Flash News

Sunday, September 5, 2010

அடுத்து என்ன செய்வது ?


சவுக்குக்கு எழுதிய பின்னூட்டத்தில் ஒரு அன்பர்,

“சவுக்கிடம் ஒரு கேள்வி,, சவுக்கு உங்களைப்போல் ஒன்றிரண்டு இணையத்தளங்களையும், பத்திரிகைகளையும் இன்று நேற்று அல்ல பலவருடங்களாக பார்க்கிறேன், இந்த அரசியல்வாதிகள், மற்றும் அதிகாரிகளின் கதை தொடர்ந்து அப்படியேதான் தொடர்கதையாக இருக்கிறது, நீங்களும் வருமானத்தையும் வாசகர்வட்டத்தையும் பெரிதாக்கிக்கொண்டு போகின்றீர்களேதவிர, இந்தியாவிலோ தமிழ்நாட்டிலோ, மாற்றத்திற்கான எந்த ஒரு சலனமும் தட்டவில்லையே, உங்களைப்பொறுத்தவரைக்கும் ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி, இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா, ஏனென்றால் எவ்வளவுதான் கேவலமாக எழுதினாலும் எவரும் சட்டை செய்வதாகவும் தெரியவில்லை,அவர்கள் தங்களுக்கான கூட்டத்தை ஒன்றிணைத்து செத்தவீட்டை நடத்திக்கொண்டுதானே இருக்கின்றனர்,
savukku and Team Should answer this Question ஏதாவது "உபாயம்" அதாவது மாற்றுவழி,இந்த கழிசடைகளை களைவதற்கான இருக்கிறதா ?
What is next Step ? What we want to do Next ? “

என்று கேட்டிருந்தார்.

சமீபத்தில் சந்தித்த ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாளர் சொன்ன கருத்து மிகவும் சிந்திக்க வைப்பது. வெற்றிகரமான பத்திரிக்கையாளராக இன்று வரை இருந்து வரும் அவர், விரைவில் பத்திரிக்கை தொழிலை விட்டு வேறு தொழிலுக்குச் செல்லப் போகிறேன் என்று கூறினார்.

ஏன் என்று கேட்டதற்கு, நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்து 20 வருடங்கள் ஆகிறது. தொடக்கத்தில் நான் பத்திரிக்கை தொழிலுக்கு வந்த போது, இந்தச் சமுதாயத்தையே மாற்றிப் போட வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் வந்தேன். ஆனால் நாளடைவில் பத்திரிக்கை தொழிலில் இருந்து கொண்டு அது போல எதுவும் செய்ய முடியாது என்பது புரிந்து, ஏதோ நம்மால் இயன்றவற்றை செய்யலாம் என்று தான் இன்று வரை செயல்பட்டுக் கொண்டு இருக்கிறேன்.

ஆனால், இருபது ஆண்டுகளுக்கு முன்பாவது பத்திரிக்கையில் எழுதினால் ஏதாவது ஒரு தாக்கம் இருக்கும். நடவடிக்கை இருக்கும். ஆனால் இப்போது சூழல் மிக மோசமாக மாறி விட்டது. ஆதாரத்தோடு பத்திரிக்கையில் எழுதினால் கூட எதுவுமே நடக்க மாட்டேன்கிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்னால், ரோடு சரியில்லை, விவசாயிகள் பிரச்சினை, காவல்துறையிலும் மற்ற துறைகளிலும் ஊழல் என்று நான் எழுதியது இன்று வரை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இன்றும், சாலை சரியில்லை, ஊழல் என்றுதான் எழுத வேண்டியிருக்கிறது. அப்படி இருக்கும் போது, நான் எதற்காக பத்திரிக்கை துறையில் தொடர்ந்து இருக்க வேண்டும் ? ஜனங்களே காசை வாங்கிக் கொண்டு ஓட்டு போடும் நிலைக்கு சமுதாயம் சீரழிந்து விட்ட நிலையில் வேறு ஏதாவது நேர்மையான தொழில் செய்து பிழைக்கலாமே என்று அவர் கேட்ட கேள்வி, சவுக்கை சிந்திக்க வைத்தது.

இருபது ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் பின்னோக்கித் தானே செல்கிறது ? இருபது ஆண்டுகளுக்கு முன்பு, உண்ணாவிரதம் இருக்கவும், ஊர்வலம் செல்லவும், ஆர்ப்பாட்டம் நடத்தவும் இருந்த உரிமைகள் கூட இன்று இல்லையே ?

ஜவகர்லால் நேரு பிரதமராக இருந்த போது எழுந்த முந்த்ரா ஊழலால், டி.டி.கிருஷ்ணமாச்சாரி பதவி விலக நேரிட்டதே. ஒரே ஒரு ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று லால் பகதூர் சாஸ்திரி பதவி விலகினாரே.. …. ?

25 ஆண்டுகளுக்கு முன்பு கூட, சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது என்ற குற்றச் சாட்டுக்காக ராமகிருஷ்ண ஹெக்டே பதவி விலகினாரே ?

இன்று என்ன நிலை ? சட்ட விரோதமாக எதிர்க்கட்சியினர், வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் அதிகாரிகள் தொலைபேசிகள் ஒட்டுக் கேட்கப் படுகின்றன என்று தொடர்ந்து குற்றச் சாட்டுகள் வந்த போதும் குறைந்த பட்சம் குற்றம் சாட்டப் பட்ட நபரை அந்தப் பதவியை விட்டு மாற்றுவதற்கு கூட கருணாநிதி தயாராக இல்லை. மாற்றுவதற்கு தயாராக இல்லாததால், இந்த சட்ட விரோத ஒட்டுக் கேட்பின் பின்னணியில் உள்ளது கருணாநிதி தானோ என்ற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஊழலை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் ஊழல் பரவிக் கிடக்கிறது. ஊழல் புற்று நோயைப் போல, அனைத்து இடங்களிலும் புரையோடிப் போய் இருக்கிறது. ஆனால் இந்த ஊழலோடு சமரசம் செய்து கொண்டு, இந்த ஊழலில் நாம் எப்படி பங்கு பெறுவது என்ற ஆர்வத்தோடு உள்ளது நமது சமூகம். இப்படிப் பட்ட சமூகத்தில் என்ன மாற்றத்தை கொண்டு வர முடியும் ?

காந்தி படத்தில் ஒரு காட்சி வரும். தென் ஆப்பிரிக்காவில் காந்தி, வெள்ளையர் அல்லாதவர்களுக்காக வழங்கப் பட்ட அடையாள அட்டையை கொளுத்தும் போராட்டத்தை நடத்துவார். அந்த போராட்டத்தில் காந்தி கடுமையாக தாக்கப் படுவார். அதையொட்டி கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் படுவார்.

காந்தி தாக்கப் பட்டதையும், கைது செய்யப் பட்டதையும் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை பெரிய அளவில் செய்தியாக வெளியிடும். இதைக் கண்ட தென்ஆப்பிரிக்க ஆங்கிலேய அரசாங்கம், உடனடியாக காந்தியையும் மற்றவர்களையும் விடுதலை செய்து உத்தரவிடும்.

இன்று ஊடகங்கள் இருக்கும் சூழலை எண்ணிப் பாருங்கள். எண்பது விழுக்காடு பத்திரிக்கைகள் கருணாநிதியின் கட்டுப் பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் கருணாநிதியை மீறி ஊடகங்களில் செய்தி எப்படி வெளி வரும் ? மீதம் உள்ள இருபது விழுக்காடு ஊடகங்கள் எதிர்க்கட்சி ஊடகங்களாக இருப்பதால் அதற்கான நம்பகத் தன்மை குறைவாக உள்ளது.

அதையும் மீறி ஏதாவது ஊடகத்தில் அரசுக்கு எதிரான செய்திகள் வருமானால், அதை எழுதிய செய்தியாளரைப் பற்றியும், அவர் சாதியைப் பற்றியும், விலாவரியாக ஆராய்ந்து, முரசொலியிலேயே, படிக்கக் கூசும் அளவுக்கு, சிலந்தி, காராபூந்தி என்று ஏதாவது ஒரு பெயரில் எழுதுவது.

இதுதானே இன்றைய சூழல் ? இன்று சவுக்கு தளத்தில் வெளிவரும் குற்றச் சாட்டுகளை வெகுஜன ஊடகங்கள் வெளியிடத் தயாராக இருக்குமேயானால் சவுக்கு என்ற தளம் எதற்கு ?

அரசியல் சீரழிந்து விட்டது. ஊடகங்கள் தரம் தாழ்ந்து தங்களது சுதந்திர மன நிலையை இழந்து விட்டன. நம்பகத் தன்மையை இழந்து விட்டன. சரி நீதிமன்றத்திலாவது நியாயம் கிடைக்குமா என்றால், இது எல்லாவற்றையும் விட, மோசமான சூழலில் தான் நீதிமன்றம் இருக்கிறது.

தமிழில் பெயர் வைத்தால், வரி விலக்கு அளித்ததால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்டுள்ளது, இதனால் மொழி வளரவில்லை என ஒரு பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு எப்படி வேண்டுமானாலும் வரி விலக்கு வழங்கலாம் என்று தீர்ப்பு.

போலி என்கவுண்டரில் தொடர்ந்து படு கொலைகள் நடந்து வருகின்றன என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், வழக்கு நிலுவையில் இருக்கும் போதே தொடர்ந்து என்கவுண்டர்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஐபிஎல் மார்ச் மாதத்தில் நடத்துவதால், மாணவர்களின் படிப்பு பாதிக்கும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், இது குறித்து மத்திய அரசுக்கு புகார் அனுப்பவும் என்று தீர்ப்பு.
காவல் நிலையத்தில் காவல்துறையினரால் ஒரு நபர் அடித்துக் கொல்லப் பட்டுள்ளார் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசு நியமித்துள்ள ஆர்.டி.ஓ விசாரணையை நம்பி, பொது நல வழக்கை தள்ளுபடி செய்யும் உயர்நீதிமன்றம்.

அணு உலை நஷ்ட ஈடு மசோதா பாராளுமன்றத்தில் அறிமுகப் படுத்துவதற்கு முன் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு நோட்டீஸ் கூட வழங்காமல் வழக்கை தள்ளுபடி செய்யும் சென்னை உயர்நீதிமன்றம்.

நீதிமன்றத்தால் தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவானந்தா இந்தியாவில் இருக்கும் போது அவனை கைது செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தொடர்ந்தால், பத்திரமாக டக்ளஸ் இலங்கைக்கு திரும்பிச் செல்லும் வரை, வழக்கை தள்ளி வைத்து விட்டு, இலங்கை சென்றவுடன், வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் ஒரு தலைமை நீதிபதி.

கருணாநிதிக்கு வண்டி தள்ளுபவர்கள் திடீரென்று ஒரே நாளில் 75 லட்ச ரூபாய் கட்டுகிறார்கள். அது ஊழல் செய்து சம்பாதித்த சொத்தாக இருக்கும் அதன் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் கொடுத்தால் விசாரணை இல்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அவர்கள் மூன்று பேரும் அந்த மனையை “கை மாற்றி“ விட்டு விட்டதால் அவர்கள் மீது விசாரணை நடத்த எவ்வித முகாந்திரமும் இல்லை என்று தீர்ப்பு கூறும் ஒரு நீதிபதி.

பள்ளிக் கட்டணத்தை சீரைமைக்க அமைக்கப் பட்ட கோவிந்தராஜன் கமிட்டியின் பரிந்துரைகளை ஏற்க தடை விதிக்கக் கோரி மெட்ரிக்குலேஷன் பள்ளி நிர்வாகங்கள் நீதிமன்றத்தை அணுகிய வழக்கில், மாணவர்கள் சார்பில் ஒரு பொது நல விரும்பி, அந்த வழக்கில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டி அணுகிய போது, கோவிந்தராஜன் கமிட்டி வருவதற்கு முன்பு எப்படி பீஸ் கட்டினீர்கள் என்று கேட்கும் ஒரு பொறுப்பற்ற நீதிபதி.

இந்தச் சூழலில் தான் நாம் இருக்கிறோம். நமக்கு முன்னே இப்போது இருப்பது ஒரு சில வழிகள் தான்.

ஒன்று எது நடந்தாலும் கவலைப் படாமல் அமைதியாக நமது வேலையைப் பார்த்துக் கொண்டு இருப்பது

இரண்டு, கொள்ளையடிப்பவர்களோடு சேர்ந்து கொண்டு நாமும் நமது பங்குக்கு கொள்ளையடிப்பது.

இந்த அநியாயங்களை காணச் சகியாமல், அஷோக் குமார் போல தற்கொலை செய்து கொள்வது.

அல்லது, எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது.

இதில் எது வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

இன்றைய தாராளமய பொருளாதார சூழலில், எந்த வழியிலாவது உடனடியாக பணக்காரனாக வேண்டும், ஊரை அடித்து உலையில் போட்டாவது நான் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஏறத்தாழ 98 சதவிகித மக்களின் மனநிலை உள்ள சூழலில் எழுதுவதையும், நீதிமன்றத்தில் வழக்கு போட்டு, தொடர்ந்து போராடுவதையும் தவிர வேறு என்னதான் செய்வது என்று சவுக்குக்கு தெரியவில்லை. சவுக்கின் செயல்பாடுகள் போதுமானதாக இல்லையா என்றும் தெரியவில்லை. நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

சவுக்கு

44 comments:

Anonymous said...

To change this situation, we need military rule for atleast 5 years......else congress & alliance should be washed out from india...

kings said...

சார், உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்."எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது." என்ற கருத்தை அனைவரும் ஏற்று போராடினால் நன்றாக இருக்கும். அதற்கு , இதேபோல கருத்துகொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் . பேசுற யாரும் ,போராட வரமாட்டாங்க

kings said...

சார், உங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன்."எது வந்தாலும் சரி. நான் கொண்ட கொள்கையில் இருந்து பின் வாங்க மாட்டேன். அநியாயங்களை எதிர்த்து தொடர்ந்து போராடிக் கொண்டே இருப்பேன் என்று போராடுவது." என்ற கருத்தை அனைவரும் ஏற்று போராடினால் நன்றாக இருக்கும். அதற்கு , இதேபோல கருத்துகொண்ட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் . பேசுற யாரும் ,போராட வரமாட்டாங்க. சவுக்கில் நான் விளம்பரம் கொடுக்க ரெடி , தயவு செய்து விவரங்களை அனுப்பவும் என்னுடைய ஈமெயில்
iohrpenola@gmail.com

raja said...

I FEEL SO SAD ... WHEN I READ THIS ARTICLE.. ROAMBA FRAUSTRATION THAAN EN MANASILA MELONGI IRUKKU.. ENNA PORUTHU VARAI MAOIST WAY IS BEST THING IN TAMIL NADU.. OR PRABAKARAN MAARI ORU THALAIVAN THONTRANUM.. NADAKKUMAANU THONALA.. ORU SAMUGAM IPPADITHAAN SEERAZHINCHI POGUMNA ... NAA ORU NAPAR ONNUM PANNA MUDIYATHU.. ATLEAST AS LIVING AS SIMPLE MEN.

Anonymous said...

சட்டம் , ஒழுங்கு , நேர்மை ,தனி மனித ஒழுக்கம் , வாழ்வியல் முறை போன்டற அனைத்தும் செல்லாதா வார்த்தைகள் ஆகிவிட்டன , நீதி என்பது நிதிக்கு முன்பு மண்டியிட்டு உள்ளது .தனி மனித விழிப்புணர்வு இல்லாத , பணம் பண்ண சொல்லித்தரும் கல்வி முறை என்பது மாறி ,உரிமைக்காக போராடும் வல்லமையும் ,தனி மனித , சமுக ஒழுக்கத்தை கற்று தரும் கல்வி முறை அமைய வேண்டும் . அப்போது சமுக மற்றதிணை நாம் எதிர் பார்க்க முடியும் .

தோழமை said...

திருமாவை விமர்சித்த போது அதை எதிர்த்து எழுதியவன் நான். ஆனாலும் தங்கள் இணைய தளத்தை தவராது படித்து வருகிறேன். ஆகவே இக்கருத்தைத் தங்களுடன் பகிர்நதது கொள்கிறேன். உதரிகளாக நின்று போராடி நீர்த்துப்போகாமல் தோழைமை சக்திகளை இனம் காண வேண்டும். நட்பு முரண்பாடுகளை ஊதிப்பெரிதாக்குவதை தவி்ர்த்து அவர்களிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி நம் போராட்டத்தில் அவர்களையும் பங்குபெற வைக்க முயற்சிக்க வேண்டும். நடப்பியலை அறிந்து அதற்கு ஏற்ப நம் போராட்ட உத்திகளை வடிவமைக்க வேண்டும். முடிந்த வரை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.அல்லது தேர்தல் அரசியலில் உள்ள தோழமைசக்திக்கு துணைநிற்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் உதிரியாக நின்று நீர்த்துப்போகாதீர்.
திருமாவின் முழக்கம் ஒன்று உண்டு.
கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டு! தேவைஎனில், கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று!!

Robin said...

Savukku Sir,
Practical steps
1.This Govt in Tamilnadu has to go. In democracy only way is election.AIADMK,PMK,DMDK,MDMK Communists,Krihsnaswamy Thirumalvalavan have to be in one group. Ouster of the present Govt is priority
2. New Govt hopefully will have to be better as Savukku will be after them from day one. In case of MK you came in 2009 and getting close to 4 lac hits just before election. I think by Dec savukku would get 10 lac hits and this will be a mass movement

3. You are not using BJP leaders like Sushma,Jaitley,Ravi shankar prasad who are equally worried about spectrum scam etc. Some channel of communication has to be built up
4. Somehow National english media is not getting your expose. Pleas need to share info through mutual friends
5. Student power is important. Savukku fans must be able to contact students who are not yet in cess pool of caste,corruption etc. Average age in India is 26
So find ways of harnessing student power
Savukku should never give up
The bugle has just sounded
Battle has just begun

காலப் பறவை said...

சவுக்கு இது போன்ற வெற்று விமர்சனங்களை புறம் தள்ளி விட்டு தொடர்ந்து இயங்க வேண்டும் என்பதே எங்கள் வேண்டுகோள்..

Anonymous said...

@தோழமை

திருமாவை பற்றி வேறு எங்காவது கதை காட்டுங்கள்....... அவனை நம்பியது போதும் எங்களுக்கு

Anonymous said...

திரு சவுக்கு அவர்களுக்கு வணக்கம்

நம் தமிழ் நாட்டில் நடக்கும் அநியாயம் கொஞ்சம் நஞ்சம் அல்ல,இதற்கு ஓர வாழி ஆட்சி மற்றம் தான்.விரைவில் அது நடக்கும் இந்த பாவிகள் தண்டிகபடுவர்கள்

1. திரு கருணாநிதி மற்றும் அவர் குடும்பத்தினர்
2. காவல் துறையினர் (உழல் செய்யும் எல்றோரம் அடக்கம் )

3. நிலத்தை அகிரமைப்பு செய்வோர்
4. மற்றும் பலர்

அது வரை நாம் அனைவரும் அமைதி காப்போம்

Anonymous said...

It is common when we are doing our usual work. but for this frustration you need some change. Try to write some other comedy articles. so that you will get refreshness. we are not the persons to change this type of corrupt community.remember, How our Mahatma Gandhi will be in frustration when he met failures. so try to write some different articles in a periodical interval. So you will become brisk.
Jaya

nandha said...

சவுக்கு,
நீங்க சொன்னது போல் இப்போதுள்ள சூழ்நிலை மிக மோசமாகவே உள்ளது. ஆனால் இது இப்படியே இருந்து விட போவதுமில்லை. நாம் முயன்று மாற்றாமல் மாறபோவதுமில்லை. அம்மாற்றத்திர்க்கான சிறு தீப்பொறியாகவே சவுக்கை கருதிகிறேன். இது கனன்று கொண்டே இருக்க வேண்டும். செய்வீரா? - நந்தா

Premkumar said...

Never loose heart ..
(easy to say but difficult to follow it )

Anonymous said...

என்ன சங்கர்,
நீங்க இப்படி எல்லாம் எழுதினா எப்படி ? காந்தி அஹிம்சை வழியில் போராட்டம் நடத்தும்போது நிறைய உயிர் இழப்புகள் ஏற்பட்டது.அதற்காக அவர் தன் கொள்கையை பின் வாங்கலை. தலைவர் பிரபாகரன் நினைத்து இருந்தால் தமிழ் மக்களை மறந்துவிட்டு மகாராஜன் மாதிரி இருந்திருக்கலாம். ஆனால் அந்த மாதிரி ஈனப்பிறவியில் அவர் பிறக்கவில்லை. டக்ளஸ் மாதிரி சில நன்றி கெட்ட ஜென்மங்களை மனசில் வைச்சுகிட்டு நமது போராட்டம் தோல்வின்னு ஈழத்தமிழன் என்றாவது நினைத்தது உண்டா ? இன்று வரை ஈழம் மலரும் நம்பிக்கையுடன் வாழவில்லையா ? உங்களுடைய எழுத்துக்கள் இப்ப இருக்கிற அரசாங்கத்தை திருத்துதோ இல்லையோ,அடுத்த தலைமுறையினர் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணும். தயவு செய்து இந்த மாதிரி கட்டுரைகள் எழுத வேண்டாம்.
ராமானுஜம், பத்திரிக்கையாளர்

singam said...

சவுக்கிடம் கேள்விகேட்ட நண்பரின் கேள்வி தவறல்ல. ஆனால் அந்த கேள்வியை சவுக்கிடம் கேட்டதுதான் எனக்குச் சரியாகப்படவில்லை. தினமலர் என்றொரு பத்திரிக்கை தங்களை போற்றிவரும் கருத்துகளை அதிகமாகவும், தூற்றிவரும் கருத்துகளை மிக மிக குறைவாகவும் வெளியிடுகிறது. நக்கீரன் என்ற (இந்திய "ரா" வின் ஊதுகுழல்) பத்திரிக்கை தங்களையும், தமிழின விரோதி, ஈழத்தமிழர்களை மத்திய அரசுடன் சேர்ந்து கொன்று குவித்த கொலைகாரன், கருணாநிதியையும், தேசியத்தலைவர் பிரபாகரனுக்கே போர் உத்தி கற்று கொடுத்ததாக தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் போலிப்பாதிரியார் ஜெகத்கஸ்பரையும் புகழ்ந்து வரும் வாசகர் விமர்சனங்களை மட்டுமே வெளியிடுகிறது. இப்படி பெரும்பாலான பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் அரசின் அல்லக்கையாக மாறிவிட்ட இந்தநேரத்தில், தன உயிரையும் பொருட்படுத்தாது உண்மைகளை சவுக்கு இணையதளத்தின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தெரியப்படுத்திவரும் அன்பு சகோதரர் "சவுக்கு" அவர்களுக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் பேராதரவை வழங்கிட வேண்டும் என்பதே என் அவா.

பின்குறிப்பு: அருமை நண்பர் "தோழமை" அவர்கள் திருமாவை பற்றி இங்கே எழுதியிருக்கிறார். ஈழத்தமிழினத்தை கொன்று குவித்த கொலைகாரன் கருணாநிதியுடனும், இந்திய கொடுங்கோல் அரசுடனும் கூட்டணி அமைத்து, தோழர் பாண்டியன் அவர்களையும், புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்களையும் பாராளுமன்றம் செல்லவிடாமல் செய்து, தான் இன்று பாராளுமன்றம் சென்று ஈழத்தமிழர்களுக்காகவோ, அல்லது தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவோ "திருமா" ஏதாவது செய்திருந்தால் நண்பர் தோழமை அதை விளக்கவும். ""கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டு! தேவைஎனில், கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று! "" இன்னும் திருமாவிற்கு பொருந்துமா? என்பதையும் அருமை நண்பர் தோழமை அவர்கள் விளக்கவேண்டும்.

Maanasthan said...

சமூகம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது இக்கட்டுரையிலிருந்து தெரிகிறது. முன் கூறிய நண்பர் போல், உங்கள் உழைப்பு உதிரியாக இருந்தால் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பது எனது கருத்து. உலகெங்கிலும் இருந்து உங்களைப் படிப்பவர்கள் படித்து ரசித்துவிட்டு போவதனால் ஏற்படாது சமூக மாற்றம்.ஒட்டு போடும் வெகுஜன மக்களை உங்கள் பதிப்பு சென்றடைய விடமாடார்கள் , அப்படியே சென்றாலும் மக்கள் மாயையில் மயங்கி கிடக்கும் மாக்களாக மாறி உள்ளார்கள். அவர்களை எழுப்ப வேண்டிய ´Traditional medias´ கடமையை செய்ய மாட்டேன்கிறார்கள். இதற்க்கு வழி, ஒன்று நம் உணர்வுக்கு செயல் வடிவம் நாமே தரவேண்டும் , இல்லையேல் செய்பவர்களோடு கைகோர்க்க வேண்டும். இன்றும் நேர்மையான , உணர்வு மிக்க, மக்கள் நலம் விரும்பி அரசியல்வாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். உதாரனத்திற்க்கு தமிழருவி மணியன், வைகோ, தா ப, நல்லகண்ணு etc திருமாவும் சேர்த்துகொள்ளலாம் . சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக அவர்கள் இருக்கும் இடம் நமக்கு திருப்தி இல்லையெனினும், அவர்களுக்கு தற்போதுள்ள ஆட்சியாளர்கள் மீது உங்களுக்கும் எனக்கும் இருப்பதை காட்டிலும் அதிக கோபம் இருக்கும். உங்களை போன்றவர்கள் அவர்களோடு கை கோர்த்தல் சிறிதளவேனும் எதாவது செய்யலாம் . இல்லையெனில் 30 லட்சம் hits இருந்தாலும் உங்கள் பதிப்புகள் ஒரு சுவாரசியமான தொடர்கதை வெளியீடு போல் ஆகிவிடுமோ என்பது எனது வேதனை கலந்த பயம். இறைவன் இல்லா ஆலயத்தில் ஏற்றி வாய்த்த தீபம் இரவு பகல் எரிவதணல் யாருக்கு என்ன லாபம்? இன்னும் எவ்வளவோ சொல்லலாம், உங்களுக்கு தெரியாது இல்லை. -- மிகுந்த வேதனையுடன் எழுதும் உங்கள் அன்பு வாசகன் நோர்வேயிலிருந்து

Anonymous said...

எத்தனையோ சர்வாதிகாரிகளையும் , ஊழல் பேர்வழிகளையும் இந்த உலகம் கண்டிருக்கிறது. அவர்களது மரணங்களை எண்ணிப்பாருங்கள். காலம் அவர்களுக்குத் தக்க தண்டனை வழங்கியே தீரும் என்றுதானே வரலாறு சொல்கிறது. இவர்கள் எம்மாத்திரம்? உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டு தான் இவர்களைப் போன்ற கழிசடைகள் மாட்டல்ல. படித்தவன் தவறு செய்தால் அய்யோவென்று போவான். கோடானு கோடிப்பேர் இன்றும் இந்த உலகில் நேர்மையான வாழ்வு நடத்திக்கொண்டு அமைதியாக இருக்கின்றனர் என்பதுதான் உண்மை. அதேசமயம் விலங்குத்தன்மைகொண்ட இத்தகைய ஆட்சியாளர்களிடம் வதைபடும் அப்பாவிகளை முடிந்த வரை போராடிக் காப்போம். நீங்கள் வேண்டுமானால் பாருங்கள். உடனிருப்பவர்களாலேயே உருத்தெரியாமல் அழிந்துபோவார்கள் இவர்கள். இயற்கை இவர்களுக்கெல்லாம் நீண்ட ஆயுளைக் கொடுப்பது சித்ரவதையை அனுபவிப்பதற்காகத்தான். எப்பொழுதும் தீப்பற்ற வேண்டுமானால் பொறி ஒன்று வேண்டும். சவுக்கு ஒரு பொறி. நெருப்பு பரவும். இந்தக் காலத்திலும் பிரபாகரன் போன்ற ஒரு தலைவன் பிறப்பான் என்று யாரேனும் நினைத்துப்பார்த்திருப்போமா? பிறந்து நம்மிடையே நிமிர்ந்து நின்றானே! நிகழ்காலமும் நிறையப் பிரபாகரன்களைக் கருக்கொண்டிருக்கிறது. விரைவில் பாய்வோம்.

singam said...

i feel so sad to read this article.lets we r all unite together to make awareness.

ஏவிஎஸ் said...

நண்பரே,

உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கம் மட்டும் கெட்டுப் போயிருந்தால் மக்கள் சக்தி மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். மக்களே கெட்டுப் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? இது பிரச்சினைதான், ஆனால் தீர்வும் இதில்தான் அடங்கியிருக்கிறது.

நீங்கள் பெரும்பாலும் காவல் துறையை, அதிலும் குறிப்பாக சில அதிகாரிகளை, இன்னமும் குறிப்பாக ஜாஃபர் சேட் என்னும் ஒரு அதிகாரியை குறிவைத்து எழுதி வருகிறீர்கள். இதற்கான பின்னணியும், காரணங்களும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தெரியாத எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் தனிமனித தாக்குதல்கள் நாளடைவில் அயற்சியையே ஏற்படுத்தும். அந்த ரீதியிலான பின்னூட்டங்கள் பலவற்றை ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள்தானே. என்னைப் பொறுத்தவரை, அயற்சியைவிட உங்கள் உயிருக்கான அச்சமே அதிகம். ஏனென்றால், தனிமனித விரோதங்களில் எப்போதுமே ஆபத்து உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமோ மனித உயிருக்கும் உரிமைகளுக்கும் எந்த வித மதிப்பும் தராத ஒரு காலம்.

இந்த சூழ்நிலையில் உங்கள் திறமைக்கும், எண்ணங்களுக்கும், குறிக்கோள்களுக்கும் தகுதியான செயல் என்று நான் மதிப்பிடுவது, மக்கள் மனதை மாற்றுவது. எனவே, நீங்கள் அதிகாரவர்க்கத்தின் கேட்டை எப்படி வெளிக் கொண்டு வருவது என்ற அக்கறையை இப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பொது மக்களை எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அகில இந்திய அளவிலே காந்தியடிகளும், தமிழக அளவிலே தந்தை பெரியாரும் ஏற்படுத்திய பொதுமக்கள் இயக்கத்திற்குப் பின்னர் வெற்றிகரமான மக்கள் இயக்கங்கள் எதுவும் ஏற்படவில்லையே. உங்களைப் போன்றவர்களால் அவர்கள் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது" என்று வள்ளுவன் சொன்னதில் சொல் வன்மை, அஞ்சாமை இரண்டும் உங்களிடத்தில் உள்ளதைக் கண் கூடாகக் காண்கிறோம். சோர்ந்து விடாமல் போராடினால் உங்களை யாரும் வெல்ல இயலாது.

தாரளமயமான பொருளாதார சூழலில் மக்கள் ஊரை, உலையில் போட்டுத்தான் வாழ வேண்டுமென்பதில்லை. உழைப்பிலே அதைவிட உயர்வு உண்டு. நாமெல்லாம் சகோதரராக வாழ்ந்து, சீரிய ஒரு சமூகமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்றே தீவிரமாக நம்புகிறேன். உங்கள் நம்பிக்கை தளாரதிருக்க நீங்கள் நம்பாத கடவுளிடமும் அருள் வேண்டுகிறேன்.

இறுதியாக: பத்திரிகை உலகையும், தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் அரசியல் ஆக்கிரமித்து விட்ட நிலையில் சுதந்திரமாக இருக்கும் ஒரே ஊடக வெளி இணையம்தான். நக்கீரன் போன்ற சமூகவிரோத பத்திரிகைகளுக்கு மாற்றாக சவுக்கு வந்திருப்பதை போல, சன், ஜெயா செய்திகளுக்கு மாற்றாக யூ-ட்யூபில் மாற்று ஒன்று உருவாகலாம்; முடிந்தால் நீங்களே அதை உருவாக்கலாம்.

Sathish Nandan said...

உமாசங்கர் பிரச்சினையை பற்றி பேசாத ஒரே தலித் தலைவர்(?) அண்ணன் திருமா அவர்கள். ஈழப்போர் சமயத்தில் தாய்லாந்த் சென்று கேபி யை சந்தித்த காரணத்தையும் இதுவரை சொல்லவில்லை. இன்னும் அவரை நம்பி அவர் சொல்லும் கருணா மற்றும் சோனியா'வை ஆதரிக்க யாரும் தயாராக இல்லை தோழமை அவர்களே....அரசியல்வாந்திகளை மட்டும் நம்பாமல் உண்மைக்காக போராடும் சவுக்கு போன்றவர்களின் பின்னால் நில்லுங்கள். தமிழகம் தலைநிமுரும்.
மற்றபடி, சவுக்கு தளரமாட்டார். அவரின் செயல்பாடுகள் இன்னும் மெருகேறும்.

Robin said...

1 Every colleget student should read Savukku.net
Let each of the visitors create awareness in their friends and convert 100 students
2.I know hundreds of IT Professionals are reading Savukku. Let them create awareness in their families and friend circles.Let all those who write comments in dinamalar,dinamani,maalaimalar,thatstamil etc reflect Savukku's view
3. Savukku during 2010 election should name one candidate for each constituency irrespective of party . If you can do that and your followers can follow- whether win or loose you can create impact. We are prepared even to vote for a DMK/AIADMK or any candidate if Savuku says so
4. Media awareness is critical-only when national media and TV act then the nation notices. Let Savukku readers write to CNN IBN,ND TV, Times Now to investigate Savukku articles further. When there is a mass request they cannot ignore
5. Savukku can host other writers like Poetess Thamarai, Cho, Subramaniam Swamy, Pugazehendi, Pazha karuppiah so that there is news flow and awareness every day. You can even publish their articles with their permission. The idea is to have a dynamic website changing at least once in a day. You can also give link to newspapers with
unbiased news

7.What we need is this thought to fight the system gets converted into a mass movement silently to vote in the elections to throw correct governement

பொதுஜனம் said...

திரு சவுக்கு எக்காரணம் கொண்டும் உங்கள் தன்னம்பிக்கையை விட்டு விடாதீர்கள். ஒரு நாள் உறுதியாக எல்லாம் மாறும்.விதை அளவில் சிறிது. ஆனால் அதனுள் இருக்கும் சத்து விருட்சமாக மாறும். அப்போது எவராலும் அந்த ஆலமரத்தை அசைக்க முடியாது. ஒவ்வொரு கட்டத்திலும் மக்களை ஏமாற்றி பிழைக்கும் நயவஞ்சகர்கள் வந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்கள் கடைசியில் மக்களால் எப்படி தூக்கி எறியப்பட்டுள்ளனர் என்ற வரலாறையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள். இது போல் நயவஞ்சகர்களின் உச்சக்கட்ட ஒரு பரிமாணம் தான் கருணாநிதி என்பதை நன்றாக சிந்திப்பவர்கள் அறிய முடியும். சாதியை எப்படி பயன்படுத்துவது மதத்தை எப்படி பயன்படுத்துவது மாற்றுக்கருத்துக்கள் கொண்டோரை எப்படி அரசியல் தாண்டி அசிங்கம் செய்வதால் முடக்குவது என்பதெல்லாம் கைவந்த கலை.

சினிமா எடுத்து குத்தாட்ட நடிகைகளுடன் ஆட்டம் போடத் தெரியாதவரா சீமான்.ஆதிக்க சாதி விழா ஒன்றுக்கு சீமான் கலந்து கொண்டதை சுட்டிக்காட்டியவுடனேயே அதன் தவறை அறிந்து திருத்திக கொள்ள முனைந்தவர் அவர். இன்றைக்கு சிறையில் இருக்க வேண்டிய தேவை என்ன? சவுக்கு அவர்களே இவ்வளவு எழுதும் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை இழக்க மாட்டீர்கள் என்பது தெரியும். இன்றைக்கு இளைஞர்களை சினிமாக்கள் தெளிவாக திசை திருப்புகின்றன. சமூகத்தை திசைதிருப்பும் விசைகள் எங்கெங்கு இருந்து கிளம்பி வருகின்றன என்பதை தெளிவாக அறிந்து கொள்ளுங்கள். அதை நோக்கி உங்கள் சவுக்கை சுழற்றுங்கள். இன்றைக்கு இருக்கும் பல இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் விஷயங்களையும் உங்கள் தளத்தில் அளித்து வாருங்கள்.மாற்றம் என்பது மாற்ற முடியாதது.

இப்போது நம் முன் உள்ள முக்கியமான ஒன்று ' ஒரே நோக்கம் கொண்ட சக்திகளை அடையாளம் கண்டு ஒன்றிணைப்பது' தான். அதற்கு அறைகூவல் விடுங்கள். போதும்.


\\உதரிகளாக நின்று போராடி நீர்த்துப்போகாமல் தோழைமை சக்திகளை இனம் காண வேண்டும். நட்பு முரண்பாடுகளை ஊதிப்பெரிதாக்குவதை தவி்ர்த்து அவர்களிடம் உரிய முறையில் எடுத்துக்கூறி நம் போராட்டத்தில் அவர்களையும் பங்குபெற வைக்க முயற்சிக்க வேண்டும். நடப்பியலை அறிந்து அதற்கு ஏற்ப நம் போராட்ட உத்திகளை வடிவமைக்க வேண்டும். முடிந்த வரை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும்.அல்லது தேர்தல் அரசியலில் உள்ள தோழமைசக்திக்கு துணைநிற்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன் உதிரியாக நின்று நீர்த்துப்போகாதீர்.\\

Anonymous said...

சவுக்கிடம் கேள்விகேட்ட நண்பரின் கேள்வி தவறல்ல. ஆனால் அந்த கேள்வியை சவுக்கிடம் கேட்டதுதான் எனக்குச் சரியாகப்படவில்லை. தினமலர் என்றொரு பத்திரிக்கை தங்களை போற்றிவரும் கருத்துகளை அதிகமாகவும், தூற்றிவரும் கருத்துகளை மிக மிக குறைவாகவும் வெளியிடுகிறது. நக்கீரன் என்ற (இந்திய "ரா" வின் ஊதுகுழல்) பத்திரிக்கை தங்களையும், தமிழின விரோதி, ஈழத்தமிழர்களை மத்திய அரசுடன் சேர்ந்து கொன்று குவித்த கொலைகாரன், கருணாநிதியையும், தேசியத்தலைவர் பிரபாகரனுக்கே போர் உத்தி கற்று கொடுத்ததாக தன்னைத்தானே கூறிக்கொண்டிருக்கும் போலிப்பாதிரியார் ஜெகத்கஸ்பரையும் புகழ்ந்து வரும் வாசகர் விமர்சனங்களை மட்டுமே வெளியிடுகிறது. இப்படி பெரும்பாலான பத்திரிக்கைகளும், தொலைக்காட்சி ஊடகங்களும் அரசின் அல்லக்கையாக மாறிவிட்ட இந்தநேரத்தில், தன உயிரையும் பொருட்படுத்தாது உண்மைகளை சவுக்கு இணையதளத்தின் மூலம் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு தெரியப்படுத்திவரும் அன்பு சகோதரர் "சவுக்கு" அவர்களுக்கு உலகத்தமிழர்கள் அனைவரும் பேராதரவை வழங்கிட வேண்டும் என்பதே என் அவா.

பின்குறிப்பு: அருமை நண்பர் "தோழமை" அவர்கள் திருமாவை பற்றி இங்கே எழுதியிருக்கிறார். ஈழத்தமிழினத்தை கொன்று குவித்த கொலைகாரன் கருணாநிதியுடனும், இந்திய கொடுங்கோல் அரசுடனும் கூட்டணி அமைத்து, தோழர் பாண்டியன் அவர்களையும், புரட்சிப்புயல் அண்ணன் வைகோ அவர்களையும் பாராளுமன்றம் செல்லவிடாமல் செய்து, தான் இன்று பாராளுமன்றம் சென்று ஈழத்தமிழர்களுக்காகவோ, அல்லது தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவோ "திருமா" ஏதாவது செய்திருந்தால் நண்பர் தோழமை அதை விளக்கவும். ""கொண்ட கொள்கையில் உறுதியைக் காட்டு! தேவைஎனில், கொள்கை சிதையாமல் உத்தியை மாற்று! "" இன்னும் திருமாவிற்கு பொருந்துமா? என்பதையும் அருமை நண்பர் தோழமை அவர்கள் விளக்கவேண்டும்.
I ACCEPT WHAT SINGAM TOLD.HE IS RIGHT THING AND RIGHT COMMEND. SAVUKKU YOU NEED TO DO MORE..... MORE.GOD BLESS YOU.GOD WITH YOU.

Anonymous said...

EVERYTHING CHANGING EXCEPT LAW OF CHANGING. I belive this Karal Marx Proverb. Unite with like minded people. Try to teach who are friends and enemy of people. If once the people catch the fire. It will spread like anythig. CONTINUE YOUR WORK , WE ALL WITH YOUR TEAM. NAT

prem said...

thayavu seithu inimel arasiyal viyathi endru inimel kuripidungal inge yarukkum vetkamillai

raja said...

I AGREE WITH THIRU.A.V.S. AND PODHU JANAM CONCLUSION. ARASIYAL SAARPATRA ORU MARAIMUGAMAANA PODHUMAKKAL AMAIPPU PATRI..ONTRAI NAA ANAIVARUM YOSIKKALAM...(INDIRECTLY ACTED IN SOCIAL LEVEL)

Premkumar said...

As per my view age old news papers/channels will loose their stronghold in future due to the advent of Internet and any one who provide quality content will be able to reach the mass . For ex this blog. This divide is bound to grow very fast in near future ,due to intro of 3G / BWA / cheap mobile phones with browsing etc.
And there will be a day when there will be 3Lakhs hits per day (provide you maintain the quality of content). When such news reach the mass,its bound to make some changes.
Lets keep trying ...

வாசகன் said...

பணம் வாங்கிவிட்டால் ஓட்டுப்போட வேண்டும் என்ற நேர்மை (?) பொது ஜனங்களிடம் அளவுக்கு அதிகமாக இருக்கிறது. இந்தநிலை கொஞ்சங்கொஞ்சமாக மாறி எத்தனை பேரிடம் பணம் வாங்கினாலும் அதிகமாக கொடுத்தவர்களுக்கு ஓட்டு போடும் மனநிலை வந்துகொண்டிருக்கிறது. இதுவும் மாறி கொள்ளையடித்த பணத்தைத்தானே கொடுக்கிறார்கள், பணத்தை வாங்கிக்கொள்வோம் பிடித்தவருக்கு ஓட்டுப்போடுவோம் என்ற மனநிலை வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை. அதுவரை விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பணியை தொய்வில்லாமல் கொண்டு செல்லுங்கள். அப்போது இந்த கழிசடைகள் செருப்படி வாங்குவார்கள்.

Anonymous said...

One man can change!And it is all about 'Change'!
Mahatma,Mandela and many more are examples!However,like 'Thozhamai' said(though I won;t endorse all his views)you have to get into the network of good people who can support you! at the same time you have to be unique like how you are now!say,Cho is a good and intelligent guy..but what we don't like about him is his 'pro-JJ' image and supporting her even when she is bad! and also his hindutva support!we are living as brothers and that venom will spoil us!and thats the reason he is not popular if you have researched!(Ifirmly believe that)Seeman is a good guy ,atleast he is firm in his actions(he is still not clear as he has not spoke anything against Surya or Asin who killed us by their words supporting Sinhala Rajapakse!!),and also journalists like Tehelka,get networked with them and publish their views too in your blog.also,make it more dynamic!Join ur hands with people like them,however not losing your identity...for the bigger cause...for the WAR! All the best! God bless! we are with you and we will spread the message all over !
Friends,request all journalists who visit this blog to take the good news to people ststed above and help in the networking effort!
Vaiymeye Vellum!
-Vazhuthi

புரட்சித்தலைவன் said...

we support you savukku.

Anonymous said...

Dear SAVUKKU,
I agree with mr.Robin. His suggestions are very useful. Kindly, try it.
Now, I am a Journalist. I Know, 100 of my friends r read Savukku and they will tell about Savukku.
We r all support u. Don't lose confident.

krishna said...

Dear Savukku,
We will try our level best to stand & fight for the Right & rights. Each & every Savukku readers must introduce this site to all students & youngsters so that we could make it as a big movement. Apart from political parties,communities,Castes & religions we should stand in one line & oppose the corruption & corrupted officers.
Unity is Strength.
Wishes Savukku...

பாலகுமார் said...

திரு ஏவிஎஸ் அவர்களின் கருத்தை சவுக்கு பரிசீலிக்க வேண்டும்.

Anonymous said...

Dear Savukku!

Ayiram kaigal maraithalum Aadhavan maraivadhillai. People who pledge their lives for the society will initially be unheard of. You take the case of Edison, Gandhiji, Jesus, Lincoln, Bhagathsingh, etc. You take anybody. Till their deaths, they were not popular among the peers. But posthumously only they became what they are today. Some one has to bell the cats. You have the guts to do it. We are just observing. In facts we dont have the guts do it. Keep up the good work. Time will answer your question. In Tamil e era, Savukku's name has already been carved. The MAN who fought for the society. There will be distractors like these when you pursue certain goals. BEING AVERAGE IS A DISEASE.

ranganathan said...

in how many corruption cases politicians are convicted? can you tell there is no corruption in judiciary?leading lawyers appear for leading criminals.dont believe in courts.

vasan said...

ச‌ரித்திர‌த்தில் த‌ன் பெய‌ர் இட‌ம் பெற‌ வேண்டும் என்ப‌தே, த‌மிழ‌க‌ முத‌ல்வ‌ரின் 'போராசை'.
நிச்ச‌ய‌ம் அது ந‌ட‌க்கும். ஆனால், ச‌ரித்திர‌த்தின் எந்த‌ப் ப‌க்க‌த்தில்?

suresh said...

I agree with MR.AVS. Create facebook profile for savukku, create twitter page for savukku, create youtube channel for savukku( which is more powerful), create orkut profile for savukku. social networks is a big media which is not controlled by anyone. Savukku team's hard work must reach every one. we need a genuine media people who shares the truth with out worry about any one. Social meida is the best place. All Savukku readers must take this site into next level. As an IT consultant, I can provide any technical help needed to take this site into next level. Peepli live hindi movie ( film by amir khan) shows the real face of politicians and meida people in a funny way. if people knows the real thing happening around them, then people will change by themselves. but now they live in a dream world controlled by fake media people. Soon all Mobile phones in tamil nadu will have internet facility and we can take the savukku team's work to common people. I believe savukku team's work is not to change people, just bring the real news to the people. if the people knows the real thing happening around them, they will change by themselves.

Anonymous said...

இந்திய அரசியவாதிகளை திருத்தி நல்லவழிக்கு கொண்டுவர சமூகத்தால் முடியவில்லை!, பொலிஸ் அடாவடியை ஆட்சியாளர்களே வழிமொழிந்து ஊக்குவிப்பதல் நீதி நியாயத்தையும் சமூக உதவியையும் போலிஸிடம் எதிர்பார்க்கமுடியாது!, பெரிய அரச அதிகாரிகள், அரசியல்வாதிகளின் ஊது குழலாக இருப்பதால் ஊழல் அடிமட்டம்வரை தாண்டவமாடுவதை தடுக்க முடியவில்லை!. இதுபற்றி கோர்ட்டில் முறையிட்டு நியாயத்தை நிலைநாட்டி விரோதிகளை தண்டித்து தண்டனை வாங்கிக்கொடுத்து மக்கள் நலனை முன்னிறுத்துவோம் என்றால், நீதிபதிகள் அரசியல்வாதிகளின் குரலாகவே தீர்ப்பு வாசித்து, பொதுசனத்தை குற்றவாளியாக்கி தண்டனையையும் மாற்றி வழங்கி அப்பாவிகளையும் நிரபராதிகளையும் இன்னுமொருமுறை கோர்ட் வாசல்ப்பக்கம் தலை வைத்து படுக்கக்கூட பயப்படுத்தி சிறுமைப்படுத்திவிடுகின்றனர்!!, இதுதானே இந்திய அதிகாரவர்க்கத்தின் சுற்றுவட்டச்சக்கர ஓட்டம், இங்கு நீதித்துறைதான் மிகமோசமான பாத்திரம் வகிக்கிறது, நீதித்துறை நியாயமாக நடந்துகொண்டால் மற்ற துறைகள் கட்டுக்குள் வருவதற்கான நியாயம் தெரிகிறது, அரசியல் வாதிகள் அடியாட்களை மடியில் கட்டி வைத்திருப்பதால்
சமீபத்தில் கனகவேல் காக்க என்றொரு சினிமாவில், நீதிபதியின் தண்டனைகள் நியாயத்திற்குட்பட்டிருக்கவில்லை என உணர்ந்த ஒரு இளைஞன் தீர்ப்பை மாற்றி எழுதுகிறான், அதுபோல இளைஞர்கள் கையில் பிரம்பை எடுத்து நீதிபதிகளை நியாயம் கேட்க வைத்துவிடக்கூடாது,

cs said...

உங்கள் நிலையை தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறீர்கள். அதிகார வர்க்கம் மட்டும் கெட்டுப் போயிருந்தால் மக்கள் சக்தி மூலமாக அந்த நிலையை மாற்றியமைக்க முடியும். மக்களே கெட்டுப் போயிருந்தால் என்ன செய்ய முடியும்? இது பிரச்சினைதான், ஆனால் தீர்வும் இதில்தான் அடங்கியிருக்கிறது.

நீங்கள் பெரும்பாலும் காவல் துறையை, அதிலும் குறிப்பாக சில அதிகாரிகளை, இன்னமும் குறிப்பாக ஜாஃபர் சேட் என்னும் ஒரு அதிகாரியை குறிவைத்து எழுதி வருகிறீர்கள். இதற்கான பின்னணியும், காரணங்களும் உங்களுக்கு இருக்கலாம். ஆனால், அவற்றையெல்லாம் தெரியாத எங்களைப் போன்ற வாசகர்களுக்கு உங்கள் தனிமனித தாக்குதல்கள் நாளடைவில் அயற்சியையே ஏற்படுத்தும். அந்த ரீதியிலான பின்னூட்டங்கள் பலவற்றை ஏற்கனவே கண்டிருக்கிறீர்கள்தானே. என்னைப் பொறுத்தவரை, அயற்சியைவிட உங்கள் உயிருக்கான அச்சமே அதிகம். ஏனென்றால், தனிமனித விரோதங்களில் எப்போதுமே ஆபத்து உண்டு. நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலமோ மனித உயிருக்கும் உரிமைகளுக்கும் எந்த வித மதிப்பும் தராத ஒரு காலம்.

இந்த சூழ்நிலையில் உங்கள் திறமைக்கும், எண்ணங்களுக்கும், குறிக்கோள்களுக்கும் தகுதியான செயல் என்று நான் மதிப்பிடுவது, மக்கள் மனதை மாற்றுவது. எனவே, நீங்கள் அதிகாரவர்க்கத்தின் கேட்டை எப்படி வெளிக் கொண்டு வருவது என்ற அக்கறையை இப்போதைக்கு தள்ளி வைத்து விட்டு பொது மக்களை எப்படி மாற்றலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள். அகில இந்திய அளவிலே காந்தியடிகளும், தமிழக அளவிலே தந்தை பெரியாரும் ஏற்படுத்திய பொதுமக்கள் இயக்கத்திற்குப் பின்னர் வெற்றிகரமான மக்கள் இயக்கங்கள் எதுவும் ஏற்படவில்லையே. உங்களைப் போன்றவர்களால் அவர்கள் அளவுக்கு மாற்றங்களை ஏற்படுத்த முடியும். "சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல் வெல்லல் யார்க்கும் அரிது" என்று வள்ளுவன் சொன்னதில் சொல் வன்மை, அஞ்சாமை இரண்டும் உங்களிடத்தில் உள்ளதைக் கண் கூடாகக் காண்கிறோம். சோர்ந்து விடாமல் போராடினால் உங்களை யாரும் வெல்ல இயலாது.

தாரளமயமான பொருளாதார சூழலில் மக்கள் ஊரை, உலையில் போட்டுத்தான் வாழ வேண்டுமென்பதில்லை. உழைப்பிலே அதைவிட உயர்வு உண்டு. நாமெல்லாம் சகோதரராக வாழ்ந்து, சீரிய ஒரு சமூகமாக நம்மை மாற்றிக் கொள்ள முடியும் என்றே தீவிரமாக நம்புகிறேன். உங்கள் நம்பிக்கை தளாரதிருக்க நீங்கள் நம்பாத கடவுளிடமும் அருள் வேண்டுகிறேன்.

இறுதியாக: பத்திரிகை உலகையும், தொலைக்காட்சியையும், திரைப்படத்தையும் அரசியல் ஆக்கிரமித்து விட்ட நிலையில் சுதந்திரமாக இருக்கும் ஒரே ஊடக வெளி இணையம்தான். நக்கீரன் போன்ற சமூகவிரோத பத்திரிகைகளுக்கு மாற்றாக சவுக்கு வந்திருப்பதை போல, சன், ஜெயா செய்திகளுக்கு மாற்றாக யூ-ட்யூபில் மாற்று ஒன்று உருவாகலாம்; முடிந்தால் நீங்களே அதை உருவாக்கலாம்.

naanum thayaar.ungal tholodu thol sernthu.

பாலா said...

தமிழகத்திலும் ஒரு தலைவர் இருக்கிறார். வாழ்வாதாரங்களையும், உரிமைகளையும் வென்றெடுக்கக்கூடிய தலைவராக இருக்கிறார். ஆனால் மக்கள் அவரை புரிந்து கொள்ளவில்லை.. ஆனாலும் அவர் முயற்சியை கைவிடாமல் தமிழகம் முழுவதும் சுற்றி சுழன்று வருகிறார்..

Anonymous said...

Dear Savukku - what kind of money is required to launch a weekly magazine? What kind of subscription revenue is required to keep it up running? We can all contribute for the inception and subscription upfront! Don't forget that most of them here are salaried very well, and/or work abroad. Come with a plan and witness the back-up you receive from us.

I sincerely feel that VAIKO is the only leader who is genuinely clean and supporting tamils, and the fittest person to be our CM! I am sure he will oneday...Why not Savukku patch-up with VAIKO?

Anonymous said...

இது ரொம்ப ஈசி.முதல்ல சில ஊர்களை தேர்வு செய்து அந்த ஊர்ல நடக்க கூடிய சட்ட விரோத செயல்களை தொடர்ந்து தகவல் அறியும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி கேட்க ஆரம்பித்தால் போதும் நல்லது நடக்க ஆரம்பிக்கும்.பதவியில் இருக்கும் வரைதான் அதிகாரிக்கு மதிப்பு.தன பதவி போய்விடும் என்ற நிலை வந்தால் எல்லா தவறும் நின்றுவிடும்

Anonymous said...

Dear Savukku,
The article is a true state of affairs prevailing in the minds of right thinking people. For the DMK atrocities , the support of Central Government {congress} is the reason. So, for all actions of DMK leader Karunanidhi, Congress party head is fully responsible and squarely to be blamed her also. Only solution is people shall rise and vote out DMK from power in the ensuing Assembly elections by voting 100% to AIADMK allianace consisting of MDMK,DMDK,Communist both right and left, Muslim organisations with an understanding with BJP. Communists should support this idea ONLY TO DEFEAT DMK and CONGRESS alliance.

On the whole people are against DMK rule in Tamil Nadu as it is.

I wish the attempts of SAVUKKU to materialise its motto to oust DMK at any cost.

dupvalasudurai said...

யார் இந்த இந்தியாவில் தான் உண்டு தான் வீடும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களே தவிர அவர்கள் என்றுமே நாட்டிற்காக ஊழலை எதிர்தோ போராடியதில்லை காரணம் உயிர் பயம் ஒருவர் போராடினால் இழப்பு அவருக்கு ஆயிரம் போர் போராடினால் தீர்வு கிடைக்காத இல்லை லட்சம் போர் போராடினால், யார் நம்மை தொடுவது போராடினால் துணை புரிய ஆயிரம் போர் வருவார்கள் ஆனால் அவர்களால் போராட முடியாது ஏனென்றால் பயம் மட்டுமே இது அரசியல் வாதிகளின் சிறு திரை
இரு வகைகளில் அநியாயத்தை தடுக்கலாம்
ஓன்று தீர்ப்பது(நியாயமான வழியில்)
இரண்டு முடிப்பது(தீர்த்துக்கட்டுவது)
நியாயத்தை காக்க அதர்மத்தை அழிக்க எவ்வழியை வேண்டுமாலும் தேர்ந்து எடுக்கலாம் இது சான்றோர் வாக்கு

Post a Comment