Flash News

Friday, July 16, 2010

சந்தனக்காடு to ஜானி ஜான் கான் ரோடு 2




வீரப்பன். இந்தப் பெயர், தமிழக மற்றும் கர்நாடக காவல் துறைக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. மொலக்கன் என்கிற வீரப்பனின் ஆப்பரேஷன்களிலேயே மிகப் பெரிய ஆப்பரேஷன், ராஜ்குமார் கடத்தல்.

இரண்டு மாநில அரசாங்கங்களை மூன்று மாதங்களுக்கும் மேலாக, அரசின் பார்வையில் ஒரு சாதாரண கடத்தல் காரனாகவும், சட்டத்தின் பார்வையில் ஒரு கிரிமினலாகவும், மலைவாழ் மக்கள் பார்வையில், ராபின்ஹூடாகவும் காட்சியளித்த வீரப்பனிடமிருந்து எப்போது கேசட் வரும், என்ன செய்தி வரும், என்று இரு மாநில முதல்வர்களும் பேச்சு வார்த்தை நடத்த வைத்த சம்பவம்தான் ராஜ் குமார் கடத்தல்.

சலவை கவுண்டர் என்பவர், காட்டில் கடத்தல் தொழில் செய்து வருகிறார். அந்த சலவைக் கவுண்டரிடம் தான் வீரப்பன் “அப்ரென்டிஸ்ஸாக“ அதான் சார், பயிற்சிக்காக, சேருகிறார். இவருக்கு வயதானதும், வீரப்பன் மற்றும் அவர் கூட்டாளி, தங்கவேலுவிடம், தன் கடத்தல் தொழிலை ஒப்படைக்கிறார்.

ஆரம்பத்தில், யானைத் தந்தம் மற்றம் சந்தன மரக் கடத்தலில் பெரும் அளவில் ஈடுபட்டிருந்த வீரப்பனை பெரிய அளவில் வளர்த்து விட்டது வனத் துறையினரே. இந்த வனத் துறையினர் இருக்கிறார்களே… இவர்கள் நாக்குக்கு அடிமையானவர்கள்.

சுவையான காட்டுப் பன்றி, பறவைகள், மான்கள், போன்றவைகளின் இறைச்சிக்கு அலைவார்கள். இந்த இறைச்சி வேண்டி, வீரப்பனிடம் தங்கள் துப்பாக்கியை ஒப்படைத்து விலங்குகளை வேட்டையாடித் தரச் சொன்ன வரலாறும் உண்டு. தொடக்க காலத்தில் இவ்வாறு, இருந்த வீரப்பன், பிற்காலத்தில் பெரிய வேட்டைக் காரனாக மாறியதற்கு, இது தொடக்கமாக அமைந்தது.

வெறும் விலங்குகளை மட்டும் வேட்டையாடி வந்த வீரப்பன், தன்னுடைய முதல் கொலையை செய்தது, 1978ம் ஆண்டு. அதற்குப் பிறகு, வீரப்பனின் வாழ்க்கையில் கொலைகளுக்குப் பஞ்சமே இல்லை.

ராராஜ்குமார். கர்நாடகக் கண்மணி.




வீரப்பனால் கடத்தப் பட்ட போது, மிகச் சாதுவாக, அப்பாவியாக, காட்சியளித்தாலும், இந்த ராஜ்குமார், ஒரு கன்னட வெறியர்.
1929ல் ஒரு நாடக நடிகரின் மகனாகப் பிறந்த இந்த ராஜ்குமார்,

தன் தந்தை வழியிலேயே, நாடக நடிகரானார். தொடர்ந்து சினிமாவில் நடிக்க முயற்சித்து வந்த ராஜ்குமார், 1954ல் “பேதர கண்ணப்பா“ என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் காலெடுத்து வைக்கிறார்.சினிமாவில் ஓரளவு பிரபலமான ஸ்டாராக ராஜ்குமார் உருவெடுக்கிறார்.

எண்பதுகளில், ராஜ்குமாரின் திரைப்பட வாய்ப்புகள் குறையத் தொடங்குகின்றன. இந்தச் சூழலில், 1956 மொழிவாரி மாநிலப் பிரிவிற்குப் பிறகு, கர்நாடகாவில், ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் கன்னடம் அலுவல் மொழியாக இருந்தது. பெரும்பாலான மாணவர்கள் சமஸ்கிருதத்தை எடுத்துப் படித்ததால், கன்னடம் படிக்காமலேயே, கர்நாடகத்தில் படித்துப் பட்டம் பெறலாம் என்ற நிலை இருந்தது.

இந்த நிலையை மாற்ற, கர்நாடக மாநிலத்தில் மொழி ஆர்வலர்கள், பல்வேறு போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இதைத் தொர்ந்து, ஞானபீட விருது பெற்றவரும், கர்நாடக பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான வி.கே.கோகக் என்பவர் தலைமையில், ஒரு குழு அமைக்கப் படுகிறது. இந்தக் குழுவானது, கர்நாடக மாநிலத்தில் கன்னடம் வளரத் தேவையான நிதி ஒதுக்கீட்டை உடனடியாக செய்ய வேண்டும், கன்னடத்தை ஒரு கட்டாய மொழிப் பாடமாக்க வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது. இந்தப் பரிந்துரை ஏற்றுக் கொள்ளப் படுமா இல்லையா என்று சலசலப்பு ஏற்படுகிறது.

இந்த நிலையில் தான், திரைப்படங்கள் தோல்வியடைந்து வாய்ப்புகள் குறைந்த நிலையில் உள்ள, ராஜ்குமார், இந்த மொழிப் பிரச்சினையை கையில் எடுக்கிறார். கோகக் கமிட்டி அறிக்கையை அமல் படுத்த வேண்டும் என்று, பேரணிகளும், ஆர்ப்பாட்டங்களும் நடத்துகிறார். ராஜ்குமார் பின்னால், கர்நாடக திரையுலகமே திரண்டு நிற்கிறது. இந்தப் போராட்டம் பெரும் வீச்சை அடைகிறது.

இதைத் தொடர்ந்து, அரசாங்கம், ராஜ்குமாரின் போராட்டத்திற்கு பணிந்து, கோகக் கமிட்டி அறிக்கை உடனடியாக அமல்படுத்தப் படும் என்று அறிவிக்கிறது.

இது தவிரவும், ராஜ்குமாருக்கு, திரைப்படங்களில் தோன்றிய ஆரம்ப காலங்களிலேயே தமிழர்கள் மீது வெறுப்பு உண்டு. இவர் என்னதான் கஷ்டப்பட்டு நடித்தாலும், கன்னட மக்கள் எம்.ஜி.ஆர், சிவாஜி படங்களைத்தான் விரும்பிப் பார்க்கிறோர்களே என்ற “காண்டு“ இவருக்கு உண்டு.

கர்நாடகாவின் காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பங்காரப்பா இவருக்கு சம்பந்தி ஆகிறார். இவரது மகளுக்கும், பங்காரப்பாவின் மகனுக்கும் திருமணம் நடக்கிறது. 1989ல் கர்நாடக அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக இருந்த பங்காரப்பா, 1990ல் காங்கிரசின் கோஷ்டி கலாச்சார விதிகளின் படி, முதலமைச்சராகிறார்.




முதலமைச்சரானதும், இவரது எதிர் கோஷ்டி, இவரை அந்தப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று பகீரதப் பிரயத்தனம் செய்கிறது.

இந்த நேரத்தில், காவேரி ட்ரிப்யூனல் தமிழகத்திற்கு இடைக்கால நிவாரணமாக தண்ணீர் விட வேண்டும் என்று உத்தரவிடுகிறது. இந்த உத்தரவை மதிக்க மறுத்த பங்காரப்பா அரசு, இதற்கு எதிராக ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வருகிறது. அந்தச் சட்டத் திருத்தத்தை, உச்சநீதிமன்றம் ரத்து செய்கிறது.

இதையடுத்து கர்நாடகத்தில் உருவான கொந்தளிப்பான சூழ்நிலையை தன்னுடைய அரசியல் நெருக்கடிக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று பங்காரப்பா முடிவெடுக்கிறார். தமிழர்களுக்கு எதிராக கலவரத்தை தூண்டி விட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

2002 குஜராத் கலவரத்தில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகள் செய்த வேலையை கர்நாடகத்தில் செயல்படுத்தும் பணி, பங்காரப்பாவின் சம்பந்தி ராஜ்குமாரிடம் ஒப்படைக்கப் படுகிறது.

ஏற்கனவே தனக்கு தமிழர்கள் மீது இருந்த காழ்ப்புணர்ச்சியை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்று முடிவெடுத்த ராஜ்குமார் தன்னுடைய ரசிகர்களை தூண்டி விடுகிறார்.
ஏறக்குறைய ஒரு மாத காலத்திற்கும் மேலாக, பெங்களுரில் கலவரம் நடக்கிறது.

காவல்துறையை அமைதியாக வேடிக்கை பார்க்கச் சொல்லி உத்தரவிடப் படுகிறது.
1992ம் ஆண்டு, நடந்த இந்தக் கலவரத்தில் தான் ஆற்றிய பங்குக்கான பலனை ராஜ்குமார் 2000ம் ஆண்டில் அனுபவிக்கிறார்.

பித்தம் தொடரும்


சவுக்கு

3 comments:

Anonymous said...

Please do not keep dark fonts in dark background. it is very difficult to read. It is against the usability concept. Please have light or even white background with dark fonts. I came to read the contents, but could not read comfortably. It strains my eyes.

Anonymous said...

SAVUKKU SIR, INDHA PADHIVIL EDHIRPARTHA SUVARASSIYA MATTER ILLAI. SAMBANTHA PATTAVARGALAI NOTTAM PARKAREERGALO? .......THOTTA.

Anonymous said...

yes..rajkumar is a kanada fanatic...

Post a Comment