ஊழல் செய்யும் அரசியல் வாதிகளை விட, இந்த அதிகாரிகள், இச்சமுதாயத்தின் புற்று நோய் என்று சவுக்கு எப்போதுமே சொல்லி வந்திருக்கிறது.
ஊழல் செய்யும் அரசியல் வாதிகள், ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தலித்துகள் வீட்டிலும், சேரிகளிலும், ஏழைகள் வீட்டுக்கும் வந்தே ஆக வேண்டும். அவர்களை சில சமயங்களிலாவது, கேடும் கோபம் கொண்டு, மக்கள் நிராகரிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த அதிகாரிகளுக்கு எந்த தண்டனையும் கிடையாது. பச்சோந்திகள் போல பதவிக்கு வரும் ஆட்சியாளர்களுக்கு வால் பிடித்து தங்கள் பிழைப்புக்கு எந்த விதத்திலும் குந்தகம் விளையாமல் பார்த்துக் கொள்கிறார்கள்.
தமிழகத்தில் பெரிய அளவில் அதிகாரிகள் மட்டத்தில் ஊழல் தொடங்கியது 1991க்குப் பிறகு தான். அதற்கு முன்னாலும் ஊழல் இருந்ததென்றாலும், சகட்டு மேனிக்கு சகல மட்டத்திலும் ஊழல் புரையோடிப் போனது 1991 முதல் தான்.
பஞ்சாயத்துக்காக வாங்கும் தொலைக்காட்சி வாங்குவதில் ஊழல் என்றால், நிலக்கரி இறக்குமதி செய்வதில் ஊழல், தொட்டில் குழந்தைக்கு மோதிரம் வழங்குவதில் தொடங்கி சுடுகாட்டுக் கூரை வரை ஊழல் வானளாவிக் கிடந்தது.
அன்று தொடங்கிய ஊழல் இன்று கொடி கட்டிப் பறக்கிறது. ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும், பெரும்பாலானவர்கள் இன்று அதிகார மட்டத்தில் அதிகாரம் செலுத்திக் கொண்டு இருக்கும் அவலம் இருக்கத் தான் செய்கிறது.
சி.ராமச்சந்திரன் என்று என்று ஒரு ஐஏஎஸ் அதிகாரி இருந்தார். இவருக்கு ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் 4 பதவி நீட்டிப்புகள் கொடுக்கப் பட்டன. 1996ல் கருணாநிதி ஆட்சிக்கு வந்தவுடன், முதலில் பணி இடை நீக்கம் செய்யப் பட்ட ஐஏஎஸ் அதிகாரி இவர்தான்.
இவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் 15க்கும் மேற்பட்ட வழக்குகள் 1996ல் பதியப் பட்டன. சிபி.சிஐடியில் ஒரு 5 வழக்குகள். இவர் மீத இத்தனை வழக்குகள் பதியப்பட்டதற்கு காரணம், மனிதர் கையெழுத்துப் போட சளைக்க மாட்டார். யாராவது ஒரு நாள் லீவ் வேண்டுமென்று கேட்டால் கூட பணம் கேட்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்களில் இவரைப் பற்றி நகைச்சுவையாக சொல்வதுண்டு.
திமுக ஆட்சியில் இவர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
இன்று இந்த சி.ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டு இருக்கிறார் தெரியுமா ?
உமாசங்கர் என்ற ஐஏஎஸ் அதிகாரி, திடீரென்று பணி இடை நீக்கம் செய்யப் பட்டார். அவர் இடை நீக்கம் செய்யப் பட்டதற்கு காரணம் மாறன் சகோதரர்களின் எஸ்சிவி நிறுவனம்தான் என்று பரவலாக பேசப்பபடுகிறது.
ஆனால் உண்மையான மதுரையில் உள்ள அதிகார மையம் தான். எல்காட்டும், நியூ எரா டெக்னாலஜிஸ் என்ற தனியார் நிறுவனமும் கூட்டு சேர்ந்து “எல்நெட்” என்ற புதிய நிறுவனத்தை கூட்டாக உருவாக்குகின்றன. இந்த எல்நெட் நிறுவனம், ”ஈடிஎல்” என்ற கட்டுமான நிறுவனத்தை புதிதாக, தனியாக உருவாக்குகிறது. உருவாக்கி, எல்நெட் நிறுவனத்தின் சொத்துக்களை அடமானம் வைத்து, ஏறக்குறைய 700 கோடிகளை கபளீகரம் செய்து விட்டு காணாமல் போகிறது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உமாசங்கரின் சாதிச் சான்றிதழ் கேள்விக் குறியாக்கப் படுகிறது. அவர் பணி இடைநீக்கம் செய்யப் படுகிறார்.
இந்த எல்நெட் நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினராக இருப்பவர் ”சி.ராமச்சந்திரன்”. மதுரை அதிகார மையம் காணாமல் போன அந்த நிறுவனத்தின் 60 சதவிகித பங்குகளை வைத்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எப்படி இருக்கிறது ?
2001ல் அதிமுக ஆட்சிக்கு வந்த உடன், திமுக அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மேல் லஞ்ச ஒழிப்புத் துறையால் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இந்த வழக்குகளில் மிகத் தீவிரம் காட்டி, வேகமாக இறுதி அறிக்கையை சமர்ப்பிக்காத புலனாய்வு அதிகாரிகளை கடுமையாக சாடியவர் கே.ராதாகிருஷ்ணன்.
அப்போது ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் முக்கியமாக கவனம் செலுத்தப் பட்ட வழக்கு, ஆற்காடு வீராச்சாமி மீதான சொத்துக் குவிப்பு வழக்கு. இந்த வழக்கில், ஆற்காட்டாரின் தம்பி தேவராஜன் எழுபதுகள் முதல் தொடர்ந்து வருமான வரி செலுத்தி வந்த கணக்குகளால் இவர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லை. இதனால், ஆற்காட்டார் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய இயலாது என்று அந்த புலனாய்வு அதிகாரி கூறி விட்டார்.
இந்த ராதாகிருஷ்ணன், தினமும் இரண்டு முறை அந்த அதிகாரியை தனது அறைக்கு அழைப்பார். என்ன ஆச்சு குற்றப் பத்திரிக்கை என்று கேட்பார். அந்த அதிகாரி சார் எவிடென்ஸ் இல்ல சார் என்பா. ஒழுங்கா விசாரிங்க. எவிடென்ஸ் கிடைக்கும் என்பார். இப்படியே 2006 வரை போனது.
ஒரு கட்டத்தில் ராதாகிருஷ்ணன் மற்றும், நாஞ்சில் குமரன் தொல்லை பொறுக்க முடியாமல் அந்த அதிகாரி, குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இருப்பது போல ஒரு அறிக்கையை தருகிறார். ஆட்சி முடிய இரண்டு மாதங்களுக்கு முன் அந்த அறிக்கை தலைமைச் செயலகத்துக்கு அனுப்பப் படுகிறது.
இந்த ராதாகிருஷ்ணனுக்கு, இதே ஆற்காடு வீராச்சாமி திமுக ஆட்சியில் சென்னை மாநகர காவல் ஆணையாளர் பதவி வாங்கித் தருகிறார். இவர்கள் இருவருக்குமான ஒரே இணைப்புப் பாலம் ”நாயுடு என்ற சாதி”
நாஞ்சில் குமரன் லஞ்ச ஒழிப்புத் தறை இயக்குநராக இருந்த போது எப்படி இருந்தார் தெரியுமா ?
காலையில் அவர் மேசையில் நமது எம்ஜிஆர் பேப்பர் இருக்க வேண்டும். தலைமைச் செயலகத்திற்கு செல்லும் கோப்புகள் அனைத்தும் பச்சை நிறத்தில் இருக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புத் துறையின் பெயர்ப் பலகை பச்சை நிறம். தமிழ்நாட்டில் வனத் துறையை தவிர எந்த அலுவலகத்தின் பெயர்ப்பலகையும் பச்சை நிறத்தில் இருப்பதில்லை என்ற விதியை மீறி பச்சை நிறம்.
தன்னுடைய சன்னல் கண்ணாடிகளைக் கூட நாஞ்சில் குமரன் பச்சை நிறத்தில் மாற்றி தனது அதிமுக விசுவாசத்தை பறைசாற்றினார். இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் சன்னல் கண்ணடிகள் பச்சை நிறத்தில் பல்லிளித்துக் கொண்டிருக்கின்றன.
இப்படிப் பட்ட நாஞ்சில் குமரன், தேர்தல் முடிந்த மறுநாள், காலையிலேயே மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். தனது குடும்பமே திமுக குடும்பம் என்றார். சென்னை மாநகர கமிஷனர் ஆனார். எப்பூடி…..
சிவணான்டி. ஜெயலலிதா ஆட்சியில் உளவுத் துறையில் பணியாற்றினாலும் டிஜிபிக்கும் மேல் ஒரு பதவி இருந்தால் என்ன அதிகாரம் இருக்குமோ அப்படி இருந்தார் சிவனாண்டி. சென்னை ஹாடோஸ் சாலையில் 65 லட்ச ரூபாய்க்கு ஒரு Flat வாங்கியதாகவும், ஒரு ஹோண்டா சிட்டி கார் வாங்கியதாகவும் அவர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையில் சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.
கருணாநிதியே ஒரு கூட்டத்தில் சில அதிகாரிகள், கட்சிக் காரர்கள் போல செயல்படுகிறார்கள் என்று கூறினார். மதிமுக பொதுச் செயலர் வைகோவை, திமுக கூட்டணியிலிருந்து பிரித்து அதிமுக கூட்டணிக்கு சென்று சேர்ப்பதில் பெரும் பங்கு வகித்தார்.
அப்படிப் பட்ட சிவணான்டி, இன்று கருணாநிதி அரசில் சர்வ வல்லமை பொருந்திய அதிகாரி.
கருணாநிதியின் நள்ளிரவுக் கைதில் முக்கியப் பங்கு வகித்தவர் முத்துக் கருப்பன். இந்த முத்துக் கருப்பன் அவர் செய்த சில முறைகேடுகளால் ஜெயலலிதாவால் இடைநீக்கம் செய்யப் பட்டு, 2006 வரை மீண்டும் பதவிக்கு வர முடியவில்லை.
அப்படிப் பட்ட முத்துக் கருப்பனுக்கு, மீண்டும் பதவி வழங்கியது கருணாநிதிதான்.
2001ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையால் பதியப் பட்ட மற்றொரு வழக்கு சென்னை மாநகர் முழுவதும் கழிவு நீர்க் குழாய்களை புதுப்பிப்பது. இதற்காக உலக வங்கி மற்றும் ஜப்பானிய வங்கியிடம் நிதி உதவி பெற்று வேலைகள் நடத்தப் பட்டன.
மாநகராட்சி மற்றும் மெட்ரோ வாட்டர் விதிகளின் படி, சாலையை எங்கு வெட்டினாலும், அதை மூடும் முன், அதில் மணலைக் கொட்டி மூட வேண்டும் என்பது. கழிவு நீர்க் குழாய்கள் அனைத்தையும் மாற்றும் போது ஏராளமான மணலைக் கொட்டி மூடியிருக்க வேண்டும்.
இந்த வேலைகளெல்லாம் முடிந்த பிறகு, மணலை கொட்டி சாலையை மூடியதாக ஆவணங்கள் தயாரிக்கப் பட்டன. ஆனால் ஒரு இடத்தில் கூட மணலைக் கொட்டாமல் கொட்டியதாக போலியாக பட்டியல் தயாரித்து ஊழல் புரிந்ததில் 68 கோடி ரூபாய் அரசுக்கு நஷ்டம்.
இந்த புகாரில் அரசு லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு விரிவான விசாரணைக்கு உத்தரவிடுகிறது. ஓர் ஆண்டு விசாரணை முடிந்தவுடன், முன்னாள் மாநகர மேயர் மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த போது, உலக வங்கிக் குழு ஒன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஆய்வு மேற்கொள்ள வந்தது. அப்போது ராதாகிருஷ்ணன், இந்த வழக்கு பற்றி பவர்பாயிண்ட் ப்ரசென்டேஷன் ஒன்று தயாரிக்க உத்தரவிட்டார். அந்த ப்ரசென்டேஷனில் இந்த மணல் வழக்கில் 68 கோடி ரூபாய்க்கு பதிலாக 600 கோடி ஊழல் என்று மாற்றச் சொன்னார். எதற்கென்றால், இத்தனை கோடி ரூபாய் ஊழலை கண்டு பிடித்த ராதாகிருஷ்ணன் போன்ற அதிகாரிகள் நமக்குத் தேவை என்று உலக வங்கி அதிகாரிகள் அழைத்துக் கொள்வார்களோ என்ற ஆதங்கம். அவர் உத்தவவுப் படியே தயாரிக்கப் பட்டது. இதை பார்வையிட்ட அப்போதைய லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் நாஞ்சில் குமரன் “யாருய்யா இதை பிரிப்பேர் பண்ணது. கொடுத்த 1000 கோடியில 700 கோடி ஊழல்னா எப்படிய்யா வேர்ல்ட்டு பேங்க்ல லோன் குடுப்பான் ? “ என்று கத்திய போது, ராதாகிருஷ்ணன் அவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல உட்கார்ந்திருந்தார்.
பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது.
இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.
அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திமுக ஆட்சிக்கு வந்ததும், மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை வேண்டாம். பொறியாளர்கள் மீது மட்டும் நடவடிக்கை என்று தலைமைச் செயலாளர் திரிபாதி தலைமையிலான மூவர் குழு பரிந்துரை செய்தது. பொறியாளர்கள் சும்மா இருப்பார்களா ? இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் பத்திரிக்கைகளில் சில மாதங்களுக்கு முன்பு வெளியாகின.
பம்மிய அரசாங்கம் கடந்த மாதம், பொறியாளர் உள்ளிட்ட அனைவர் மீதும் நடவடிக்கையை கைவிட்டு ஆணை வெளியிட்டது.
மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அளித்த ராதாகிருஷ்ணன், இன்று திமுக ஆட்சியில் பலம் வாய்ந்த அதிகாரியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
68 கோடி ரூபாய் ஊழலில் முக்கியப் பங்கு வகித்த மாலதி ஐஏஎஸ், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையை கட்டுப் படுத்தும் விழிப்புப் பணி ஆணையர்.
68 கோடி ரூபாய் ஊழல் வழக்கில் முதல் குற்றவாளியாக லஞ்ச ஒழிப்புத் துறையால் சுட்டிக் காட்டப் பட்ட மு.க.ஸ்டாலின், வழக்கை சந்திக்காமலேயே, தனது அதிகாரத்தால் அந்த வழக்கை மூடி விட்டு, நீதிமன்றத்தில் வழக்கை சந்தித்த ஜெயலலிதா, வழக்கை இழுத்தடிக்கிறார் என்று ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்.
இதெல்லாம் தலைகீழ் விகிதங்கலல்லாமல் வேறு என்ன ?
சவுக்கு
28 comments:
good informations..these informations reach the people who use computer and internet only..we must do something to reach this info in all people(tamil people only) in Tamil Nadu..do anything to clean the listed above Criminals. ...dear readers please pass the info's what u read in savukku
Sir,
Your Blog is very nice. Equal to wiki leaks.
Continue your contribution to the country.
keep rocking..
Savukku avargalae...indha maadhiri mollamaari officers maththila...nallavangalum iruppaanga illa...Can you write about them too?
கிணறு வெட்ட பூதங்கள் வந்த கதையாக உள்ளது.
SAVUKKU NIRAM MARUGIRATHA ?????????????????????
நல்ல அதிகாரிகள் தங்களை அடையாளப் படுத்திக் கொள்வதை விரும்பவில்லை.
படிக்கும்போதே தலை சுத்துதே!..... எவ்வளவு பெரிய கேடிங்க இவனுக... அப்பப்பா...
makkal varipanathilum podhavillai endraal ulaga vagiyidam kadan vaangiyum thittangal thayaarithu poikanakku ezhuthi adhil perumpaguthiyai amukku.aduthu varubavan adhai kandupithu miratti oru amount paathuttu adutha thittampodu.oruthanukku 5 varusham time.indha systathirkku oru peyar irukkunga pattunnu strike aaga maattudhu.please yaaraavadhu sollunga.
எங்காவது போயி முட்டிக்கலாம் போல இருக்கு...
Great work!
//ஊழல்களில் ஈடுபட்டவர்களில் ஓரிருவர் தண்டிக்கப் பட்டாலும்,...//
அப்டியா??!!
i think you are the supporter of J. Jayalalitha
suthi suthi patha ella payalum fraud....
ethula engaerunthu navagala theddurtahu...
My Dear Friend.I understand that you can give only the frauds of the CBCID and Police Officials.What about the other frauds of the other IAS,IFS officials and the connected Ministers.Could you please get those things also from your friends.
சவுக்கு ஸார்..!
சவுக்கை நல்லாவே சுழட்டுறீங்க..!
what happened to nakkheeran kamaraj story?
Where is 'santhana kadu to jhony khan' 3rd part.
Dear Savukku,
My hunch, that your aggressive slash on the Politician
now shifted towards the Police, after the unholy arrest.
When the RULERS are honest, the POLICE has to be honest.
When the Ministers start to swindle, it spreads to the very root .
இப்படியொரு கமெண்ட்டை இன்றுதான் நான் பார்த்தேன். அதிர்ந்து விட்டேன். இப்படியெல்லாம்கூட ஜாபர் சேட் என்கிற மொள்ளமாரி செய்வாரா? அடுத்தவர் வாழ்க்கையிலே மண்ணை அள்ளிப் போடும் அவருடைய வாழ்க்கையிலயும் ஆண்டவன் விரைவிலேயே மண்ணை அள்ளிப் போடுவான். அப்பாவியான அந்த பத்திரிகையாளரின் அல்லக்கை ’முருகன்” ஒரு காட்டிக் கொடுக்கும் கபோதி போல. அவனும் நல்ல சாவை பெற மாட்டான். அவனுடைய குடும்பமும் மண்ணாகப் போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை. சரி, யார் அந்த பத்திரிகையாளர் நீயாவது கண்டுபிடித்து விட்டீரா? எனக்கு மட்டும் ரகசியமா சொல்லு. நான் அந்த முருகன் யாருங்கறதை சொல்லிவிடுறேன். சரியா?
என்ன பதிவுன்னு தெரிய வேண்டாமா? அதுக்காத்தான் பதிவை இங்கே கொடுத்திருக்கிறேன்.
’’நண்பர் சவுக்கு அவர்களுக்கு வணக்கம். நான் ஏற்கெனவே ஒரு முக்கியமான பதிவை உங்களுக்கு அனுப்பி இருந்தேன். அது உங்களை அடைந்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால், பின்னூட்டங்களில் அது இல்லை. என்னைப் பொறுத்த வரையில் உங்கள் தைரியம் மெச்சக் கூடியது. ஆனால், உங்கள் எழுத்து ஏற்புடையது அல்ல. அதில் தனிப்பட்ட வன்மம் இருப்பதாகவே உணருகிறேன். அதை எழுத்தாளர் ஞாநியும் சொல்லியிருக்கிறார். குமுதம் இதழில் தான் ஓ பக்கங்கள் எழுதாமல் போனதற்கான காரணத்தை விவரித்து ஜவஹர் பழனியப்பனுக்கு எழுதியிருக்கும் கடிதத்திலும் அதனை தெளிவாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், எழுத்தை எழுத்தாக எழுதுங்கள். அதுதான் எல்லோருக்கும் பிடிக்கும். மற்றபடி, உங்கள் தைரியம் நேர்மை ஆகியவற்றை நாங்கள் மதிக்கிறோம்.
ஜாப்ர் சேட் என்கிற கேடுகெட்ட மனிதன் அடுத்தவன் வீட்டை எட்டிப் பார்ப்பது போல டெலிபோன் டேப்பிங் செய்வது குறித்து சமீபத்தில் அதிர்ச்சியான ஒரு விஷயத்தைக் கேள்விப்பட்டு அப்படியே ஆடிப் போய்விட்டேன். தமிழகத்தின் பிரபலமான பத்திரிகையாளர்கள் அவ்வளவு பேரின் போன்களை ஒட்டுக் கேட்கும் ஜாபர் சேட்டுக்கு, நேர்மையான பத்திரிகையாளர்களைக் கண்டால் பிடிக்காதாம். அப்படியொரு நேர்மையாளராக இருந்த பத்திரிகையாளரை பல்வேறு வகைகளிலும் தன்வயப்படுத்த முயன்று தோற்றுப் போய்விட்டாராம். எச்சல் பொறுக்கியாக இல்லாத அந்த பத்திரிகையாளரை ஒழிக்க திட்டம் தீட்டினாராம் ஜாபர் சேட். அதற்காக அந்த பத்திரிகையாளர் பேசிய பல்வேறு பேச்சுக்களையும் அங்கே இங்கே என்று ஒட்டுப் போட்டு, அதை ஒரு சி.டி-யில் பதிவு செய்து, குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளரின் அடிவருடியாக இருந்த(முருகன் பெயரைக் கொண்டவராம். நேரம் வரும்போது நடந்த எல்லாவற்றையும் பகிரங்கப்படுத்தலாம்!)ஒரு நிருபரிடம் தன்னால் தயாரிக்கப்பட்ட சி.டி-யை கொடுத்தாராம். அதனை அவரும் தன்னுடைய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரிடம் கொடுத்து, போட்டுப் பார்க்கச் சொன்னாராம். அதில் நிர்வாக இயக்குநர் குறித்தே அந்த பத்திரிகையாளர் விமர்சிப்பது போல பதிவு இருந்ததாம். இயற்கையில், அந்த பத்திரிகையாளர் அப்படி செய்பவர் இல்லையாம். ஒட்டு வேலை மூலம் அப்படி செய்திருப்பது புரியாமல், அந்த நிர்வாக இயக்குநர் குறிப்பிட்ட அந்த பத்திரிகையாளர் மீது கோபமாகி, அவரை பணியை விட்டு நீக்கி விட்டாராம். இது புரியாமல், அந்த பத்திரிகையாளரும் இன்று வரையில், எதற்காக தான் நீக்கப்பட்டோம் என்பதே தெரியாமல் புலம்பி வருகிறாராம். அ.தி.மு.க-வில்தான் இப்படி மார்பிங் படங்கள் மூலமாக ஆட்களை காலி பண்ணுவார்கள். ஆனால், இங்கே இந்த சகுனி ஜாபர் சேட்... சகுணி ஆட்டம் ஆடி, தன்னை மதிக்காத ஒரு நேர்மையாள பத்திரிகையாளனை பலிகடாவாக்கி இருக்கிறார். இப்படி நிறைய பேரின் சோற்றில் மண் அள்ளிப் போடுவதையே வாடிக்கையாக்கிக் கொண்டிருக்கும் ஜாபர் சேட்டின் அயோக்கியத்தனம் இன்னும் யார் யாரையெல்லாம் காவு வாங்கப் போகிறதோ? தமிழகத்தின் மிகப் பெரிய வில்லன் யார் என்றால், அது ஜாபர் சேட்தான் போல. கருணாநிதியே இவரைக் கண்டு பயந்து கொண்டிருக்க நிலை வந்துவிடும் போல. ...ம், பணியை இழந்த அந்த பத்திரிகையாளர் பணியாற்றிய நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரின் செல்போனையும், லேண்ட்லைனையும் இந்த ஜாபர் சேட் பதிவு பண்ணிக் கொண்டுதான் இருக்கிறாராம். தேவையானால், அவருக்கும் ஒட்டு வேலை செய்து, அவரை கருணாநிதியோடும் எதிரியாக்கி விடுவார். அதுதான் நடப்பதாகவும் சொல்கிறார்கள். முற்பகல் செய்யின் பிற்பகல் தானே வரும், தகப்பன் வினை பிள்ளையைச் சேரும் என்றெல்லாம் பழமொழி சொல்வார்கள். ஜாபர் சேட் செய்யும் வினை, அவரை கேட்டால் பரவாயில்லை. அவருடைய மகளைக் கேட்டுவிடக் கூடாது. அதுதான் எங்களுக்கெல்லாம் கவலை. காரணம், அவர் ஜாபர் சேட்டுக்கு பிள்ளையாகப் பிறந்ததைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவர். ஜாபர் சேட் அவர்களே, இனியாவது உங்கள் போக்கை மாற்றுங்கள். அது உங்கள் பிள்ளையை பழிவாங்கிவிடப் போகிறது. திருந்துங்கள். இல்லைத் திருத்தப்படுவீர்கள். நீங்கள் கல்லடி படும் நாள் வெகு தொலைவில் இல்லை.
சவுக்கு அவர்களே, உங்கள் கைது சம்பந்தமாக செய்தி எழுதப் போய் குமுதம் இதழ் எழுத்தாளர் ஞாநியின் கட்டுரையைப் போட அனுமதிக்கவில்லை. ஆனால், நீங்கள் சுட்டிக்காட்டும் ஃபிராடு மாமா ஜாபர் சேட்டுவை ஆகா, ஓகோ என்று புத்தராகவும் புனிதராகவும் காட்ட குமுதம் விளைந்திருக்கிறதே கவனிச்சிங்களா? இந்த கேடுகெட்ட நாதரிங்கதான் இன்னைக்கு பத்திரிகை நடத்த வந்திருக்கு. இவனுங்க காசுக்காக வீட்டில் இருப்பவர்களைக்கூட விலை பேசி விற்பார்கள். அதிகாரிகளை அல்ல, அரசியல்வாதிகளை அல்ல, முதலில் இந்த நாட்டை விட்டு ஒழிக்க வேண்டியது, கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்தும் பத்திரிகையாளர்களைத்தான். ஆனால், இவர்களைப் பற்றி நடிகர் விவேக் உண்மையைச் சொல்லிவிட்டால் மட்டும், கோபித்து கிளம்புவார்களாம். அதெல்லாம் நியாயம் நேர்மை உள்ளவர்கள் செய்ய வேண்டியது. ஆனந்த -----ன் இதழில் ஒருவர் உயர்ந்த பொறுப்பில் இருக்கிறாராம். தண்ணியைப் போட்டு விட்டால், தேவைன்னா, நான் பெண்டாட்டியை முதலாளியிடமும் கூ-----டிக் கொடுப்பேன் என்று சொல்வாராம். இது அந்த அலுவலகத்தில் இருக்கும் அட்டண்டர்கள் கூட சொல்கிறார்கள். இப்படிப்பட்ட கூ-----டிக் கொடுக்கும் ஆசாமிகளை வைத்துக் கொண்டுதான் இந்த தமிழ் பத்திரிகை சமூகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. அட, கேடுகெட்ட பத்திரிகை சமூகமே, கூ-----டிக் கொடுக்கும் ஆசாமிகளை இனம் கண்டு ஒதுக்கிவிடு. இல்லை, ஒதுக்கப்படுவீர். சவுக்குப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
Jayalalitha has given a statement on Arasu cable and Umashankar after going through Savukku article.
This is a great way of reaching Savukku whiplash to the people of tamilnadu.
Number of hits are increasing everyday.Savukku sattai is beginning to be heard
ஏய் சவுக்கு, நாஞ்சில் குமரன், ராதாகிருஷ்ணனை விட்டால் உனக்கு வேறு ஆளே கிடையாதா? புறநகரில் மீசை வைத்துக் கொண்டு திரிகிறதே ஒரு கிடா. அந்த கிடாவைப் பத்தி நீ எழுத மாட்டியா? மணப்பாக்கத்தில் ஊரை அடித்து உளையில் போட்டு, பல கோடி ரூபாயில் பங்களா கட்டியிருப்பதெல்லாம் சவுக்கு பார்வைக்கு வரலையா? இல்லை, எல்லோரையும் வளைப்பது போல சவுக்கையும் அந்த கிடா மீசை வளைத்துவிட்டதா? விரைவில் சவுக்கு சுயரூபம் தெரிந்து விடும். இல்லையென்றால், சவுக்கு பற்றியே வேறு எங்காவது சாட்டையை சுழற்ற வேண்டியிருக்கும் என்பதை சவுக்கின் தாழ்மையான கவனத்துக்குக் கொண்டு வந்து, சாட்டையை சுழற்ற வழிவகை தேடாமல் இருக்கச் செய்யுமாறு வேண்டுகிறோம்.
ஐயா வணக்கம்!!
தங்களின் தைரியத்துக்கு தலைவணங்குகிறேன்!
நீங்கள் செய்யும் புரட்ட்சி மெம்மேலும் வளர்க!
"பாதகஞ் செய்வோரைக் கண்டால்
பயங் கொல்லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா !
என்றான் முண்டாசுக் கவிஞன்.
இந்த வரிக்கு உயிர் கொடுத்தாய் தோழா!
நன்றி!!
I am also an anonymous because I dont know how to select the profile.The blog by SAVUKKU is maintained by a person who is well versed in his surroundings.There are humpty number of journals in Tamilnadu talking about investigative journalism but none of them are investigative.Fortunately we have the net facility at least to know.Every I police personnel in Tamilnadu is a multi billionaire,backed by politicians.Otherwise he cannot continue in his post.So it is not possible for one person to write about all the corrupted Officials.
Savukku...I really want to appreciate your guts and the determination you have to fight against the corrupted officers.
hats off ..!
ஞாநி, சவுக்கு வகையறாக்கள் ஊழல், அதிகார துஷ்பிரயோகத்தில் கிட்டத்தட்ட ஒரே அளவில் 'சாதித்துள்ள' ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் பற்றி எழுதும்போது முன்னவரைப் பூச்செண்டாலும் பின்னவரை இரும்புத் தடியாலும் அடிப்பது போல் எழுதுவது இவர்களின் நோக்கத்தையே சந்தேகிக்க வைக்கிறது. ஞாநி, சவுக்கு, ஜெயலலிதா, கருணாநிதி எல்லோருமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானோ என்னவோ?
நானும் இங்கு பெயரில்லாதவன் என்ற பெயரில் கருத்தை பதிந்தவருடைய கருத்தை ஆமோதிக்கிறேன். சவுக்கின் பதிப்புகளை நானும் ஆர்வத்துடன் படித்தேன். ஆனால் அவர் வாழைப்பழத்தில் விச ஊசி ஏற்றுவது போல... ஏதோ கலைஞரை விட ஜெ. மேல் என்பது போல ஒரு மாயையை ஏற்படுத்த முயற்சிக்கிறார் போல தெரிகிறது. ஜெ. பத்திரிகையாளர் மீது ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் 125 மான நட்ட வழக்குகள் போட்டு கொடுமை செய்தார். தடா பொடா பொய் கஞ்சா வழ்க்கு என்று அதிகார துஷ்பிரயோகம் செய்தார். கலைஞர் அந்த அளவுக்கு தரம் தாழவில்லை என்பது என் கருத்து.
hello chamathu pullada nee keep it up
Post a Comment