Flash News

Monday, January 25, 2010

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டும் திமுக லிமிடெட்டும்







ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கும் அரசியல் கட்சிக்கும் என்ன தொடர்பு என்ற வினாக்களை சற்றே நிறுத்தி வையுங்கள்.

என்ன தொடர்பு என்று விளக்கமாகவே பார்ப்போம்.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம்.


திருக்குவளை முத்துவேல் கருணாநிதி லிமிடெட் இந்தியாவின் மிகப் பெரிய அரசியல் நிறுவனம்.


ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


திமுக லிமிடெட் நிறுவனமும் அதன் குடும்பத்தாரால் கட்டுப்படுத்தப்பட்டு நிர்வகிக்கப் பட்டு வருகிறது.


ரிலையன்ஸ் நிறுவனத்தில் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திமுக லிமிடெட் நிறுவனத்திலும் அதன் குடும்ப உறுப்பினர்கள், பெரும்பான்மையான பங்குதாரர்களாக இருந்து வருகின்றனர்.


திருபாய் அம்பானி குஜராத் மாநிலத்தில் ஜுனாகாந்தி மாவட்டத்தில் கூக்காஸ்வாடா என்ற கிராமத்தில் ஹிராசந்த் கோர்தன்தாஸ் அம்பானி மற்றும் ஜம்னாபேன் என்ற பெற்றோருக்கு பிறந்தார். அம்பானியின் பெற்றோர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள்.


முத்துவேல் கருணாநிதி தமிழ்நாடு மாநிலத்தில் திருவாரூர் மாவட்டத்தில் திருக்குவளை கிராமத்தில் முத்துவேல் மற்றும் அஞ்சுகம் அம்மையாருக்கு பிறந்தார். கருணாநிதியின் பெற்றோரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான்.


அம்பானிக்கு ஒரு மனைவி, இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள்.
கருணாநிதிக்கு மூன்று மனைவிகள். மகன்கள், அவருக்கே கணக்கு தெரியாது.

திருபாய் அம்பானி தன் ஆரம்பகால வாழ்க்கையில் பல தகிடுத்தத்தங்களை செய்து ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை கட்டினார்.
கருணாநிதியும் தன் ஆரம்ப காலத்தில் பல தகிடுதத்தங்களை செய்து திமுக லிமிடெட் நிறுவனத்தை கைப்பற்றினார்.


திருபாய் அம்பானி தன் சாமர்த்தியத்தின் மூலமாக பங்குச் சந்தையையே தன் கட்டுக்குள் வந்தார்.


கருணாநிதி தன் சாமர்த்தியத்தின் மூலமாக தமிழ்நாட்டையே தன் கட்டுக்குள் கொண்டு வந்தார்.


ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


திமுக நிறுவனமும் இந்தியாவின் மிகப்பெரிய சக்தி


ரிலையன்ஸ் நிறுவனம் தன் பங்குதாரர்கள் கூட்டத்தை மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடத்தி வரலாறு படைத்தது

திமுக தனது மாநாடுகளை மிகப்பெரிய அளவில் நடத்தி வரலாறு படைத்தது.


ரிலையன்ஸ் நிறுவனம் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டது

திமுக நிறுவனமும் காங்கிரஸ் மற்றும் தேசியக் கட்சிகளின் தொடர்பால் தனகு செல்வாக்கை வளர்த்துக் கொண்டது.


அரசியலில் திருபாய் அம்பானிக்கு மிகப்பெரிய எதிரி வி.பி.சிங்.


அரசியலில் கருணாநிதிக்கு மிகப்பெரிய நண்பன் வி.பி.சிங்

திருபாய் அம்பானி மிகப்பெரிய வியாபாரி.

கருணாநிதி வியாபாரி மட்டுமல்லாமல் மிகப்பெரிய நடிகர்

அம்பானிக்கு அவரின் பிள்ளைகள்தான் சொத்து

கருணாநிதிக்கு அவரின் பிள்ளைகள்தான் சத்ரு

ரிலையன்ஸ் நிறுவனம், முதலில் ஜவுளித் துறையில் கால்பதித்து பல்வேறு துறைகளில் ஆக்டோபஸ் போல் பரவியது.


கருணாநிதி முதலில் ஆட்சியைப் பிடித்து ஆக்டோபஸ் போல பல்வேறு துறைகளிலும் பரவினார்.

பங்குச் சந்தையில் தரகர்களால் ஏற்பட்ட கடும் நெருக்கடியை திருபாய் அம்பானி திறமையாக சமாளித்தார்.

கட்சியில் ஏற்பட்ட முக்கியமான பிளவுகளை கருணாநிதி திறமையாக சமாளித்தார்.


வியாபாரத்தை திறமையாக நடத்தி தனது நிறுவனத்தின் பங்குதாரர்களை கவர்தார் திருபாய் அம்பானி.


தன் திறமையான நடிப்பின் மூலம் கட்சியை நடத்தி தொண்டர்களை கவர்ந்தார் கருணாநிதி.


ரிலையன்ஸ் நிறுவனம், திருபாய் மறைவுக்குப் பின் இரண்டாக உடைந்தது

திமுக நிறுவனம் கருணாநிதி மறைவுக்குப் பின் பல்வேறு துண்டுகளாக உடைய இருக்கிறது.


திருபாய் அம்பானி உயிரோடு இருக்கையிலேயே அவரது இரண்டு மகன்களுக்கும் இடையில் பூசல் ஏற்பட்டது.


கருணாநிதி உயிரோடு இருக்கையில் அவரது இரண்டு மகன்கள் மட்டுமல்லாமல் மகள்களுக்கு இடையிலும் கடும் பூசல் இருக்கிறது.


அம்பானி மறைவுக்குப் பிறகு குடும்பத்தில் உள்ள பூசலை சரி செய்தது அவரது மனைவி கோகிலோ பேன்.



கருணாநிதியின் மனைவிகளுக்குள்ளேயே கடும் பூசல். அதனால் பூசலை மனைவி சமரசம் செய்ய வாய்ப்பில்லை.


திருபாய் அம்பானியின் பெரும்பான்மையான சொத்துக்கள் இரண்டு மகன்களுக்குள் பங்கு பிரிக்கப் பட்டது.


கருணாநிதியின் பெரும்பான்மையான சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு மட்டும் பங்கு பிரிக்க முடியாது. ஏராளமான மகன்களும், மகள்களும் இருப்பதால் பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் ஏற்படும்.




ரிலையன்சை பங்கு பிரிப்பதில் சிக்கல் அதன் மதிப்பு குறித்து இருந்தது.
திமுக நிறுவனத்தில், பிரித்தால் மதிப்பு குறையும் என்பதால், பங்கு பிரிப்பதில் கடும் சிக்கல் உள்ளது.



திருபாய் அம்பானியின் மூத்த மகன் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாகவும், இளைய மகன் இன்னொரு கட்சிக்கு ஆதராவகவும் செயல்பட்டு வருகின்றனர்.


கருணாநிதியின் இரண்டு மகன்களும் ஒரே கட்சியில் இருந்து கொண்டு கட்சியை உடைக்க திட்டமிட்டு வருகின்றனர்.


அம்பானி மகன்களுக்கு வர்த்தக உலகத்தை யார் ஆளுவது என்ற போட்டி


கருணாநிதி மகன்களுக்கு தமிழகத்தையும் கட்சியையும் யார் ஆளுவது என்ற போட்டி

அம்பானியின் சொத்தில் சரி பாதி பணம் கருப்பிலும், சரி பாதி வெள்ளையாகவும் இருக்கிறது.

கருணாநிதியின் சொத்தில் கொஞ்சூண்டு வெள்ளையாகவும், மீதமெல்லாம் கருப்பாகவும் இருக்கிறது.

அம்பானியின் மகன்கள் மட்டும்தான் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள்.

கருணாநிதியின் மகள்களும் அதிகாரத்திற்காக போட்டி போடுகிறார்கள். மேலும், மனைவிகளும் அதிகாரத்திற்காக போட்டி போடுவது கூடுதல் சிறப்பு.

திருபாய் அம்பானிக்கு தன் நிறுவனத்திற்காக புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதில் மிகுந்த ஆர்வம்.

கருணாநிதிக்கு தன் குடும்பத்திற்காக புதிய சட்டமன்றம் கட்டுவதிலும், சொத்துக்களை கட்டுவதிலும் மிகுந்த ஆர்வம்.

திருபாய் அம்பானிக்கு தன் சொந்த குடும்பத்தை தவிர, இதர உறவினர்களால் பிரச்சினை ஏதும் இல்லை.


கருணாநிதிக்கோ மனைவி., மகன்கள் மற்றும் மகள்கள் தவிரவும், மருமகன், மருமகன் வயிற்றுப் பேரன்கள் என அதிகாரத்திற்காக போட்டியிடுவோர் எண்ணிக்கை பலப் பல.



திருபாய் அம்பானியின் மரணத்திற்குப் பின் அவரது மகன்கள் அடித்துக் கொண்டாலும், நன்கு தொழில் செய்து நிறுவனத்தின் சொத்துக்களை பன்மடங்கு பெருக்கவே செய்தனர்.

ஆனால் கருணாநிதியின் மரணத்திற்குப் பிறகு, இரண்டு மகன்களும் அடித்துக் கொண்டு, திமுக நிறுவனத்தையே திவாலாக்கப் போகிறார்கள்.



சவுக்கு

8 comments:

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

சரியான ஆய்வு..
இன்னும் இரண்டு பாயிண்ஸ் மிஸ்சிங்க்..

1.. இரண்டுபேருக்கும் மண்டையிலே ஒண்ணுமில்லை ( முடி சார்..)
2..மனைவிகள் என்பதை துணைவிகள் என வாசிக்கவும்..

சவுக்கு said...

பதிவுகளை தொடர்ந்து படித்து, பின்னூட்டம் இட்டு எங்களுக்கு ஆதரவு தந்து வரும் அருமை நண்பர் பட்டாபட்டி அவர்களுக்கு நன்றிகள் கோடி

Hai said...

அருமை அருமை. என்னதான் சொல்லுங்க நம்ம கருணாநிதியின் குடும்பப் படத்தை காட்டியதில் விட்டுப்போனவர்கள் யார்ன்னு கண்டுபிடிக்க ஒரு போட்டி வச்சிருந்த யாரும் கண்டுபிடிச்சிருக்க முடியாத அளவுக்கு வாரிசுகள் வந்திருப்பார்கள். நல்ல வேலை அதை செய்யாமல் பெரியவருக்கு கஷ்டத்தைக் கொடுக்கவில்லை. அந்த வகையில் அவருக்கு இப்போதைக்கு நிம்மதி.

Anonymous said...

திருநெல்வேலிக்கே அல்வா?

ம்ம் நடத்துங்க!!

Unknown said...

அருமையான பதிவு.எதிர்கால சந்ததிக்கு வரலாறு பாடம் உங்கள் பதிவில் இருந்தே எடுத்துக் கொள்ளலாம்.

Anonymous said...

good job

Anonymous said...

very good comparison

Anonymous said...

Enna solla ethu solla

Post a Comment