Flash News

Monday, September 6, 2010

துவைக்காத சாக்ஸும், கருணாநிதியும்.


இந்தத் தலைப்பு, பரபரப்புக்காகவோ, ஆர்வத்தை தூண்டுவதற்காகவோ வைக்கப் பட்டது அல்ல. துவைக்காத சாக்ஸ் எடுக்கும் நாற்றத்தை விட, மோசமான துர்நாற்றத்தை உருவாக்கக் கூடிய ஒரு சாக்ஸை கருணாநிதி விரும்பி அருகில் வைத்துக் கொண்டிருப்பது எப்படி என்பது குறித்துதான் இந்தப் பதிவு.

அந்த துவைக்காத சாக்ஸ் வேறு யாருமல்ல. சாக்ஸ் என்று அன்போடு அனைவராலும் அழைக்கப் படும், ஹன்ஸ்ராஜ் சக்சேனா தான் அந்த துவைக்காத சாக்ஸ்.
கடந்த வாரம், பரபரப்பாக வெளியான தாக்குதல் செய்திகளைப் பற்றி ஊடகங்களில் கண்டிருப்பீர்கள். இதன் பின்னணியும், இதற்குப் பிறகு நடந்த சம்பவங்களும், மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கக் கூடியதாக உள்ளன.
சன் டிவி. ஆக்டோபஸ் போல வளர்ந்து இன்று ஊடகத்துறையையே விழுங்க அலைந்து கொண்டிருக்கும் இந்த ஆக்டோபஸின் மிக முக்கியப் புள்ளி தான் இந்த ஹன்ஸ்ராஜ் சக்சேனா.

பூமாலை வீடியோ கேசட்டாக இருந்து சன் டிவியாக மாற்றம் பெரும் போது கேடி பிரதர்ஸ் சார்பில் போடப் பட்ட முதலீடு வெறும் இருபது லட்சம். ஆனால், அன்று தனது நண்பர்களுக்காக முதலீடு போட்டு, இந்த ஆக்டோபஸ் உருவாகக் காரணமாக இருந்த நபர் சரத் ரெட்டி. கேடி சகோதரர்களின் வகுப்புத் தோழர். சரத் ரெட்டி செய்த முதலீடு 80 லட்சம்.இன்று தமிழ்நாட்டில் கருணாநிதியை விட மிகப் பெரிய தீய சக்தி யாரென்று பார்த்தீர்களென்றால், அது இந்த கேடி சகோதரர்கள் தான். இந்த கேடி சகோதரர்கள், அணு குண்டு வெடித்தால் ஏற்படும் கதிரியக்கத்தை விட மோசமானவர்கள். அணுக்கதிர் வீச்சு, எப்படி பரவிய இடத்திலேல்லாம் சர்வ நாசத்தை ஏற்படுத்துமோ, பல ஆண்டுகளுக்கு புல் பூண்டு முளைக்காமல் செய்யுமோ, அதைப் போல மிக மோசமான விளைவை ஏற்படுத்துபவர்கள் தான் இந்த கேடி சகோதரர்கள்.கருணாநிதியே இந்த கேடி சகோதரர்களின் வலிமையைப் பார்த்துதான், அழகிரியின் அதிருப்தியையும் மீறி கண்கள் பனிக்கச் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தால் வளர்ந்து, அந்த அரசியல் அதிகாரம் தந்த பலன்களையெல்லாம் அனுபவித்து, அதன் மூலம் அசுர வளர்ச்சி கண்டு முன்னேறிய பின்னர், குடும்பத்தில் பிணக்கு என்றதும் அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு, சலுகை விலையில் தினகரனில் விளம்பரம் போட்டவர்கள் இந்த கேடி சகோதரர்கள் தான். இதைக் கண்டுதான் கருணாநிதி பயந்தார். தன்னுடைய மகன்கள், இந்த அசுரர்களிடம் அரசியல் செய்ய முடியாது என்பதை உணர்ந்தும், தயாநிதி மாறன் பேரவை என்று துவக்கி, கட்சியை கபளீகரம் செய்ய இவர்கள் செய்த முயற்சியையும் அறிந்தே கருணாநிதி இவர்களோடு சமாதானமாக போனார்.

தனது மகன்களுக்கு ஆத்திரம் இருக்கும் அளவுக்கு அறிவில்லை என்பதை கருணாநிதி நன்கு உணர்ந்திருக்கிறார். இந்த கேடி சகோதரர்களின் ஆணவத்திற்கு ஒரு சம்பவத்தை பத்திரிக்கையாளர்கள் உதாரணமாக சொல்கிறார்கள்.

மதுரை தினகரன் அலுவலகத்தில் தாக்குதல் நடந்து கொண்டிருக்கும் போது, தயாநிதி மாறனுக்கு இந்தக் தகவல் போகிறது. அப்போது அவர் மத்திய அமைச்சர். தயாநிதி மாறன் உடனடியாக உள்துறைச் செயலாளர் மாலதியை தொடர்பு கொண்டு, என்ன நடக்கிறது மதுரையில், உடனடியாக நடவடிக்கை எடுக்கிறீர்களா, ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமா என்று கேட்டுள்ளார். மாலதி, இதை அப்படியே டேப் செய்து, கருணாநிதியிடம் போட்டுக் காட்டியுள்ளார். இதன் பிறகே கருணாநிதி வெகுண்டெழுந்து, மாறன் சகோதரர்களுடனான உறவை முறித்துக் கொண்டார் என்று தகவல்கள் கூறுகின்றன. இப்படி ஒரு நம்பிக்கைக்கு பாத்திரமானவர் என்பதால் தான் மாலதி பலரை முந்திக் கொண்டு இன்று தலைமைச் செயலாளராக உட்கார்ந்திருக்கிறார்.

கலாநிதி மாறன் மற்றும் அவரது மனைவிக்கு ஆண்டுதோறும், சன் டிவி நிறுவனத்திலிருந்து வழங்கப் படும் ஊதியம் எவ்வளவு தெரியுமா ? தலா 100 கோடி ரூபாய். இந்த 100 கோடி ரூபாயும் வெள்ளைக் கணக்கில். கருப்புக் கணக்கில் எவ்வளவு இருக்கும் என்று நீங்களே கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள்.

இந்த கேடி சகோதரர்களை எதிர்க்க வலுவான நபர், அழகிரி என்றாலும் அழகிரிக்கு இந்த சகோதரர்களின் சாதுர்யம் இல்லாததால், இவர்களை எளிதாக வெற்றி கொள்ள முடியவில்லை.

80 லட்ச ரூபாய் முதலீடு செய்து, சன் ஆக்டோபஸின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த சரத் ரெட்டி, கேடி சகோதரர்களால் விரட்டியடிக்கப் படுகிறார். விரட்டியடிக்கப் பட்ட அவர், ஆந்திரா சென்று வேறு தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அந்தச் சூழலில் குடும்பம் பிரிந்து கலைஞர் டிவி என்ற ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று முடிவெடுக்கப் படுகிறது. முடிவெடுத்தவுடன், ஆற்காடு வீராச்சாமி ஆந்திரா சென்று, சரத் ரெட்டியைச் சந்தித்து, உடனடியாக கலைஞர் டிவிக்கு தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார். அதன் படி சரத் ரெட்டி கலைஞர் டிவியின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

சரத்ரெட்டி எதிரி முகாமுக்கு தலைமை ஏற்கிறார் என்றதும், கேடி சகோதரர்கள் மீண்டும் சரத் ரெட்டியை அணுகி சன் டிவிக்கு வேலைக்கு வருமாறு வெட்கமில்லாமல் கேட்கின்றனர். ஆனால் சரத் ரெட்டி மறுத்து விடுகிறார்.

டிசம்பர் 2008ல் பிரிந்த குடும்பம் மீண்டும் இணைகிறது. கருணாநிதி “இதயம் இனித்தது. கண்கள் பனித்தது“ என்கிறார். இது நடந்த மறு நாளே கேடி சகோதரர்கள், சரத் ரெட்டியின் நுங்கம்பாக்கம் வீட்டிற்கு செல்கின்றனர். குடி போதையில் எங்களையாடா எதிர்க்கிறாய் என்று சரத் ரெட்டியை பின்னி எடுக்கிறார்கள். சரத் ரெட்டியின் காலில் எலும்பு முறிவு ஏற்படுகிறது. கலாநிதி மாறன் ஒரு பக்கமும், காவேரி கலாநிதி மறு பக்கமும், சரத் ரெட்டியை கைத் தாங்கலாக அழைத்துச் சென்று, மருத்துவமனையில் சேர்க்கின்றனர்.

அன்று அந்த சம்பவம் ஊடகங்களில் வெளி வரவே செய்தன. எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதாவும் இது குறித்து அறிக்கை வெளியிட்டார். ஆனால், கருணாநிதி மவுனச் சாமியார் போல உட்கார்ந்திருந்தார். எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அன்று கருணாநிதி தனது பேரன்கள் என்று பார்க்காமல், நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பாரே யானால், இன்று தனது பேரன்களின் அல்லக்கையான துவைக்காத சாக்ஸ் இப்படி ஒரு ஆட்டத்தை ஆடியிருக்குமா ?அந்த ஞாயிறு அன்று இரவு என்ன நடந்தது. நீலாங்கரையில் ஒரு பண்ணை வீட்டில் கலாநிதி மாறன் ஒரு ரேவ் பார்ட்டி நடத்துகிறார். அந்த ரேவ் பார்ட்டியில், சன் டிவியின் சிஇஓ துவைக்காத சாக்ஸும், சன் நியூஸ் எடிட்டர் ஆர்எம்ஆரும் கலந்து கொள்கிறார்கள். பார்ட்டி முடிந்து வெளியே வரும் போது கார் மற்றொரு கார் மீது மோதி ஒரு சிறு விபத்து ஏற்படுகிறது. துவைக்காத சாக்ஸும், ஆர்எம் ரமேஷூம் “நிதானத்தில்“ இருந்ததால் அந்த மோதிய கார் உரிமையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.அந்த வாக்குவாதம் கை கலப்பில் முடிகிறது. அந்தப் பெண்ணின் தம்பி சித்தார்த்தையும், அந்தப் பெண்ணையும் தாக்க முயல்கிறார்கள். இருவரும் தப்பி தங்கள் வீட்டுக்கு ஓடுகிறார்கள். அங்கே இருந்த அவர்கள் காரை அடித்து சேதப் படுத்தியதோடு அவர்கள் வீட்டுக்குச் சென்று காரையும் வீட்டையும் அடித்து சேதப் படுத்தி அந்தப் பெண்ணையும் தாக்குகிறார்கள். அவரின் தம்பி சித்தார்த் தலைமறைவாகிறார்.

இந்தத் தாக்குதலில் துவைக்காத சாக்ஸின் ஆத்திரம் அடங்காததால் அந்த சித்தார்த்தின் நண்பரும், ரோகிணி தியேட்டர் உரிமையாளரின் மகன் வினோஜ் செல்வம் நடத்தும் செக்கர்ஸ் ஓட்டலுக்கு ஏராளமான அடியாட்களை அழைத்துச் சென்று ஒரு பெரும் தாக்குதலை துவைக்காத சாக்ஸ் நடத்துகிறார்.இந்தத் தகவல், இரவு ட்யூட்டியில் இருந்த மீடியா நிறுவனங்களுக்குத் தெரிந்து, அனைவரும் தாக்குதலை படம் பிடிக்கின்றனர். இது தவிரவும், அந்த ஓட்டலில் இருந்த சிசிடிவியில் இந்தத் தாக்குதல் முழுமையாக பதிவாகிறது.

மறு நாள் ஜெயா டிவியில் இந்தச் செய்தி ஒளிபரப்பாகிறது. ஏறக்குறைய அனைத்து ஊடகங்களும் பெரியதாக செய்தி வெளியிடுகின்றன.இந்தச் செய்திகளை பார்த்ததும் வேறு வழியின்றி, கண்ணாயிரம் எஃப்ஐஆர் பதியச் சொல்லி உத்தரவிடுகிறார்.துவைக்காத சாக்ஸ் முதல் எதிரியாக குறிப்பிடப் படுகிறார். இரண்டு வழக்குகள் பதியப் படுகின்றன.

ஆனால் வழக்கு பதியப் பட்டதும், துவைக்காத சாக்ஸ் எங்கிருக்கிறார் என்பது நன்றாகத் தெரிந்தும், கண்ணாயிரம் அவரைக் கைது செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒரு சில ஆட்டோ டிரைவர்களை கைது செய்யச் சொல்லுகிறார். அதன் படி ஒரு பத்து ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப் படுகிறார்கள்.

ஆனால் இதற்குப் பிறகு, இந்த துவைக்காத சாக்ஸ் ஜெயா டிவிக்கும் மற்ற ஊடகங்களையும் தொடர்பு கொண்டு, தன்னைப் பற்றிய செய்திகளை போட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். ஜெயா டிவி தரப்பிலும், நம் தினமதி தரப்பிலும், இது மறுக்கப் படுகிறது.

தமிழ் மக்களின் நாடித் துடிப்பு என்று சொல்லிக் கொள்ளும் வாரமிருமுறை இதழ், துவைக்காத சாக்ஸ் விஷயத்தில் தனது துடிப்பை நிறுத்திக் கொள்கிறது. மீறி துடித்தால், விகடன் டாக்கீஸின் தொலைக்காட்சித் தொடர்களுக்கும், அந்நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களுக்கும் ஆபத்து என்பதால் அதைப் பற்றி மூச்ச விடவில்லை.துவைக்காத சாக்ஸ் இந்தியாவில் இருந்தால் ஒரு வேளை கைது செய்யப் படுவோமோ என்று அஞ்சி, வெளி நாட்டுக்கு கிளம்புகிறார். இவர் கிளம்புவது பத்திரிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரியும் போது கண்ணாயிரத்திற்கு தெரியாதா ? ஆனால் கண்ணாயிரம் நிம்மதியாக கண்ணயர்ந்திருக்கிறார்.
துவைக்காத சாக்ஸ் வெளி நாட்டிற்கு கிளம்பிச் சென்று விட்டது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக தும்மியதற்குக் கூட வளைத்து வளைத்து கைது செய்த கருணாநிதியின் காவல்துறை, செம்மொழி மாநாட்டுக்கு எதிராக சுவரொட்டி ஒட்டியதற்காக பலரை தேசத் துரோக வழக்கில் கைது செய்த காவல்துறை, கருப்புக் கொடி காட்டியதற்காக கடுமையாக தாக்கிய காவல்துறை, ஒரு ஓட்டலை அடித்து நொறுக்கி, ஒரு பெண்ணை மானபங்கப் படுத்திய ஒருவர், வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதை வேடிக்கை பார்த்தபடி அமைதியாக இருக்கிறது.

அன்று கேடி சகோதரர்கள் சரத் ரெட்டியை அடித்து காலை முறித்த போது அவர்கள் மீது நடவடிக்கை எடுத்திருந்தால் இன்று கேடி சகோதரர்களின் அல்லக் கைக்கு இந்தத் தைரியம் வந்திருக்குமா ?கேடி சகோதரர்களின் அல்லக்கை மீதே நடவடிக்கை எடுக்க கருணாநிதிக்கு துணிவில்லை என்றால், கேடி சகோதரர்கள் செய்யும் அத்தனை காரியங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டுதானே இருப்பார் ?

இந்த துவைக்காத சாக்ஸ் எழுப்பும் துர்நாற்றத்தை கருணாநிதி சகித்துக் கொண்டு அதற்கு ஆதரவு கொடுத்துக் கொண்டு இருக்கிறார் என்றால், இந்த துர்நாற்றத்தில் கருணாநிதிக்கு மிகுந்த உடன்பாடு என்று தானே பொருள் கொள்ள முடியும் ?


ஒரு நபர் ரவுடிகளை கூட்டிச் சென்று ஒரு நட்சத்திர விடுதியை அடித்து நொறுக்கி விட்டு, பத்திரமாக அவர் பெயரில் எஃஐஆர் நிலுவையில் இருக்கும் போது வெளி நாட்டுக்கு தப்பிச் செல்ல முடிகிறதென்றால், கருணாநிதி ஆட்சியில் உங்களுக்கும் எனக்கும் என்ன பாதுகாப்பு என்ற யோசித்துப் பாருங்கள்.

கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?

சவுக்கு

54 comments:

இம்சைஅரசன் பாபு.. said...

unmaiyana pathivu

cs said...

கருணாநிதிக்கு இதையெல்லாம் விட, குஷ்பூவின் புருஷன் எப்போது திமுகவில் சேர்ந்து திராவிட இயக்கத்தை வளர்ப்பார் என்று ஆர்வமும் கவனமும் இருக்கும் போது, இதைப் பற்றியெல்லாம் சிந்திக்க அவருக்கு நேரம் இருக்கிறதா என்ன ?HAHAHAHAHAHAH

ITHE SINTHANAITHAN ENAKKUM.

PLEASE TAKE CAER.

டுபாக்கூர் பதிவர் said...

தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி....இந்த வரிசையில் சேர்ந்து விடுவீர்கள் போலிருக்கிறது. சீக்கிரம் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து கல்லா கட்டப் பாருங்கள்.

அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டுமெனில் உங்க கையிலயும் நாலு காசு வேணும் சாமி!, வெறுமனே ஒரு ப்ளாக்கும் சிங்கியடிக்க பத்து பேரும் மட்டும் போதாது.

அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்....யோசிங்க பாஸ்!

Anonymous said...

கிழிஞ்சது

அநியாயம் said...

மீடியா கைல இருக்குங்கற திமிர் இது , இந்த துவைக்கா சாக்ஸ இன்னுமா தூக்கி வீசல !

பன்னாட பரதேசிங்க, என்ன ஆட்சி நடக்குது.

நிறைய இன்னும் அசிங்க அசிங்கமா சொல்லனும் போல இருக்கு, அவை நாகரீகம் கருதி இத்தோட நிறுத்திகிறேன். இந்த சாக்கடைகளை சவுக்கு துணை கொண்டு களைவோம்.

வணக்கம்.
அநியாய

காலப் பறவை said...

சவுக்குக்கு ஒரு ராயல் சல்யுட்

வாசகன் said...

காவல்துறை கருணாநிதியின் வளர்ப்பு நாய்களாக இருக்கும் நிலையில் சட்டமாவது ஒழுங்காவது?

Anonymous said...

அத்தனையும் நிஜம் நண்பர்களே.. சவுக்கு எழுதிய விஷயங்கள் அத்தனையும் நிஜம்.. சவுக்கு எழுத ஒரு வலை தளம் கிடைத்திருக்கிறது.. எனக்கு இல்லை.. அவ்வளவே... சாக்ஸ் பற்றி இன்னும் பல திடுக்கிடும் செய்திகள் நிறைய உள்ளன.. தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்..பலர் இவர்களுக்கு நோய் வந்து சாவு வருமா என்று காத்துகொண்டிருக்கிரர்கள்..

raja said...

மிக கவனமாக இருங்கள் உங்களை போன்ற ஒரு நபர் எங்களை போன்ற வாசகர்ளுக்கு தேவை..

Anonymous said...

sooppar

Anbusivam said...

அச்சமில்லை அச்சமில்லை என்று படிய புரட்சிக் கவிஞனின் வார்த்தைக்குப் பொருள் நீங்கள் தான் சவுக்கு. வாழ்த்துக்கள். இத்தனை தைரியம் எங்கிருந்து வந்தது ???

உங்களுக்கு முன்னால், குளிர் அறையில் அமர்ந்து கொண்டு சுய சம்பாத்தியத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கும் என்னைப் போன்றவர்கள் எல்லாம் வெறும் தூசு.

Kallarappadi Rajamoorthy Prabakaran said...

Very worst CM..!! It's shame in Tamilnadu..!! CM down down..!!

Anonymous said...

ivargalin saavu nalla saavaga irukkadhu.

Anonymous said...

Excellent Savukku !

ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து
அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.

We Should Collect a Fund For Savukku to Promote Him as a Leading Journalist....
Everybody Please Contribute....

Anonymous said...

media is in their hands. No magazine has got back bone to write against karunanidhi. so they will do whatever they want. we need to be cautious not to cross their path...thats all. its better to keep away from saakadai panni...

Anonymous said...

I am ready to support. pls let us join a public limited company and start the publishing. any body interested, contact me thamins@gmail.com

Anonymous said...

இந்த துவைக்காத சாக்ஸ் எந்த மாநிலத்தைச் சேர்ந்தது?

சென்னை இந்த கேடி சகோதரர்களின் கையிலே உள்ளது.
சென்னையைத்தவிர மற்ற தமிழகத்தின் ஊர்கள் கருணாநிதியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

புரட்சித்தலைவன் said...

ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து
அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.

Arumugam said...

I think Dubakur is correct, better start weekly magazine by printing from other press initially, becasue Nakkheeran magazine is a pro DMK, we don't have anything gives correct news including vikatan and Kumudam, but try to circulate Chennai as a contract basis from other printers, not to invest too much initially, need to have more section like, social, cinema, world news section to get into magazine, but try all these categories in web first (Make sure giving 100% correct news).

Anonymous said...

இங்கே பல நண்பர்களும் சுட்டிக்காட்டியதுபோல
//ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவம்.// அதுமட்டுமல்ல உலகம் முழுவதும் தமிழர்கள்வாழுகிறார்கள், நான்கூட பலவருடங்களாக தொடர்ந்து ஜூனியர் விகடன் இன்னும் பல பத்திரிகைகளைவாங்கிப்படித்து, இப்போது சிலகாரணங்களினால் சில பத்திரிகைகளை விட்டுவிட்டாலும் ஜூனியர் விகடன் தொடர்கிறது, நிச்சியம் சவுக்கு பத்திரிகை தொடங்கினால் நல்ல வரவேற்பு நிச்சியம் உண்டு, நல்ல எதிர் விளைவையும் காணலாம், அத்துடன் 05,09,2010,அன்று விஜய் ரி.வி.யின் நீயா நானா வில், ஒரு கருத்து அலசப்பட்டது அதில் இன்ரர் நெற் மூலம் இரண்டு சத வீத பயன்பாடுதான் மக்களை சென்றடைவதாக காரணங்கள் தெரிவிக்கப்பட்டது, அறிவுபூர்வமாக விவாதிக்கக்கூடிய எழுத்தாளர் ''முத்துக்கிருஷ்ணன்'' அவர்கள் மூலமே அந்தக்கருத்து முன் வைக்கப்பட்டது எனக்கும் இது நியாயமாகவே படுகின்றது, பத்திரிகைத்துறைமூலம்,, சவுக்குக்கு ஒரு பின் பலமும் நிச்சியம் உடாகும் என நம்பலாம்., சிந்தியுங்கள்

Raja said...

well done, Savukku.. Hats off to your guts!

priya said...

//தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி....இந்த வரிசையில் சேர்ந்து விடுவீர்கள் போலிருக்கிறது. சீக்கிரம் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்து கல்லா கட்டப் பாருங்கள்.

அதிகார வர்க்கத்தை எதிர்க்க வேண்டுமெனில் உங்க கையிலயும் நாலு காசு வேணும் சாமி!, வெறுமனே ஒரு ப்ளாக்கும் சிங்கியடிக்க பத்து பேரும் மட்டும் போதாது.

அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்....யோசிங்க பாஸ்! // yosinga boss!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

attagaasam savukku!!!!!!!!!!

romba naalaa ethirpaathukkittu iruntha matter.....kalakkal.......innum antha octopus kootathoda matha leelaiyellaam veliya kondu vaanga boss.......

:) :) :)

kamalakkannan said...

சவுக்கு , தைரியாதின் மறுபக்கம் ,உங்களை போன்றவர்கள் வருங்கலத்தின் அடக்கு முறைக்கான எதிர் எவுகணை,
உங்களை போன்று ,அடக்குமுறைக்கு எதிராக வருங்கால தலைமுறைகளை உருவாக்குவது அனைவரின் கடமை
துவைக்காத சாக்ஸ் நாற்றம் எடுத்து சாகட்டும் .

வானம் said...

கவனத்துடன் செயல்படுங்கள் சவுக்கு நண்பர்களே. இந்தியாவில் சட்டம் என்பது பணத்திற்கும், அதிகாரத்திற்கும் பணிந்து போவதாகவே உள்ளது.ஈழம் நசுக்கப்பட்ட போதும் சரி,சவுக்கு சங்கர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும் சரி,மக்கள் வேடிக்கைதான் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

Palani said...

பத்திரிகை ஆரம்பியுங்கள் என்று சொல்கிறிர்கள், அது அவ்வளவு எளிதல்ல என்று நினைக்கிறேன். அதற்கு நிறை வழிமுறைகள் இருக்கின்றன. அதைப்பற்றி யாருக்காவது தெரியுமா? உணர்சிவசப்படுவதலும், அவசரத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் வெற்றி அடைந்ததில்லை.

Anonymous said...

ஜூனியர் விகடன் எல்லாம் ஒரு பத்திரிகை அதற்கு எல்லாம் நீங்க வக்காலத்து வாங்குறீங்க

கடல் அன்பன் said...

சவுக்கு அச்சு துறைக்கு வந்தால், இப்போது உங்களுக்குள் இருக்கும் தீ தொடர்ந்து எரியுமா என்பது சந்தேகமே.அரசு அடக்குமுறை கொண்டு தீயை அணைத்துவிடும். வெகுஜன பத்திரிக்கை ஆகும் போது இவ்வளவு வெளிப்படையாக கோபத்தோடு எழுத முடியாது.விளம்பரங்கள், வாசகர்களின் நன்கொடை மூலம் இணைய தளத்தை தொடர்ந்து நடத்த முடியும்.

Anonymous said...

எதற்காக உங்களிடம் ஜாபர் சேட், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியிடம் 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு கேட்டுள்ளார் என்பதை விளக்க முடியுமா? அல்லது கட்டுரை வெளியீட முடியுமா?

kumar said...

திமுக குடும்ப பிரசிச்சினை போது , இந்த கேடி ப்ரதர்ஸ் திமுக மாவட்ட செய்யலாளர்களை விலை பேசி வாங்க ஆரம்பித்தார்கள். சிம்புலா சொல்லணும்னா "THEY ARE CORPORATE ROWDIES"

Anonymous said...

What happen to "Santhana Kaadu to johnny johnkhan Road "....

What happen to the countdown for the DMK rule....

What happen to the Mr.Mathi.....

is it possible for you share these details???

Mahes said...

Well done savukku............
please continue...........
we are behind you............
oneday change will come.............

Anonymous said...

We Should Financially Help Savukku More.

So It will Help Him to appoint More People to do More Work.

Also Who Interested such Work Please Joint With Savukku and Support him.

Never Such Things happen in Future சவுக்கு சங்கர் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டபோதும். not Only savukku any Indian.

God Knows Well .I Hope he will do right thing at right time.

Anonymous said...

Savukku,Enadhu mundhaiya pinnoottathai edit seidhu veliyidavum pls!
-Vazhuthi

சவுக்கு said...

அன்பார்ந்த தோழர் வழுதி, பின்னூட்டங்களில் தவறான வார்த்தைகள் வேண்டாமே .... ப்ளீஸ். தவறான வார்த்தை பிரயோகங்கள் இருந்தால், எவ்வளவு நல்ல கருத்துக்களாக இருந்தாலும், பிரசுரிக்க இயலாது. மன்னிக்கவும்.

naalvan said...

vaalthukkal savukku <> kavanamaga irukkavum <aatchiyalargal ungal methu kopamaga iruppargal

vasan said...

Much people like us, did not know the BACK ROUND of the attack at செக்கர்ஸ் hotel. It looks like a STONE AGE.

ஆர்.கே.சதீஷ்குமார் said...

பட்டைய கிளப்புங்க...இவனுகளை படுக்கப்போட்டு முதுகு தோலை உறிக்கனும்.கலைஞர் இது போல நிறைய பேரை வளர்த்து விடுகிறார்.கடைசியில இவனுக கிட்ட எத்தனை பேர் மாட்டிக்கிட்டு சாவ வேண்டி இருக்கு

Robin said...

CENNAI: Veerappan slayer and the only IPS officer in Tamil Nadu to receive the prestigious President's Police Medal for Gallantry (PPMG) K Vijay Kumar has contested the move of the Tamil Nadu government in appointing Letika Saran the director general of police, overlooking his case. He has filed an affidavit in the Madras high court supporting DGP R Nataraj, who had also opposed Saran's appointment.

Vijay Kumar told the Madras high court that he had never expressed his "unwillingness" to be made director-general of police of Tamil Nadu. Expressing shock at the state government's presumption that he was not willing to head the force, he said: "I have the right to be considered for promotion. I have never stated that I am unwilling to serve in the state." Charging the home secretary with misleading the high court, he said the official might have misled the government as well.

Vijay Kumar, now director of the Sardar Vallabhbhai Patel National Police Academy in Hyderabad, said if officers went on central deputation, it did not mean that they had foregone their promotion given by the state government concerned.

In his counter-affidavit, filed in response to a writ petition of Nataraj, who is also a DGP-rank officer and heads the fire and rescue services, Vijay Kumar said the state home secretary's contention in the high court that he was 'unwilling' to head the police force was legally incorrect. "The home secretary's contention that I had gone on my own volition (for deputation) is correct but his presumptuous inference that this is synonymous with my unwillingness to serve in the cadre in which I was borne since the last three decades and more is shocking to say the least. It is also legally incorrect."

Originally, Nataraj filed a writ petition questioning the appointment of Letika Saran as DGP, when the then DGP K P Jain went on leave. In his petition, Nataraj said, not only him, but two other officers of the 1975 batch — N Balachandran and K Vijay Kumar — were overlooked for the post.

Vijay Kumar filed the counter after an 'insinuation' was made in the court that he had taken up the post of director of Sardar Vallabhbhai Patel National Police Academy, which had been downgraded to an additional director-general of police-rank.

Savukku- any comments? are you going to run a story on this

Robin said...

சென்னை: தமிழக காவல்துறை டிஜிபி பதவிக்கு அதிகாரியை தேர்வு செய்வது தொடர்பாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்திடம் உண்மைகளை மறைத்துள்ளது என்று கூறியுள்ளார் ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியின் தலைவரும், முன்னாள் அதிரடிப்படைத் தலைவருமான கே.விஜயக்குமார்.

நான், தற்போது தமிழ்நாடு [^] டி.ஜி.பியாக இருந்து வரும் லத்திகா சரணைவிட சீனியர் ஆவேன்.

நான் திறமையாக பணியாற்றியவன். வீரதீர செயலுக்காக ஜனாதிபதி விருதுக்கு தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெற்ற ஒரே தமிழக போலீஸ் அதிகாரி நான்தான். மாநில அரசு பணிக்கு நான் வர விரும்பவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்திருப்பது தவறு.

நான், மத்திய அரசு பணிக்கு போயிருந்தாலும், என்னையும் டி.ஜி.பி. பணிக்கு பரிசீலனை செய்திருக்க வேண்டும்.
என்னை அவமதித்துள்ளனர்:உயர்நீதிமன்றத்தில், உள்துறை முதன்மை செயலர் உண்மையான தகவலை தெரிவிக்கவில்லை. நான் தகவல்களை மறைத்தேன் என சொல்லி இருப்பது எனக்கு அவமரியாதை ஏற்படுத்துவது போல உள்ளது. நான் எந்த தகவலையும் மறைக்கவில்லை.

நடராஜுக்கு ஆதரவு தெரிவிக்கிறேன்:
சுப்ரீம் கோர்ட் வழிகாட்டுதலின்படி, டி.ஜி.பி. பதவிக்கான தேர்வு நடைபெறவில்லை. டி.ஜி.பி. நியமனத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளன. என்னைவிட, மனுதாரர் (டி.ஜி.பி. நடராஜ்) சீனியர் ஆவார். .

டி.ஜி.பி. பதவி உயர்வு மற்றும் தேர்வு தொடர்பான நடைமுறைகளில் அநீதியை இழைக்கும் நோக்கில் உள்துறை முதன்மை செயலர்தான், இந்த விவகாரத்தில் முடிவெடுக்கும் அதிகாரிகளை திசை திருப்பி இருக்கக்கூடும். அதேபோல உயர்நீதிமன்றத்தையும் அவர்தான் திசை திருப்பியுள்ளார். அரசையும் அவர் திசை திருப்பியுள்ளார் என்று கூறியுள்ளார் விஜயக்குமார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக இருந்த விஜய்குமார், பின்னர் ஜெயலலிதா முதல்வரானபோது அவரது பாதுகாப்பு [^] அதிகாரியாக இருந்தார்.

ஜெயலலிதாவுக்கு மிக நெருக்கமாக அதிகாரி என்பதால் இவர் மீது அதிமுக ஆதரவு அதிகாரி என்ற பெயர் உண்டுஅதே நேரத்தில் ராஜிவ் காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தபோது ராகுல் காந்திக்கும் நெருக்கமானார் இவர். இப்போதும் இவர் மீது ராகுலுக்கு தனி அன்பு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாயமனிதன்.. said...

சவுக்கு...
சன் பிக்ச்சர்சில் துவைக்காத சாக்ஸ் பார்ட்னர் தானே....
கைது செய்தால் எந்திரன் படம் ரிலீஸாவதில் சிக்கல் வருமோ...என்றுதான்...இளைஞர் யோசிக்கிறார் போல !!!

S.Visvanathan said...

Unmaiyil enaku Karuna mel kuda Kobam athigamaga illai... Intha Maran brothers mela than sema kobam... Ivanugalukku nalla savey varathu... Ivunga appan polathan iluthuttu saga poranunga... Include cruel Saxena.......

Anonymous said...

//அச்சூடகத்திற்கு வாருங்கள், தமிழகத்தின் பட்டி தொட்டியெல்லாம் உங்கள் செய்திகள் போய்ச் சேர ஆர்வமுள்ள இளைஞர் கூட்டம் உங்களுக்கு உதவ வராமலா போய்விடும்....யோசிங்க பாஸ்! ///
இப்படிதான் உசுப்பேத்துவாங்க, ஆனா ஒண்ணும் நடக்காது. கவனமா இருங்க!

Anonymous said...

Dear Savukku,
Extremely good piece. SUN TV is an evil empire. It's an hydra headed monster. The tragedy is even the majority of intellectuals, media people and middle class did not so far realised SUN TV's true potential to cause havoc and their evil designs. Unless we destroy SUN TV's monopoly there is no hope for Tamil Nadu's media and politics. RMR Ramesh is not head of SUN TV news. He is incharge of Dinakaran and he has nothing to do with SUN TV. He is Kalanidhi Maran's henchman.

Anonymous said...

savukkadi boss

ravikumar said...

I keep reading ur articles really u r brave and pin pointing the issues

Anonymous said...

வரும் களத்தின் வீச்சில் உங்கள் பங்கு மட்டுமல்ல பொறுப்பும் மிகஉம அதிகரிக்கிறது .நிதானமாக செயல்படுங்கள் ... உணர்ச்சி வேகத்தில் எதையும் செய்தீர் என்றால் ஏமாற்றம் அடைவீர் ..ஏனெனில் நமது தமிழர் பெருமை அப்படி...நம்பியவரை என்றைக்கும் நாம் காபற்றியதில்லை ... நன்றி

SATHISH said...

நல்ல பதிவு , ஆனால் சிங்கள கைக்கூலி காவல்துறையிடமும், சிங்கள துணை பிரதமரிடமும் போய் இதை நீங்கள் எதிர்பார்ப்பது நகைப்புக்குரியது. தொடரட்டும் சவுக்கின் விளாசல்கள். என்றும் உங்களுடன், சதீஷ்-நான் தமிழன்

Anonymous said...

தராசு ஷ்யாம், நக்கீரன் கோபால், நெற்றிக்கண் மணி....No please, try to be still more aggressive and different. I don't know why someone mentioned "நக்கீரன் கோபால்"...He is only fit for selling Gopal Tooth powder!!!!

Anonymous said...

My sincere request to every reader is please propoganda and promote the www.savukku.net website in all public forums and public websites like Facebook,orkut, twitter and any public forum you come across. I already posted it in Facebook and many of my friends are frequent visitors to this site.

Only when people read these facts they will understand and do justice while voting in the next election.

dearbalaji said...

தினமலரில் வந்த செய்தியா பார்த்த ஹோட்டல் க்கு முன்னாடி வண்டி பின்னாடி எடுக்கும் பொது மோதிட்தாலே தகராறு நடந்த மாதிரி இல்ல போட்டு இருந்தாங்க. அட போங்கடா !
சாக்கடை பக்கத்தில் தானே சாக்ஸ் இருக்கு எல்லாமே ஒரே நாத்தம் தான்.....

Anonymous said...

துவைக்காத சாக்ஸும், கூவம் நதியும்!!!

THANJAI MANO

Anonymous said...

tamil nadu WHOLE MEDIA totally they do fraud work.they cheating whole innoscent TAMIL PEOPLE. well savukku,you be care fully. appreciate you.

Anonymous said...

சவுக்கு பணி சிறக்க வாழ்த்துக்கள்....
தமிழ்நாடு சிறக்க தேவை இதுபோன்ற எழுத்துக்கள்.
ஆட்சி மாற்றம் தேவை...

Anonymous said...

தோழரே நீங்கள் எதிர்கட்சிகளின் ஆதரவை பெற முயலுங்கள்.
அரசியல் பாதுகாப்பு மிக முக்கியம் தோழரே.

Post a Comment