கர் பணி இடைநீக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்று வருவதை தாங்கள் அறிவீர்களா ? உமாசங்கருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டியதற்காக ஒரு ஐந்து பேரை கைது செய்து சிறையில் அடைத்தால் இந்தப் பிரச்சினையை மூடி விடலாம் என்று நினைக்கிறார் ஜாபர் சேட். ஆனால் தலித்துகள் அன்னியப் படுத்தப் படுவதாக உணர்ந்தால், அதற்கான விளைவுகள் தேர்தலில் எதிரொலிக்கும்.

இந்த தேர்தல் ஆண்டில் உமாசங்கரின் இடைநீக்கம் ஒரு சரியான நடவடிக்கைதானா முதல்வர் அவர்களே. இந்த நெருக்கடியான சூழலுக்கு யார் காரணம் ? உங்களுடன் இருக்கும் சகுனிதானே ?

சவுக்கு வாசகர்களுக்கும், உங்களுக்கும் இருக்கும் ஒரு ஐயம், இந்த ஜாபர் சேட்டின் மேல் சவுக்குக்கு அப்படி என்ன கோபம் ? தனிப்பட்ட கோபம் இருக்கிறதா என்பது.

ஜாபர் சேட்டை சவுக்கு பார்த்தது கூட கிடையாது. ஜாபர் சேட்டின் எதிரிகள் சவுக்கை தூண்டி விடுகிறார்கள் என்று கூட ஜாபர் சேட் உங்களிடம் தகவல் சொல்லக் கூடும். தனிப்பட்ட முறையில் எதிரியாக கருதும் அளவுக்கு ஜாபர் சேட்டுக்கும், சவுக்குக்கும் அவருடைய தொழில் பங்குதாரர்கள் போல எவ்வித கொடுக்கல் வாங்கலும் இல்லை.

தனிப்பட்ட விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் ஜாபர் சேட் மீது கடும் கோபம், மாறாத ஆத்திரம் உண்டு. ஏன் தெரியுமா ?

அக்டோபர் 2008 முதல் ஈழத்தில் போர் உக்கிரமாக இருந்த போது, தமிழகம் வழியா இலங்கைக்கு உயிர் காக்கும் மருந்துகள் கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன என்பதை தாங்கள் அறிவீர்களா என்பது சவுக்குக்கு தெரியாது. இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஏராளமான மருந்துகள் கடத்தப் பட்டன.

பேண்டேஜுகள், உயிர்காக்கும் மருந்துகள், சலைன்கள், இதயத்தை இயங்க வைக்கக் கூடிய ஸ்டீராய்டுகள் போன்றவையே அவை.

நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக தங்கள் உடலை வருத்தி, அனைத்துக் கட்சிக் கூட்டங்களும், கொட்டும் மழையில் மனிதச் சங்கிலிப் போராட்டமும், தள்ளாத வயதில் உண்ணாத விரதமும் நடத்திக் கொண்டிருக்கையில் உங்கள் ஜாபர் சேட் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா ?

இது போல மருந்து கடத்திச் செல்ல முயன்ற ஈழத் தமிழர்களையும், இந்தியத் தமிழர்களையும் இலங்கைக்கு சாட்டிலைட் போன்கள் கடத்த முயன்றார்கள், லேப்டாப்புகளை கடத்த முயன்றார்கள் என்று வழக்கு போட்டு சகட்டு மேனிக்கு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார்.

இந்திய இறையாண்மையை காக்கும் பொறுப்பு உங்களுக்கு, சோனியாவை விட அதிகம் உள்ளது என்றாலும், இந்த மருந்துகள் இலங்கையை சென்று அடைந்திருந்தால் சில ஆயிரம் உயிர்களை காப்பாற்றியிருக்க முடியும் தானே ?

சவுக்கு ஆயுதம் கடத்துபவர்களுக்கு வக்காலத்து வாங்கவில்லை. மருந்து கடத்துபவர்களை, அது சட்ட விரோதமாக இருந்தாலும் சில ஆயிரம் உயிர்களை காக்க பயன்படுகிறது என்ற போது கண்டும் காணாமல் இருந்திருந்தால்தான் என்ன ?

புலிகள் இயக்கத்துக்கு பணமும், ஆயுதமும் பயிற்சியும் வழங்கியது இதே தமிழ்நாடு தானே ? உங்களை விட இந்திய இறையாண்மையில் நம்பிக்கை உள்ள, உங்களால் தியாகத் திருவிளக்கு என்று அன்போடு அழைக்கப் படும், சோனியாவின் மாமியார் செய்யாததையா நீங்கள் செய்து விடப் போகிறீர்கள் ?

வழக்கு போடுவதிலாவது நேர்மையாக இருந்தாரா ஜாபர் சேட். கைப்பற்றப் பட்டவை மருந்துகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் கணக்கில் காட்டாமல், வெறும் சாட்டிலைட் போனை மட்டும் வைத்து வழக்கு போடப்பட்டது தெரியுமா ?


இது போன்று வழக்கு போட்டு தள்ளிய நேர்வுகளிள் ஒன்று இதயத்தை உறையச் செய்யக் கூடியது. புலம் பெயர்ந்த தமிழர்கள் தாங்கள் உழைத்துச் சேர்த்த பணத்தில் இறுதி யுத்தத்தின் போது வாங்கிக் கொடுத்து அனுப்பிய 250 ரத்த உறைகளை கொடுத்து அனுப்புகிறார்கள்.

இந்த 250 ரத்த உறைகளும், குண்டுக் காயம் பட்டு, குற்றுயிரும் குலையிருமாக ஈழத்து வீதிகளில் கிடக்கும் தமிழ் உயிர்களைக் காப்பதற்காக கொடுத்து அனுப்பப் பட்டவை. தமிழகம் வந்தால் பிடிபடும் அபாயம் உண்டு என்பதை அறிந்தும், ரத்த உறைகள் இந்த நெருக்கடியான நேரத்தில் அனுப்பப் படும் என்பதை நம்பி அனுப்பப் பட்டன.


ஜாபர் சேட் பொறுப்பாக உள்ள க்யூ பிரிவு காவல்துறையினர், இந்த 250 ரத்த உறைகள் எடுத்து வந்த நபரை இடைமறித்து, அவர் சாட்டிலைட் போனை ஈழத்திற்கு எடுத்துச் செல்ல முயன்றதாக கைது செய்து, ரத்த உறைகளை கணக்கில் காட்டாமல் குப்பையில் கொட்டி அழித்த செய்தியை தாங்கள் அறிவீர்களா ?

இந்த வழக்கு தொடர்பாக சைதாப்பேட்டை நீதிமன்றம் வந்த க்யூ பிரிவு காவலர் ஒருவர், மனசாட்சி கேட்காமல் ஜாபர்சேட்டை காது கூசும் கெட்ட வார்த்தைகளால் திட்டி விட்டு சொன்ன தகவல் இது.

இது மட்டும் அல்ல… … …. இந்த ரத்த உறைகளை எடுத்து வந்த நபரிடமிருந்து 60 லட்ச ரூபாய் ரொக்கம் பறிமுதல் செய்யப் பட்டதே, அது ஏன் வழக்கு ஆவணங்களில் பதிவு செய்யப் படவில்லை என்பதை உங்கள் ஜாபர் சேட்டிடம் கேளுங்கள் அய்யா … …. இந்த வழக்கு பற்றிய ஒரு தனிப் பதிவு விரைவில் வரும்.

அரசாங்கப் பணத்தை திருடுவது பத்தாது என்பதால், புலம் பெயர்ந்த தமிழர்களின் வியர்வையில் வந்த பணத்தையும் திருடி விட்டார் இந்த விஷக் கிருமி. இப்படியெல்லாம் திருடினால்தானே, திருவான்மியூரிலும், ஈஞ்சம்பாக்கத்திலும் வீட்டு மனைகள் வாங்க முடியும்.



நீங்கள் ஈழத் தமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருப்பீர்கள். உங்கள் கீழ் பணியாற்றும் அதிகாரி ஈழத் தமிழர்களுக்கான ரத்த உறைகளை குப்பையில் கொட்டி அழிப்பார் ? என்ன கொடுமை அய்யா இது ? நம்மை தமிழர் என்று நாம் சொல்லிக் கொள்ளும் தகுதி இருக்கிறதா நமக்கு ?

இந்த ரத்த உறைகளை எடுத்து வந்து க்யூ பிரிவு காவல்துறையில் பிடிபட்ட நபர், இன்னும் தமிழக சிறைகளில்தான் இருக்கிறார். முதல்வராகிய தங்களுக்கு இருக்கும் அதிகாரத்தை வைத்து, இன்றே அந்த நபரை நேரடியாக சந்தித்து தாங்கள் விசாரித்து உண்மையை அறிய முடியும்.

இப்படிப்பட்ட நபரை நீங்கள் எப்படி இன்னும் நம்பி தமிழகத்தின் முக்கியப் பொறுப்பை கொடுத்து இருக்கிறீர்கள் அய்யா ? 1996 முதல் 2001ம் ஆண்டு வரை உளவுத் துறையில் பணியாற்றிய அதிகாரிகள், உளவுத் துறை சொல்லும் தகவல்களை, தாங்கள் கட்சிக் காரர்களை வைத்து தனியே விசாரித்து உளவுத் துறை அதிகாரிகள் சொல்லும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரி பார்ப்பீர்கள்.

உளவுத் துறை கொடுத்த தகவல்கள் சரியில்லாமல் இருந்தால், வறுத்து எடுத்து விடுவீர்கள் என்று கூறுகிறார்கள்.

அப்படிப் பட்ட நிர்வாகத் திறமை வாய்ந்த நீங்களா இந்த சகுனியை மடியில் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள் ?

இந்த ஊழல் பேர்விழி மீது நடவடிக்கை எடுக்க ஏதுவாக, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் சார்பாக புகார் மனு நேற்று அனுப்பப் பட்டது.

உள்துறைச் செயலருக்கும், தலைமைச் செயலருக்கும் மத்திய அரசுக்கும் அனுப்பப் பட்ட அந்த புகார் மனு, தங்கள் பார்வைக்கு வைக்கப் படுமா என்பது சவுக்குக்கு தெரியாது.



















அதனால், அந்த புகார் மனுக்கள் தங்கள் பார்வைக்காக இங்கேயே வழங்கப் படுகின்றன.
இந்தப் புகார்களின் மீது நடவடிக்கை எடுக்க, தமிழக மக்கள் உரிமைக் கழகத்தை உயர்நீதிமன்றம் செல்லும் சூழலுக்கு தள்ள மாட்டீர்கள் என்றே சவுக்கு நம்புகிறது.

வாழ்த்துக்கள் அய்யா.

வணக்கம்.

சவுக்கு

Monday, June 21, 2010

இரு வழக்குகள்..


இந்த இரு வழக்குகள், மீரட் சதி வழக்கோ அல்லது லாகூர் சதி வழக்கோ அல்ல. தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கும் இரு வழக்குகள். இந்த வழக்குகளில் சம்பந்தப் பட்டவர்கள் இரு பெண்கள். ஒருவர் கைம்பெண். ஒருவர் விவாகரத்து பெற்றவர். ஒருவர் அரசு அலுவலகத்தில் சாதாரண இளநிலை உதவியாளர். மற்றொருவர் ஐபிஎஸ் அதிகாரி. இருவருமே லஞ்ச ஒழிப்புத் துறையில் பணியாற்றியவர்கள்.

இந்த இரு பெண்களின் மீதான வழக்குகளின் தன்மையையும், இந்த வழக்குகளை அரசு எப்படி கையாண்டது என்பதுதான் இன்று மிக மிக வருத்தத்திற்குரிய விஷயம். அதிகாரம் மிக்க அரசு இயந்திரம் வேண்டியவர்களை ஒரு மாதிரியாகவும், வேண்டாதவர்களை ஒரு மாதிரியாகவும் நடத்தும் என்பதற்கு, பார்வதி அம்மாள் விமானத்தை விட்டு இறங்காமல் திருப்பி அனுப்பப் பட்டதும், தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா, அரசு விருந்தினராக உபசரிக்கப் பட்டு நீதிமன்றத்தில் பொது நல வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பத்திரமாக திருப்பி அனுப்பப் பட்டதும் ஒரு சிறந்த உதாரணம். இது போல பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

இதைப் போலவே அப்பட்டமாக, அநியாயமாக இரு பெண்களில் ஒருவர் எப்படி பாரபட்சமான நடத்தப் படுகிறார், அரசு அதிகாரம் எப்படி வேண்டாதவர்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது என்பதை பார்ப்போம்.

இதில் கைம்பெண்ணாக இருப்பவரின் கணவர் லஞ்ச ஒழிப்புத் துறையில் கான்ஸ்டபிளாக வேலைப் பார்த்து வந்த போது, திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் கருணை அடிப்படையில் இவருக்கு லஞ்ச ஒழிப்புத் துறையில் இள நிலை உதவியாளர் பதவி வழங்கப் பட்டது. சென்னையில் ஒரு அரசு குடியிருப்பில் இருந்து கொண்டு தனது ஒரு மகளையும், மகனையும் படிக்க வைத்துக் கொண்டு வாழ்ந்து வந்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையை தலைகீழாக புரட்டிப் போட்ட, “தொலைபேசி ஒட்டுக் கேட்பு“ விவகாரம், இவரையும் விட்டு வைக்க வில்லை. இவர் செய்த குற்றம், தொலைபேசி ஒட்டுக் கேட்பில் கைது செய்யப் பட்டிருந்த சங்கர் என்ற லஞ்ச ஒழிப்புத் துறை பணியாளருக்கு, தொலைபேசியில் ஆறுதல் சொன்னதுதான். அந்தப் பெண்ணின் கணவர் இறந்தவுடன், வேலை பெறுவதில் இருந்த சிக்கல்களை தீர்க்கவும், விரைவாக வேலை கிடைக்கவும், கைதான லஞ்ச ஒழிப்புத் துறை ஊழியர் செய்த உதவியை மறக்க முடியாமல் நன்றி உணர்ச்சியோடு அந்தப் பெண் இருந்தது மிகப் பெரிய குற்றம் அல்லவா ?

அந்த ஊழியர் கைது செய்யப் பட்டவுடன், 18 ஆண்டுகளாக அவர் பணியாற்றி லஞ்ச ஒழிப்புத் துறையின் அத்தனை நண்பர்களும் பேச மறுத்த நிலையில், அந்த ஊழியரால் பல்வேறு உதவிகளை பெற்றவர்கள், அந்த ஊழியரால் பல்வேறு ஆபத்துகளில் இருந்து காப்பாற்றப் பட்டவர்கள், இன்று அந்த ஊழியரோடு, தொலைபேசியில் பேசி, “எப்படி இருக்கிறாய்“ என்று கேட்க மறுத்த நிலையில் இந்தப் பெண், தொலைபேசியில் அந்த ஊழியரோடு பேசி “சார் நன்றாக இருக்கிறீர்களா..? உங்களுக்காக நான் கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

கண்டிப்பாக உங்கள் துன்பங்கள் யாவும், விரைவில் விலகிச் செல்லும்“ என்று, மாதத்திற்கு ஒரு முறையாவது ஆறுதல் சொல்லியது சாதாரண குற்றமா ?

இது சாதாரண குற்றம் இல்லை என்றுதான் அரசு பார்த்தது. ஆபீசில் அத்தனை பேரும் அவனோடு பேச அஞ்சிக் கொண்டிருக்கும் நிலையில் இவளுக்கென்ன அப்படி ஒரு திமிர் என்று கறுவியது அதிகார வர்க்கம்.

விளைவு, இரண்டு சிறிய பிள்ளைகளை வைத்துக் கொண்டு சென்னையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த அந்தப் பெண், தூத்துக்குடிக்கு மாற்றப் பட்டார். மாற்றப் பட்டவுடன், அந்தப் பெண் நீதிமன்றத்தை அணுகி தடையாணை பெற்றார். நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அளவுக்கு தமிழக அரசும், ஐபிஎஸ் அதிகாரிகளும் அவ்வளவு இளித்த வாயர்களா என்ன ? தடையாணை பெற்றால் என்ன, உன்னை வேறொரு அலுவலகத்திற்கு மாற்றுகிறேன் பார் என்று, சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறையின் பிரிவுக்கு மாற்றம் செய்து ஆணையிடுகின்றனர். அத்துறையில் டிஎஸ்பியாக இருக்கும் சரஸ்வதி என்ற அதிகாரியிடம் சென்று பணியாற்ற வேண்டும் என்று உத்தரவு.


இந்தப் பெண்ணும் புதிய அலுவலகத்தில் சென்று பணியேற்கிறார். அந்த அலுவலகத்தில் இவருக்கு என்ன வேலை தெரியுமா ? அலுவலகத்தின் வாசலில் உள்ள ஒரு பென்ச்சில் உட்கார்ந்திருக்க வேண்டும். ஆமாம். வேறு ஒன்றுமே வேலையில்லை. அலுவலகத்தில் உள்ள ஒருவரும் இவருடன் பேசக் கூடாது என்று உத்தரவு. இந்த அலுவலகம், சென்னை நந்தனத்தின் மேல் அண்ணா சாலையிலேயே அமைந்துள்ளது. சாலையின் இடது புறமே இவ்வலுவலகம் இருப்பதால், மதியம் ஆனதும் வெயில் நேரடியாக ஜன்னல் வழியாக அடிக்கும். இவர் அமர்ந்திருக்கும் அந்த பென்ச்சில் வெயில் சுள்ளென்று அடிக்கும்.

அதற்காக இவரை கூப்பிட்டு ஆபிசின் உள்ளுக்குள் அமர வைக்கும் அளவுக்கு சாதாரண குற்றத்தையா புரிந்திருக்கிறார் இவர் ? ஒருவரோடும் பேசாமல், லைப்ரரியில் இருந்து எடுத்துச் சென்ற புத்தகங்களை படித்துக் கொண்டு அமைதியாக ஒரு மாதம் அந்த அலுவலகத்துக்கு சென்று வருகிறார் இவர்.

இந்த நேரத்தில் தான் உறவினர் வடிவில் இவருக்கு சிக்கல் வந்து சேர்கிறது. இவரின் சொந்த அக்காவின் லாரி, பேத்திக்குப்பம் வணிக வரி செக் போஸ்டில் நிறுத்தி வைக்கப் பட்டது. அந்த லாரியை விடுவிக்க, ரூபாய் 3000 லஞ்சம் கேட்கிறார்கள் என்று அவர் அக்கா போன் செய்து உதவி செய்யுமாறு கேட்கிறார்.

தன்னை சின்ன வயதிலிருந்து பார்த்துக் கொண்ட, தனக்கு தாய் போன்ற அக்கா கேட்கும் போது என்ன நெருக்கடி இருந்தாலும் உதவி செய்யாமல் மறுக்கும் அளவுக்கு இந்தப் பெண் அப்படி ஒரு கல் மனம் படைத்தவர் இல்லையே. அதனால் உடனடியாக அந்தப் பிரிவில் இருந்த மற்றொரு டிஎஸ்பியான அலிபாஷா என்பவரிடம் சென்று உதவி கேட்கிறார். அந்த அலி பாஷா வணிகவரி செக்போஸ்டின் தொலைபேசி எண் இல்லை என்ற காரணத்தால், எண் கிடைத்ததும் பேசுவதாக உறுதி கூறுகிறார்.


இந்தப் பெண், இவர் பணியாற்றும் டிஎஸ்பி சரஸ்வதி இல்லை என்பதால் அங்கே இருக்கும் ஜீவானந்தம் என்ற இன்ஸ்பெக்டரிடம் புகார் கூறுகிறார். அந்த ஜீவானந்தம் எனக்கு தெரியாது, டிஎஸ்பியிடம் கூறுங்கள் என்று கூறி விடுகிறார். டிஎஸ்பி சரஸ்வதி வந்ததும் “மேடம் இது போல லஞ்சம் கேட்டு லாரியை நிறுத்தி வைத்திருக்கிறார்கள்“ என்று புகார் கூறுகிறார்.

லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர் மேல் சட்டப் படி நடவடிக்கை எடுக்க கடமைப் பட்டவரான டிஎஸ்பி சரஸ்வதி, “இதுக்கு நாங்க ஒன்ணும் பண்ண முடியாது“ என்று பதில் கூறுகிறார். சரி வேறு என்ன செய்வது என்று தன் அக்காள் மகனை தொடர்பு கொண்ட பெண், இன்னும் இந்த லாரி விடுவிக்கப் படவில்லை என்று தெரிந்து கொண்டு வேறு வழியின்றி வீடு திரும்புகிறார்.


வீடு திரும்பியதும் அன்று இரவு, அக்காள் மீண்டும் தொடர்பு கொண்டு அந்த செக்போஸ்டில் உள்ள அலுவலரின் தொலைபேசி எண்ணை தருகிறார். இவர் உடனடியாக டிஎஸ்பி அலிபாஷாவை தொடர்பு கொண்டு இந்த எண்ணை தருவதற்கு முயற்சி செய்கிறார். இரவு 10.30 மணிக்கு, தன் மனைவியை விட்டு, போனை எடுக்க வைத்த அலி பாஷா, தான் வீட்டில் இல்லை என சொல்லச் சொல்கிறார்.


வேறு வழியின்றி இவரே அந்த செக்போஸ்ட் அலுவலரை தொடர்பு கொண்டு “சார் நான் இது போல இந்த அலுவலகத்தில் வேலை செய்கிறேன். என்ன சார் பிரச்சினை “ என்று கேட்கிறார். அந்த அலுவலர், ரூபாய் 3000 கட்டணமாக கட்ட வேண்டும் என்று சொல்கிறார். பேசும் போது அந்த அலுவலர் நல்ல போதையில் இருக்கிறார். “சார் கொஞ்சம் உதவி பண்ணுங்க சார் “ இவர் கேட்கவும், “மேடம், வண்டிய நிறுத்தி 24 மணி நேரத்துக்கு மேல ஆனதுனால, நான் வண்டிய விட முடியாது.

பணத்த கட்டிட்டு வண்டிய ரிலீஸ் பண்ணிட்டு போங்க“ என்று கூறுகிறார். வேறு வழியின்றி, பணத்தைக் கட்டி விட்டு வண்டி ரிலீஸ் செய்கிறார்கள். 3000 பணம் பெற்றுக் கொண்டு 1500 ரூபாய்க்கு ரசீது தருகிறார். இதுதான் சம்பவம்.


நான்கு நாட்கள் கழித்து, உறவினருக்காக வணிக வரித்துறை செக்போஸ்டில் உள்ள அலுவலருக்கு போன் செய்து மிரட்டி, அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக இந்தப் பெண் சஸ்பெண்ட் செய்யப் படுகிறார். இந்தப் பெண் உயர்நீதிமன்றத்தை அணுகிய போது, யாரை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஒருவரை சஸ்பெண்ட் செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்று, இடது சாரி என்று கருதப் படும் ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்குகிறார்.


இந்தப் பெண் மீது துறை விசாரணை தொடங்குகிறது. ராஜேந்திரன் என்ற டிஎஸ்பி விசாரணை அதிகாரி. டிஎஸ்பி சரஸ்வதி முதல் சாட்சி. இந்தப் பெண் தன்னுடைய உறவினர் வண்டி செக்போஸ்டில் மாட்டிக் கொண்டது தொடர்பாக தன்னிடம் எப்போதுமே பேசியது இல்லை என்று கூறுகிறார். இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம், அன்று முழுவதும் தான் அலுவலகத்தில் இருந்ததாகவும் தன்னிடம் வந்து அந்தப் பெண் எந்த உதவியும் கேட்கவில்லை என்று கூறுகிறார்.

அந்த வணிகவரித்துறை அலுவலர் அடுத்த சாட்சி. தன்னிடம் போன் செய்து பேசியது உண்மை என்றும், ஆனால் மிரட்டவில்லை என்றும், உதவி செய்யுமாறு கேட்டதாகவும், தான் நடைமுறைகளை எடுத்துச் சொன்னதாகவும் கூறுகிறார். அடுத்து டிஎஸ்பி அலிபாஷா. இது தொடர்பாக தன்னிடம் அந்தப் பெண் பேசவேயில்லை என்றும், இது பற்றி தனக்கு எந்தத் தகவலும் தெரியாது என்றும் கூறுகிறார்.

இதைக் கேட்டதும் இந்தப் பெண் அழுது விடுகிறார். அழுததைக் கண்டதும், அலி பாஷா, இதை பதிவு செய்ய வேண்டாம் Off the record என்று விசாரணை அதிகாரியிடம் கூறி விட்டு, அந்தப் பெண் தன்னிடம் அன்று காலையிலேயே வந்து உதவி கேட்டது உண்மை என்றும் ஆனால் இதைப் பதிவு செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.

இந்த அலிபாஷா, சமீபத்தில் தான் புனித ஹஜ் யாத்திரைக்கு சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. குரானும், அல்லாவும், பொய் சொல்லவா அறிவுறுத்துகிறார்கள் ? கடவுள் என்பது மனதில் அல்லவா இருக்க வேண்டும். மனதுக்கு நேர்மையாக நடக்காத நபர், ஹஜ்ஜுக்கு சென்றால் புனிதப் பட்டுவிடுவாரா என்ன ?


இவர்கள் அத்தனை பேரும் பொய் சாட்சி சொல்லும் காரணம் என்ன ? இவர்கள் அத்தனை பேரும் கூட்டுக் கொள்ளையர்கள். பொய்யாக பயணப்படி பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்பவர்கள். அரசின் ரகசிய நிதியை மாதந்தோறும் பங்கு போட்டுக் கொள்பவர்கள். இவர்களின் இந்தப் பொய்ப் பயணப்பட்டியலில் கையொப்பமிடும், மாதந்தோறும் ரகசிய நிதி வழங்கும், “கட்டப் பஞ்சாயத்து“ புகாருக்கு உள்ளான மத்திய சரக எஸ்பி லட்சுமியின் உத்தரவின் பேரிலேயே இவர்கள் இது போல பொய் சாட்சி சொல்கிறார்கள். இந்த வழக்கின் விசாரணை அதிகாரி மட்டும் நேர்மையானவரா என்ன ? இவர், இந்தக் குற்றச் சாட்டுகள் அனைத்தும் உண்மை, தெள்ளத் தெளிவாக நிரூபிக்கப் பட்டுள்ளது என்றே அறிக்கை கொடுக்கப் போகிறார்.


அடுத்த வழக்கு ஐபிஎஸ் அதிகாரி பற்றியது. இது ஒன்றும் ஏற்கனவே சொன்னது போல மிக கடுமையான குற்றம் ஒன்றும் கிடையாது. மிகச் சாதாரணமானது தான்.
முதல் குற்றச் சாட்டு. தர்மபுரி மாவட்டத்தில் எஸ்பியாக இருந்தபோது, அரசு அம்பாசிடர் வாகனத்தில் இருந்த என்ஜினை எடுத்து, தன்னுடைய தகப்பனார் ஓட்டும் டூரிஸ்ட் காரில் பொருத்தியது ஒரு குற்றச் சாட்டு.

தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டதாக பயணப் பட்டியல் பெற்று விட்டு, அந்த நாளில் அலுவலகத்தில் இருந்ததால், அரசுப் பணத்தை கையாடியதான குற்றச் சாட்டு. மூன்றாவது குற்றச் சாட்டு மிகச் சாதாரணமானது. தன்னுடைய முதல் திருமணத்தில் பிறந்த பெண் குழந்தைக்கு, தான் இரண்டாவதாக தலித் சமூகத்தை சேர்ந்தவரை திருமணம் செய்த பின், அந்த குழந்தைக்கு எஸ்.சி என்று சாதிச் சான்றிதழ் பெற்றது.

இதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடக்கிறது. இறுதியில் விசாரணை அதிகாரி, கார் என்ஜினை மீண்டும் பொருத்தி விட்டதாலும், பயணப் பட்டியல் பெற்றாலும் அந்த நாட்களில் அவர் அலுவலகப் பணிதான் பார்த்துக் கொண்டிருந்தார் என்பதாலும், எஸ்சி என்று போலிச் சாதிச் சான்றிதழ் வாங்கியிருந்தாலும் அந்தச் சான்றிதழால் எந்தப் பயனும் அனுபவிக்கவில்லை என்பதாலும், குற்றச் சாட்டு நிரூபிக்கப் படவில்லை என்று கூறி குற்றச் சாட்டுகளை கைவிட்டார்.


இதே அதிகாரி மீது இரண்டாவது வழக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் டிஐஜியாக இருந்த போது ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டார் என்பதும், தனது மகன் சினிமா எடுக்க அதிகார துஷ்பியரேயோகம் செய்தார் என்பதும். இந்த குற்றச் சாட்டும் நிரூபிக்கப் பட்டாலும், இறுதியாக விசாரணை அதிகாரி போதுமான ஆதாரங்கள் இல்லை என்று வழக்கை மூடினார்.
இந்த அதிகாரி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக நியமிக்கப் படுகிறார். (எப்படி இருக்கிறது கூத்து) “ஆடுற காலும், பாடுற வாயும் சும்மா இருக்குமா“ என்பது உண்மை என்று இந்த அதிகாரி நிரூபிக்க வேண்டாமா ?

சி.கே.காந்திராஜன் என்று ஒரு டிஐஜி இருந்தார். இவர் செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த போது, வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாக வழக்கு. (DE 13/2003/POL/HQ) இதை விசாரித்த அதிகாரி இவ்வழக்கில் எப்ஐஆர் போட போதுமான ஆதாரங்கள் உள்ளது என்று தெரிவித்தார். அந்த உயர் பெண் அதிகாரி காந்திராஜனிடம் இருந்து ஒரு கடிதத்தை பெறுகிறார். அந்தக் கடிதத்தில் காந்திராஜன், தன் மீது தொடரப்பட்ட வழக்கு பொய் வழக்கு என்று கூறுகிறார். இதை விசாரணை அதிகாரிக்கு அனுப்ப, அவர் அடுத்த நாளே, காந்திராஜன் உண்மையிலேயே காந்தி, குற்றச் சாட்டுகள் நிரூபிக்கப் படவில்லை என்று அறிக்கை தருகிறார்.


பாஸ்கரன் என்று ஒரு எஸ்பி. அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருக்கிறது. இவருக்கு பதக்கம் வழங்குவதற்காக இவர் மீது வழக்கு நிலுவையில் உள்ளதா என்று டிஜிபி அலுவலகத்தில் இருந்து கேட்கப் படுகிறது. வழக்கு முடிக்கப் பட்டது, நிலுவையில் இல்லை என்று கடிதம் கொடுக்கிறார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இயக்குநராக இருந்து இருபது நாட்களுக்கு முன் டிஜிபியாக ஆன பி.பி.நெயில்வால், இந்த வழக்கைப் பற்றி அறிந்ததால், மீண்டும் பாஸ்கரன் மீது உள்ள வழக்கு பற்றிக் கேட்டு கடிதம் எழுதுகிறார். அந்தப் பெண் அதிகாரி மீண்டும் பாஸ்கரன் மீதான வழக்கு மூடப்பட்டது, நிலுவையில் ஏதும் இல்லை என்று கூறுகிறார்.
மேற்கூறிய இந்த இரண்டு நிகழ்வுகள் தவிர, லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையில் இருந்த வி.ஏ.ரவிக்குமார் என்ற எஸ்பியிடம் இருந்து இரண்டு சூட்கேஸ்கள் நிறைய பட்டுப் புடவைகள் வாங்கியதும், தமிழகத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அனைத்திலும் இவர் எழுதிய புத்தகங்களை கட்டாயமாக விற்க வேண்டும் என்று வாய்மொழி உத்தரவிட்டதற்காகவும், இவர் மீது ரகசிய விசாரணை நடத்தப் பட்டு குற்றச் சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப் பட்டு துறை விசாரணைக்கு உத்தரவிடப் படுகிறது.

மீசை பெரிதாக வைத்துள்ள ஆர்.நட்ராஜ்தான் விசாரணை அதிகாரி. அந்தப் பெண் அதிகாரி அப்பழுக்கற்றவர் என்று இவர் அறிக்கை கொடுக்க, இப்போது இந்தப் பெண் அதிகாரிக்கு அடுத்த பதவி உயர்வு வழங்கப் படப் போகிறது.


சமீபத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் இந்தப் பெண் அதிகாரி, அம்ருதா பதிப்பகம் என்ற இரட்டை ஸ்டாலை நடத்தி, அந்த ஸ்டாலை கண்காட்சி நடந்த அத்தனை நாட்களிலும் பார்த்தக் கொள்ள, அரசு ஊதியம் பெறும் காவலர்களையும் தலைமைக் காவலர்களையும் நியமித்திருந்தார். இதுதான் இந்த அதிகாரியின் நேர்மை.


இப்போது இந்த இரண்டு வழக்குகளையும் ஒப்பிட்டு தீர்ப்பு சொல்லுங்கள். தன்னுடைய சொந்த அக்காவிற்கு உதவி செய்வதற்காக, ஒரு அரசு அலுவலரை போனில் அழைத்து, உதவி செய்யுங்கள் சார் என்று கேட்டதற்கு சஸ்பென்ஷன்.


போலி சாதிச் சான்றிதழ் பெற்று, அரசுப் பணத்தை கையாடல் செய்து, அரசு கார் என்ஜினை திருடி, லஞ்சமாக பட்டுப் புடவை பெற்று, அதிகார துஷ்பிரயோகம் செய்தவருக்கு பதவி உயர்வு.

என்ன இருந்தாலும் இவர் ஐபிஎஸ் அதிகாரி இல்லையா ? அவர் சாதாரண இள நிலை உதவியாளர் தானே ?


நன்றி: நம்தினமதி நாளேடு

சவுக்கு

Thursday, June 17, 2010

கர்ம வீரர்…



கர்ம வீரர். கர்ம வீரர் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது பெருந்தலைவர் காமராஜர். இந்தப் பதிவு பெருந்தலைவரைப் பற்றிய பதிவு என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். இது கர்ம வீரர் பற்றிய பதிவு அல்ல.

இது ஒரு கருமம் பிடித்த வீரரைப் பற்றிய பதிவு. அந்த கருமம் பிடித்த வீரர் யார் தெரியுமா ? நக்கீரன் காமராஜ் என்று அழைக்கப் படும் காமராஜ்தான் அது. இவரை ஏன் கருமம் பிடித்த வீரர் என்று சொல்ல வேண்டும் ?

இவர் அப்படி ஒரு மோசமான மனிதரா என்ன ? அதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். சமீபத்தில் வெளிவந்த நக்கீரன் இதழில் வெளிவந்த ஒரு ப்ரத்யேக ஸ்டோரியின் சில வரிகளை மற்றும் உங்களுக்காக தருகிறேன்.

“நித்யானந்தா எனது மார்பகங்களில் கை வைத்தார். இயல்பாகவே எனக்கு பெரிய மார்பகங்கள். அவர் கை வைத்ததும் எனது மார்பகங்கள் பெரிதாகின“. இது இந்த கட்டுரையில் முதல் சில வரிகள் மட்டுமே. இதற்கு அடுத்த வரிகளை எழுத சவுக்குக்கு கை கூசுகிறது.

அப்பொழுது அந்த நக்கீரன் இதழ் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்கள் ஊகத்துக்கே விட்டு விடுகிறேன். சவுக்கு நக்கீரன் நிர்வாகிகளைப் பார்த்துக் கேட்கும் கேள்வி இதுதான். உங்களின் 12 அல்லது 14 வயது மகனுக்கோ, அல்லது மகளுக்கோ, இந்த நக்கீரன் இதழை படிக்கக் கொடுப்பீர்களா ?

நக்கீரன் இதழில் முக்கிய புள்ளியாக இருக்கும் காமராஜ், ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் படிக்கும் தனது மகனுக்கு, இந்த இதழை படிக்க கொடுப்பாரா ? கொடுப்பார் என்றால் இதை எழுதுவது நேர விரயம். கொடுக்க மாட்டார் என்றால் இதைப் போலவேதானே மற்ற குடும்பங்களையும் நினைக்க வேண்டும் ?



இந்த நித்யானந்தா வீடியோவை வெளியிட்டதிலும், தொடர்ந்து சரோஜா தேவி கதைகளை வெளியிடுவதிலும், முன்னணியில் இருக்கும் நக்கீரன் இதழின் முக்கிய நிர்வாகி யார் என்பது முந்தைய பதிவிலேயே தெரிவிக்கப் பட்டிருந்தது. அவர்தான் நக்கீரன் காமராஜ்.
யார் இந்த காமராஜ் ? பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரெட்டியார் வகுப்பைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ்.

சென்னைக்கு வந்த புதிதில் சென்னை அமைந்தகரை காவல் நிலையத்துக்குப் பின்னே ஒரு வாடகை வீட்டில் பேச்சிலராக தன் சென்னை வாழ்க்கையை துவக்கியவர்தான் இந்த காமராஜ். மிக மிக சாதாரணமான ஒரு நடுத்தர ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த காமராஜ். இந்த காமராஜின் இன்றைய சொத்து மதிப்பு பல கோடிகளைத் தாண்டும். சென்னைக்கு வந்து நக்கீரனில் சேர்ந்த பிறகு, மிக சாதாரண வாழ்க்கைதான் வாழ்ந்து கொண்டிருந்தார் இந்த காமராஜ்.


1995ல் காமராஜுக்கு திருமணம் நடந்தது. இவர் திருமணத்துக்கு வருகை தந்து சிறப்பித்தவர் குன்றக்குடி அடிகளார்.




இவ்வாறு நக்கீரனில் சேர்ந்த இந்த காமராஜ், சிறிது சிறிதாக கோபாலின் நம்பிக்கையை பெற்றார். காமராஜ் மீது கோபாலுக்கு இருந்த நம்பிக்கை, அவர் கைதான போது, பன் மடங்கு மேம்பட்டது.

குறிப்பாக, கன்னட கண்மணி ராஜ்குமார் வீரப்பனால் கடத்தப் பட்ட போது, காமராஜ் உளவுத் துறை அதிகாரிகளோடு இணைந்து ஆற்றிய பணி கோபாலுக்கு காமராஜ் மேல் மிகப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியது.


தூதுவராக வீரப்பனின் மிகப் பெரிய நம்பிக்கையை பெற்றிருந்த கோபால், கையில் பணம் வந்ததும், அரசு அதிகாரிகளுக்கு இருக்கும் பேராசையைப் போலவே அதை கையாடல் செய்யலாம் என்று முடிவு செய்து, அதை செய்து முடித்ததிலும் காமராஜுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனால் பலே கில்லாடியான வீரப்பனிடம், பணத்தை கையாடல் செய்த கோபால் மாட்டிக் கொண்டதும், கோபாலை மரத்தில் கட்டி வைத்து இவனைக் கொல்லப் போகிறேன் என்று வீரப்பன் உறுமியதும், தூதுவராக வந்த நபரை கொன்றால் நம் கொள்கைக்கு இழுக்கு என்று மாறன் வீரப்பனை மாற்றியதும், மாறன் பேச்சுக்கு மதிப்பளித்து, வீரப்பன் கோபாலை அவிழ்த்து விட்டதும், அத்தோடு, கோபாலை கழற்றி விட்டு விட்டு, பேராசிரியர் கல்யாணி, அய்யா நெடுமாறன் உள்ளிட்டோரை தூதுவராக அழைத்ததும், தனிக் கதை.


ராஜ்குமார் கடத்தல் விவகாரத்தில் முக்கிய பங்கு வகித்தது, தற்போழுது ஆவணக் காப்பகத் துறையில் “டம்மி பீசாக“ வைக்கப் பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரி ராமானுஜம். இந்த ராமானுஜத்தோடு இணைந்து இந்த கடத்தல் விவகாரத்தில், பெரும் பங்காற்றியது காமராஜ்தான்.

காட்டிலிருந்து வீரப்பன் கேசட் கொடுத்தனுப்பியதும், தமிழ்நாடு மற்றும் கர்நாடக அரசுக்கு பெரும் தலைவலியாகவும், இரு மாநில காவல்துறையும் மும்முரமாக கண்காணித்துன் கொண்டிருந்த போதிலும், முதலில் காமராஜின் சகோதரர் ரமேஷ் வைத்திருக்கும் ஸ்டுடியோவுக்குத் தான் இந்த கேசட் செல்லும்.

அந்த ஸ்டுடியோவில் இந்த கேசட் எடிட் செய்யப் பட்டு, இவர்கள் என்ன செய்திகள் செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களோ, அந்த செய்திகள் மட்டுமே செய்தியாகும்.
சிறிது சிறிதாக தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்ட காமராஜ், சங்கராச்சாரி கைதின் போது மிக முக்கிய பங்கை வகிக்கிறார்.

இந்த வழக்கின் புலனாய்வு அதிகாரியாக இருந்த பிரேம் குமாரிடம் நெருக்கமான தொடர்பை பேணுகிறார். அப்போதும், காமராஜிடம், இப்போதைய முதல்வர் கருணாநிதி நெருக்கமான தொடர்பை பராமரித்து வருகிறார்.


காமராஜிடம் எப்போதும் ரெகுலராக பேசும் பிரேம் குமார், சங்கரரரமன் கொலை வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்று தெரிவிக்கிறார்.
எப்போதும் காமராஜிடம் தொலைபேசியிலோ, அல்லது நேரிலோ, தொடர்பில் இருக்கும் கருணாநிதி காமராஜிடம், இந்த வழக்கில் உண்மையான குற்றவாளி யார் என்று கேட்கிறார். காமராஜ், இவ்வழக்கில் உண்மையான குற்றவாளி ஜெயேந்திரர் தான் என்றும், இவர்தான் குற்றவாளி என்று தெரிந்ததும் அரசு கைது செய்ய யோசிக்கிறது என்றும் தெரிவிக்கிறார்.



இச்செய்தி தெரிந்ததும் கருணாநிதி, சங்கரராமன் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப் படவில்லை என்று அறிக்கை வெளியிடுகிறார். இந்த அறிக்கையையும், காமராஜும் கருணாநிதியும் தொலைபேசியில் விவாதிக்கிறார்கள். காமராஜ் மற்றம் கருணாநிதியின் இந்த உரையாடலை பதிவு செய்து கேட்ட ஜெயலலிதா, “நீங்கள் யார் சொல்வதற்கு, ஜெயேந்திரரை நான் கைது செய்ய மாட்டேன் என்று “கைது செய்து காட்டுகிறேன் பார்“ என்று உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டு, அதன் விளைவாகவே தீபாவளியன்று, ஜெயேந்திரர் கைது செய்யப் படுகிறார்.


படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு வரும் காமராஜுக்கு, தற்போது உளவுத் துறை ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டுடன் பழக்கம் ஏற்படுகிறது. இவர்களுக்கிடையேயான பழக்கம், ஜாபர் சேட், செங்கல்பட்டு டிஐஜியாக இருக்கும் பொழுதுதான் நெருக்கமாகிறது.
திருமழிசை அருகே, பெப்சி தொழிற்சாலை ஒன்று உண்டு. இத்தொழிற்சாலையின் முதலாளி, காமராஜின் நெருங்கயி நண்பர்.

இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு, ஒப்பந்தப் படி ஊதியம் தரவில்லை என்று போராட்டம் தொடங்குகிறது. இந்தத் தொழிலாளர்கள் பெரும்பாலும் தலித்துகள். இந்த தொழிலாளர்களுக்கு ஆதரவாக பூவை மூர்த்தி களம் இறங்குகிறார். பூவை மூர்த்தி களத்தில் இறங்கி தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்கத் தொடங்கியதும், இத்தொழிற்சாலையின் முதலாளி, தனது நெருங்கிய நண்பர் காமராஜை தொடர்பு கொள்கிறார். காமராஜ் அப்போது செங்கல்பட்டு டிஐஜியாக இருந்த ஜாபர் சேட்டை தொடர்பு கொள்கிறார். ஜாபர் சேட், தன்னுடைய போலீஸ் படையை பயன்படுத்தி, போராடும் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டுகிறார். இதனால், நியாயமான கூலி கொடுக்க வேண்டிய முதலாளி, காமராஜ் மற்றும் ஜாபர் சேட்டின் தயவால், தொழிலாளிகளை ஒடுக்குகிறார்.


இந்த சம்பவம் முதல், ஜாபர் சேட்டுக்கும், காமராஜுக்கும் இடையேயான நட்பு, மிக மிக நெருக்கமாகிறது. திருடர்களிக்கிடையிலான நட்பு இயல்புதானே ?




இந்த நட்பு எந்த அளவுக்கு தொடர்கிறதென்றால், 2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப் படும் விஷயத்தை ஒரு மணி நேரம் முன்னால், ஜாபர் சேட், காமராஜுக்கு தெரிவிக்கிறார்.

கருணாநிதி கைது செய்யப் பட்டு, ஜாமீனில் விடுதலை ஆன பின்னர், ஒரு நாள், அவரைப் பார்க்க கோபாலபுரம் வீட்டுக்கு காமராஜ் சென்ற போது, “எதுக்குய்யா என்னப் பாக்க வந்த. எனக்கு இருக்குற தொந்தரவு போதாதா“ என்று கருணாநிதி காமராஜைப் பார்த்து கத்தியதாகவும் தகவல் உண்டு.


இப்படி கருணாநிதியுடன் இருந்த காமராஜின் உறவு, கடந்த 2006ம் ஆண்டில் இருந்து மிக மிக நெருக்கமாக ஆனது. இரண்டு ஆண்டுகளுக்கு முன், கருணாநிதியின் பிறந்த நாளின் போது (அப்போது மாறன் குடும்பம் ஒன்று சேரவில்லை) விழா எல்லாம் முடித்து விட்டு, வீட்டுக்கு வந்த கருணாநிதி, “இன்று வரும் வழியில் காரில், வேட்டியிலேயே சிறுநீர் கழித்து விட்டேன், நான் இப்படிப் பட்ட நிலையில் இருக்கிறேன், ஆனால் என் பிள்ளைகள் (அழகிரி, ஸ்டாலின்) எப்படி அடித்துக் கொள்கிறார்கள் பார்த்தாயா “ என்று காமராஜிடம் பகிர்ந்து கொள்கிறார் என்றால், கருணாநிதியும் காமராஜும் எவ்வளவு நெருக்கம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.


இந்த நெருக்கத்தை, காமராஜ் எப்படியெல்லாம் தன்னுடைய நலனுக்கு பயன் படுத்த வேண்டுமோ, அப்படி பயன் படுத்தி வருகிறார். இது போன்ற நெருக்கமான விஷயத்தை, தமிழ்நாட்டில் உள்ள ஏதாவது ஒரு ஐபிஎஸ் அல்லது ஐஏஎஸ் அதிகாரியிடம் காமராஜ் தெரிவித்தாரேயானால், அடுத்த இரண்டு நிமிடத்தில் அந்த அதிகாரி காமராஜ் எதிரில் இருக்க மாட்டார். எங்கே இருப்பார் என்று கேட்டீர்களேயானால், கீழே உட்கார்ந்து, காமராஜின் கால் செருப்பை துடைத்துக் கொண்டிருப்பார்கள், நல்ல பதவி வேண்டி.

சென்னைக்கு வந்த புதிதில், வாடகை வீட்டில், வறுமையான சூழலில் வாழ்ந்து கொண்டிருந்த காமராஜுக்கு, இன்று சென்னை பெசன்ட் நகரில் 5 படுக்கை அறை கொண்ட வீடு சொந்தம். அலுவலகத்தில் கொடுத்திருக்கும் க்வாலிஸ் காரைத் தவிர, மனைவிக்கும், மகனுக்குமாக ஐந்து சொகுசு கார்கள் வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.


பெசன்ட் நகர் வீட்டை வாங்கும் போது, அந்த வீட்டை 32 லட்ச ரூபாய் மதிப்பில் வாங்கினார் காமராஜ். இந்த வீட்டுக்கு உடனடியாக கொடுக்க கையில் ரொக்கம் இல்லாததால், கோபால், காமராஜுக்கு 20 லட்ச ரூபாய் கடனாக கொடுத்தார். இந்த வீட்டில், பளிங்கு தரை அமைக்க மட்டும், 8 லட்ச ரூபாய் செலவிடப் பட்டுள்ளது என்று தகவல்கள் கூறுகின்றன.

இது போன்ற சொகுசு பங்களாவை சொந்தமாக வைத்துக் கொண்டு, கருணாநிதியுடன் இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்திக் கொண்டு, அரசு விருப்புரிமைக் கோட்டாவில், சென்னை திருவான்மியூரில், தன் மனைவி ஜெயசுதா பெயரில் 80 லட்ச ரூபாய் பெருமானமுள்ள வீட்டு மனையை 2007ம் ஆண்டில் ஒதுக்கீடு பெற்றுள்ளார் காமராஜ்.


திருச்சிக்கு அருகில் உள்ள தொழுதூருக்கும், பெரம்பலூருக்கும் இடையே உள்ள வாலிகண்டபுரத்தில் காமராஜுக்கு சொந்தமான க்ரானைட் விற்பனை நிலையம் 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப் பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.


உத்தரப் பிரதேசத்தில் உள்ள பரீதாபாத் என்ற இடத்தில், காமராஜ் மற்றும் கோபாலுக்கு சொந்தமாக ஒரு மருத்துவக் கல்லூரி கட்டப் பட்டு அதன் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இந்தக் கல்லூரியில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால், இந்த வீணாகப் போன கேத்தன் தேசாய் சிபிஐ வலையில் சிக்கியதால், உடனடியாக மாணவர் சேர்க்கை தொடங்க இயலவில்லை. தற்போது, மாணவர் சேர்க்கையை உடனடியாக தொடங்க, ஆ.ராசாவின் சகோதரரும், இந்திய வனப் பணி அதிகாரியும், ஆ.ராசாவின் அந்தரங்க காரியதரிசியுமான ராமச்சந்திரன் மூலம், உடனடியாக மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் பெற முயற்சிகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.


இது தவிரவும், கொடைக்கானலில், 30 சொகுசு அறைகள் கொண்ட, சாய் சித்தா ரிசார்ட்ஸ் என்ற பெயரில் காமராஜ் சொகுசு மாளிகையை வாங்கியிருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த மாளிகையை பராமரித்து வருவது, காமராஜின் நெருங்கிய நண்பர், ரகுபதி.


சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பேருந்து நிலையங்களை நவீனமயமாகக்க திட்டம் தீட்டப் பட்டு, ஃபைபர் பேருந்து நிலையங்கள் அமைக்கப் பட்டன. இந்த பேருந்து நிலையங்களை போக்குவரத்து அமைச்சர் நேருவின் தம்பியின் மைத்துனர் செல்வம் மற்றும் காமராஜ், கூட்டாக கான்ட்ராக்ட் எடுத்து பராமரித்து கொள்ளை லாபம் பார்த்து வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இதில் விசேடம் என்னவென்றால், இந்த பேருந்து நிலையம் அமைக்கும் அனைத்து செலவுகளும், சென்னை மாநகராட்சியினுடையது. இந்த பேருந்து நிலையத்தில் விளம்பரம் செய்வதற்கு ஒரு மாதத்திற்கான வாடகை ரூபாய் 3 லட்சம். இதற்கான தொகை முன் பணமாக காமராஜ் & கம்பெனியால் பெறப்பட்டது. பெறப்பட்டபின், மாநகராட்சி இதில் சிக்கல்களை உருவாக்கியது.

விரிவாகச் சொல்லுவதென்றால், மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். இது பெரிய பஞ்சாயத்தாகி, துணை முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு அனைவருக்கும் சமாதானம் ஏற்படுத்தினார். சமாதானம் என்ன தெரியுமா ? ராஜேஷ் லக்கானியை ஒரு பெரிய தொகையை கொடுத்து “கவனிக்க“ வேண்டும் என்பதுததான். காமராஜ் & கம்பேனி அவ்வாறே அவரை கவனித்து விட்டு இத்தொழிலை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.


பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சாதிக். 10 அல்லது 12 ஆண்டுகளுக்கு முன்னால், சென்னைக்கு ஒரு மஞ்சள் பையுடன் வந்தார். சென்னைக்கு வந்து சொந்த மாவட்டத்துக் காரர் என்ற வாஞ்சையுடன் காமராஜை பார்க்க, காமராஜ், இவரை தனது பினாமியாக்கிக் கொண்டார்.


மஞ்சள் பையுடன் சென்னை வந்த சாதிக், இன்று சன் டிவியில், இரவு 7.30 மணிக்கும், 8 மணிக்கும் க்ரீன்வேஸ் ப்ரமோட்டர்ஸ் என்ற பெயரில் விளம்பரம் செய்யும் அளவுக்கு வளர்ந்துள்ளார். இது போல, சென்னைக்கு வந்த உடன், 10 ஆண்டுகளில் பெரிய தொழில் அதிபர் ஆவது, அண்ணாமலை ரஜினிகாந்துக்கு மட்டுமே சாத்தியம்.


சாதிக் பெயரில், தன்னுடைய சட்ட விரோத சம்பாத்தியத்தையெல்லாம் காமராஜ், இருங்காட்டுக்கோட்டை, வல்லக்கோட்டை போன்ற இடங்களில் முதலீடு செய்திருப்பதாகவும், வாரந்தோறும், காமராஜ், இந்த இடங்களுக்குச் சென்று, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவு படுத்தி வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தை சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்க, தேர்ந்தெடுக்கப் படவில்லை. இந்த மாவட்டம் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் படாவிட்டால், இந்த இடத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தும் காமராஜ், ஆ.ராசா, ஆகியோர் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதால், தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலூர் மாவட்டத்தின் ஒரு பகுதியையும் சிறப்பு பொருளாதார மண்டலமாக அறிவிக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது, பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு மருந்து தொழிற்சாலை தயாரிக்க லைசென்ஸ் பெற்றிருப்பதாகவும், விரைவில் இத்தொழிற்காலை தொடங்க இருப்தாகவும் தகவல்கள் கூறுகின்றன.

காமராஜ் இன்று தொடங்கியிருக்கும் “பெரம்பலூர் மாஃபியாவின்“ முக்கிய உறுப்பினர்கள் யார் தெரியுமா ? ஜாபர் சேட். ஜெகத் கஸ்பர். கனிமொழி. ஆ.ராசா. டி.ஆர்.பாலு ஆகியோர்தான்.

தமிழ்நாட்டை இன்று நிர்வகிப்பது அரசு அதிகாரிகளோ, நீதிமன்றங்களோ, சட்டசபையோ, முதலமைச்சரோ அல்ல. இந்த “பெரம்பலூர் மாஃபியாதான்”

இந்தப் பதிவு எழுதுவதற்காக ஏறக்குறைய இரண்டு மாத காலம் வேலை நடந்தது. இந்தப் பதிவை எழுதுவதால், கடும் நெருக்கடியை சந்திக்க நேரிடும் என்று மிரட்டல்கள் விடுக்கப் பட்டன.

இந்த மிரட்டல்களுக்கு பதிலாக ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
என்னை வழி நடத்துபவன் பாரதி. நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள் என்றான் அவன். அந்த யார்க்கும் என்பதில் காமராஜ், ஜாபர் சேட், ஆ.ராசா, கனிமொழி, கஸ்பர், டி.ஆர்.பாலு ஆகிய அனைவரும் அடங்குவார்கள் தானே ?


சவுக்கு

Wednesday, June 16, 2010

நித்யானந்தா ஆபாச சிடி வெளியானது எப்படி ? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்.





பொதுவாக, தமிழ்நாட்டுக்கென ஒரு ‘ட்ரென்ட்’ உண்டு. அது பத்திரிக்கையாளர்கள் மீதான புகார்களைப் பற்றி மூச்சு விடாதது. பத்திரிக்கையாளர்களைப் பற்றி வண்டி வண்டியாக புகார்கள் இருந்தாலும், அதைப் பற்றி எந்த பத்திரிக்கையும் எழுதாதாம். அதுதான் பத்திரிக்கை தர்மமாம். இந்த தர்மத்தை மூத்த பத்திரிக்கையாளர்களும் கடை பிடிப்பது, தமிழகத்தின் சாபக்கேடு.

ஊரில் உள்ள ஊழல்களையெல்லாம் எழுதுவார்களாம். ஆனால், அதை விட முடை நாற்றமெடுக்கும் இவர்களின் ஊழலைப் பற்றி யாரும் எழுதக் கூடாதாம். ஆனால், இது சவுக்கு அய்யா. சவுக்கு. சவுக்குக்கு இந்த பத்திரிக்கை தர்மமெல்லாம் பொருந்தாது. ஊழல் செய்தவர்கள் யாராயிருந்தாலும், அவர்களின் முகத்திரையை கிழிப்பதே சவுக்கின் வேலை.

சுவாமி நித்யானந்தா… …. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும், அனைவராலும் உச்சரிக்கப் பட்ட ஒரு பெயர். தமிழ்நாட்டில் அனைத்துப் பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளி ஏறக்குறைய ஒரு மாத காலத்துக்கும் மேலாக தலைப்புச் செய்திகளை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பெயர். இந்த பிரச்சினையில் நுழையும் முன், இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை புரிந்து கொள்வது அவசியம்.

இந்தியாவில் எப்போதுமே, ஆன்மீக வியாபாரத்துக்கு நல்ல மதிப்பு இருந்தே வந்திருக்கிறது. 99 ரோல்ஸ் ராய்ஸ் கார்களை வைத்திருந்ததன் மூலம், ஓஷோ, இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்துக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தார்.





ஓஷோவின் கணக்கிலடங்காத சொத்துக்கள், இது எவ்வளவு பணம் புழங்கும் வியாபாரம் என்பதை உலகுக்கு உணர்த்தியது.

இவர் அளவுக்கு சம்பாதிக்க வில்லை என்றாலும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் “கிருஷ்ணமூர்த்தி பவுன்டேஷனும்“ பணம் புரளும் ஒரு ட்ரஸ்ட்தான்.



இவர்கள் இருவரின் மறைவுக்குப் பின் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப வந்தவர்கள் மூவர்.

ஒருவர் ஜக்கி வாசுதேவ். அடுத்தவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.






அடுத்தவர், இன்று கழன்ற டவுசரோடு (Caught with pants down) மாட்டிக் கொண்ட நித்யானந்தா.

இந்தியாவின் ஆன்மீக வியாபாரத்தை பங்கு போட்டுக் கொள்வதில் இந்த மூவருக்கும் தான் கடும் போட்டி. இவர்கள் மூவரைத் தவிர, மேல்மருவத்தூர் சாமியார் போன்றவர்கள் அல்லு சில்லுகள். இந்த மூவரைப் போல, வெளிநாட்டு பணத்தை வாங்கி பெரும் பணக்காரனாகும் வியாபார நுணுக்கம் தெரியாதவர்கள்.

இந்த மூவரும், தங்கள் வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பகீரதப் பிரயத்தனங்களை செய்ய ஆரம்பித்தார்கள். ஒருவர் ஆனந்த விகடனில் தொடர் எழுதுவார். இன்னொருவர் குமுதத்தில் தொடர் எழுதுவார். ரவிசங்கர், இந்தியா டுடேவின் அட்டைப் படத்தில் வருவார்.

இது போக மின்னணு ஊடகங்களிலும் இடம் பிடிப்பதில் இவர்கள் மூவருக்கும் இடையே கடும போட்டி.

இந்த நிலையில் தான், நக்கீரன் பத்திரிக்கையில் 1993 94 ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின் மனைவி தற்கொலை செய்து கொண்டதாக செய்தி வெளியிடுகிறது. இந்த செய்தியை எழுதியவர் மகரன் என்ற நிருபர்.

இதற்கு அடுத்து அதே ஆண்டுகளில் நக்கீரன் ஜக்கி வாசுதேவின் ஆசிரமத்தில் கஞ்சா சரளமாக புழங்குகிறது என்று ஒரு செய்தி வருகிறது. இதையும் மகரன் என்ற நிருபரே எழுதுகிறார்.

1994-95ம் ஆண்டுகளில் ஜக்கி வாசுதேவின், மாஹே மற்றும் ஏணம் பகுதிகளில் உள்ள ஆசிரமங்களில் பெண் விவகாரங்களில் கலாச்சார சீரழிவு என்று மீண்டும் செய்தி வருகிறது.
இந்நிலையில், ஜக்கி வாசுதேவ், 1996-97ம் ஆண்டுகளில் நக்கீரன் காமராஜை அழைக்கிறார்.

அப்போது கோவை சென்று ஜக்கியை சந்திக்கும் காமராஜ், அந்த ஆசிரமத்திலேயே ஒரு மாதம் தங்குகிறார். இந்த கால கட்டத்தில், ஜக்கியின் தேனொழுகும் பேச்சில் மயங்கிய காமராஜ், ஜக்கியின் பரம சீடனாக உருவெடுக்கிறார். ஜக்கிக்காக தமிழ்நாட்டில் பல காரியங்களை செய்து கொடுக்கும் பரம பக்தனாக காமராஜ் மாறுகிறார்.



இதையடுத்து, ஜக்கியின் ஆசிரமத்துக்காக சொத்தக்களை வாங்கிக் குவிப்பதிலும், இது தொடர்பாக அரசு அலுவலகங்களில் வேலைகளை சுலபமாக்குவதிலும், காமராஜ் பெரும் பங்கு வகிக்கிறார்.

ஜக்கியை அழைத்து வந்து, சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் உள்ளே கருணாநிதி தலைமையில் மரம் நடும் விழா நடத்தப் பட்டது அல்லவா. அந்த விழாவுக்கு ஏற்பாடு செய்ததே காமராஜ் தான்.



தன்னுடைய குருவான ஜக்கி வாசுதேவை கருணாநிதிக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்ற முயற்சியை நிறைவேற்ற கருணாநிதியிடம் தனக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தியே இந்த ஏற்பாடுகளை செய்தார்.



காமராஜின் மகன், கோவையில் உள்ள ஜக்கி வாசுதேவின் உறைவிடப் பள்ளியில் படித்து வருகிறான் என்பதும் குறிப்பிடத் தகுந்த தகவல்.

இந்த மூன்று சாமியார்களுக்குள் ஏற்கனவே இருந்த தொழில் போட்டியை தன்னுடைய போட்டியாக காமராஜ் கருதத் தொடங்கினார். இதையொட்டியே, காமராஜுக்கு, நித்யானந்தாவின் சீடர், லெனின் என்கிற தர்மானந்தாவின் பழக்கம் ஏற்படுகிறது. இந்த தர்மானந்தா, நித்யானந்தாவின் பெண் தொடர்புகள் பற்றி காமராஜிடம் கூறுகிறார். இருவரும் சேர்ந்து ஒரு பெரிய சதித் திட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நித்யானந்தாவை சிக்கலில் மாட்டுவது போன்ற ஒரு வீடியோ படத்தை தயாரிக்கத் திட்டமிடுகின்றனர். லெனினுக்கு தொழில்நுட்பம் பற்றிய விபரங்கள் ஏதும் தெரியாது என்பதால், இதற்கான வீடியோ கேமரா மற்றும் இதர உபகரணங்களையும் காமராஜே வாங்கிக் கொடுக்கிறார். திட்டமிட்டபடி வீடியோ உபகரணம் உரிய இடத்தில் பொருத்தப் படுகிறது என்று ஆசிரம வட்டாரங்கள் கூறுகின்றன.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல, நித்யானந்தாவோடு, நடிகை நெருக்கமாக இருக்கும் காட்சி பதிவாகிறது. இதைப் பார்த்த, காமராஜுக்கும், லெனினுக்கும் சாமியாரை மிரட்டி பணம் பறிக்கலாம் என்ற எண்ணம் வருகிறது.



இதையடுத்து, லெனினையே, நித்யானந்தாவோடு பேரம் பேச அனுப்புகிறார் காமராஜ். இவர்களின் பேரம் பல கோடி ரூபாய்களைக் கேட்கிறார்கள்.

நித்யானந்தாவோடு பேரம் தொடங்கியதும், நித்யானந்தா இந்த விவகாரத்தைப் பற்றி, சேலத்தில் உள்ள ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியிடம் ஆலோசனை கேட்கிறார். அந்த அதிகாரி, இது போல பணம் கொடுத்தால், இந்த ப்ளாக் மெயில் தொடரும் என்பதால், பணம் கொடுக்க மாட்டேன் என்று மறுக்க சொல்கிறார். அதன் படியே நித்யானந்தா பணம் கொடுக்க மறுக்க, இந்த வீடியோவை வெளியிடுவது என்று லெனினும் காமராஜும் முடிவெடுக்கின்றனர்.

அச்சு ஊடகங்களில் வந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்று காட்சி ஊடகங்களிலும் வர வேண்டும் என்று முடிவெடுக்கப் பட, காமராஜ் சன் டிவியுடன் பேரம் பேசி, இந்த வீடியோவுக்கான பிரத்யேக ஒளிபரப்பு உரிமைகளைத் தர, ஒரு தொகையை பெற்றுக் கொள்கிறார்.



இது போல வீடியோ ஒளிபரப்பப் படுகிறது என்ற தகவல் அறிந்த ஒரு மூத்த பத்திரிக்கையாளர் சன் டிவியின் செய்தி ஆசிரியரை தொடர்பு கொண்டு வீடியோ நகல் ஒன்று வேண்டும் என்று கேட்க, மொத்த கன்ட்ரோலும் நக்கீரனிடம் உள்ளது என்றும் எந்த நகலையும் யாருக்கும் தர உரிமை இல்லை என்று பதில் அளித்தது குறிப்பிடத் தக்கது.


இந்த வீடியோவை வெளியிட்டதால் நக்கீரன் உட்பட அனைவருக்கும் லாபம் தான். இது தொடர்பான செய்தி முதலில் வெளி வரும் நேரத்தில் நக்கீரனின் சர்குலேஷன் எவ்வளவு தெரியுமா ? வெறும் 60,000. இந்த நேரத்தில் வாரம் இருமுறை இதழாக இருக்கும் நக்கீரனை மீண்டும் வார இதழாக மாற்றலாமா என்ற ஆலோசனை நடக்கும் அளவுக்கு நிலைமை பரிதாபமாக இருந்தது. நித்யானந்தா கதைக்குப் பிறகு, நக்கீரனின் சர்குலேஷன் 1.5 லட்சத்தை தொட்டிருக்கிறது.



இந்த செய்தியை முதன் முதலில் வெளியிட்டு, தொடர்ந்து மூன்று மாதங்களுக்கும் மேலாக, நக்கீரன் கவர் ஸ்டோரியாக, நித்யானந்தாவுக்கு சுய இன்பப் பழக்கம் உண்டு, நித்யானந்தா நீலப்படம் பார்ப்பார் என்று இந்தக் கதைகளையே வெளியிட்டு, சரோஜா தேவி கதைகளை மீண்டும், தமிழுக்கு கொண்டு வந்ததை யாரும் மறந்திருக்க முடியாது. நித்யானந்தா நக்கீரனை காப்பாற்றினார் என்றால் அது மிகையாகாது.


சென்னை காவல் துறையிடம் புகார் ஒன்னை கொடுத்த லெனின் என்கிற தர்மானந்தாவை எந்த பத்திரிக்கையாளரையும் சந்திக்க அனுமதி வழங்கப் படவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.


சென்னை மாநகர காவல்துறை இந்த விவகாரத்தை கையாண்ட விதம் ஒரு பெரிய தமாசு. முதலில் நாலு வழக்கறிஞர்கள் சென்று கமிஷனரிடம் புகார் கொடுக்கிறார்கள். உடனே நித்யானந்தா மேல் வழக்கு பதிவு செய்கிறார் கமிஷனர்.

இந்த ஆபாச வீடியோவை மீண்டும் மீண்டும் ஒளிபரப்பி குழந்தைகளோடு டிவி பார்க்க விடாமல் நெருக்கடிக்கு உள்ளாக்கிய சன் டிவி மீதும், வாரமிருமுறை இதழாக சட்ட விரோதமாக விற்கப் படும் “போர்னோ“ பத்திரிக்கையான நக்கீரன் மீதும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பதிவுத் தபாலில், கல்யாணி என்ற வழக்கறிஞர் அனுப்பிய புகார் ஏன் கமிஷனர் ராஜேந்திரன் கண்ணுக்குத் தெரியவில்லை ?


ஏனென்றால், இது அத்தனையையும் ஆட்டி வைப்பது காமராஜ். அவர் சொன்னால் வழக்கு பதியப் படும். வேண்டாம் என்றால் மூடப்படும். முதலில் வழக்கு பதிவு செய்த சென்னை காவல்துறை, உடனடியாக வழக்கை பெங்களூருக்கு மாற்றம் செய்ததும் குறிப்பிடத் தக்கது. நித்யானந்தா கைது செய்யப் பட்டதும், ஒரு தனிப்படை பெங்களுர் சென்று நித்யானந்தாவை விசாரிக்கும் என்று கமிஷனர் ராஜேந்திரன் சொன்னது இன்னொரு தமாஷ்.


ஏற்கனவே மாற்றம் செய்யப் பட்ட வழக்கு தொடர்பாக எப்படி விசாரிக்க முடியும் ?

இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கரின் ஆசிரமத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டை, நித்யானந்தா விவகாரத்தோடு முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிட்டது.
பெரிய வியாபாரிகள் மூன்று பேரில் ஒருவரை ஒழித்துக் கட்டியாகி விட்டது. இன்னும் ஜக்கிக்கு போட்டியாக ஒருவன் இருக்கிறானல்லவா ?



அவனையும் ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதற்காகவே இந்த கவர் ஸ்டோரி. மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரமே, அந்த துப்பாக்கிச் சூடு, ரவிசங்கரை குறி வைத்து நடத்தப் பட்டதல்ல என்று பேட்டியளித்த பின்பும் கூட இந்த சம்பவங்கள் இரண்டையும் முடிச்சு போட்டு கவர் ஸ்டோரி வெளியிடப் படுகிறது என்றால் ஜக்கியை தூக்கிப் பிடிக்க காமராஜ் எடுக்கும் முயற்சியை பாருங்கள்.

இந்தியாவின் ஒரே ஆன்மீக வியாபாரியாக ஜக்கி வாசுதேவை, ஒரு Monopoly வியாபாரி ஆக்கிவிட்டார் காமராஜ் என்றால், அது மிகையாகாது.


எல்லாம் ஆன்மீகம் அய்யா ஆன்மீகம்.


சவுக்கு

Monday, June 7, 2010

அரசியலில் இருந்து ஓய்வு. ஸ்டாலின் திடீர் அறிவிப்பு.




தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சியாக இருக்கிறதா ? இது இப்போது நடக்கவில்லை. 2020ல் நடக்கிறது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் முடிந்தவுடன் இந்த அறிவிப்பு வெளிவரும் என்று சவுக்குக் பிரத்யேக தகவல் வந்துள்ளது. கருணாநிதியின் 97வது பிறந்த நாள் விழாவில் அவர் பேசியதைப் பற்றி பார்க்கும் முன், 2020 எப்படி இருக்கிறது என்பதை பார்த்து விடுவோம்.

2011 தேர்தலிலும் திமுகவே வெற்றி பெறுகிறது. கருணாநிதி மீண்டும் முதல்வராகிறார். 2020ல் தேர்தல் சமயத்தில் மக்களுக்கு கொடுக்கப் படும் பணத்தில் நிறைய ஊழல் ஏற்படுவதாக புகார் வந்ததையடுத்து, ரேஷன் கடைகளிலேயே ஒவ்வொரு தேர்தல் சமயத்திலும் பணம் பட்டுவாடா செய்யப் படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிடுகிறது.

இலவச கலர் டிவி, இலவச வீட்டு மனை போல, அனைவருக்கும் வருடத்திற்கு ஒரு முறை, இலவச பேண்ட் சர்ட், இலவச உள்ளாடைகள் வழங்கப் படுகின்றன.
அனைத்து காவல் நிலையங்களிலும், எஃப்ஐஆர் போட, அரெஸ்ட் பண்ண, அரெஸ்ட் பண்ணாமல் இருக்க, காணாமல் போன பொருளை கைப்பற்ற, கைப்பற்றிய பொருளை திருப்பித் தர, புகார் கொடுக்கும் போது, உட்கார வைக்க, கெட்ட வார்த்தையில் திட்டாமல் இருக்க என்று தனித்தனியே கட்டணம் நிர்ணயிக்கப் பட்டு, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் பெயர்ப் பலகை வைக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

என்கவுண்டரில் ஈடுபடும் போலீசாருக்கு, மேற்படி வசூலாகும் தொகையிலிருந்து 10 சதவிகிதம் வெகுமதியாக கிடைக்கும் என்று அறிவிக்கப் படுகிறது.

டாஸ்மாக் கடைகளில் போதுமான சரக்கு கிடைப்பதில்லை என்று வந்த புகாரையடுத்து, அனைத்து மளிகை கடைகளிலும் மதுபானங்கள் விற்கலாம் என்று உத்தரவிடப் படுகிறது.

தமிழகத்தில் வரும் அனைத்து செய்தித் தாள்களிலும், முதல் பக்கத்தில் கருணாநிதியின் படம் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப் படுகிறது. தவறும் நாளிதழ்களுக்கு, அரசு விளம்பரம் நிறுத்தப் படுகிறது.

தமிழில் பெயர் வைக்கும் திரைப்படங்களுக்கு கேளிக்கை வரி கிடையாது என்று உத்தரவிடப்பட்டது போதாது என்று திரையுலகத்தினர் வைத்த கோரிக்கைகளை அடுத்து, ஒவ்வொரு திரைப்படம் எடுக்கும் போது ஆகும் செலவில் 50 சதவிகிதத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று அறிவிக்கப் படுகிறது.

திரைப்படத்தில் வாய்ப்பு குறைந்த நடிக நடிகையருக்கு, அரசு வேலை என்று அறிவிக்கப் படுகிறது.

2020ல் ஏற்பட்ட ராஜ்ய சபை காலியிடத்தில் தன் மகனுக்கு இடம் வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ் விடுத்த வேண்டுகோளை பரிசீலித்து, கருணாநிதி 2024ல் ஏற்படும் காலியிடத்தில் வழங்கப் படும் என்று உறுதி கூறுகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சி கலைக்கப் பட்டு திமுகவோடு இணைக்கப் பட்டு, மருத்துவர் ராமதாசுக்கு, திமுக வன்னியர் பிரிவு தலைவர் என்று பதவி வழங்கப் படுகிறது.
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் கலைக்கப் பட்டு, திமுகவின் தலித் பிரிவு தலைவராக திருமாவளவனுக்கு பதவி வழங்கப் படுகிறது.

கருணாநிதியின் “கவர் பாலிடிக்ஸ்“ முன் அரசியல் செய்ய முடியாமல் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அனைத்தும் அழிந்து போகின்றன.

எதிர்க்கட்சியே இல்லாமல் இருந்தால், இமேஜ் நன்றாக இருக்காது என்று கருணாநிதியே, “திராவிட பின்னேற்றக் கழகம்“ என்ற ஒன்றை துவக்கி, அதற்கு, அழகிரியை தலைவராக்குகிறார்.

இப்போது டிஜிபியாக உள்ள லத்திகா சரண், ஓய்வு பெற்றதும், திமுக மகளிர் அணித் தலைவியாக ஆகிறார்.

உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், ஓய்வு பெற்றதும், எம்எல்ஏவாகி, மந்திரியும் ஆகி, “ஒட்டுக் கேட்புத் துறை“ மந்திரியாக்கப் படுகிறார்.

சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராதாகிருஷ்ணன், நாயுடு மகாஜன சபாவின் தலைவராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்.

மவுரியா சிஐடி காலனி வீட்டின் “மெயின்டெனன்ஸ்“ காண்ட்ராக்டர் ஆகிறார்.
லஞ்ச ஒழிப்புத் துறை மூடப்பட்டு, “லஞ்ச பராமரிப்புத் துறை“ என்ற ஒன்று ஏற்படுத்தப் பட்டு, ஆ.ராசா அதற்கு மந்திரியாகிறார்.

ஏ.கே.விஸ்வநாதன், அப்போதும் பதவியில்லாமல், அழகிரி வீட்டில் வாட்ச்மேனாக சேர்ந்து விடுகிறார்.

வழக்கறிஞர்-காவல்துறை மோதல் குறித்த தீர்ப்பு 2024ல் வழங்கப் படும் என்று உச்சநீதிமன்றம் அறிவிக்கிறது.

அரசு ஊழியர்கள் வாரத்துக்கு ஒரு முறை அலுவலகம் சென்றால் போதும், சம்பளம் மட்டும் வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப் படுகிறது.

பழைய உள்துறை செயலாளர் மாலதி, அஞ்சுகம் அறக்கட்டளையின் கணக்காளர் ஆகிறார்.

காங்கிரஸ் கட்சி, 2028ல் காமராஜ் ஆட்சி அமைப்போம் என்று அறிவிக்கிறது.
இப்போது கருணாநிதியின் பேச்சு.

இந்த விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்த “கலைஞர் பாராட்டு விழாத் துறை“ அமைச்சர் தம்பி துரை முருகன் அவர்களே, துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்களே, ஒட்டுக் கேட்புத் துறை அமைச்சர் ஜாபர் சேட் அவர்களே, நாயுடு மகாஜன சபா தலைவர் ராதாகிருஷ்ணன் அவர்களே, மகளிர் அணித் தலைவர் லத்திக்கா சரண் அவர்களே, பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்களே, இந்த விழாவை அழகாக தொகுத்து வழங்கிய, கழக முன்னோடி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களே, என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே…

எனக்கு பாராட்டு விழா என்றாலே பிடிக்காது. அந்த நேரத்திலே, எப்படி மக்கள் பணி ஆற்றலாம், என்ன எழுதலாம் என்று சிந்தித்து வேலை செய்பவன் நான்.

ஆனால் துணை முதலமைச்சர் குஷ்பூ அவர்கள் இது பாராட்டு விழா அல்ல, பிறந்த நாள் விழா என்று எடுத்துக் கூறி, என்னை இசைய வைத்தார்கள். கழக ஆட்சியிலே துணை முதல்வராக இருந்தாலும், அவருக்கு நன்றி பாராட்டுதல் தமிழ்ப் பண்பு என்பதால் நன்றி கூறுகிறேன்.

இந்த விழாவுக்கு வந்திருக்கும் பத்திரிக்கையாளர்கள், என்னிடமிருந்து ஏதாவது செய்தியை எதிர்ப்பார்த்திருப்பீர்கள். எப்போது இவன் ஓய்வு பெறுவான், எப்போது இளைஞர் அணித் தலைவர் (?!) ஸ்டாலின் அரியணை ஏறுவார் என்று காத்திருக்கிறீர்கள்.


எனக்கு வயதாகி நான் ஓய்வு பெற வேண்டிய நேரம் வந்தால் தானே ஸ்டாலின் முதல்வராக முடியும். நானே ஒரு இளைஞன். இதனால்தான், நான் 2010ம் ஆண்டு, இளைஞன் என்ற ஒரு படத்துக்கு வசனம் எழுதினேன்.

அந்தப் படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும் என்று அருமைத் தம்பி வைரமுத்து எவ்வளவோ முயற்சி செய்தும், சில சதிகாரர்களால், ஒரு தமிழன், தமிழில் வசனம் எழுதியதற்காக ஆஸ்கர் விருது மறுக்கப் பட்டது.

இவ்வாறு ஆஸ்கர் விருது மறுக்கப் பட்ட போது, அஞ்சாநெஞ்சன் அழகிரி, உடனடியாக ஹாலிவுட் சென்று, ஒரு பத்து பேரையாவது உயிரோடு கொளுத்தலாம் என்றான். நான்தான், பெருந்தன்மையோடு வேண்டாம் என்றேன்.


இந்த வயதிலும், ஓய்வுக்கே ஓய்வு கொடுத்து (பன்ச்) நான் வேலை பார்த்து வருகிறேன். தமிழ்நாட்டிலே ஒரு காலத்தில், ஜெயலலிதா என்ற ஒரு அம்மையார் ஆட்சி செய்து கொண்டிருந்தார். அவர் பல கோப்புகளை கட்டி வைத்திருந்தார். நான்தான் அவர் கட்டி வைத்திருந்த கோப்புகளையெல்லாம், 2006ல் கழக ஆட்சி வந்தவுடன், அவிழ்த்து, உடனடியாக நடவடிக்கை எடுத்தேன்.


இப்போதும் சிலர், எப்படி எனக்கு இந்த வயதிலும் இப்படி சலிக்காமல் வேலை செய்யும் தெம்ப இருக்கிறது என்று கேட்கிறார்கள். கடந்த 10 ஆண்டுகளாக, தொடர்ந்து “மானாட மயிலாட“ நிகழ்ச்சியைப் பார்த்துதான் எனக்கு பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தையும், உணர்ச்சியையும் ஊட்டிக் கொள்கிறேன்.


இது போல, நீங்களும், தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை பார்ப்பீர்களேயானால், என்னைப் போலவே ஓய்வு ஒழிச்சலின்றி பணியாற்றும், தெம்பு வரும் என்பதை இந்த நேரத்திலே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.


கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் ஸ்டாலின் அவர்களுக்கு முதல்வர் பதவி, உரிய நேரத்தில் வழங்கப் படும். இது என்னுடைய தனிப்பட்ட முடிவு அல்ல. கட்சியின் தலைமை நிலையக் குழு, செயற்குழு, பொதுக்குழு ஆகியவை கூடி முடிவு செய்யும்.


என்று பேசினார்.

விழா முடிந்ததும், பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஸ்டாலின், 1975ம் ஆண்டு முதல், தனக்கு பதவி தருகிறேன், தருகிறேன் என்று தொடர்ந் சொல்லி வந்த கருணாநிதி, இந்த பிறந்த நாளிலாவது பதவியைத் தருவார் என்று எதிர்ப்பார்த்தேன், ஆனால், தலைவர் அவர்கள், நான் இன்னும் இளைஞன் என்று கூறி விட்டதால், எனக்கு வாய்ப்பு எப்போதுமே வராதோ என்று தோன்றுகிறது.

இதனால், நான் பொது வாழ்வில் இருந்தும், அரசியலில் இருந்தும் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்து விட்டேன் என்று ஸ்டாலின் அறிவித்தார்.


சவுக்கு

Sunday, June 6, 2010

நோயாளியான மருத்துவர் ? பாகம் இரண்டு






பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பயணம் 1989ல் தொடங்கியது.

1989ல் நடைபெற்ற தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்டு, 15 லட்சத்து 36 ஆயிரத்து 350 வாக்குகளை பெற்றது. எனினும் ஓரிடத்தில் கூட அக்கட்சி வெற்றி பெறவில்லை.

1991ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாமக போட்டியிட்டு, ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அப்பொழுது பாமகவின் சின்னம் யானை. அந்தத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வெற்றி பெற்ற வேட்பாளர் பன்ருட்டி ராமச்சந்திரன். யானை சின்னத்தில் வெற்றி பெற்றதால், முதல் நாள் சட்ட மன்றத்துக்கு, பன்ருட்டி ராமச்சந்திரன் யானையில் அழைத்து வரப்பட்டார். அதே ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டாலும், பாமக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

1996ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி, அப்போது, “திவாரி காங்கிரஸ்“ என்ற ஒரு “உப்புமா“ கட்சியை நடத்திக் கொண்டருந்த வாழப்பாடி ராமமூர்த்தியோடு சேர்ந்து போட்டியிட்டு, 4 இடங்களில் வெற்றி பெற்றது.

பாமக ஒரு பெரும் சக்தியாக உருவெடுக்கவில்லை என்றாலும், அந்த ஆண்டு தேர்தலில் அடித்த “ஜெயலலிதா எதிர்ப்பு அலையையும்“ மீறி, பாமக 4 இடங்களில் வெற்றி பெற்றது, அரசியல் நோக்கர்கள் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.


1998ம் ஆண்டு, நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், எப்படியாவது தன் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருந்த செல்வி ஜெயலலிதா, பாட்டாளி மக்கள் கட்சியோடு கூட்டு சேர்ந்தார். இக்கூட்டணியில் நான்கு எம்பிக்களை பெற்றது பாமக.




இந்தத் தேர்தலில் இருந்துதான், மருத்துவர் ராமதாஸின் சறுக்கல் தொடங்கியது. தேர்தலில் வெற்றி பெற்று, மத்தியில் மந்திரி பதவியும் கிடைத்தது. அதுவும், மிக மிக “வளமை“ வாய்ந்த பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பதவி.

ஆண்டுதோறும், நலிவடைந்த மற்றும், தலித்துகளுக்கு, இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், பெட்ரோல் பங்க் வழங்குவதற்காக நேர்முகத் தேர்வு நடத்தும். இந்த நேர்முகத் தேர்வுக்கு, என்னுடைய நண்பரோடு, நானும் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. டிஎம்எஸ் எதிரில் உள்ள, ஸ்ரீலேகா இன்டர்நேஷனல் ஹோட்டலில்தான் நேர்முகத் தேர்வு நடந்தது.

அங்கே இருந்த, நேர்முகத் தேர்வு நடத்தும் அதிகாரியின் பி.ஏ, விண்ணப்பித்திருந்த என் நண்பரைப் பார்த்துச் சொன்னது, “இந்த இன்டர்வ்யூ எல்லாம் வெரும் ஐ வாஷ் சார். நேரா, தைலாபுரம் தோட்டத்துக்கு போயி, டாக்டர பாருங்க. அவர் நெனச்சா உங்களுக்கு அலாட்மென்ட் உண்டு. ஒரு அலாட்மென்ட்டுக்கு ரெண்டு லட்சம் ஆகும்“ என்று கூறினார்.


இந்த 1998ற்குள், ராமதோசோடு, ஆரம்பகாலத்தில் இருந்த அறிவு ஜீவிகள் அனைவரும் சிறிது சிறிதாக ராமதாஸ் கட்சி நடத்தும் போக்கைப் பார்த்த விலகத் தொடங்கினர்.
1998ல் பதவியில் இருந்த பிஜேபி அரசு, 13 மாதங்கள் பதவியில் இருந்தது. இந்த 13 மாதங்களில், ராமதாஸ், கோடிகளுக்கு அதிபதி ஆனார்.

திடீரென்று, பணமும், செல்வாக்கும் கொழிக்கத் தொடங்கின. இதில் ருசி கண்ட பூனையான மருத்துவர் அய்யா, கம்யூனிசம், தமிழ் உணர்வு, கொள்கை, கோட்பாடு, அனைத்தையும், பணம் சம்பாதிக்க ஒரு அருமையான வழி என்று உணர்ந்தார்.


சில்லரை வாணிபத்தை ஒழிக்கும், எம்என்சிக்களுக்கு எதிராகவும், குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவனம், சில்லரை வணிகத்தில் இறங்குவதற்கு எதிராகவும், பெரும் போராட்டத்தை அறிவித்த ராமதாஸ், சில நாட்களிலேயே, சத்தம் இல்லாமல், கொள்கையை கக்கத்தில் செறுகிக் கொண்டு, அமைதியானது இதற்கு ஒரு உதாரணம்.

இதற்கிடையில், தங்களுக்கு புதிதாக கிடைத்துள்ள அதிகாரம் பற்றி, வன்னிய சமுதாய மக்களுக்ளு ஒரே பூரிப்பு. தங்கள் சமுதாயத்தை வாழ்வாங்கு வாழ வைக்க வந்து விட்டார் தமிழ்க் குடிதாங்கி என்று மருத்தவர் ராமதாசை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடினர். ஆனால், ராமதாசைப் பொறுத்த வரை, வன்னிய சமுதாயம் என்பது, அவரது குடும்பத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்பதை, மக்கள் வெகு தாமதமாகத்தான் உணர்ந்தார்கள்.

பாட்டாளி மக்கள் கட்சி, தங்கள் கட்சியின் சின்னமாக, மாங்கனிக்குப் பதிலாக, குரங்கைத் தேர்ந்தெடுத்திருக்கலாம். அப்படி, மரத்துக்கு மரம் தாவும் குரங்கு போல, அடுத்த ஆண்டே நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில், அதிமுகவை அப்படியே தொங்கலில் விட்டு விட்டு, திமுக அணிக்குத் தாவினார், மருத்துவர் ராமதாஸ்.



அந்தத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி 5 எம்.பி சீட்டுக்களைப் பெற்று, 22 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றது.

2001ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில், பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அடுத்த மரமான, அதிமுகவுக்கு வெட்கமேயில்லாமல் தாவியது. இப்போது, ஜெயலலிதாவை, போயஸ் தோட்டம் சென்று சந்தித்த, ராமதாஸ், தங்களுக்கு எத்தனை இடம் என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டதற்கு “அன்புச் சகோதரி முடிவு செய்வார்“ என்று சகோதர பாசத்தை கொட்டினார். இத்தேர்தலில், 20 எம்எல்ஏக்களைப் பெற்றது பாமக.

2004ம் ஆண்டு நடந்த சட்டசபைக்கான பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்று, 18 இடங்களில் வென்றது.

இதையடுத்து, 2009ல் பாராளுமன்றத்துக்கான பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில், “மரம் தாவும்“ தனது கொள்கையை மறந்து விடக் கூடாது என்று, மீண்டும் அதிமுக அணிக்குத் தாவி தேர்தலில் போட்டியிட்டது.

இந்தத் தேர்தலில் இடம் ஒதுக்குகையில், ஜெயலலிதாவை சந்தித்து விட்டு, மருத்துவர் ராமதாஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இப்படி கூறினார்.

''அன்புச் சகோதரியை சந்தித்தது, மகிழ்ச்சியான தருணம். 45 நிமிடங்கள் அரசியல் நிலவரம், சமூகப்பிரச்னைகள் குறித்துப் பேசினோம்.ஈழத்தமிழர்கள் பற்றித்தான் அவர் நிறைய நேரம் பேசினார். அந்தப் பேச்சில், கலைஞரைப் போல எதுகை-மோனை வசனம் எல்லாம் இல்லை. உண்மையான இரக்கம் இருந்தது. அவரிடம் நிறைய மாற்றங்கள் தெரிந்தன''

இதுதான் ராமதாசின் பச்சோந்தித் தனம். இப்படிப் பேசி விட்டு, இன்று தன் மகனுக்கு, ராஜ்ய சபா சீட் வேண்டும் என்றவுடன், கருணாநிதிக்கு பாத பூஜை செய்ய பாமக எம்எல்ஏக்களை அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டு, ராஜ்ய சபா சீட் கொடுக்க, கருணாநிதி என்ன அப்படி ஒரு ஏமாளியா ?



2009 பொதுத் தேர்தல், பாட்டாளி மக்கள் கட்சிக்கு நெப்போலியனின் வாட்டர்லூ வாக மைந்தது.

போட்டியிட்ட அனைத்து இடங்களிலும், பாட்டாளி மக்கள் கட்சி “மண்ணைக் கவ்வியது“.

இந்தத் தேர்தலில், தேர்தலுக்குத் தேர்தல் அணி தாவும், இந்தக் கட்சிக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் எண்ணியது மட்டுமல்லாமல், திமுகவும் கங்கணம் கட்டிக் கொண்டுவேலை செய்தது. இதனாலேயே, பாமக, அனைத்து இடங்களிலும் மண்ணைக் கவ்வியது.

அணி தாவும், குழப்பங்கள் மட்டுமின்றி, வன்னிய சமுதாய மக்களே, மருத்துவர் அய்யாவை கைவிட்டனர். இதுதான், பாமகவின் மிகப் பெரிய சரிவாக அமைந்தது.



1998ல் பதவி சுகத்தை அனுபவிக்கத் தொடங்கிய மருத்துவர் அய்யா, அதற்குப் பிறகு, எப்படியாவது, பதவியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து அணி மாறியதன் விளைவே, இன்று தெருக் கோடியில் நிற்கிறார்.



நண்பரோடு ஒரு நாள், தைலாபுரம் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. நண்பர், ஒரு முக்கியமான பத்திரிக்கையாளர். திமுக அரசில் நடக்கும் ஊழல்கள் குறித்து சில முக்கிய ஆவணங்கள் அந்த நண்பருக்கு கிடைத்ததால், அதை மருத்துவர் அய்யாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று முதன் முறையாக அவரைச் சந்திக்கச் சென்றார். காலை 9.30 மணிக்கு தைலாபுரம் சென்றவர், மருத்துவரைச் சந்திக்க மதியம் 2 மணி ஆகி விட்டது.

அது வரை, தொண்டர்களோடு தொண்டர்களாக, மரத்தடியில் நண்பரோடு காத்துக் கிடந்தோம்.

அங்கே மருத்துவரைச் சந்திக்க இரு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வந்திருந்தனர். தனிமையில் ரகசியமாக சந்திக்க வேண்டியி ருந்ததால், கூட்டம் குறையும் வரை காத்திருக்கலாம் என்றார் நண்பர்.

மதியம் சுமார் 12.30 மணிக்கு, ஒரு ஹோண்டா எஸ்யுவி வண்டி வந்தது. அந்த வண்டியில் மருத்துவர் அய்யாவின் மருமகள் சவும்யா வந்து இறங்கினார். வண்டியின் டிக்கியை திறந்ததும், சுமார் 50க்கும் மேற்பட்ட, சென்னை சில்க்ஸின் பட்டுப் புடவை டப்பாக்கள் இருந்தன. அங்கே கூடியிருந்த, தொண்டர்கள் போட்டி போட்டுக் கொண்டு அய்யாவின் மருமகளுக்கு அந்தப் பெட்டியை தூக்கிச் செல்ல உதவிக்கு ஓடினர். ஐம்பது பட்டுப் புடவைகள் என்றால் விலை என்ன இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இதுதான் மருத்துவர் அய்யாவின் இன்றைய நிலை.




அதற்குப் பிறகு, நண்பர், திமுக அரசுக்கு எதிரான ஆவணங்களை மருத்துவர் அய்யாவிடம் வழங்க, அந்த ஆவணங்களை வைத்து, ராமதாஸ், பல நாட்கள் அறிக்கை யுத்தம் நடத்தி, கருணாநிதிக்கு, காலில் தைத்த முள்ளாய் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தது, வேறு கதை.

கட்சி தொடங்கிய காலத்தில் “என் கட்சியில் யாராவது ஊழல் செய்தால், அவர்களை சவுக்கால் அடியுங்கள்“ என்று சொன்ன மருத்தவர் ராமதாஸ், முன்னாள் நக்சலைட்டுகளை தன் கட்சியின் கொள்கையை வகுப்பவர்களாக வைத்திருந்த மருத்துவர் ராமதாஸ், அம்பேத்கரின் கொள்கையை உயர்திப் பிடிப்பதற்கென்றே, கட்சியின் கொடியில் நீலத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், கம்யூனிஸ்ட் கொள்கைகளை தூக்கிப் பிடிக்கும் லட்சியத்தோடு தன் கட்சியின் கொடியில் சிகப்பு நிறத்தை சேர்த்த மருத்துவர் ராமதாஸ், சில்லரைக் காசுகளை பெற்றுக் கொண்டு, ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்த மருத்துவர் ராமதாஸ், இன்று, தன் மகனுக்கு ஒரு எம்பி சீட் கொடுங்கள் என்று, கோபாலபுரத்தில் மடியேந்திப் பிச்சைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.



கருணாநிதி, எல்லாருக்கும் கொடுக்கும் அல்வாவைப் போலவே, அடுத்த முறை சீட் கொடுக்கப் படும் என்று சொல்கிறார். மீண்டும், ஜெயலலிதா பக்கம் போனால் சீட் கிடைக்குமா என்ற நப்பாசையோடு காத்திருக்கிறார். ஜெயலலிதா, அதிமுக வேட்பாளர்களை அறிவித்தவுடன், திமுகவுடன் கூட்டணி என்று அறிவிக்கிறார்.

ஒவ்வொடு முறை அணி மாறும் போது, அதிகாரம் கிடைத்த மமதையில், எந்த வன்னிய மக்களின் வாக்குகளால், வளர்ந்தாரோ, அந்த வன்னிய இன மக்களை மறந்து, தன் குடும்பத்தை தூக்கிப் பிடித்தால், கோடிகள் இருந்தாலும், தெருக் கோடிக்கு வந்து விட்டார்.

சிந்து பைரவி படத்தில் கதாநாயகன் சிவக்குமார், ஒரு பெரிய சங்கீத வித்வானாக இருப்பார். காதல் பிரச்சினையால் குடிப் பழக்கத்துக்கு அடிமையாகி வீடு வாசல், கார் அத்தனையையும் விற்று குடிக்கத் தொடங்கி விடுவார். ஒரு நாள் குடிக்க காசு இல்லாத போது, தனக்கு தொழில் எதிரியான சிவச்சந்திரனின் வீட்டில் நடக்கும் ஒரு பார்ட்டிக்கு போனால், சரக்கு கிடைக்கும் என்று போவார். பழைய தொழில் போட்டியில், சிவச்சந்திரன், சிவக்குமாரை அவமானப் படுத்த வேண்டும் என்பதற்காக மேடையில் பாடும் பாட்டு வேண்டாம், டப்பாங்குத்து பாட்டுப் பாடினால் சரக்குத் தருவதாக சொல்கிறார். குடி வெறியில், சிவக்குமாரும்,

“தண்ணித் தொட்டி தேடி வந்த கன்னுக் குட்டி நான்….
இந்தச் சூரியன் வழுக்கி சேத்தில் விழுந்தது மாமி…. ….. ….. ….. ….. “
மகாராஜா பிச்சை கேட்டு இங்கு பாடுறான்…..“
என்று பாடுவார்.

பாடலின் முடிவில், சிவக்குமாரின் வேட்டி அவிழ்ந்து விழ, பட்டா பட்டி அண்டர்வேரோடு நிற்பார்.

சினிமாவில், சூரியன் வழுக்கி சேற்றில் விழுந்தது. அரசியலில், செந்தாமரை வழுக்கி சேற்றில் விழுந்து, சூரியனிடம் காய்கிறது.


சவுக்கு

Saturday, June 5, 2010

நோயாளியான மருத்துவர் ? பாகம் ஒன்று




டாக்டர்.ராமதாஸ். இந்தப் பெயரோடு வன்னியர் சங்கத் தலைவராக தன் அரசியல் வாழ்வைத் தொடங்கினார். பிறகு, தமிழார்வம் காரணமாக, மருத்துவர் ச.ராமதாசு என்று மாறி, பிறகு ‘தமிழ்க்குடிதாங்கி’ என்று ஆகியது.

யார் இந்த ராமாதாஸ் ? தமிழகத்தின் மிக மிக முக்கியமான தலைவராக உருவாகியிருக்க வேண்டியவர். ஆனால், காலம் அவரை மிக மிக கடைந்தெடுத்த ஒரு சந்தர்ப்பவாதியாக மாற்றி, புயலில் சிக்கிய ஓலைக்குடிசையின் கூரையாக மாற்றிப் போட்டிருக்கிறது.

ஒரு சாதாரண மருத்துவராகத்தான் தன் பொது வாழ்வை துவக்கினார், மருத்துவர் ராமதாஸ். திண்டிவனத்தில் இன்று இருக்கும் பாலத்தின் அருகேதான் அவரது கிளினிக் இருந்தது. மிகக் குறைந்த செலவில் வைத்தியம் பார்த்ததாகவும், அவரது கிளினிக்கில் பணியாற்றும் ஊழியர்களைக் கூட, மிகுந்த மரியாதையோடு நடத்தியதாகவும் தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

வன்னிய சமுதாய மக்கள் ஒரு கணிசமாக வாக்கு வங்கியாக இருந்தாலும், தொடர்ந்து, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அரசுப் பதவி போன்றவற்றில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப் படவில்லை என்பது அவர்களின் மிகப் பெரிய மனக்குறையாக இருந்தது. இது போன்ற நிராகரிப்புகளுக்கும், புறக்கணிப்புகளுக்கும் ஆட்சியாளர்கள்தான் காரணம் என்று வன்னிய மக்கள் பெரும்பாலும் நினைத்தனர்.

இந்தச் சூழலில்தான், வன்னியர் சங்கத்தின் முக்கியப் பொறுப்புக்கு வருகிறார் மருத்துவர் ராமதாஸ்.

1980களில், வன்னிய சமுதாயத்தின் இந்த குமுறல், பெரியதொரு போராட்டமாக வெடித்தது. தென் மாவட்டங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் இருந்த தொடர்பு முற்றிலும் அறுந்து போனது. இந்தப் போராட்டம் நடக்கையில், மீன்சுருட்டியில் இருந்தது ஞாபகம் இருக்கிறது. நெடுஞ்சாலையின் குறுக்கே மரங்கள் வெட்டிப் போடப்பட்டன. போக்குவரத்து 10 நாட்களுக்கு முற்றிலும் ஸ்தம்பித்தது.

அப்போது முதல்வராக இருந்த எம்ஜிஆர், பேச்சுவார்த்தையின் மூலம், இந்தப் பிரச்சினையை முடிக்காமல், அப்போது உளவுத்துறை தலைவராக இருந்த மோகன்தாஸ் என்ற காவல்துறை அதிகாரியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, காவல் துறையை விட்டு போராட்டத்தை அடக்க முற்பட்டார். அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏராளமானோர் இறந்தனர்.

அந்தப் போராட்டம், மருத்துவர் ராமதாசை வன்னிய மக்கள் மத்தியில் பெரிய சக்தியாக அடையாளம் காட்டியது. அந்த அங்கீகாரத்தை சரியான முறையில் பயன் படுத்த வேண்டும் என்று மருத்துவர் ராமதாஸ், உண்மையிலேயே முயன்றார்.

அப்போது வன்னியர் சங்கத்தின் முக்கிய முழக்கம், "தேர்தல் பாதை, திருடர் பாதை" "தேர்தலை புறக்கணியுங்கள்" என்பதுதான். இந்த முழக்கம், 80களின் தொடக்கத்தில், தமிழகத்தில் ஓரளவு பரவலாக கால் ஊன்றியிருந்த நக்சலைட் இயக்கத்தின் பார்வையை வன்னியர் சங்கத்தின் பக்கம் திருப்பின.

80களின் இறுதியில், நக்சலைட் இயக்கங்கள், காவல்துறையின் கொடிய அடக்குமுறையாலும், இப்போது போல, தகவல் தொடர்பு அப்போது வளர்ந்திருக்க வில்லை என்பதாலும், சிதைந்து போனது. அப்போது நக்சலைட் இயக்கங்களில், சித்தாந்த ரீதியாகவும், அறிவு ஜீவிகளாகவும் அறியப்பட்ட, பேராசிரியர்களும், கல்வியாளர்களும், சிந்தனையாளர்களும், நக்சலைட் இயக்கத்தின் சிதைவால், தங்களை வன்னியர் சங்கத்தோடு இணைத்துக் கொண்டனர்.




இவ்வாறு இவர்கள் இணைத்துக் கொண்ட வேளையில் தான், மருத்துவர் ராமதாஸ், வன்னியர் சங்கத்தை, அந்த மிகப் பெரும் போராட்டம் தந்த பலத்தில் அரசியல் இயக்கமாக உருவாக்க வேண்டும் என்று முயற்சி எடுத்தார்.

அப்போது அரசியல் சித்தாந்த ரீதியாக மிகப் பெரிய அறிவு ஜீவிகளாக இருந்த, திருப்பூரைச் சேர்ந்த கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகியோர், பாட்டாளி மக்கள் கட்சி என்று இக்கட்சிக்கு பெயர் வைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறுகின்றனர். பாட்டாளி என்ற பெயர் வருவதற்கு காரணம், இவர்கள் இருவரைப் போன்ற முன்னாள் நக்சலைட்டுகள் தான். அப்போது, இவர்களோடு இணைந்து இருந்தவர், இப்போது பிரபா.கல்விமணி என்று அறியப் படும், பேராசிரியர் கல்யாணி.

வன்னியர்கள் மட்டுமல்லாமல் பாட்டாளி மக்கள் அனைவருக்காகவும் பாடுபட வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாட்டாளி மக்கள் கட்சி என்று பெயரிடப் பட்டது.

கருணா மனோகரன் மற்றும், பேராசிரியர் மூர்த்தி ஆகிய இருவரும், பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் என்று, தனித்தனியே இரண்டு அறிக்கைகளை அளிக்கின்றனர்.

அந்த அறிக்கைகளில், தமிழ்வழிக் கல்வி, பிற்பட்டோர்-தாழ்த்தப் பட்டோர் ஒற்றுமை, உழைப்பாளி மக்களின் உரிமைகளை நிலைநாட்டுதல், சாதி மறுப்புத் திருமணங்களை ஊக்குவித்தல் போன்ற முற்போக்கான பல கொள்கைகள் அதில் இடம் பெற்றன.

இந்த இரண்டு அறிக்கைகளும், பேராசிரியர் கல்யாணியின் வீடு உட்பட பல்வேறு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் பல முறை விவாதிக்கப் பட்டன. பேராசிரியர் மூர்த்தி அவர்கள், ஒரு அரசியல் கட்சி என்பது, சாதிகளின் கூட்டமைப்பே. அதனால், அனைத்து சாதியினருக்கும், உரிய அங்கீகாரம் பாட்டாளி மக்கள் கட்சியில் வழங்கப் பட வேண்டும் என்று முன் மொழிந்தார். இவரின் இந்த வாதத்தை மருத்துவர் ராமதாஸ் உடனடியாக ஏற்றுக் கொண்டார்.



அதன் படியே, வள்ளிநாயகம் என்ற தலித்துதான், பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொதுச் செயலாளராக நியமிக்கப் பட்டார். சிறுபான்மை சமுதாயத்தினருக்கு, உரிய அங்கீகாரம் வழங்கப் பட வேண்டும் என்ற அடிப்படையிலேயே, 13 ஆண்டுகளாக சிறையில் இருந்து சமீபத்தில் வெளி வந்திருக்கும், குணங்குடி ஹனீபா, பாட்டாளி மக்கள் கட்சியின் முதல் பொருளாளராக நியமிக்கப் பட்டார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கைத் திட்டங்கள் ஏற்கப் பட்டு, தலித்துகளுக்கு ஆதரவாக, தமிழகத்தின் பல இடங்களில் மருத்துவர் ராமதாஸ் போராட்டங்களை நடத்தினார். பல இடங்களில் அம்பேத்கர் சிலையை திறந்து வைத்தார்.

பேராசிரியர் மூர்த்தி, கருணா மனோகரன், பேராசிரியர் கல்யாணி போன்றோருடன், பாட்டாளி மக்கள் கட்சியை வழிநடத்தும் நிர்வாகக் குழுவில், பி.ஆர்.கிருஷ்ணமூர்த்தி, பேராசிரியர் தீரன், விமலா மூர்த்தி போன்ற பலர் இருந்து மருத்துவர் ராமதாசோடு சேர்ந்து, கட்சியை திறம்பட வழிநடத்தினர்.

பல்வேறு போராட்டங்களை பாட்டாளி மக்கள் கட்சி நடத்தியிருந்தாலும், 1992ல் அக்கட்சி நடத்திய "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" பாட்டாளி மக்கள் கட்சியின் பலத்தையும், உணர்வையும் தமிழகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

1992 என்பது, ராஜீவ் மரணத்துக்கு மறு ஆண்டு. அப்போது "தடா" என்ற கடுமையான ஆள் தூக்கிச் சட்டம் அமலில் இருந்தது. விடுதலைப் புலிகள், பிரபாகரன் என்ற பெயரைச் சொன்னாலே, தடா சட்டம் பாயும் என்தான ஒரு சூழல் அது.



அந்தச் சூழலில், பிரபாகரன் படங்களையும், புலிக் கொடிகளையும் ஏந்தி, பெரியார் திடலில், "தமிழர் வாழ்வுரிமை மாநாடு" நடை பெற்றது. மிகப் பெரும் பலத்தோடு அப்போது ஆட்சியில் இருந்த, காவல்துறையை வைத்து, நீதிபதியின் மருமகன் மேலெல்லாம் கஞ்சா வழக்கு போடும் நிலையில் செல்வி.ஜெயலலிதா இருந்தார். இருந்த போதும், பாட்டாளி மக்கள் கட்சி நடத்திய இந்த மாநாடு, ஜெயலலிதாவை திகைக்க வைத்தது. ஜெயலலிதா, இவரைப் பார்த்து உண்மையிலேயே அஞ்சினார் என்பதுதான் உண்மை. பழ.நெடுமாறன் உள்ளிட்டோரை தடா சட்டத்தின் கீழ், கைது செய்து சிறையில் அடைத்த ஜெயலலிதா, பின்னாளில் பயன்படுவார் என்று உத்தேசித்தோ என்னவோ, மருத்துவர் ராமதாசை கைது செய்ய எத்தனிக்க வில்லை.

"தடா" சட்டத்தை எதிர்த்து, அடக்குமுறை சட்டம் எதிர்ப்பு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை மருத்துவர் ராமதாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து தொடங்கி, தமிழகம் முழுக்க, தடா சட்டத்தை எதிர்த்து இயக்கங்களை நடத்தினார்.

இது தவிர தமிழகம் முழுக்கவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பான நிகழ்வுகளில், மருத்துவர் ராமாதாசோடு இணைந்த அணி, பல்வேறு செயற்பாடுகளை நிகழ்த்தியது. தமிழகம் முழுக்க, தலித்துகள் தொடர்பான பிரச்சினைகளில், மருத்துவர் ராமதாஸ் தலையிட்டு பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார் என்று, அவருடன் பணியாற்றியவர்கள் சொல்கிறார்கள்.


ஆரம்ப காலத்தில், மருத்துவர் ராமதாஸ், திண்டிவனத்தில் மருத்துவம் பார்த்துக் கொண்டிருந்த போது, அவரைச் சந்தித்தவர்கள் சொல்கிறார்கள். அவர் மேசையின் மேல் ஒரு “சைபால்“ டப்பா வைத்திருப்பாராம். வைத்தியம் பார்க்க வரும் நோயாளிகளிடம், மருத்துவ கட்டணத்தை அந்த டப்பாவில் போடச் சொல்லுவாராம்“. யாராவது அவரைப் பார்க்க வந்தால், அந்த டப்பாவிலிருந்து, சில்லரைக் காசுகளை எடுத்து, அருகில் உள்ள தேநீர்க் கடையில் பால் வாங்கி வந்து, கொடுத்து உபசரிப்பார் என்று கூறுகிறார்கள்.

அப்போதெல்லாம் தனக்கு நெருக்கமானவர்களிடம், தனது மகன் அன்புமணி பற்றி, எப்போதும் குறை பட்டுக் கொள்வார் என்கிறார்கள். தனக்கு நெருக்கமானவர்களிடம், “பாருங்க சார், படிக்கவே மாட்டேங்குறான். எப்ப பாத்தாலும், அவங்க வீட்டுலேயே (சம்பந்தி கிருஷ்ணசாமி ) கெடக்குறான். பாருங்க இவன் டாக்டராவான்னு நம்பி, டிட்கோவுல 20 லட்ச ரூபா லோனப் போட்டு, மருத்துவமனை கட்டியிருக்கேன். இவன் என்னடான்னா படிக்கவே மாட்டேங்குறான். லோன எப்படிக் கட்டப் போறேன்னு தெரியல“ என்று புலம்புவார் என்று கூறுகிறார்கள்.

இப்போது லோன் திருப்பிக் கட்ட கஷ்டப் படக்கூடிய நிலையிலா டாக்டர் இருக்கிறார் ? இதுதான் அன்றைய மருத்துவர் ராமதாஸ்.

தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை விட, சமுதாயத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்போடு செயல்பட்டார்.

இதற்கு அவரோடு இணைந்து பணியாற்றிய பேராசிரியர் கல்யாணி போன்றோர் மிக முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றனர். பேராசிரியர் கல்யாணியிடம் பேசிய போது, மருத்துவர் ராமதாஸ், அவரைப் போன்ற பேராசிரியர்களும், முன்னாள் நக்சலைட்டுகளும், வழங்கும் ஆலோசனைகளை உடனடியாக கேட்டுக் கொண்டு செயல்படுத்துவார் என்று நினைவு கூறுகிறார்.

இன்றைக்கு இருப்பது போன்ற வன்னியர் அறக்கட்டளையும், கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களும், அப்போது ராமதாஸிடம் இல்லை.

ஒரே ஒரு கார் வைத்திருந்தாராம். அந்தக் காருக்கும் பெட்ரோல் போட்டு கட்டுப்படியாகாது என்பதால், கூட்டங்களுக்கு அழைப்பு வரும்போதெல்லாம், பேருந்தில் சென்று இறங்குவார். இறங்கிய இடத்திலிருந்து கட்சிக்காரர்கள் ராமதாசை காரில் அழைத்துச் செல்லுவார்கள் என்று, திண்டிவனத்தில், ராமதாசோடு சேர்ந்து பணியாற்றியவர்கள் கூறுகின்றனர்.

“தேர்தல் பாதை திருடர் பாதை“ என்று வன்னியர் சங்கம் எந்த முழக்கத்தை முன் வைத்ததோ, அந்த முழக்கம் மருத்துவர் ராமதாஸ் விஷயத்தில் உண்மையாகிப் போனது. 1989 ஆண்டு முதலே, பாட்டாளி மக்கள் கட்சி தேர்தலில் போட்டியிட்டாலும், அக்கட்சிக்கு, ஒரு கணிசமான வெற்றியையும், அரசியல் அதிகாரத்தையும் பெற்றுத் தந்தது 1998ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல்தான்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் அரசியலும், அதன் சரிவும், இரண்டாம் பாகத்தில்.

சவுக்கு