இத்தனை நாட்களாக நிழல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த ஜாபர் சேட், களத்துக்கு வந்து விட்டார். களத்துக்கு வந்த ஜாபரை, சவுக்கும், தமிழக மக்கள் உரிமைக் கழகமும் வருக வருகவென வரவேற்கிறது. நிழல் யுத்தம் நடத்துவது எங்களுக்கும் பிடிக்கவில்லை சார். வீரனுக்கு அழகு, நேரடி யுத்தம் செய்வது. அந்த வகையில் களத்துக்கு வந்த ஜாபர் சேட் அவர்களை வீரன் என்று சொல்லலாம் தான்.
சட்டவிரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்பு செய்கிறார் என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தி கொடுத்த புகாரும், இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த நேர்காணல்களும், தனக்கு பெரும் மன உளைச்சலும், அவமானமும் ஏற்பட்டிருப்பதாகவும் இதற்கு ஈடாக தனக்கு 50 லட்ச ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜாபர் சேட். (என்ன ஜாபர் சார், உங்க மானத்தோட விலை வெறும் 50 லட்சம் தானா ? அப்போ 60 லட்ச ரூபா கொடுத்தா மானத்த வித்துட்டு மானங்கெட்ட மனிதரா ஆயிடுவீங்களா ?)
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் ஜாபர்சேட்டின் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்பு தொடர்பாக புகழேந்தி ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கவும், புகார் கொடுக்கவும், எட்டு வார காலத்திற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவை நீங்கள் மதிக்கிறீர்களா ஜாபர் ? நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும், நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே நுழைந்து தாக்குவதற்கு காரணமானவர்கள் நீங்களும் உங்கள் உடன் பிறவா சகோதரர் ராதாகிருஷ்ண நாயுடுவும் தானே ? இப்போது எதற்காக நீதிமன்றத்திற்கு வருகிறீர்கள். உங்களுக்கு தேவையென்றால் நீதிமன்றம் வருவீர்கள். தேவையில்லாத போது, நீதிபதிகளையே தாக்குவீர்கள். அப்படித் தானே.
புகழேந்தி சொல்வது இருக்கட்டும். இப்போது சவுக்கு சொல்கிறது. சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்புக்கு காரணம் நீங்கள் தான். இந்த சட்டவிரோத ஒட்டுக் கேட்பு இன்னும் நடந்து கொண்டிருக்கிறது. உளவுத்துறை தலைவர் என்ற முறையில் இப்போது நடைபெறும் சட்டவிரோத தொலைபேசி ஒட்டுக் கேட்புக்கு காரணம் ஜாபர்சேட். ஜாபர்சேட். ஜாபர்சேட். போதுமா கோர்ட்ல சொல்றது போலவே மூன்று முறை சொல்லியாச்சு. உரிய விசாரணை நடத்தாமல் நீங்கள் காரணம் இல்லை என்று சொல்வது ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வழக்கின் மூலமான இரண்டு நன்மைகள். ஒன்று, 50 லட்ச ரூபாய்க்கு நீதிமன்ற கட்டணமாக குறைந்தது 50 ஆயிரம் ரூபாய் கட்ட வேண்டும். மூத்த வழக்கறிஞர் ஆஜரானால், ஒரு முறை ஆஜராவதற்கு ஒரு லட்சம் முதல் ஐந்து லட்சம் வரை செலவாகும். இதையும் ரகசிய நிதியிலிருந்துதான் எடுத்துக் கட்டியிருப்பீர்கள் என்றாலும், உங்களுக்கு இப்படி ஒரு செலவை இழுத்து விட்டதில், சவுக்குக்கு அலாதி இன்பம்.
அடுத்து, சட்ட விரோதமாக தொலைபேசி ஒட்டுக் கேட்கப் படுகிறது. இதற்கு காரணம் உளவுத்துறை ஐஜி ஜாபர் சேட். ரகசிய நிதியை கையாடல் செய்திருக்கிறார் என்று ஜாபர் சேட் மீது புகார். இந்த புகார் என்ன ஆயிற்று என்று தமிழக மக்கள் உரிமைக் கழகத்திற்கு இது நாள் வரை தெரியவில்லை.
இப்போது ஜாபர் சேட் தாக்கல் செய்திருக்கும் அபிடவிட் வாயிலாக அறிந்த செய்தி என்னவென்றால், ஜாபர் சேட்டைப் பற்றி கொடுத்த புகாரின் மீது கருத்து சொல்லுமாறு, ஜாபர்சேட்டிடமே கேட்டிருக்கிறார் உள்துறை செயலாளர் மாலதி. உலகில் எங்கேயாவது எவ்வித விசாரணையும் நடத்தாமல் குற்றம் சாட்டப் பட்ட நபரிடம் கருத்து கேட்டு புகாரை மூடுவதை கேள்விப் பட்டிருக்கிறீர்களா ? இப்படித்தான் நடந்துள்ளது என்று முதல் முறையாக ஒரு ஆவணம் கிடைத்துள்ளது. இது ஜாபர் சேட் மீது வழக்கு தொடர பயன்படும்.
அடுத்து ஜாபர் சேட் தனது அபிடவிட்டில் என்னென்ற சொல்லியிருக்கிறார் என்பதை ஒவ்வொன்றாக பார்ப்போம்.
1986ல் பணியில் சேர்ந்த ஜாபர் சேட் 23 ஆண்டுகளாக அப்பழுக்கற்ற பணி ஆற்றியிருக்கிறாராம். ஆளும் வர்க்கத்திற்கு அல்லக்கையாக இருந்தால் அப்பழுக்கற்ற அரசு ஊழியராகத்தான் இருப்பீர்கள். உமாசங்கர் போல ஊழலை வெளியிட்டால் இடைநீக்கம் செய்யப் படுவீர்கள். நீங்கள்தான் கருணாநிதி கைதிலும் முக்கியப் பங்கு வகித்து விட்டு கருணாநிதிக்கே நெருக்கமாக இருக்கும் சூட்சுமம் அறிந்தவராயிற்றே.
1999ல் இவருக்கு முதல்வர் பதக்கம் வழங்கப் பட்டதாம். சார் 1999 ல நீங்க கருணாநிதியோட செக்யூரிட்டி எஸ்.பி. உங்களுக்கு மெடல் குடுக்காம வேற யாருக்காவது கொடுத்தா விட்டுருவீங்களா நீங்க. அது இல்லாமல், ஐபிஎஸ் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தீர்களேயானால் அதில் இருக்கும் அத்தனை பேருக்கும் இந்த மெடல் கொடுக்கப் பட்டிருக்கும். என்னமோ உங்களுக்கு மட்டும் தான் கொடுத்திருக்கறது மாதிரி பீத்திக்கிறீங்க ?
2006ல் இவருக்கு ஜனாதிபதி பதக்கம் வழங்கப் பட்டதாம். சவுக்கு வாசகர்களே. இந்த ஜனாதிபதி பதக்கம் எல்லாம் ஐபிஎஸ் ல் இருக்கும் அனைவருக்குமே பாரபட்சம் பார்க்காமல் வழங்கப் படுவது. லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நிலுவையில் இருந்தால் மட்டுமே வழங்கப் படமாட்டாது. இந்த நபர் கோர்ட்டை ஏமாற்றுவதற்காக என்னமோ இந்தியாவுலயே இவுருதான் பெரிய அப்பாடக்கரு மாதிரி சீன் போட்றாரு.
மாநில உளவுத் துறைக்கு தலைவர் பொறுப்பேற்றதும் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக வைத்திருக்கிறேன் என்று கூறுகிறார் ஜாபர் சேட். தமிழகம் எப்படி அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்பதும், உளவுத்துறையில் நீங்கள் ஆற்றிய பணி என்ன என்பதையும், உங்கள் பாத்ரூம் வரையில் வந்து சவுக்கு எழுதியிருக்கிறது.
அவுட்சார் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தோடு இணைந்து நீங்கள் சட்டவிரோத ஒட்டுக் கேட்பை செய்து வருவதாக கொடுத்த புகாரில் உண்மை இல்லை என்று கூறியிருக்கிறீர்கள். இந்த விபரங்கள் அனைத்தும் அவுட்சார் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் ஒரு விரிவான விசாரணை நடத்திய பிறகே முடிவு செய்ய இயலும். விசாரணையே நடத்தாமல் நீங்கள் இல்லை இல்லை என்று கூப்பாடு போட்டாலும் ஏற்பதற்கில்லை.
ஆடிட் செய்யப் படாத ரகசிய நிதியிலிருந்து நீங்கள் இந்நிறுவனத்திற்கு நிதி வழங்குகிறீர்கள் என்ற குற்றச் சாட்டும் ரகசிய நிதியின் கணக்கு வழக்குகளை ஒரு நீதிபதி தலைமையிலான குழு விசாரித்த பிறகுதான் எதற்கு எவ்வளவு தொகை ரகசிய நிதியிலிருந்து செலவிடப் பட்டிருக்கிறது என்பது தெரிய வரும்.
மிக நேர்மையாகவும், ஒழுக்கமாகவும் பணி செய்து வரும் ஜாபர் சேட்டுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இந்தப் புகாரை புகழேந்தி தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார் ஜாபர் சேட். இவரது ஒழுக்கத்திற்கு ஒரு உதாரணத்தைப் பார்ப்போம்.
சமீபத்தில் கோவையில் திமுக பொதுக்கூட்டம் நடைபெற்ற தல்லவா ? அந்தக் கூட்டம் நடந்து கொண்டிருக்கையில், திடீரென்று ஜாபர் சேட் காணாமல் போகிறார். ஒன்றரை மணி நேரத்திற்கும் அதிகமாக காணவில்லை. ஒன்றரை மணி நேரம் கழித்து ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலுக்கு வருகை தருகிறார்.
அப்போது நிற்க முடியாத அளவுக்கு ‘நிதானத்தில்‘ இருக்கிறார். பிறகு அந்த ஹோட்டலை விட்டு கிளம்பி, தொண்டாமுத்தூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டுக்கு செல்கிறார். அந்த பண்ணை வீட்டில் ஒரு ‘ரேவ்‘ பார்ட்டி நடக்கிறது. அங்கே வேறு என்ன என்ன நடந்தது என்பதும் சவுக்குக்கு தெரியும் என்றாலும் நாகரீகம் கருதி அதைச் சொல்ல விரும்பவில்லை. இரவு முழுவதும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்.
பொழுது விடிந்ததும் ஜாபரால் எழுந்திருக்கவே முடியவில்லை. பயங்கர ஹேங் ஓவர். (என்ன சார் ஐபிஎஸ் படிச்சிருக்கீங்க. சரக்கு சரியா மிக்சிங் பண்ணத் தெரியலையே ? சரியா மிக்சிங் பண்ணியிருந்தா ஹேங் ஓவர் வந்துருக்காதுல்ல ?) காலை 11.30 வரை ஜாபர் எழுந்திருக்கவில்லை. தொடர்ச்சியாக வந்த தொலைபேசி அழைப்புகளையும் அட்டென்ட் செய்யவில்லை. மதியம் 1.30க்கு முதல்வரின் விமானம் கிளம்புகிறது என்பதால் வேறு வழியின்றி, ஜாபரை உலுக்கி, எழுப்பி, தொண்டாமுத்தூர் பண்ணை வீட்டிலிருந்து அனுப்பி வைத்தார்கள் என்பதுதான் உளவுத் துறை தகவல்.
ஜாபர் சார், நீங்கள் ஒரே நாளில் மலையாளம் கற்றுக் கொள்ள எடுத்த முயற்சிகளும் சவுக்குக்கு தெரியும். ஆனால் நாகரீகம் கருதி இதையெல்லாம் சொல்லவில்லை. உங்கள் கதையை பேசினால் நாறி விடும். அதனால் நேர்மையான ஒழுக்கமான அதிகாரி என்று நீதிமன்ற அபிடவிட்டில் புளுகுவதை நிறுத்துங்கள்.
இதற்கு அடுத்து, ஜாபர் டீம் இறங்கிய களம் கல்வி. கலவி இல்ல சார் கல்வி. கல்வி. கடந்த ஆண்டைப் போல இல்லாமல் பள்ளிக் கல்வி கட்டணங்களை சீரமைக்கும் கோவிந்தராஜன் குழுவின் அறிக்கை அடுத்த ஆண்டு முதல் அமல்படுத்தப் படும் என்று ஒரு குழுப்பம் வந்ததல்லவா ? அந்த குழப்பத்தின் பின்னால் இருப்பது ஜாபரும், போலிப் பாதிரியும். இவர்கள் இருவரும், கட்டண விகிதங்களை உயர்த்தி கோவிந்தராஜன் குழுவின் பரிந்துரைகளை அடுத்த ஆண்டு முதல் செய்ய ஏற்பாடு செய்கிறோம் என்று கூறி, சென்னை மற்றும் தமிழகமெங்கும் உள்ள மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் முதலாளிகளிடம் ஒரு பெரும் தொகையை வசூல் செய்துள்ளனர். இந்த வசூலுக்கு தலைமைப் பொறுப்பேற்றிருப்பது, ஒரு பெண் பெயரில் இயங்கும் ஒரு பெரிய கல்விக் குழுமத்தின் முதலாளி.
இவ்வாறு வசூல் செய்து இவர்கள் கொடுத்தவுடன், அடுத்த ஆண்டு முதலே புதிய கல்விக் கட்டணம். இந்த ஆண்டு பழைய கட்டணம் என்று அறிவிப்பு வந்தது. தேர்தல் ஆண்டில் பெற்றோரின் அதிருப்தியை இது அதிகரிக்கும் என்பதால், அந்தர் பல்டி அடித்தார் கருணாநிதி. இல்லை இல்லை. கோவிந்தராஜன் குழு பரிந்துரைப் படிதான் இந்த ஆண்டும் கல்விக் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்று விளக்கம் வந்தது.
சரி. பணம் கொடுத்தவன் சும்மா இருப்பானா ? பணத்தை திருப்பி கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இப்போது போலிப் பாதிரியும், ஜாபரும் பணத்தை எப்படி திருப்பிக் கொடுப்பது என்று விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதற்கு நடுவே, இந்த வசூல் வேட்டை நடக்கும் போது, போலிப் பாதிரி ஜாபருக்கு தெரியாமல் ஒரு ‘உள் கட்டிங்‘ போட்டு விட்டதாக வேறு ஒரு உபரித் தகவல்.
சட்டவிரோத ஒட்டுக் கேட்பை ஜாபர் சேட் செய்கிறார் என்று புகார் தெரிவித்திருந்ததால் பல்வேறு அதிகாரிகளும் இது உண்மையா என்று ஜாபர் சேட்டிடம் கேட்கிறார்களாம். இதனால் அவருக்கு அவமானமாக போய் விட்டதாம். திருச்சிக்கு மாறுதல் வந்ததையே தாங்கிக் கொள்ள முடியாமல் முத்துக்கருப்பன் காலில் விழுந்து கதறியவர்தானே நீங்கள் ? நீங்களா மான அவமானங்களைப் பற்றிப் பேசுவது ?
அரசு அனுமதி இல்லாமல் ஒருவருடைய தொலைபேசியையும் ஒட்டுக் கேட்க முடியாது என்றும், இது பொய்ப்புகார் என்றும் தெரிவித்திருக்கிறார் ஜாபர். அரசு அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்பு நடக்கிறது என்பதுதானே புகார் ? அரசு அனுமதி பெற்று உளவுத் துறை பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், அரசியல் பிரமுகர்கள் தொலைபேசிகளை ஒட்டுக் கேட்டால், இந்த ஆட்சியே கவிழ்ந்து விடும். நீங்கள் சட்டவிரோதமாக ஒட்டுக் கேட்கிறீர்கள் என்பதுதானே புகார் ?
சீமான் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததற்கான காரணம் என்ன ? நீங்கள் சீமானின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டு, பதிவு செய்து, சீமான் கருணாநிதியை தமிழின துரோகி என்று பேசியதை கருணாநிதியிடம் போட்டுக் காட்டியதால் வந்த கோபம் தானே தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ந்ததற்கான காரணம் ?
ஜாபர்சேட்டிடம் பணம் பறிப்பதற்காகவே புகழேந்தி இப்படிப் பட்ட ஒரு புகாரை தெரிவித்திருப்பதாக கூறியிருக்கிறார்.
ஊரில் உள்ள அனைவரையும் உங்களைப் போலவே கீழ்த்தரமான புத்தி உடையவர் என்று தயவு செய்து நினைக்காதீர்கள். புகழேந்தியைப் பற்றி உலகத்திற்கும் தெரியும், நீதிபதிகளுக்கும் தெரியும்.
புகழேந்தி உங்களைப் போல ஈஞ்சம் பாக்கத்தில் 3000 சதுர அடிக்கு வீட்டு மனை வைத்துக் கொண்டு, வீட்டு வசதி வாரியத்தில் சொந்த வீடே இல்லை என்று பொய் சொல்லி அரசை ஏமாற்றி, திருவான்மியூரில் அடுக்கு மாளிகையை கட்டி விற்கவில்லை.
க்ளாசிக் ஃபார்ம்சில் நீங்கள் வைத்திருக்கும் 3000 சதுர அடி மனை, இப்போது சிக்கலை ஏற்படுத்தப் போகிறது என்று, அவசர அவசரமாக 65 லட்ச ரூபாய்கு அதை விற்றுத் தருமாறு, விஸ்வநாதன் என்ற ப்ரோக்கரிடம் கெஞ்சிக் கொண்டிருக்கவில்லை.
புகழேந்தி உங்களைப் போல ரகசிய நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாய்க்கு சீன வாஸ்து மீனை வாங்கி அறையில் வைத்துக் கொண்டு, அந்த மீன் தனது பதவியை காப்பாற்றும் என்று நம்பிக் கொண்டிருக்கவில்லை.
புகழேந்தி உங்களைப் போல முக்கிய பிரமுகர்கள், தங்களுக்கு நெருக்கமான பெண்களுடன் நடத்தும் உரையாடலை பதிவு செய்து அதை கருணாநிதியிடம் போட்டுக் காட்டி, அதன் மூலம் தன் பதவியை தக்கவைத்துக் கொண்டவர் இல்லை.
புகழேந்தி உங்களைப் போல ஒரே நாளில் மலையாளம் கற்றுக் கொள்ள முயற்சி செய்தவர் இல்லை.
புகழேந்தி உங்களைப் போல 2001ல் திமுக ஆட்சி போனதும் முத்துக்கருப்பன் காலில் விழுந்து ஜெயலலிதா மூலமாக சென்னையில் போஸ்டிங் வாங்கிக் கொண்டு, மீண்டும் திமுக ஆட்சி வந்ததும் திமுக வட்டச் செயலாளர் போல நடந்து கொள்ள வில்லை. முத்துக்கருப்பன் முதுகில் குத்தவும் இல்லை.
புகழேந்தி உங்களைப் போல முதல்வரின் பாதுகாப்பு வேலையை விட்டு விட்டு, தொண்டாமுத்தூரில் ரேவ் பார்ட்டியில் கலந்து கொண்டு ஹேங் ஓவரில் 11.30 மணி வரை உறங்கவில்லை.
புகழேந்தி தன்னுடைய பதவியை காப்பாற்றிக் கொள்வதற்காக இன்ஸ்பெக்டர் பாண்டியனிடம் ‘என்னைப் பற்றி அய்யாவிடம் சொல்லு‘ என்று பாண்டியன் தயவிலேயே வாழ்க்கையை நடத்தி விட்டு, பாண்டியனுக்கு இரண்டு கோடி வீட்டு மனை கிடைத்ததும், அந்த தகவலை மருத்துவர் ராமதாசுக்கு சொல்லவில்லை.
புகழேந்தி தன்னைப் பற்றி புகழ்ந்து எழுதும் படி ஒரு வார இதழின் நெருக்கடியை பயன்படுத்தி நாலு பக்கத்திற்கு ஒரு கடைந்தெடுத்த அயோக்கியனை வைத்து சுய தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை.
நீங்கள் சொன்ன மற்றவற்றையெல்லாம் பொறுத்துக் கொள்ளலாம். புகழேந்தி உங்களிடம் பணம் பறிப்பதற்காக இந்தப் புகாரை கொடுத்துள்ளார் என்று சொன்னதுதான் இருப்பதிலேயே அயோக்கியத்தனம். அதுவும், புகழேந்திக்கு உங்கள் நண்பர் மூலமாக ஒரு பெரிய தொகையை நீங்கள் லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து, அது தோல்வியடைந்த பிறகு இந்தக் குற்றச் சாட்டை சொல்வது, கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.
இந்த அயோக்கியத்தனத்துக்கான விலையை நீங்கள் கொடுக்க வேண்டி வரும் ஜாபர் சேட். பொறுத்திருந்து பாருங்கள். தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகளை.
சவுக்கு
33 comments:
Sabash Savukku.
சூடு பிடிச்சாச்சு ! ! ! வரும் பதிவுகளுக்காக காத்திருக்கிறோம் ! !
very good brother. i am really very happy now....
உங்களின் முயற்சி வெற்றி பெற பலருடன் சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன்.....
சவுக்கின் புலனாய்வு சூப்பர்
சவுக்கின் "உண்மை" இலக்கு வெற்றிபெர
வாழ்த்துக்கள்
இப்படிக்கு
வாழ்த்த மட்டுமே திரானி உள்ள
உங்கள் கடைக்கோடி நண்பன்
We only fear that you should not get attacked or injured in any attack.
Always go in a crowd and with people you trust.
This is a fight to the finish with corrupt officials
Good Luck
robin
சுளீர் சுளீர் சுளீர்... கலக்குங்கள் சவுக்கு. உங்களைப்போல ஏனைய ஊடகவியலாளர்களும் இருந்துவிட்டால் நாட்டில் ஊழல் எங்கே இருக்கப்போகிறது?
O my god. Its going very serious. All corrupted should bring before the Justice.
Very brave act by Savukku and Mr. Pugalendhi.
Congrats.
Vibin
என்ன இப்போழுது ஒரு கமெண்டையும் காணோம்.
காவல்துறை இந்த வெப்சைட்டை உற்று கவனிக்கிறது என்பதாலா?
hello savukku.this is too much.y didnt mr.pukazhenthi attend the hearing?.if he is really genuine and has evidence to defend his complaints against Jaffer shait.he should have appeared in the court?.but he didnt do it.really it is confusing people.y savukku is targetting particular persons?.if savukku and pro-savukku people are really bold enough or having ghutts,they should call for press meet and bring all the 'dark room' secrets and shaddy things.instead,dont try to fool public with some personal grudges and 'expectations'.this cant be sustained for ever.
now,its the time to prove ur 'mr.clean image'and disclose all the secrets and bring all the shaddy things to light.if u fail to do this,then ur real face will be lit up and shown to the public.
now,what u r going to do Mr.Savukku and co.,?
ஒரு வேலை சாப்பிட்டுக்கே வழி இல்லாமல் எத்தனை மனிதர்கள் இங்கே ...
உங்களது பதிவுகள் இன்னும் ஏராளமான வாசர்களை சென்றடைய http://writzy.com/tamil/ ல் உங்கள் பதிவுகளை இணையுங்கள்...
goverment side-la evanaavathu ithai padikkiraanaaa illaya? Enna oru maanangketta thanamaa irukku. Iththanai time ezhuthiyum entha nadavadikkayume edukka maattanungalaaa??
great! keep your work..
we all here to support you
Kalai
//என்ன ஜாபர் சார், உங்க மானத்தோட விலை வெறும் 50 லட்சம் தானா ? அப்போ 60 லட்ச ரூபா கொடுத்தா மானத்த வித்துட்டு மானங்கெட்ட மனிதரா ஆயிடுவீங்களா//
சரிங்க விக்கிறதுணு ஆகியாச்சு FLAT டோட சேர்த்து மானத்தைும் விக்க முடியுமானு பாக்குராரு. ஆனாலும் அவருக்கு 60 லட்ச்சம் கம்மி தான், IPS எல்லாம் படிச்சிருக்ாரு
Thanks,
Kumar
உங்கள் புலனாய்வு கட்டுரைகள் நன்றாக இருக்கிறது.
சே குவேராவை போலே உங்கள் ஆய்வுகள் எல்லா ஊழல் அதிகாரிகளையும் எதிர்த்து எழுத வேண்டும். ஒரு வட்டத்துக்குள் எழுத ஆரம்பித்தால் அது இரு நபர்களின் தனி மனித வசை பாடாக மாறி விடும்.
NATTIL PALA SAVUKKUGAL UNDU AVARGAL INAINDHAAL INDIA UTOPIA AAGIVIDUM.SAVUKKUGALAI THIRATTUVOM.
நண்பர் ராம்பின் சொல்வது போல எப்போதும் கூட்ட்த்தோடையே போங்கள். தனியாக இருக்காதீர்கள். இப்போது நடப்பது, சிங்கள கொலைகாரகள், இஸ்ரேலின் மொசாட், இவர்களைவிட பயங்கரமான அயோக்கியர்களின் அரசு. அதுவும் நீங்கள் கை வைத்திருப்பதி எந்த ஆட்சி வந்தாலும் மாறாத அதிகார வர்க்கம். பார்த்து ஜாக்கிரைதையாக இருங்கள். உங்கள் பதிவுகள் அருமை.
Weldone Savukku. keep it up. ananth bangalore
சகோதரர் புகழேந்தி அவர்களும், சகோதரர் சவுக்கு அவர்களும் இந்த சூழ்நிலையில் மிகவும் கவனமாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் இந்த நாற்றம்பிடித்த காவல்துறையின் அடக்குமுறைகளை தாங்கள் ஏற்கனவே சந்தித்துள்ளீர்கள். ஆகையால் அவர்கள் இன்னும் மிகவும் வெறுப்பு கொண்டு எந்தொரு மிகவும் மோசமான இழிசெயலையும் செய்யத் தயங்க மாட்டார்கள். ஆளும் இந்த மன்னராட்சியின் ஆதரவில் அவர்கள் தங்களுக்கு எந்தொரு இன்னல்களையும் செய்யத் தயங்க மாட்டார்கள். அதனால் உங்களை மிகவும் கவனமாக இருக்கும்படி வேண்டும் இந்த நேரத்தில், உங்களுக்கு எதிரான தீய சக்திகளுக்கு ஒரு விசயத்தையும் இங்கே உறுதிப்படுத்துகிறேன். "சவுக்கையோ அல்லது சவுக்கைச் சார்ந்தவர்களையோ" துன்புறுத்தி அதன்மூலம் உங்கள் ஊழல்கள் வெளி உலகிற்கு தெரியாமல் செய்துவிடலாம் என கனவு காணாதீர்கள். ஆயிரமாயிரம் சவுக்குகள் உதயமாகும். சாட்டை சுழன்று கொண்டே இருக்கும்.
உறுதியுடன் Singam.
super investication.. continue.....mathi
அதுசரி சவுக்கு, நீங்கள் தமிழ்நாட்டிலிருந்து சாட்டை சுற்றுகிறிர்களே இது சாத்தியமோ என்கிற சந்தேகம் எனக்கிருக்கிறது, உங்களுக்கும் எதோ பலமான பின்னணி இருக்கத்தான் வேண்டும், எனக்கு இன்னும் சந்தேகம் தீரவில்லை ,தயவுசெய்து யாராவது க்ளியர்பண்ணுங்க சாமி தலைவெடிக்கப்பொகுது,
super savukku..Wish you best of luck
ஒரே நாளில் மலையாளம் கற்றுக் கொள்ள எடுத்த முயற்சி............
வரிகளில் அனல் பறக்குது சூப்பர் அப்பு
செம சூடு சவுக்கு..!
ராதாகிருட்டிண நாயுடு தற்போது எந்த பணியில் இருக்கிறார்,
We are With You , One day Whole Tamil Nadu With You. Form a Lawer Associtation do your Work More.
We Expect From you Lot.
but we are able to see many new poses of Jabber sait. Tell him tochange his name first. Bloddy bastard, he's a karumpulli. He has cheated many family girls as well as. Why don't get any videos to be published.
manal kollya paththiyum koncham investiage pannungappa
Dear Sir,
Regarding Jaffer ur view & vission is make me exited!!! how you fallowing??? you are taking huge risk to bring the reality....... congrats for you......
Prem
all the best savukku and hole the team
To the Anonymous who left the following comment: //Savukku blogs are written by a bunch of frustrated guys...Shame to all Tamil perverts! //
Do you know that these ramblings of 'frustrated' guys are untrue? It is a shame on corrupt people and their supporters like you! Savukku is tamil wikileak! Great Work Savukku! Keep up good work!
அன்பு சவுக்கு,
துரோகம் என்றும் ஜெயிப்பதில்லை. என்றும் உங்களுடன், சதீஷ்...
ஓடாத மானும், போராடாத மனிதனும் வரலாற்று பிழை - மேதகு வே.பிரபாகரன்.
To the Anonymous who left the following comment: //Savukku blogs are written by a bunch of frustrated guys...Shame to all Tamil perverts! //
First reveal your identity culprit. currupted officials have to be eliminated.
Post a Comment