Flash News

Monday, August 30, 2010

ஆண்டியும் அரசனும்…… … ….


என்னடா சவுக்கு ஏதோ பழங்காலத்துக் கதை சொல்லப் போகுதோன்னு ஆச்சர்யப் பட வேண்டம்.

சவுக்கு சொல்லப் போகும், ஆண்டியும், அரசனும், சமகாலத்தில் உள்ளவர்கள் தான். அரசர், சவுக்கு வாசகர்கள் நன்கு அறிந்தவர். ஆண்டியைப் பற்றி இப்போதுதான் சவுக்கு வாசகர்கள் தெரிந்து கொள்ளப் போகிறார்கள்.

இந்த ஆண்டி வேறு யாருமல்ல. லஞ்ச ஒழிப்புத் துறையில் ஐஜியாக இருக்கும் துக்கையாண்டிதான் அந்த ஆண்டி. அரசர் யார் தெரியுமா கருமம் பிடித்த வீரரான காமராஜ்தான். (காமராஜ் சார், உங்க பேரை கமாராஜ், புல்ஸ்டாப் ராஜ் அல்லது காமாராஜ், சோமாராஜ், மாமாராஜ் வசூல்ராஜ் என்று ஏதாவது மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். கர்மவீரர் காமராஜ் எப்படிப் பட்டவர் என்று அவரின் உதவியாளர் வைரவன் எழுதியிருக்கிறார். படித்துப் பாருங்கள். அப்படிப் பட்ட மனிதரின் பெயரை வைத்துக் கொண்டு, நீங்கள் செய்யும் காரியம், யாருக்கும் அடுக்காது) சரி, இந்த கமாராஜுக்கும், துக்கையாண்டிக்கும் என்ன சம்பந்தம் என்கிறீர்களா ?



இருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை, கமாராஜ் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் சென்று, ஆண்டியை சந்தித்து அவரோடு மதிய உணவு உண்டு ஏறக்குறைய மூன்று மணி நேரம் விவாதித்து வந்தார். என்ன விவாதம், எதைப் பற்றி விவாதம் ? எல்லாம் சவுக்கு பற்றித் தான்.

கமாராஜைப் பற்றி நாம் பல முறை விவாதித்து முடித்தாலும், இப்போது மீண்டும் விவாதிக்கும் முன், இந்த ஆண்டியைப் பற்றி பார்ப்போம்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவேந்திர குல வேளாளர் இனத்தைச் சேர்ந்தவர்தான் இந்த துக்கையாண்டி. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டிஎஸ்பியாக தேர்ந்தெடுக்கப் பட்டு, 1986ல் ஐபிஎஸ்க்கு நியமிக்கப் பட்டவர்.



இவரை தலித் சாதி வெறி பிடித்தவர் என்று சொன்னால் மிகையாகாது. மற்ற சாதியினர், தங்கள் சாதி மீது வெறி பிடித்து இருக்கும் போது, ஒரு தலித் அதிகாரி, தனது சாதியினர் மீது பிடிப்போடு இருப்பது என்ன தவறா என்று கேட்கக் கூடும்.

சாதீய வெறி என்பது, அது பார்ப்பன சாதி வெறியாக இருந்தாலும் சரி, கவுண்டர் சாதி வெறியாக இருந்தாலும் சரி, தலித் சாதி வெறியாக இருந்தாலும் சரி. கண்டிக்கப் பட வேண்டியதே. தலித்தின் சாதி வெறி எப்படி இருக்கிறது என்பதை உத்தரப் பிரதேசத்தில் கண்டிருப்பீர்கள். இவ்வாறு வளர்த்து விடப் படும் சாதி வெறிதான், மதவெறியாகவும், மொழி வெறியாகவும், பல்வேறு வகுப்புவாத வடிவங்களை எடுத்து, மனிதத்தை அழித்து வருகிறது.

ஆகையால், சவுக்கை தலித் இன விரோதி என்று முத்திரை குத்தினாலும், சாதீய வெறி எந்த வகையில் இருந்தாலும் சவுக்கு கண்டிக்கவே செய்யும்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் சிறப்பு புலனாய்வுக் குழு 1 மற்றும் 2 என்று இரு பிரிவுகள், 1996ல் திமுக ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல்வாதிகள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிப்பதற்கென்று பிரத்யேகமாக ஏற்படுத்தப் பட்டது.

1996 முதல் 2001 வரை, இந்த இரண்டு பிரிவுகளும் மிகவும் பரபரப்பாக செயல்பட்டன. ஏகப்பட்ட வழக்குகள் இந்த இரண்டு பிரிவுகளிலும் பதியப் பட்டு விசாரிக்கப் பட்டன.

2001ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன், ஏற்கனவே பதியப் பட்ட வழக்குகளை மூடும் பணியும், புதிதாக திமுக மந்திரிகள் மற்றும் கருணாநிதி மேல் வழக்கு போடும் பணியும் முடுக்கி விடப் பட்டாலும், அப்போது இயக்குநராக இருந்த திலகவதி, பிறகு வந்த நாஞ்சில் குமரன், ஐஜியாக இருந்த ராதாகிருஷ்ணன் ஆகியோர், திமுக வினரோடு கள்ள உறவு வைத்து, வழக்கு விபரங்களை வெளியிட்டு வந்து, நீதிமன்றங்களில் இந்த வழக்குகளை உடைக்க ஏராளமான உதவிகளை செய்ததால், திமுக மீண்டும் 2006ல் ஆட்சிக்கு வந்ததும், ஏறக்குறைய அனைத்து வழக்குகளுமே ஊத்தி மூடப்பட்டன.

சரி அனைத்து வழக்குகளும் ஊத்தி மூடப்பட்டால், சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு என்ன வேலை ? அதற்க ஐஜியாக உள்ள துக்கையாண்டிக்கு என்ன வேலை ?

என்ன வேலை என்று சொல்கிறேன். துக்கையாண்டி சிறப்பு புலனாய்வுக் குழுவின் ஐஜியான நியமிக்கப் பட்டதும், குற்றப் பிரிவு சிஐடி ஐஜி பிரிவையும் கூடுதலாக கவனிப்பார் என்ற வினோதமான உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அந்த நேரத்தில் தான், சிபி.சிஐடியின் புலனாய்வுக்கு, தங்க நாணய மோசடி விசாரணைக்கு வந்தது.

அதில் எவ்வளவு பணம் புழங்கியது என்பதும், ஒரு சாதாரண ஆய்வாளர் ஒரே பேரத்தில் 50 லட்ச ரூபாய் வாங்கியதும் அறிந்திருப்பீர்கள்.

அப்போது துக்கையாண்டி சிபி.சிஐடி ஐஜியாக பொறுப்பு வகித்தார் என்பது சிறப்பு.

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு வந்தவுடன் துக்கையாண்டி செய்த முதல் காரியம் என்ன தெரியுமா ?

லஞ்ச ஒழிப்புத் துறையின் 27வது கட்டிடத்திற்கு பின்னால் ஒரு பேட்மின்டன் கோர்ட்டும், ஃப்ளட் லைட்டும் போட்டதுதான். இதில் என்ன தவறு, ஒரு ஐஜி விளையாட்டு ஆர்வலராக இருக்கக் கூடாதா என்று கேட்பீர்கள். இருப்பது தவறில்லைதான். இந்த பேட்மின்டன் கோர்ட்டும், ஒளி விளக்குகளும், அரசின் ரகசிய நிதியிலிருந்து வாங்கப் பட்டது என்பதுதானே வேதனை.

மாலை நாலரை மணிக்கெல்லாம், ஆய்வாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர்களோடு, பேட்மின்டன் விளையாட்டு தொடங்கும். லஞ்ச ஒழிப்புத் துறை என்பது, ஏறக்குறைய சீட்டாட்டக் கிளப் போல, ஓய்வெடுக்கும் மடமாக மாறி விட்டது.

இரவு ட்யூட்டி இல்லை. பந்தோபஸ்து இல்லை. சனி ஞாயிறு விடுமுறை. மாதந்தோறும் 20 சதவிகிதம் பொய் பயணப் பட்டியலை அரசே வழங்குகிறது. இது போக, மாதந்தோறும் ஒவ்வொருவருக்கும், ரகசிய நிதியிலிருந்து ஒரு பங்கு. மொபைல் பில் கட்ட மாதந்தோறும் 1000 ரூபாய். லஞ்ச வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என்று கூறும் ஒரு அரசு. திடீர் ஆய்வுகள் மேற்கொள்ளாமல் இருக்க லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநரின் பெயரைச் சொல்லி மாமூல் வாங்கும் ஒரு உளவுத் துறை ஐஜி என்று நாடு போய்க் கொண்டிருக்கும் நிலையில், லஞ்ச ஒழிப்புத் துறை சீட்டாட்டக் கிளப்பாக மாறியதில் ஆச்சர்யம் என்ன ?

கடந்த ஐந்து வருடமாக தலைமையக டிஎஸ்பியாகவும், இப்போது கூடுதல் எஸ்பியாகவும் இருக்கும் கிருஷ்ணா ராவ் என்ற நபர், இந்த ஐந்து வருடங்களாக ஒரு வழக்கை கூட விசாரித்ததில்லை என்பது தெரியுமா ? எப்போது பார்த்தாலும் கதவை அடைத்துக் கொண்டு போன் பேசுவதும், இயக்குநர் வந்தால், அவர் கார் கதவை திறந்து விடுவதையும் தவிர, இந்த நபர் வேறு எந்த வேலையும் செய்வதில்லை. ஆனால், வாரம் முழுவதும், காஞ்சிபுரம், திருக்கழுக்குன்றம், வேப்பம்பட்டு, திருத்தணி, திருவள்ளுர், பொன்னேரி போன்ற இடங்களுக்கு வழக்கு புலனாய்வு நிமித்தம் சென்று வந்ததாக பொய் டி.ஏ தவறாமல் போட்டு வருகிறார். இப்படி உழைக்காமல் உடம்பை வளர்க்கும் இந்த மனிதருக்கு தின்னும் சோறு எப்படி செரிக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்.

துக்கையாண்டிக்கு வாரம் முழுவதும் வேலை என்ன தெரியுமா ? காலை 11 மணிக்கு அலுவலகம் வருவது. ஒன்றிரண்டு கோப்புகளை பார்ப்பது. அந்த கோப்புகளில் சம்பந்தப் பட்ட தலித் அதிகாரிகள் இருந்தால் அவரை காப்பாற்ற என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்பது. 11.30 மணிக்கு இவரைப் போலவே மற்றொரு சீட்டாட்டக் கிளப் தலைவர் நல்லமா நாயுடு இவர் அறைக்கு வருவார். திமுக மீண்டும் வெற்றி பெற என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு மணி நேரம் விவாதிப்பார்கள். இந்த ஜெயலலிதாவை ஒழித்துக் கட்ட என்ன செய்ய வேண்டும் என்று விவாதிப்பார்கள்.

12..30 மணி முதல் தேவேந்திரக் குல வேளாளர் சங்கம் என்று சொல்லிக் கொண்டு ஜாதி சங்கத்தினர் வரிசையாக, மாநாடு, காதுகுத்து, தீமிதித்தல் என்று வரிசையாக வருவார்கள். அனைவரிடமும் உட்கார்ந்து மணிக் கணக்கில் பேசுவார்.

மதியம் கருமம் பிடித்த கமாராஜ் போன்ற நபர்கள் வந்தால் அவர்களோடு மதிய உணவு. மதிய உணவு முடிந்ததும், போட்டா கோர்ட்டின் வழக்கறிஞர் வெங்கடகிருஷ்ணன் என்பவர் வருவார். அவரோடு மற்றொரு நபர் வருவார். இவர்கள் மூவரும் இணைந்து இரண்டு மணி நேரம் வெட்டி அரட்டை அடிப்பார்கள்.

நாலு மணிக்கு துக்கையாண்டி அய்யா கிளம்பி, ஜிம்கானா கிளப்புக்கோ, காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கோ அல்லது டென்னிஸ் விளையாடவோ சென்று விடுவார். மாலை நாலு மணிக்கு மேல் ஒரு நிமிடம் கூட இருக்க மாட்டார்.

இவரது வீடு பனையூரில் உள்ளது. இவரது மனைவிக்கு வேலையே பனையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதுதான். முதலில் ஒரு நிலத்தை விலைக்கு வாங்குவது. பிறகு அந்த நிலத்தின் அருகாமையில் உள்ள நிலத்தை லேசாக ஆக்ரமிப்பு செய்வது. அருகாமையில் உள்ள நிலத்துக் காரர் ஏதாவது பேசினால், காவல்துறையை விட்டு மிரட்டுவது. அந்த ஆக்ரமிப்போடு சேர்த்து, அதிக விலைக்கு விற்பது. இதுதான் திருமதி.துக்கையாண்டியின் முழு நேர பணி. இதற்கு உதவி செய்வது மணி. Money அல்ல Mani.

துக்கையாண்டி அலுவலகத்தில் மணி என்ற ஒரு காவலர் இருக்கிறார். இவர் எண்ணூர் காவல்நிலையத்தைச் சேர்ந்தவர். ஆனால் அங்கே ஓ.டி என்கிற அயல்பணி என்ற கணக்கு காண்பித்து விட்டு, முழு நேரமும், துக்கையாண்டி மற்றும் திருமதி.துக்கையாண்டியின் ரியல் எஸ்டேட் பணிகளை மட்டுமே கவனிப்பது இவரது பணி.

இந்த மணி துக்கையாண்டி வந்தவுடன், அதிமுக அமைச்சர்கள் மீதான வழக்குகளை பற்றிய விபரங்களை சம்பந்தப் பட்ட விசாரணை அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டுக் கொண்டிருந்தை ஒரு அதிகாரி பார்த்து விட்டு, துக்கையாண்டியிடம் புகார் சொல்லுகிறார். இதற்க துக்கையாண்டியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ? “அப்படியா ? “ என்பதுதான்.

துக்கையாண்டி பல்வேறு வழக்குகளில் தலையிட்டு அதன் முடிவுகளை மாற்றுமாறு வற்புறுத்துவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் மகாகவி பாரதி நகரில் ஒரு காவல் ஆய்வாளர் நடைபாதை வியாபாரிகளிடம் மாமூல் வசூல் செய்யும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்த வழக்கில் புலனாய்வு நடந்து வருகிறது. இந்த வழக்கை புலனாய்வு செய்யும் அதிகாரியை அழைத்து, நீதிமன்ற நடவடிக்கைக்கு பதிலாக துறை நடவடிக்கைக்கு பரிந்துரை செய்யுமாறு துக்கையாண்டி வற்புறுத்தியதாகவும், அந்த புலனாய்வு அதிகாரி மறுத்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகத்தைச் சேர்ந்த ஒரு பெண், 600 ரூபாய் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார். இந்தப் பெண்ணின் மீதான நீதிமன்ற விசாரணை முடிவடைந்து, சாட்சிகள் விசாரணையும் முடிவடைந்த நிலையில், இவர் தன்னை பணி இடைநீக்கத்திலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கோருகிறார். இந்தக் கோப்பு துக்கையாண்டியை வந்தடையும் போது, பணி நீக்கத்திலிருந்து விடுவிக்கக் கூடாது என்ற உத்தரவிடுகிறார்.

மற்றொரு தலித் அதிகாரி மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இன்னும் தொடங்கப் படாத நிலையிலேயே அந்த அதிகாரி பணி இடைநீக்கத்தில் இருந்து விடுவிக்கப் பட வேண்டும் என்று கோரிய போது, துக்கையாண்டி, அவரின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப் பட்ட துறைக்கு கடிதம் எழுதியதாக தகவல்கள் கூறுகின்றன.

அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கிறார்கள் என்று பொறி வைத்துப் பிடிப்பது போன்ற புகார்கள் வந்தால், முதலில் பிடிக்கப் பட வேண்டிய நபர் எந்த ஜாதி என்பதை கேட்டறிந்து, அந்த அதிகாரி தலித் சாதியாக இருந்தால், நடவடிக்கை எடுக்க துக்கையாண்டி அனுமதி மறுப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்து பல்வேறு தகவல்கள் பத்திரிக்கைகளில் வெளியாவதாக அத்துறையின் சில ஊழியர்களை இடமாற்றம் செய்ததும், ஒரு ஊழியரை பணி இடை நீக்கம் செய்ததும் நடந்திருக்கும் சூழலில் லஞ்ச ஒழிப்புத் துறை ஐஜியே, ஒரு பத்திரிக்கை ஆசிரியரிடம், அதுவும் ஒரு மஞ்சள் பத்திரிக்கை ஆசிரியரிடம் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பப் படுகிறது. இதற்கு விடை தர வேண்டிய போலா நாத், துக்கையாண்டியின் அரசியல் செல்வாக்கை பார்த்து அஞ்சி நடுங்குவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

இந்த துக்கையாண்டி, பகுதி நேரமாக ஐஜியாக இருந்து கொண்டு, முழு நேரமாக ஸ்ரீராம் சிட் பண்ட்ஸில் பங்குதாரராக இருக்கிறார் என்பது உபரித் தகவல் (துக்கையாண்டி சார், சவுக்குக்கு லோன் வாங்கித் தர்றீங்களா ? பணத்துக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு)

இப்போது நம்ப கமாராஜ் விஷயத்துக்கு வருவோம். கமாராஜ் பேரு அவ்ளவா நல்லா இல்லை. குருமாராஜ்னு வச்சுருவோமா ? சவுக்குக்கு பிடிச்சுருக்கு. சவுக்கு வாசகர்கள் தான் இந்த பேருக்கு ஒப்புதல் தரணும்.



இந்த குருமாராஜ் தன்னோட மனைவி பேர்ல, சென்னை திருவான்மியூர்ல இரண்டு க்ரவுண்ட் நிலம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடமிருந்து, “சமூக சேவகர்“ என்ற பிரிவின் கீழ் வாங்கியிருப்பது சவுக்கு வாசகர்கள் அறிந்ததே.



இந்த நிலத்துக்கான மொத்த தொகை ஒரு கோடியே பதினைந்து லட்சத்து இருபத்தி எட்டாயிரத்து எண்ணூறு மட்டும். இந்தத் தொகையை மொத்தமாக செலுத்தி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறு வீட்டு வசதி வாரியத்தின் கீழ் ஒதுக்கீடு பெரும் முன், வீட்டு வசதி வாரியத்திற்கு ஒதுக்கீடு பெரும் நபர் தர வேண்டிய உறுதி மொழி, பின் வருமாறு.

“எனக்கோ / எங்களுக்கோ / எங்களைச் சார்ந்திருக்கின்ற 21 வயது நிரம்பாத (Minor) குழந்தைகள் பெயரிலோ சொந்த வீட்டு மனையோ/வீடோ/அடுக்குமாடி குடியிருப்போ, இந்தியாவில் உள்ள மாநகராட்சி, முதல் நிலை சிறப்பு நிலை (நகராட்சி) நகராட்சிகளில் / இல்லை என்று உறுதி கூறுகிறோம். “

என்ற கணவன் மனைவி இரண்டு பேரும் கையொப்பம் போட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.



ஆனால், 10 ஜனவரி 2005ல் 1424 சதுர அடி உள்ள ஈஸ்வரி அபார்ட்மென்ட்ஸ், முதல் தளம், பீச் ஹோம் அவென்யூ இரண்டாவது தெரு, பெசன்ட் நகர் என்ற முகவரியில், 22,50,000 ரூபாய்க்கு வாங்கி, அதில்தான் இப்போது காமராஜ் குடும்பத்தோடு குடியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.









இவ்வாறு பொய்யான சான்றிதழ் கொடுத்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தையும், அரசையும் ஏமாற்றும் வகையில் செயல்பட்டிருப்பதன் மூலம், குருமாராஜும் அவர் மனைவி ஜெயசுதாவும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 420ன் கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை புரிந்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து, கண்ணாயிரத்துக்கு விரைவில் ஒரு புகார் அனுப்பப் பட இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஆண்டிக்கும் அரசனுக்கும் என்ன தொடர்பு என்று இப்போது புரிகிறதா சவுக்கு வாசகர்களே ?
சவுக்கு

Saturday, August 28, 2010

முதியோர் இல்லமாகும், மாநில தகவல் ஆணையம்.


தமிழ்நாடு தலைமைத் தகவல் ஆணையராக தற்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதியை நியமிக்கப் படப் போவதாக எழுந்த செய்திகளும், அதையொட்டி எழுந்த சர்ச்சைகளும், எதிர்க்கட்சித் தலைவர் செல்வி ஜெயலலிதா இக்கூட்டம் தொடர்பான விபரங்கள் வழங்கப் படவில்லை என்பதால் அதில் பங்கேற்க மறுத்ததும் அறிந்திருப்பீர்கள்.

இந்த விவகாரங்களுக்குள் செல்லும் முன்பாக, இந்த சட்டம் குறித்து சற்று பார்ப்போம்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் மிக மோசமான வீழ்ச்சி அணு சக்தி ஒப்பந்தம் என்றால், வரலாற்றுப் பக்கங்களில் இடம் பிடிக்கக் கூடிய அளவுக்கு மிகப் பெரிய சாதனை இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

குடியரசு, மக்களுக்கான மக்களின் அரசாங்கம் என்பதெல்லாம் வெறும் காகிதங்களில் மட்டுமே இருந்து வந்தது. ஒரு சாதாரண ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த ஒரு குடி மகனுக்கு, அவனது விண்ணப்பம் என்ன ஆனது என்பதை தெரிந்து கொள்ளக் கூட உரிமை இல்லாதிருந்தால் அது என்ன மக்கள் ஆட்சி ?

மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், இந்த மக்களை நடத்தும் விதம் என்ன என்பது பரவலாக அனைவருக்குமே தெரியும்.

அந்த மக்களுக்கு தங்களுக்கு உண்மையிலேயே அதிகாரம் இருக்கிறது, இந்த அரசு ஊழியர்களை கேள்வி கேட்கலாம். இவர்களை accountable ஆக்கலாம் என்ற அதிகாரத்தை வழங்கியது இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம்.

இந்தியாவின் ஒரு பெரும் மாற்றத்தை இந்தச் சட்டம் வழங்கியுள்ளது என்றால் மிகையாகாது.

இந்தச் சட்டத்தின் பலனையும், இந்தச் சட்டம் என்ன செய்யும் என்பதையும், 2007ல் நடந்த ஒரு சம்பவத்தின் மூலமாக விளக்கினால் சுவையாக இருக்கும்.

அண்ணா பல்கலைகழகத்தில் அரசு கோட்டா என்று ஒரு கோட்டாவை வைத்துக் கொண்டு, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு, பொறியியல் இடங்கள் வழங்கப் பட்டு வந்தன. செல்வி ஜெயலலிதாவின் மீதான வழக்குகளை கவனித்து, அந்த வழக்குகளை மூடிய ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் என்ற இருவரின் பிள்ளைகள் இது போல சீட் வாங்கிய விவகாரம் தொடர்பான விவரங்களை கேட்டு, மாதவரம் பால் பண்ணையைச் சேர்ந்த சேகர் என்பவர் அண்ணா பல்கலைகழகத்துக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலமாக விண்ணப்பிக்கிறார்.

இரண்டு நாட்கள் கழித்து, அவர் வீட்டுக்கு தேடி வந்த ஒருவர் தன்னை அண்ணா பல்கலைகழகத்தின் ஊழியர் என்று அறிமுகப் படுத்திக் கொண்டு, அவருக்கோ, அவர் கூறும் நபர்களுக்கோ, அண்ணா பல்கலைகழகத்தில் இடம் வழங்கப் படும் என்றும், அந்த விண்ணப்பத்தை வாபஸ் வாங்க வேண்டும் என்று கோருகிறார். அந்த விண்ணப்பத்தை அனுப்பியவர் சவுக்கு நண்பர் அல்லவா. முடியாது என்கிறார்.



தகவல்கள் எதுவும் வழங்கப் படவில்லை. ஆனால், சேகருக்கு, காவல்துறையினர் மூலமாக மிரட்டல் தொடர்கிறது. தினமும் ஒரு காவலர் சேகர் வீட்டுக்கோ, அவர் கடைக்கோ வந்து, எதற்காக இவ்வாறு விண்ணப்பிக்கிறீர்கள் என்றும், உங்களுக்கு வேண்டியதை செய்து தருகிறோம் என்றும் வந்து கொண்டே இருந்தார்கள்.

காவல்துறையினரால் மிரட்டப் படும் ஆர்டிஐ விண்ணப்பதாரார் என்று டெக்கான் க்ரானிக்கிள் நாளிதழில் முதல் பக்கத்தில் பெரிய செய்தி வந்தது.

ஆனால் இதற்குப் பிறகும், இந்த மிரட்டல் நிற்கவில்லை. ராதாகிருஷ்ணனின் அல்லக்கையாக அன்றும், இன்றும் இருக்கும் கஜபதி என்ற ஆய்வாளர், இந்த சேகரை மிரட்டுவதற்காகவே மாதவரம் காவல்நிலையத்தில் நியமிக்கப் படுகிறார்.

அண்ணா பல்கலைகழகமும் தகவல்கள் தருவதாக இல்லை. கடிதப் போக்குவரத்து தொடர்கிறது. இந்நிலையில் மிரட்டல் தொடர்ந்ததும், சேகர், சவுக்கிடம், இனி தன்னால் விண்ணப்பங்கள் அனுப்ப இயலாது என்று தெரிவிக்கிறார்.

இப்போதுதான், யாஹுவின் க்ரூப்புகளிள் ஒன்றாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்காகவே இருக்கும், ஹம் ஜானேங்கே என்று க்ரூப் உதவிக்கு வந்தது. இது போல சேகர் மிரட்டப் படும் விபரங்களை அந்த க்ரூப்பில் பதிவு செய்தவுடன், இந்தியா முழுவதும் இருந்து ஆதரவுக் குரல் வந்தது.

அந்த விண்ணப்பத்தை எங்களுக்கு அனுப்பி வையுங்கள். நாங்கள் அனுப்புகிறோம். எங்களை யார் மிரட்டுகிறார்கள் என்று பார்ப்போம் என்று இந்தியா முழுவதும் இருந்து ஆதரவு குரல் வந்தது. இதையடுத்து, ஒரே வாரத்தில் அண்ணா பல்கலைகழகத்துக்கு, ராதாகிருஷ்ணன், நரேந்திர பால் சிங் பிள்ளைகள் தொடர்பான தகவல்கள் கேட்டு, 150 விண்ணப்பங்கள் வந்தவுடன், ராதாகிருஷ்ணன் பின் வாங்கினார்.

இப்படி, அதிகாரத்தின் உயர் பீடங்களில் உள்ளவர்களை ஆட்டிப் படைக்க வல்லது இது போல பல வெற்றிக் கதைகள் இந்தியா முழுவதும் உண்டு.

ஆனால் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது ? ஓய்வு பெற்றவர்களின் மடமாக தகவல் ஆணையம் இருந்து வருகிறது. தமிழக தகவல் ஆணையம், ஓய்வு பெற்றவர்களின் மடமாக, கருணாநிதியின் கைப்பாவைகளாக இருந்து அரசிலிருந்து ஓய்வு பெற்றவர்களின் புகலிடமாக இந்த ஆணையத்தை மாற்றி வைத்திருக்கிறார் கருணாநிதி.

தமிழக தகவல் ஆணையம் உருவான போது, மூன்று தகவல் ஆணையர்களும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தான். எஸ்.ராமகிருஷ்ணன், ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் ஆர்.ரத்தினசாமி ஆகியோர்.

இதில் தலைமை தகவல் ஆணையராக உள்ள எஸ்.ராமகிருஷ்ணன் இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் மிகுந்த முனைப்பாக இருக்கிறார் என்றும், பரவலாக சிறந்த ஆணைகளை வழங்கியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக அண்ணா பல்கலைகழகத்தில் கேட்கப் பட்ட கேள்விகளுக்கு, பதில் அளிக்க மறுத்த நிலையில் நடந்த விசாரணையின் போது, எஸ்.ராமகிருஷ்ணன் பல்கலைகழகத்தில் இருந்து வந்த அதிகாரிகளிடம் கேட்ட கேள்வி. “நீங்கள் பிசிக்ஸ் ப்ராபசர் தானே ? தண்ணீரின் உறை நிலை என்ன ? “ அந்த அதிகாரி 0 டிகிரி என்றார். ராமகிருஷ்ணன், இதற்கு வேறு பதில் இருக்க முடியுமா ? என்று கேட்டார். அந்த அதிகாரி இல்லை என்று மறுத்ததும், அதே போல மனுதாரர் கேட்ட கேள்விக்கு வேறு பதில்கள் இருக்க முடியாது. ஆகையால், உடனடியாக தகவல்களை வழங்குங்கள் என்று கூறினார்.

2008ல், மூன்று தகவல் ஆணையர்களைத் தவிரவும், மேலும் மூன்று தகவல் ஆணையர்களை நியமிக்க வேண்டி அரசுக்கு கருத்துரு அனுப்பப் பட்டு அதற்கு ஒப்புதல் அளிக்கப் படுகிறது.

இந்த காலகட்டத்தில் தகவல் ஆணையர்கள் ஓய்வு பெற்றால், தங்களை அந்த பதவிக்கு பரிசீலிக்கும் படி, 8 நபர்கள் அரசிடம் விண்ணப்பம் அளித்து, அந்த விண்ணப்பங்களும் நிலுவையில் உள்ளன.

31 மார்ச் 2008ல் நான்கு ஆணையர்களை நியமிக்கும் பணி தொடர்பாக கோப்பு தொடங்கப் படுகிறது. இந்தக் கோப்பு முதல்வரின் செயலாளராக இருந்த டி.ஆர் ராமசாமிக்கு வருகிறது. டி.ஆர்.ராமசாமி, 30.04.2008ல் ஓய்வு பெற உள்ளார்.

நான்கு பேர் இந்தப் பதவிக்காக விண்ணப்பங்களை அனுப்புகின்றனர். ஒருவர் சாரதா நம்பி ஆரூரான். இவர் கல்லூரியில் தமிழ் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். தமிழறிஞராக இருந்ததைத் தவிர, இவருக்கு சட்டத்தைப் பற்றியோ, மக்களின் கஷ்டத்தைப் பற்றியோ எந்த அறிவும் இல்லை.



அடுத்தவர் ட்டி.சீனிவாசன். இவர் புள்ளியியல் துறையில் இணை இயக்குநர். ஆனால் இவர் விண்ணப்பித்ததற்கான முதல் காரணம், பேராசிரியர் அன்பழகனின் உதவியாளராக இவர் இருந்ததுதான்.



அடுத்த நபர் ஆர்.பெருமாள்சாமி. இவர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக இருந்து ஓய்வு பெற்றவர். இந்த பெருமாள்சாமியைப் போன்ற, சட்ட அறிவு துளியும் இல்லாத நபரை சவுக்கு பார்த்ததே இல்லை. ஒரு வழக்குக்காக இவரிடம் வாதாட சென்ற போது, சட்டம் குறித்த இவரது அறிவீனம் வெளிப்படையாக தெரிந்தது.



அடுத்து இப்பதவிக்கு விண்ணப்பித்த நபர்தான் நமது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அவர்தான் டி.ஆர்.ராமசாமி. அரசுப் பணியில் இருந்து கொண்டே, ஓய்வு பெற்றவுடன், தன்னை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கருணாநிதியிடம் விண்ணப்பபிக்கிறார். இதை கருணாநிதியும் ஏற்று, இவரை தகவல் ஆணையராக நியமிக்கிறார். 30.04.2008ல் பணியில் இருந்து ஓய்வு பெறும், டி.ஆர்.ராமசாமி, 01.05.2008அன்று தகவல் ஆணையராக நியமிக்கப் படுகிறார்.



எப்படி இருக்கிறது ? இது போல தகவல் ஆணையாளர்களாக நியமிக்கப் படுபவர்கள், கருணாநிதியின் கைப்பாவைகளாக இருப்பார்களா, அல்லது தகவல் வழங்குவார்களா ?

இந்த டி.ஆர்.ராமசாமி, 26-2001ல் கருணாநிதியின் செயலாளராக இருந்த போது, ஜெயலலிதா மீது லண்டன் ஓட்டல் வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யச் சொல்லி, கருணாநிதி சார்பாக, ஒரு நாளைக்கு ஐந்து முறை, விசாரணை அதிகாரியை போனில் மிரட்டியவர்தான் இந்த ராமசாமி.

இப்போது, இந்த ராமசாமி, தலைமை தகவல் ஆணையராக வேண்டுமென்று முயற்சி செய்து வருவதுதான் கொடுமையிலும் கொடுமை.

சமீபத்தில் இந்த ராமசாமியின் உடல்நிலை சரியில்லாமல் போகவும், இந்த ஆளின் சிகிச்சைக்கு அரசு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 12.54 லட்சம் வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது.

பிச்சைக்காரனா இந்த ராமசாமி ? சம்பளம் வாங்கவில்லை ? அரசுப் பொது மருத்துவமனைக்கு சென்றிருக்கிறானா இந்த ஆள் ? அங்கே நடைபாதையில் சிகிச்சைக்காக காத்திருக்கும் மக்களின் முகங்களை பார்த்திருக்கிறானா இந்த ராமசாமி ?

மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்ட இது போன்ற பன்றிகளை தகவல் ஆணையராக வைத்திருந்தால், மக்களுக்கு தகவல் எப்படி வரும் ? ஊருக்கெல்லாம் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், ராமசாமிக்கு மட்டும் 13 லட்சத்திற்கு சிறப்புத் திட்டமா ? (மரியாதைக் குறைவான வார்த்தைகளை பயன்படுத்துவதற்கு மூத்த பத்திரிக்கையாளர்கள் மன்னிக்க வேண்டும். ஆத்திரத்தை அடக்க முடியவில்லை )

தற்போது இந்த தகவல் ஆணையம் எப்படி செயல்பட்டு வருகிறது. தகவல் ஆணையத்தை இரண்டாக உடைத்து விட்டார் இந்த ராமசாமி. இப்போது ராமசாமி தலைமையிலான நான்கு பேர் ஒரு குழு. எஸ்.ராமகிருஷ்ணன் தலைமையிலான மூன்று பேர் இன்னொரு குழு.

இப்போது தகவல் ஆணையத்தின் முன்பு ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் இருக்கின்றன. இன்று அனுப்பும் அப்பீல், விசாரணைக்கு வருவதற்கு, 8 மாதம் முதல் ஒரு வருடம் ஆகிறது.

அண்ணாமலை பல்கலைகழகத்திடம் ஒரு தகவல் கேட்கப் படுகிறது. அந்தத் தகவல பல்கலைகழகம் வழங்கவில்லை. தகவல் ஆணையம் 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று உத்தரவிடுகிறது. 12 வாரங்கள் ஆகின்றன. அப்போதும் தகவல் வழங்கப் படவில்லை. மீண்டும் தகவல் ஆணையத்திற்கு அப்பீல் வருகிறது. அப்போது, இந்த டி.ஆர்.ராமசாமி என்ன உத்தரவிட்டார் தெரியுமா ? “சீக்கிரம் தகவலை கொடுங்கள்“ என்பதுதான் அது.

டி.ஆர்.ராமசாமி தலைமையிலான குழு, தொடர்ந்து அரசுக்கு ஆதரவான உத்தரவுகளை மட்டுமே பிறப்பிப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

சட்டநாதன் என்ற ஊரகவளர்ச்சித் துறையில் பணியாற்றும் நேர்மையான அதிகாரியை தகவல் ஆணைய பதிவாளராக நியமிக்க வேண்டும் என்று தற்போதைய தலைமை ஆணையர் பரிந்துரைக்கிறார். இதற்கான கருத்துரு, ஊரக வளர்ச்சித் துறை, தலைமைச் செயலகம் ஆகிய இடங்களில் ஒப்புதல் பெறப்படுகிறது. தலைமைச் செயலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித் துறை செயலாளர் அசோக் வரதன் செட்டியிடம் இந்தக் கோப்பு செல்லும் போது, இதை ராமசாமியிடம் சொல்லி விடுகிறார் செட்டி. கோப்பு, துறை அமைச்சர் ஆற்காடு வீராச்சாமியிடம் செல்லும் போது, ராமாசாமி, ஆற்காட்டை சந்தித்து, இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறார். அதன் படியே, ஆற்காடு ஒப்புதல் அளிக்க மறுத்து விடுகிறார்.

ஒரு லட்சம் விண்ணப்பங்களை நிலுவையில் வைத்திருக்கும் தகவல் ஆணையத்தின் பணியாளர்களின் எண்ணிக்கை தெரியுமா ? ஆணையத்தின் செயலாளர் முதல், பெருக்குபவர் சேர்த்து மொத்தம் ஐம்பதுக்கும் குறைவு. இதற்கான பணியிடங்களை கூடுதலாக கேட்டுப் பெற வேண்டிய தகவல் ஆணையர் ராமசாமி அரசிடம் அனுப்பிய கருத்துரு என்ன தெரியுமா ?

ஆணைய கட்டிடத்தை முழுமையாக குளிர்பதன வசதி செய்வது. அனைத்து ஆணையர்களுக்கும் புதிய கார் வேண்டுமென கேட்டுள்ளார் ராமசாமி. இந்த ராமசாமியை செருப்பால் அடிக்க வேண்டாம் ?

இது போன்ற மக்கள் விரோதிகளைத் தான் கருணாநிதி தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்.

அடுத்த தலைமை தகவல் ஆணையாளராக நியமிக்கப் படுவதாக பரவலாக பேசப்படும் ஸ்ரீபதி எப்படிப் பட்ட நபர் ?



லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயிடம் காவல்துறை அதிகாரிகள் ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங்கிடம் புகார் ஒன்று வந்து, அது குறித்து விசாரித்துக் கொண்டு இருக்கிறார். அப்போது, உபாத்யாயிடம் தொலைபேசியில் பேசிய ஸ்ரீபதி, இது குறித்து விசாரிக்காதீர்கள். ஐபிஎஸ் அதிகாரிகள் மீது இது போல விசாரணை நடத்தக் கூடாது என்று மிரட்டுகிறார். நீங்கள் என்னை வந்து சந்தித்து விட்டு அதற்குப் பிறகு விசாரணை நடத்துங்கள் என்று உபாத்யாய்க்கு உத்தரவிடுகிறார்.



இந்த கேடுகெட்டவனுக்கு, தலைமை தகவல் ஆணையர் பதவி ஒரு கேடா ? 60 வயது வரை அரசுப் பதவி சுகங்களை அனுபவித்தது போதாதா ?

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் பரவலான சமூக விஷயங்களில் தலையிடும் மாதவிடம் சவுக்கு பேசியபோது, முதலில் இந்த நியமனங்கள் வெளிப்படைத் தன்மையாக செய்யப் பட வேண்டும் என்றார். எந்த அடிப்படையில் தகவல் ஆணையர்கள் நியமிக்கப் படுகிறார்கள் என்று ரகசியமாக வைத்திருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது என்றார். அரசுத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை இவ்வாறு நியமிப்பதால், முக்கிய வழக்குகளில் எளிதாக அரசு செல்வாக்கு செலுத்தி தகவல் அளிக்காமல் செய்து விடுவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறினார்.

மற்றோரு சமூக ஆர்வலரான நித்யானந் ஜெயராமன் சவுக்கிடம் பேசும் போது, மகாத்மா காந்தியை தகவல் ஆணையராக நியமித்தால் கூட, வெளிப்படையான தன்மையோடு இருக்க வேண்டும் என்றார். இப்போது அரசால் நாமினேட் செய்யப் பட்டிருக்கும் நபர்கள் தான் சரியான நபர்கள் என்பதற்கான எவ்வித ஆதாரங்களையும் அரசு வெளியிடாத நிலையில், இதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் நித்யானந்.



தலைமை தகவல் ஆணையர் பதவி என்பது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பாதுகாக்கும் ஒரு பதவி அந்தப் பதவிக்கு ஒரு நபரை நியமனம் செய்கையில் மிகுந்த கவனத்தோடு செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை தகவல் ஆணையர்களாக நியமனம் செய்வதால் அவர்களுக்கு பொதுமக்களின் கஷ்டத்தை விட, அரசு ஊழியர்களின் கஷ்டத்தின் மேல்தான் அதிக அக்கறை இருக்கிறது. அதனால் அவர்கள், அரசு ஊழியர்களுக்கு சாதகமாகவே பல நேர்வுகளில் முடிவெடுக்கிறார்கள் என்று கூறுகிறார்.

மேலும் அரசு அதிகாரிகளுக்குத் தான் நிர்வாகத்தைப் பற்றி நன்கு தெரியும் என்ற மாயை ஒன்று இருக்கிறது. இது தவறு. அரசு அதிகாரிகளுக்கு நிர்வாகம் நன்கு தெரியும் என்பது உண்மையானால், இந்தியா எங்கேயோ சென்றிருக்கும். அது ஒரு மாயை. அந்த மாயையை உடைக்க, அரசு அதிகாரிகள் அல்லாத ஒருவரை தலைமை தகவல் ஆணையராக நியமிக்க வேண்டும் என்று கூறினார் நித்யானந்த்.

எத்தனை சட்டங்கள் போட்டாலும், இந்த அரசு அதிகாரிகள் நினைத்தால், அந்த சட்டத்தை வலுவிழக்கச் செய்து விட முடியும் என்பதற்கு தமிழகம் ஒரு நல்ல உதாரணம்.

டெல்லியில் இருப்பது போன்று, தமிழகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான ஒரு நெட்வொர்க் இல்லாதது ஒரு மிகப் பெரும் குறை.

நித்யானந்த் மற்றும் மாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள், இதற்கான முன் முயற்சி எடுப்பார்களேயானால், சவுக்கு அவர்களுக்கு துணை நிற்கும்.

(ஜாபர் சேட் சார். உங்களுக்கு சவுக்கு இன்னைக்கு லீவ் விட்ருச்சு. நாளைக்கு உங்களைப் பத்தி எழுதும் என்ன… கோவிச்சுக்காதீங்க. சரி மணி ஆர்டர் வந்துச்சா ? பணம் இது வரைக்கும் எவ்ளோ கலெக்ட் ஆயிருக்கு ? அந்த பணத்துக்காவது ஒழுங்கா கணக்கு வையுங்க. ரகசிய நிதி மாதிரி இஷ்டத்துக்கு இருக்காதீங்க. இது சவுக்கு வாசகர்களோட பணம். ஒவ்வொரு பைசாவும் உழைப்பால வந்தது. ரத்த அழுத்தம் ரொம்ப அதிகமாயிடுச்சாமே ? சவுக்க படிக்காதீங்கன்னு சொன்னா கேக்குறீங்களா ? உடம்ப பாத்துக்குங்க. அடுத்த வாரமும் நெறய்ய மணி ஆர்டர் வரும் என்ன ?)

சவுக்கு

Wednesday, August 25, 2010

நிதானம் தவறி வரும் முதல்வர் கருணாநிதி



இந்தியாவிலேயே மிகச் சிறந்த சாணக்கியர் என்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டவர் கருணாநிதி. இவரின் சாணக்கியத்தனத்துக்கு முன்னால், எவரும் நிற்க முடியாது. கருணாநிதி கண்ணசைத்தால் ஒரு பொருள், திரும்பினால் ஒரு பொருள் என்று இவரின் அனைத்து அசைவுகளுக்கும் ஒரு பொருள் உண்டு.

அரசியலில் பல்வேறு புயல்களைச் சந்தித்தவர் கருணாநிதி. மிகப் பெரிய இரண்டு பிளவுகளை கட்சி சந்தித்தும், இன்னும், திமுகவை ஒரு கோட்டையாக கட்டி ஆண்டு வரும் கருணாநிதியின் திறமைகள் அசாத்தியமானவை.

இத்தனை திறமைகளோடு, இன்று ஐந்தாவது முறையாக முதல்வர் பொறுப்பில் இருந்து வரும் கருணாநிதி, நிதானம் தவறி வருகிறாரோ என்ற சந்தேகம், அரசியல் நோக்கர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

கருணாநிதிக்கு தமிழக மக்களை விடவும், தனது குடும்பத்தின் மீதுதான் அக்கறை அதிகம் என்பது அனைவரும் அறிந்த விஷயம் என்றாலும், அதை வெளிப்படையாக கருணாநிதி சொல்லிக் கொள்ள மாட்டார். தமிழுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் வாழ்கிறேன். கோடிக்கணக்கான அன்பு உடன்பிறப்புகளுக்காகத் தான் என் இதயம் துடித்துக் கொண்டிருக்கிறது என்றுதான் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

ஆனால் முதல் முறையாக, எனது குடும்பத்தினர் தான் முக்கியம். அவர்கள் சினிமாவுக்கு வந்தால் என்ன என்று பேசியிருக்கிறார். அவரின் கோபத்துக்கு காரணம், தினமணி நாளேட்டில் வந்த ஒரு சிறிய கார்ட்டூன்.



அந்த கார்ட்டூன் தொடர்பாக கருணாநிதி பேசியது.

“இந்த விழாவிற்கு வருகின்ற நேரத்தில், காலையில் நான் ஒரு பத்திரிகையைப் பார்த்தேன். அந்தப் பத்திரிகையிலே ஒரு விகடத் துணுக்கு. என்ன விகடத் துணுக்கு என்றால் - """"கலைஞர் வரலாற்றிலேயே முதன் முறையாக - கலைஞர் கதை வசனத்தில் - கலைஞர் பேரன் தயாரிப்பில் - கலைஞர் பேரன் இயக்கத்தில் - கலைஞர் பேரன் நடித்த - புத்தம் புதிய திரைக்காவியம் - கலைஞர் டி.வி. யில் மிக விரைவில் காணத் தவறாதீர்கள்"" என்று இப்படியொரு விளம்பரம் போன்ற விகடத் துணுக்கு. அந்தப் பத்திரிகையைப் படித்தவர்கள் எல்லாம் இதைக் கண்டிருக்கக் கூடும். """"அடடே……!"" என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது இது.
என்ன; கலைஞருக்கு மகன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேரன் இருக்கக் கூடாதா? கலைஞருக்கு பேத்தி இருக்கக் கூடாதா? அவர்கள் திரைப் படத்துறையிலே ஈடுபடக் கூடாதா? வேறு யாருக்கும் வாரிசுகள் இருந்து, அவர்கள் அந்தந்த துறையிலே ஈடுபட்டதே கிடையாதா? நான் உதாரணத்திற்காக சொல்கிறேன். இங்கேயுள்ள நம்முடைய சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களின் மகள்கள், மருமகன் தனுஷ் ஆகியோர் இல்லையா? அந்தக் குடும்பத்திலே ரஜினி மட்டும் தான் நடிக்கலாமா? தனுஷ் நடிக்கக் கூடாதா?

அந்தக் குடும்பம் மாத்திரமல்ல. நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். இந்தியாவிலே பிரிதிவி ராஜ் கபூர், பிரமாண்டமான நடிகர். மாநிலங்களவையிலே எட்டாண்டு காலம் உறுப்பினராக இருந்தவர். நானும் மறைந்த நண்பர் எம்.ஜி.ஆர். அவர்களும், அவருடைய சகோதரர் எம்.ஜி. சக்கரபாணி அவர்களும் மைசூரில் """"நாம்"" திரைப்படத் திற்காக சென்று பணியாற்றிக் கொண்டிருந்த போது - மைசூரில் பிரிதிவி ராஜ் கபூரின் நாடகம் """"பதான்"" என்ற தலைப்பிலே நடைபெற்றது. அதைக் காண நாங்கள் சென்றிருந்தோம்.



பிரிதிவி ராஜ் கபூர் நடித்தார். அவர் பல படங்களில் நடித்தார். """"அக்பர்"" அவர் நடித்த படம் தான். நீங்கள் கண்டிருப்பீர்கள். நாங்கள் பார்த்த """"பதான்"" நாடகத்தில், முக்கிய வேடத்தில் அமர்ந்திருக்கும் அவர், தன்னுடைய மனைவியை அழைத்து இருவரும் உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது - வாய் நிறைய தாம்பூலத்தைக் குதப்பிக் கொண்டு - சிரிப்பு வந்த காரணத்தால் அடக்க முடியாமல், அதை படுக்கை அறையிலேயே துப்புவார். அந்தக் காட்சியை ஆயிரக்கணக்கில் கூடியிருந்த மக்கள் அந்தத் தியேட்டரே அதிரக் கூடிய அளவிற்கு கையொலி செய்து வரவேற்பார்கள்.

அதை அவ்வளவு பெரிய நடிப்பாக மக்கள் கருதுகின்ற அளவிற்கு - அவ்வளவு பெரிய மகத்தான நடிகர் பிரிதிவி ராஜ் கபூர் - அவருடைய மகன் ராஜ் கபூர் நடிகர் இல்லையா? அவரும் மாநிலங்களவையிலே உறுப்பினராக இருந்தவர் அல்லவா? ராஜ் கபூரின் தம்பிகள் ஷம்மி கபூர், சசீ கபூர் அவருடைய மகன்கள் ரிஷி கபூர், ரந்தீவ் கபூர் இந்தக் கபூர்கள் எல்லாம் யார்? ஒரே குடும்பத்தினர் அல்லவா?

கலைஞர் வீட்டில் மாத்திரம் உதய நிதி, கலாநிதி, தயாநிதி, அருள்நிதி, அறிவு நிதி என்று வந்தால் அது ஆகாது. குறுக்கே நூல் போட்டவர்களுக்கு அது பிடிக்காது. இதற்காக ஒரு பெரிய கேலிச் சித்திரம் வரைகிறார்கள் என்றால் நான் அவர்களைக் கோபித்துக் கொள்ளவில்லை. அவர்கள் மீது வருத்தப்படவில்லை. ஆனால் உண்மையை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிரிதிவி ராஜ் கபூரின் பேரன் பேத்தி கொள்ளுப் பேரன், பேத்தி வரை இருக்கலாம் கலைத் துறையிலே - மற்றவர்களின் இல்லங்களில் இருக்கலாம் - என்னுடைய அருமை நண்பர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மகன் பிரபு இருக்கலாம், பிரபுவின் மகன் துஷ்யந்த்; - அவர் இருக்கலாம், ஆனால் கருணாநிதி மாத்திரம் இருக்கக் கூடாது. ஏன் என்றால் கருணாநிதி செய்கிற ஒரே ஒரு குற்றம் திராவிட இனத்திற்காக அவன் பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அவன் திராவிடச் சமுதாயத்திற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறான், அதை ஒழிக்க வேண்டும், அதை வீழ்த்த வேண்டுமென்ற குறுகிய நோக்கமே தவிர வேறு உண்மையான எண்ணமிருந்தால் என் பெயர் ஞாபகத்திற்கு வரும்போது, பிரிதிவி ராஜ் கபூரின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும்.



என் பெயர் ஞாபகத்திற்கு வந்த போது, நம்முடைய ரஜினி அவர்களின் பெயரும் ஞாபகத்திற்கு வந்திருக்க வேண்டும். நான் ஏதோ அவர் மீது கோபத்தாலோ, பொறாமையாலோ இதைச் சொல்லவில்லை. ரஜினி காந்த் அரசியலிலே முழுக்க முழுக்க இல்லாத காரணத்தால், அவரை விட்டு விடுகிறார்கள். நான் அரசியலிலே முழுக்க முழுக்க இருக்கின்ற காரணத்தால், கலைத் துறையிலே எனக்கு இருக்கின்ற ஈடுபாடு தான் காரணம் என்று சொன்னால், என்னைப் போன்ற அரசியலில் ஈடுபாடு உள்ளவர்கள், கலைத் துறை நண்பர்களை எப்படி நேசிக்க முடியும்?

கலைத்துறையிலே எப்படி தொடர்பு கொள்ள முடியும்? கலைத்துறையிலே உள்ள யார் எதிர்த்தாலும் அதைப்பற்றிக் கவலைப் படாமல், நட்புணர்வும், நேச உணர்வும் கொண்டிருக்கின்ற காரணத்தால் தான் தம்பி பாரதிராஜா இங்கே சொன்னதைப் போல இன்று நேற்றல்ல - ஆண்டாண்டு காலத்திற்கும் அவர்கள் என்னை நினைக்கின்ற அளவிற்கு - நான் அவர்களை நினைக்கின்ற அளவுக்கு அந்த இனிய தொடர்பு எங்களிடத்திலே இழைந்தோடிக் கொண்டிருக்கின்றது. அதை யாரும், எவரும் எந்த வகையிலும் தடுக்க முடியாது என்பதையும் அப்படி தடுக்க முடியாது என்பதற்கு பலமான சுவராகத் தான் பையனனூரில் 15 ஆயிரம் பேருக்கான வீடுகள் கட்டப்பட்டு, திறக்கப்படவுள்ளன என்பதையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். “

இந்த உரையில் குறிப்பிடப் படாமல் விடப்பட்டதும், கருணாநிதி பேசியதும் என்னவென்றால், “என் மனைவி என்ன மலடியா ? “ என்பது.

கருணாநிதி போன்ற வயது முதிர்ந்த அரசியல் அனுபவம் மிக்க தலைவரின் வாயில் இருந்து பொது மேடையில் வரக் கூடிய வார்த்தைகள் இது வல்ல. அவரின் முதிர்ச்சிக்கும், அனுபவத்திற்கும், இந்த வார்த்தைகள் பொருத்தமானவை அல்ல.

தினமணியில் வெளி வந்த ஒரு சாதாரண கார்ட்டூனுக்கு, கருணாநிதியின் இந்த எதிர்வினையானது மிக மிக கூடுதலானது. தேவையற்றது.

கருணாநிதியின் இந்த எதிர்வினைக்கு காரணம், தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை செம்மொழி மாநாட்டுக் குழுவில் எல்லாம் போட்டு, அவரை கவுரவித்தேனே. அந்த நன்றியை நினைத்துப் பார்க்காமல் என்னைப் பற்றி இப்படி கார்ட்டூன் போட்டிருக்கிறார்களே என்ற ஆதங்கம் மற்றும் கோபம்.

தினமணி ஆசிரியர் வைத்தியநாதனை கருணாநிதி செம்மொழிக் குழுவில் போட்டது, வைத்தியநாதனுக்கு கவுரவம் அல்ல. கருணாநிதிக்குத் தான் கவுரவம். இது போல செம்மொழிக் குழுவில் போட்டால், தன்னைப் பற்றி எதுவும் எழுத மாட்டார்கள் என்று எண்ணுவது, கருணாநிதியின் நிதானமின்மையையே காட்டுகிறது.

ஒரு கார்ட்டூனுக்கு எதிர்வினையாக, ராஜ்கபூர் பதான் நாடகத்தில் வெற்றிலையை குதப்பி துப்பினார், அதை மக்கள் ரசித்தார்கள் என்று பேசுவதை எதில் சேர்த்துக் கொள்வது ?

திரைப்படத் துறையினருக்கும், தனக்கும் இருக்கும் உறவை யாராலும் பிரிக்க முடியாது என்று கருணாநிதி பேசியிருப்பது, அவரது ஆதங்கத்தை காட்டுகிறதே தவிர, யதார்த்தத்தை காட்டவில்லை. ஆட்சி மாறினால், இன்று கருணாநிதிக்கு விழா எடுக்கும் இந்த காகங்கள், நேரு உள்விளையாட்டு அரங்கில், பச்சை நிற மேடையில், பச்சை இருக்கைகளால், அரங்கத்தையே பச்சையாக்கி விழா எடுக்கப் போகிறார்களா இல்லையா ?

வெளியில் சொல்ல முடியாமல், திரைப்படத் துறையினரும், தயாரிப்பாளர்களும், பெரும் பொருமலில் இருக்கிறார்கள் என்பதை கருணாநிதியின் மனது நம்ப மறுக்கிறது. பல ஆண்டுகளாக திரைப்படத் தயாரிப்புத் தொழிலில் இருந்து, பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனங்களையெல்லாம், நேற்று பெய்த மழையில் முளைத்த காளான்களான, ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், சன் பிக்சர்சும், க்ளவுட் னைன் பிக்சர்சும், ஆக்டோபஸ் போல வளைத்து கபளீகரம் பண்ணுவதை மகிழ்ச்சியாகவா எதிர்கொள்வார்கள் ?

இன்றே திரைப்டத் துறையினர், எத்தனை பேர் அதிமுகவோடு ரகசியமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கருணாநிதிக்கு தெரியுமா ?

என்னுடைய குடும்பத்தினர் திரைப்படம் தயாரித்தால் விமர்சிக்கிறார்கள் என்று ஆதங்கப் படுகிறாரே கருணாநிதி….. எங்கிருந்து வந்தது, இவரது குடும்பத்தினருக்கு இவ்வளவு பணம் ? அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமலா இவ்வளவு பணம் வந்தது ?



கருணாநிதியின் அடுத்த சறுக்கல், விஜயகாந்த், தான் நடிக்கும் படங்களுக்கு சம்பளத்தை கருப்புப் பணமாக பெறுகிறார் என்று அறிக்கை விட்டது.

கருப்புப் பணம் வைத்திருப்பதும், அரசு அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து ஊழல் செய்வதும் ஒன்றா ? விஜயகாந்த் கருணாநிதி போல, ஐந்து வருடங்கள் முதலமைச்சராக இருந்து சேர்த்த சொத்துக்கள் இல்லையே இவை ?

கருப்புப் பணமாக விஜயகாந்த் வாங்குகிறார் என்கிறாரே கருணாநிதி… தன்னுடைய பேரன்கள் தயாரிக்கும் எந்திரன் படத்தில் கருப்புப் பணமே இல்லை என்று உறுதியாக கூற முடியுமா கருணாநிதியால் ?

ரெட் ஜெயன்ட் பிக்சர்சும், க்ளவுட் நைன் பிக்சர்சும் கருப்புப் பணம் இல்லாமலே திரைப்படத்தை எடுத்து முடித்து விடுவார்கள் என்று கருணாநிதியால் கூற முடியுமா ?

இது போல நிதானம் தவறி, தேவையற்ற அறிக்கைகளை கருணாநிதி விடக் கூடியவர் அல்ல. ஆனால், இது போன்ற அறிக்கைகளை கருணாநிதி விட்டிருப்பது, அவர் நிதானம் தவறி வருகிறார் என்பதையே காட்டுகிறது.

மேலும், கருணாநிதி, தற்போது அவரின் செயலாளர் ராஜமாணிக்கம் மற்றும் உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட்டின் பிடியில் இருப்பதாக விபரம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

பெரும்பாலான விஷயங்களில் இவர்கள் இருவரும் கூறும் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே கருணாநிதி முடிவெடுப்பதாக கூறுகிறார்கள்.

தங்களின் வசதிப்படி, கருணாநிதியை முடிவெடுக்க வைத்து, அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தித் தரும் பல காரியங்களை இந்த நிழல் முதல்வர்கள் இருவரும் செய்து வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

கருணாநிதியின் மகன், மகள்களை விட, இந்த நிழல் முதல்வர்களுக்கு, செல்வாக்கு அதிகம் இருப்பதால், இவர்கள் போக்கிலேயே பல அரசு முடிவுகள் எடுக்கப் படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சமீபத்தில் பொட்டு சுரேஷ் என்ற நபரோடு விகடன் நிறுவனத்திற்கு ஏற்பட்ட உரசல் தொடர்பாக பத்திரிக்கையாளர்களை சந்தித்த கருணாநிதி அவர்களோடு உரையாடிய போது, கருணாநிதி இரண்டு வார்த்தைகள் பேசினால், ராஜமாணிக்கம் இருபது வார்த்தைகள் பேசியதாக தகவல்கள் கூறுகின்றன.

பொட்டு விஷயத்தை ஜாபர் சேட் பார்த்து முடித்து விடுவார் என்று தரப்பட்ட உறுதி மொழி மீது இது வரை எந்த நடவடிக்கைகளும் இல்லை என்றும், அடுத்த மாதம், விகடன் குழுமத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்கு மதுரையில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப் பட்ட வழக்கு, இது வரை வாபஸ் பெறப் படவில்லை என்பதும், இந்த நிழல் முதல்வர்களின் செல்வாக்கினாலேயே என்று கூறப் படுகிறது.



தேவையற்ற முறையில் பத்திரிக்கையாளர்களை பகைத்துக் கொள்ளும் அளவுக்கு கருணாநிதி, பக்குவமில்லாத அரசியல்வாதி இல்லையென்றாலும், விகடன் விஷயத்தில் அரசு கடைபிடிக்கும் அணுகு முறை மிக மோசமான விளைவுகளை திமுக அரசுக்கு ஏற்படுத்தும் என்பது தெரிந்தும், இந்த நிழல் முதல்வர்கள், கருணாநிதி மீது செல்வாக்கு செலுத்தி, ராஜமாணிக்கம் மற்றும், ஜாபர் சேட் ஆகிய இருவருக்கும், விகடன் குழுமத்தோடு தனிப்பட்ட முறையில் இருக்கும் விரோதத்துக்காக இந்த பிரச்சினையை பயன் படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் கூறப் படுகிறது.

அடுத்த மாதம் மதுரையில் வழக்கு நடக்கும் போது, தமிழகமெங்கும் இருந்து பத்திரிக்கையாளர்கள் மதுரையில் திரள திட்டமிட்டிருக்கும் சூழலில், அரசுக்கு இது ஒரு பெரும் பிரச்சினையாக உருவாக இருக்கிறது என்றும் கூறப் படுகிறது.

இது தவிர, திமுக தலைவர்கள் வட்டத்தில் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய இன்னொரு முணுமுணுப்பு, நேற்று கட்சியில் சேர்ந்த குஷ்பூ, துணை முதல்வர் அளவுக்கு, செல்வாக்கோடு இருப்பதாக கூறப் படுகிறது. முதல்வர் இல்லத்திற்கு எந்த நேரம் வேண்டுமானாலும் அப்பாயின்ட்மென்ட் இல்லாமல் செல்வதற்கும், எப்போது வேண்டுமானாலும் முதல்வரை சந்திப்பதற்கும், குஷ்பூவால் மட்டும் முடிகிறது என்றும், கட்சியின் மூத்த தலைவர்களை விட, குறுகிய காலத்தில் குஷ்பூ செல்வாக்கு பெற்று விட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியை திமுக கூட்டணியில் சேர்க்காமல் காலம் தாழ்த்துவது கூட, இந்த இருவரின் செல்வாக்காலேயே என்று தகவல்கள் கூறுகின்றன.

தேர்தல் ஆண்டில் அடுத்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று விருப்பமிருந்தால், திமுக அரசு மிக மிக கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க வேண்டும். ஆனால், இந்த கட்டுச் சோற்று பெருச்சாளிகளை வைத்துக் கொண்டு, திமுக அரசு எப்படி தேர்தலை சந்திக்கப் போகிறது என்பதே அரசியல் நோக்கர்கள் எழுப்பும் கேள்வி.
சவுக்கு

Tuesday, August 24, 2010

கமிஷனர் கண்ணாயிரம்.



கருந்தேள் கண்ணாயிரம், கைதி கண்ணாயிரம் கேள்விப் பட்டிருக்கிறோம். அது என்ன புதுசா ? கமிஷனர் கண்ணாயிரம் என்று கேட்கிறீர்களா ?

நம்ப சென்னை மாநகர கமிஷனர் ராஜேந்திரன்தான் அந்த கண்ணாயிரம். இவர் பெயர் ஏன் கண்ணாயிரம் என்றால், இவர் கண் வைக்காத இடமே இல்லை. அது பற்றி விரிவாக சொல்ல இயலாது.



சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், அடிப்படையில் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவர்தான்.

இவர் தந்தை, போஸ்ட் மேனாக இருந்தவர். அம்மா டீச்சர். குடும்பத்தில் இவரை கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார்களாம். முதலில் பேங்க்கில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அதன்பிறகு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதி ஐபிஎஸ் பணிக்கு வந்தார்.

இவருக்கு இரண்டு மகள்கள் என்பது ஊருக்குத் தெரியும்.
ஆனால், ஒரு மகன் உண்டு என்பது யாருக்காவது தெரியுமா... தெரியாது.

காரணம், அந்த மகன் இவர் முதல் மனைவியின் மகன். இந்தப் பையன் சிந்தாதிரிப் பேட்டையில்தான் தற்போது இருக்கிறானாம்.

இவர் சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் டி.ஐ.ஜி&யாக இருந்த போது, இவருடைய முதல் மனைவியின் மகன் ஒரு திருட்டு வழக்கில் சிந்தாதிரிபேட்டை போலீஸார் கைது செய்துவிட, ‘உங்க அப்பா யார்ரா?’ என்று போலீஸார் அதட்டல் போட, ‘எங்கப்பா ஒரு டி.ஐ.ஜி. பெயர் ராஜேந்திரன்’ என்று சொன்னானாம்.

ஆடிப் போன போலீஸ், அப்போது உளவுத்துறை கண்காணிப்பாளராக இருந்த கந்தசாமியிடம் சொல்ல, அவர் ராஜேந்திரனிடம் தகவல் சொல்லி, அந்தப் பையனை பக்குவமாக வெளியே அழைத்து வந்தார்களாம்.



அப்பத்தான் இவருக்கு முதல் மனைவி இருக்கும் விவரமே வெளியே தெரியவந்ததாம். முதல் மனைவியை இவர் இதுவரையில் விவகாரத்துச் செய்யவில்லையாம்.

ஆனால், இரண்டாவது மனைவியைத்தான் மனைவி என்று ரெக்கார்டுகளில் பதிவு செய்திருக்கிறாராம். இது தொடர்பாக அகில இந்தியப் பணி நடத்தை விதிகள் என்ன கூறுகிறது தெரியுமா ?

THE ALL INDIA SERVICES (CONDUCT) RULES, 1968

19. Restriction regarding marriage.- 19 (1) No member of the Service shall enter into, or contract a marriage with a person having a spouse living; and

19 (2) no member of the Service having a spouse living, shall enter into, or contract, a marriage with any person :

Provided that the Government may permit a member of the Service to enter into or contract, any such marriage as is referred to in clause (1) or clause (2) if it is satisfied that-

(a) Such marriage is permissible under the personal law applicable to such member of the Service and the other party to the marriage and

(b) there are other grounds for so doing.

ஆக, இவர் இரட்டைத் திருமண வழக்கில் சிக்க வேண்டியவர். தோண்டித் துருவி விசாரித்தால் நிறைய பூதங்கள் இவர் விவகாரத்தில் புறப்பட்டு வரும் என்று தகவல்கள் கூறுகின்றன.

அவசரப்படாதீர்கள்... இவரைப் பற்றி இன்னும் நிறைய கதைகள் இருக்கிறது. வல்லம்பர் இனத்தைச் சேர்ந்த இவர், தன்னை முக்குலத்தோர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறவர்.

இவர் தற்போது பெசன்ட் நகரில் பிரமாண்ட பங்களா கட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார். அந்த பங்களா பல லட்ச ரூபாய் மதிப்புள்ளது. இந்த பங்களா அமைந்திருக்கும் மனை, வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கியது.

கடந்த வாரம் வரை இவருக்கு லெப்ட், ரைட், சென்டராக இருந்தவர், சண்முகம் என்ற ஆய்வாளர். இப்போது இவருக்கு நேர்ந்த கதி, பதிவின் இறுதியில்.

இந்த சண்முகம் 1991ம் ஆண்டு தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது, அப்போதைய அமைச்சர் டி.எம்.செல்வகணபதியிடம் பி.எஸ்.ஓவாக இருந்தவர்.

சண்முகமும் செல்வகணபதியும் வன்னியர் என்பதுதான் இங்கே இருவரையும் இணைத்து வைக்கிறது.

இந்த சண்முகம் வன்னியர், அந்த காலத்திலிருந்தே மு.க. ஸ்டாலினின் உற்றத் தோழரான ராஜா சங்கருக்கும் உற்றத் தோழர்.

செல்வகணபதிக்கு பி.எஸ்.ஓவாக இருக்கும்போதுதான், ராஜேந்திரனோடு நெருக்கமாகிறார் இந்த பொட்டு சண்முகம்.

காரணம், தான் ஒரு தேவர் என்று சொல்லிக் கொள்ளும் ராஜேந்திரன், சசிகலாவுக்கு தூரத்து உறவு என்றும் சொல்லிக் கொள்வார். அந்த அடிப்படையில்தான், சசிகலா மூலம் அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் இவர் உளவுத் துறை எஸ்.பியாக இருந்தார்.

பிறகு, அமைச்சராக இருந்த செல்வகணபதியிடமிருந்து, உளவுத்துறைக்கு மாற்றம் செய்து கொண்டு வந்தார், இந்த ராஜேந்திரன். அதுமுதல், ராஜேந்திரன் எங்கு போனாலும், இவரும் பின்னாலேயே போய்விடுவார். இவருக்குத் தெரியாமல் கண்ணாயிரம் அசைய மாட்டார். கண்ணாயிரத்தின் கண் அசைவைப் பார்த்து அவரின் விருப்பங்களை நிறைவேற்றுவதில், சண்முகம் வல்லவர். சண்முகத்தின் தொழில் திறமையைப் பார்த்து, கண்ணயிரம், தான் பணியில் இருந்து ஓய்வு பெறும் வரை வேறு எங்கும் மாறுதலில் செல்லக் கூடாது என்று கூறி விட்டார்.

தற்போது சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ராஜேந்திரன் அறைக்குப் பின்னாலேயே இவருக்கு அறை ஒன்று ஒதுக்கப்பட்டிருந்தது.

சென்னை மாநகர போலீஸ் உளவுப் பிரிவின் துணை ஆணையராக இருக்கும் சத்தியமூர்த்தி முதல்கொண்டு, சென்னையின் எல்லா துணைக் கமிஷனர்களும் அவர்களுக்கு கீழ் பணியாற்றும் எல்லா போலீஸாரும் கமிஷனருக்கு போடும் சல்யூட்டைக் காட்டிலும் சண்முகத்துக்கு கொஞ்சம் விரைப்பாகவே சல்யூட் போட்டு, அடிமைத்தனத்தை அப்பட்டமாக வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள், கடந்த வாரம் வரை.

சென்னை தி.நகர் ஜி.என்.செட்டி ரோட்டில் இருக்கும் ஒரு பிரபல ஸ்டார் ஹோட்டலில் ஷண்முகத்துக்கு நிரந்தரமாக அறை ஒன்றை ஹோட்டல் நிர்வாகம் கொடுத்திருக்கிறது. அங்கு அடிக்கடி போய் உட்கார்ந்து கொள்ளும் சண்முகம், அங்கிருந்தபடியே சென்னை மாநகர போலீஸை இயக்கிக் கொண்டிருந்தார். அவர் அங்கு அமர்ந்து கொண்டு செய்யும் சட்டவிரோத காரியங்கள் கொஞ்ச நஞ்சமில்லை. அனைத்தும் கண்ணாயிரத்தின் கண்ணசைவோடு தான்.



சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தில் இருந்த கண்ணாயிரம், அப்போது அங்கே தன்னுடன் இருந்த சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பரிந்துரை செய்ததின் பேரிலேயே தமிழகத்தின் சட்டம் & ஒழுங்கு ஏ.டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அந்தப் பொறுப்பில் இருந்து கழன்று கொண்டு தனக்கு சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் பதவி கிடைக்க வேண்டும் என்று பலமாக காய் நகர்த்தினார் ராஜேந்திரன்.

மாநகர கமிஷனராகப் போடுவதற்கு இரண்டு பேர்களை பரிசீலனையில் வைத்திருந்ததாம் அரசு. ஒருவர் கண்ணாயிரம்.

இன்னொருவர், நரேந்திர பால் சிங். அவர், குற்றப் பிரிவு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிக் கொண்டிருந்தவர். நரேந்திர பால் சிங்கும் சாமானியப்பட்டவர் அல்ல. மாமூல் வாங்குவதில் மன்னர்.

மாதந்தோறும், அவர் மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம் ஒன்று நடத்துவார். “குற்ற ஆய்வுக் கூட்டம்” என்றால், ”மாமூலைக் கொடுடா மண்டு” என்று அர்த்தம். நம்பள யாரு கேக்கப் போறா என்று, நரேந்திர பால் சிங், மாதாந்திர மாமூல் வேட்டையில் இருக்க அது கண்ணாயிரத்துக்குத் தெரிந்து விட்டது. ‘இதுதான் சமயம்...’ என்று துள்ளிக் குதித்த கண்ணாயிரம், தனக்கு நெருக்கமான ராமானுஜம் மூலமாக காய் நகர்த்த ஆரம்பித்தார். அப்போது லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநராக இருந்தவர் ராமானுஜம்.

இந்தத் தகவல் அறிந்த, ராமானுஜம் சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்துக்குள் புகுந்து ரெய்டு செய்ய தன் துறை ஆட்களுக்கு உத்தரவிட்டு விட்டார். அவர்களும் சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்துக்குச் சென்று விட்டார்கள். இந்த திடீர் சோதனைக்கு தலைமை தாங்கிச் சென்றது, தற்போது லஞ்ச ஒழிப்புத் துறையில் தலைமையக கூடுதல் எஸ்.பியாக இருக்கும் எஸ்.ராஜேந்திரன்.

மாமூல் வசூலிக்கும் மீட்டிங்குக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் குவிந்துவிட, அப்போது அங்கு எஸ்.பியாக இருந்த ராஜேஸ்வரி, தகவலை நரேந்திர பால் சிங்கிடம் சொல்லிவிட்டார். நான் வரும் வரை பொறுத்திருக்கச் சொல்லுங்கள் என்று கூறிய நரேந்திர பால் சிங், அலுவலகம் வந்ததும், நீங்கள் உங்கள் சோதனையை தொடருங்கள் என்று கூறி விட்டு முதல் மாடியில் இருந்த தனது அறைக்குச் சென்று விட்டார். அந்த பெண் எஸ்பியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு, கூடுதல் எஸ்.பி.ராஜேந்திரனும், சிங் வரும் வரை ஒரு மணி நேரம் மங்குணி அமைச்சர் போல காத்திருந்ததுதான் வேடிக்கை.

தனது அறைக்குச் சென்ற நரேந்திரபால் சிங், அப்போது டிஜிபியாக இருந்த கே.பி.ஜெயினிடம் முறையிட்டிருக்கிறார். ஜெயின், ராமானுஜத்திற்கு போன் போட்டு, ”என்னது இது. சின்னப் புள்ளத் தனமா இருக்கு” என்று கூறவும், ராமானுஜம், தனது மங்குணி அமைச்சருக்கு போன் போட்டு, உடனே திரும்பி வாருங்கள் என்று கூறுகிறார். அவர் பெயரைக் கேட்டு மங்குணி அமைச்சர் தனது படை பரிவாரங்களுடன் திரும்புகிறார்.

லஞ்சமாக வாங்கிக் குவித்த பணத்தையெல்லாம் கையோடு பிடித்திருந்தும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாருக்கு வேறு வழியில்லை. திரும்ப வேண்டியதாகி விட்டது. அந்தப் பிரச்னை அப்படியே வெளியே தெரியாமலும் அமுக்கப்பட்டு விட்டது.

இருந்தாலும், ராமானுஜமும் ராஜேந்திரனும் சேர்ந்து கொண்டு இந்தப் பிரச்னையை வெளியே கசியவிட்டார்கள். ஏற்கனவே பல நாட்கள் உளவுத் துறையில் இருந்ததால், தனது தொடர்புகளை பயன்படுத்தி, ராமானுஜம் இந்தத் தகவலை பத்திரிக்கைகளுக்கு தெரிவிக்கிறார்.

விவகாரம் துணை முதல்வர், முதல்வர் என்று எல்லாதரப்பிலும் எடுத்துச் சொல்லப்பட்டது.

இது போதாதா? விளைவு துணை முதல்வர் ரெகமென்ட் செய்த கண்ணாயிரம், சென்னை மாநகர போலீஸ் கமிஷனராகி விட்டார்.

ஏற்கனவே கமிஷனராக இருந்த ராதாகிருஷ்ணன் நாயுடுவுக்கு சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் போலீஸ் மோதலில் சிக்கல் இருந்ததால், அவரும் அங்கிருந்து தன்னை மாற்றிக் கொண்டுவிட படாதபாடு பட்டுக் கொண்டிருந்தார். மாற்றும் போது வேறு ஏதாவது டம்மி போஸ்டாக போட்டு விட்டால் என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்த போது, கண்ணாயிரத்தின் காய் நகர்த்தல்கள் பலனைத் தர, இருவரும் மியூச்சுவலில் டிரான்ஸ்பர் ஆகி விட்டார்கள்.

இப்படி சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக வந்த பிறகு கண்ணாயிரம் அடிக்கும் கூத்துக்கள் மேற்சொன்னப்படிதான் போகிறது.

இன்று வரையில் ‘நேர்மை(?)’யான அதிகாரியாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கும் ராமானுஜத்துக்கும் கண்ணாயிரத்துக்கும் நட்பு தொடருகிறது.

ராமானுஜத்தின் மகளுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போகிறது. பொறுப்பு முழுக்க சண்முகத்திடம் கொடுக்கப்பட்டுவிட்டது.

பெண்ணுக்கு நூறு பவுன் நகை வரையில் ஏற்பாடு செய்து கொடுப்பதாகச் சொல்லி, நல்லி சில்க்ஸ் அதிபரிடம் சொல்லிவிட்டார்களாம். அவரும் நகைக்கு ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம். திருமணம் எழும்பூர் ராஜா முத்தையா செட்டியார் மகாலில் நடக்கிறது.

செட்டியாரிடம் பேசி மகாலையும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுத்து விட்டாராம் சண்முகம். சாப்பாடு முதல் கொண்டு எல்லாமே சண்முகமும் சென்னை மாநகர போலீஸாரும்தான் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்களாம்.

எல்லாமே கண்ணாயிரத்தின் உத்தரவின் பேரில்தான் நடக்கிறதாம். விழாவுக்கு தி.மு.கவின் பெருந்தலைகள் அத்தனை பேரும் வருவார்களாம். பரிசுப் பொருட்களை அள்ளித் தருவார்களாம். அதை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்ணாயிரம் ராமானுஜத்திற்கு வாக்கு கொடுத்திருக்கிறாராம்.

இந்த லட்சணத்தில் ராமானுஜம் தான் ஒரு நேர்மையான அதிகாரி என்று ஒரு இமேஜை மெயின்டெயின் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நம்ப மறுப்பவர்கள், நல்லியை அணுகவும்.

கண்ணாயிரத்திற்கு இரண்டு மகள்கள் என்று சொன்னேன் அல்லவா ?. இருவருமே அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்கள்தான். முதல் மகளுக்கு திருமணமாகி விட்டது.

அவரும் அனிமேஷன் கோர்ஸ் படித்தவர்தான். அவர்கள் வேலைக்குச் செல்லாமல், வீட்டிலேயே இருந்திருக்கின்றனர். சண்முகம் மூலமாக துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நண்பர் ராஜா சங்கரிடம் சொல்ல, அவர் இப்போது முதல்வர் தயவில் தயாரிக்கப்படும் படங்கள் அத்தனைக்கும் ராஜேந்திரன் மகள்கள் மற்றும் மருமகனை அனிமேஷன் சம்பந்தப்பட்ட பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ளச் சொல்லி உத்தரவு போட்டு விட்டார்.

இது ஒருபுறமிருக்க, கடந்த சில நாட்களுக்கு முன்பாக கண்ணாயிரம் பேட்சைச் சேர்ந்த பல போலீஸ் அதிகாரிகளும் மத்திய அரசு திட்டம் ஒன்றின் கீழ் ஹைதராபாத் மற்றும் லண்டனுக்கு பயிற்சிக்காக சென்று திரும்பினார்கள்.

கண்ணாயிரம் ஹைதராபாத் பயிற்சி பள்ளியில் இருந்த எல்லா நாட்களும் அங்கு வந்திருந்த போலீஸ் அதிகாரிகள் அவ்வளவு பேருக்கும் மாலையில் விருந்தும், காக் டெயில் பார்ட்டியும் வைத்துள்ளார். இதற்கான மொத்தச் செலவுகளையும் சென்னை போலீஸார் ஏற்பாடு செய்தார்கள். இந்தச் செலவு மட்டும் பல லட்சத்தைத் எட்டியிருக்கிறது. தங்கள் பேட்ச் மேட்டுகளிடம் தான் எவ்வளவு பெரிய ஆள் என்று காட்டிக் கொள்வதற்காகவே, கண்ணாயிரம் இது போன்ற பார்ட்டிகளை கொடுத்ததாக கூறுகிறார்கள்.

டி.கே.ராஜேந்திரன் தலைமையில் கே.பி.மகேந்திரன், எஸ்.கே.டோக்ரா மற்றும் லல்லாம் சங்கா ஆகிய நான்கு அதிகாரிகள் மட்டும் ஹைதராபாத் மற்றும் லண்டன் பயணம் பற்றி முதல்வரிடம் சொல்லி வாழ்த்துப் பெற்றனர்.



ஏற்கனவே, தனது பெயரைச் சொல்லி, தனது தம்பிகள் மூலமாக கட்டப் பஞ்சாயத்து செய்து வரும் ராதாகிருஷ்ணன் மீது கடும் அதிருப்தியில் இருந்த ஜாபர் சேட், பாண்டியன் மூலமாக, ராதாகிருஷ்ணன் மற்றும் கண்ணாயிரத்திற்கு இந்த நான்கு அதிகாரிகளும் சந்திக்கையில் நேரம் கிடைக்காத வண்ணம் ஏற்பாடு செய்திருக்கிறார்.

மற்ற நான்கு அதிகாரிகளும் பார்த்து விட்டார்களே, அவர்களுக்கு மட்டும் எப்படி நேரம் கிடைத்தது என்று அதிர்ச்சி அடைந்த கண்ணாயிரமும், ராதாகிருஷ்ணனும் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மறு நாள் கருணாநிதியின் அப்பாயின்ட்மென்ட் வாங்கி விட்டு சந்தித்து வாழ்த்துப் பெறுகின்றனர்.



கருணாநிதி ஜாபரிடம் என்னய்யா இது, ஏன் தனித்தனியா வந்து பார்க்கிறார்கள் என்று கேட்க, இதுதான் சாக்கு என்று, ராதாகிருஷ்ணனைப் பற்றியும், கண்ணாயிரத்தைப் பற்றியும் கருணாநிதியிடம் இருவரைப் பற்றியும், ஏராளமாக புகார் சொல்லுகிறார் ஜாபர் சேட்.

ஜாபர் சேட், ராஜேந்திரனை கமிஷனர் பதவியில் இருந்து மாற்றிவிட காய் நகர்த்தத் தொடங்கி விட்ட தகவல் கண்ணாயிரத்துக்கு கிடைக்கிறது.

என்னடா செய்வது என்று கண்ணாயிரம் யோசித்துக் கொண்டிருந்த வேளையில், அவர் மேசையில் இருந்த பேக்ஸ் மிஷினில் ஒரு புகார் வருகிறது. அந்தப் புகார் என்னவென்றால், ஜாபர் சேட் மனைவி ஏற்கனவே தனது கணவருக்கு வீடு இருக்கும் விவகாரத்தை மறைத்து, தனக்கோ, தனது கணவருக்கோ, தனது பிள்ளைகளுக்கோ வீடோ, மனையோ, அடுக்கு மாடி குடியிருப்போ இல்லை என்று சான்றளித்து வீட்டு வசதி வாரியத்தை ஏமாற்றி, மோசடி செய்து 1.25 கோடி மதிப்பிலான வீட்டு மனையை திருவான்மியூரில் பெற்றிருக்கிறார். அந்த மனையில் முதல்வர் செயலர் ராஜமாணிக்கத்தின் மகன் துர்கா சங்கர் மற்றும் லேண்ட் மார்க் நிறுவனத்துடன் இணைந்து 12 வீடுகளை கட்டி வருகிறார், இவரை நம்பி பணம் கொடுத்து வீடு வாங்கும் அப்பாவிகளை ஏமாற்றுகிறார் என்றும், அந்த வீட்டின் கட்டுமானத்தை நிறுத்துமாறும், ஜாபர் சேட்டின் மனைவி மீது மோசடி வழக்கு பதிவு செய்யுமாறும், ஜாபர் சேட் மீது குற்றத்திற்கு உடந்தையாக இருந்தார் என்று வழக்கு பதிவு செய்யுமாறும் அந்தப் புகாரில் இருக்கிறது.

அந்தப் புகாரை கையில் எடுத்த கண்ணாயிரம், கூடுதல் டிஜிபி யாக இருந்தாலும், தனது பதவிக்கு கீழாக ஐஜியாக இருக்கும் ஜாபர் சேட்டை சென்று அவர் அலுவலகத்தில் சந்திக்கிறார். அவர் மனைவி மீது வந்திருக்கும் புகாரின் மீது நடவடிக்கை எடுக்க மாட்டேன் என்றும், தன்னை கமிஷனர் பதவியிலிருந்து மாற்ற வேண்டாம் என்றும் கேட்கிறார். பதிலுக்கு ஜாபர் சேட் அவரிடம் ஒரு கோரிக்கையை வைக்கிறார். உடனடியாக ஏதாவது ஒரு வழக்கு போட்டு சவுக்கையும், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் செயலர் புகழேந்தியையும் ஒரு வாரத்துக்குள் கைது செய்ய வேண்டும் என்று கூறுகிறார்.

கண்ணாயிரத்துக்கு நெருக்கடி. செய்தால் பெரும் சிக்கலாகும். செய்யாவிட்டால் கமிஷனர் பதவி போய் விடும். என்ன செய்வது என்று முழித்துக் கொண்டு உள்ளார் என்று கூறப் படுகிறது.

ஆனால், ஜாபர் சேட், தான் சொன்ன காரியத்தை இவர் செய்து முடிக்கவில்லை என்பதால் கண்ணாயிரத்தை மாற்றி விட்டு, டி.கே.ராஜேந்திரனை கமிஷனராக போட்டால், அரசுக்கு நல்ல பெயர் கிடைக்கும், கண்ணாயிரம் போனில் இப்படியெல்லாம் பேசுகிறார், இவருடனெல்லாம் பேசுகிறார் என்று டேப்பை போடுகிறார். இதைக் கேட்டு ஒன்றும் சொல்லாமல் கருணாநிதி மவுனமாக இருந்ததாக கூறப் படுகிறது.

கண்ணாயிரத்தோடு இத்தனை நெருக்கமாக இருந்த சண்முகம், கடந்த வாரம் மாறுதல் செய்யப் பட்டு “காத்திருப்போர் பட்டியலில்“ வைக்கப் பட்டுள்ளார். இத்தனை செல்வாக்காக இருந்த சண்முகம், காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருப்பது பல புருவங்களை உயர்த்தியிருக்கிறது.

இந்த சண்முகம் காத்திருப்போர் பட்டியலுக்குப் போனதற்கு, இரண்டு கதைகள் காவல்துறை வட்டாரத்தில் உலா வருகின்றன.

பெண் சோக்கு உள்ள எல்லா மாநகர ஆணையர்களும், ரகசியமாக ஒரு விபச்சார தடுப்பு பிரிவை வைத்திருப்பார்கள். அந்தப் பிரிவில் உள்ள அதிகாரிகள், நட்சத்திர ஓட்டல்களில் திடீரென்று புகுந்து, திரைப்பட நடிகைகள் யாருடனாவது இருக்கையில் உள்ளே நுழைந்து, கைது, செய்தித் தாளில் புகைப்படம் என்று மிரட்டுவார்கள். மிரண்ட நடிகைகள் என்ன சொன்னாலும் கேட்பதாக கூறியவுடன், கமிஷனரிடம் போனைப் போடுவார்கள். அந்த கமிஷனர், டீல் பேசி விட்டு சிறப்புப் படையை திரும்ப வரச் சொல்லி விடுவார்.

இது போல, “தி பார்க்“ ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ஒரு பிரபலமான மூன்றெழுத்து நடிகை இது போல சிக்கியதாகவும், அவரைப் பிடித்தது சண்முகம் என்றும், கண்ணாயிரத்திடம் போனில் பேசியவுடன் சண்முகம் திரும்ப அழைக்கப் பட்டார் என்றும், இதற்குப் பிறகு, கண்ணாயிரமும் அந்த மூன்றெழுத்து நடிகையும் மிக நெருக்கமானதாகவும் கூறப் படுகிறது. இந்த சண்முகம், அந்த நடிகையை தொடர்பு கொண்டு, தனி ஆவர்த்தனம் நடத்த முயற்சி எடுத்ததாகவும், இது தெரிந்த கண்ணாயிரம், இவரின் மாறுதலுக்கு பரிந்துரைத்ததாகவும், கூறப் படுகிறது.

மற்றொரு கதை, பல கோடிகள் புரளும், பெரிய மனிதர் சம்பந்தப் பட்ட ஒரு ரியல் எஸ்டேட் டீலில் சண்முகம் தலை நுழைத்து, ஒரு பெரிய தொகையை அடிக்க முயற்சிக்கும் போது, மாட்டிக் கொண்டு, மாறுதல் செய்யப் பட்டதாகவும் கூறப் படுகிறது.

எது எப்படியோ. காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் சண்முகம், கடும் கோபத்தில் இருக்கிறார். இவர் ஜாபர் சேட்டை சந்தித்து, ஏன் என்னை காத்திருப்போர் பட்டியலில் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்கிறார். அவரை சமாதானப் படுத்த, ஜாபர் சேட் கொஞ்ச நாள் மருத்துவ விடுப்பில் செல்லுங்கள், பிறகு நல்ல போஸ்டிங் வாங்கித் தருகிறேன் என்று வாக்குறுதி கொடுத்து, சண்முகத்தை விடுப்பில் செல்லச் சொல்லியிருக்கிறார்.

ஆனால் சண்முகம் இந்த சமாதானத்தால் சமாதானம் அடையாமல், கண்ணாயிரத்தின் ரகசியங்களை ஒரு முக்கிய நபரிடம் கூறத் தொடங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அவரை தொடர்பு கொள்ள சவுக்கு முயற்சித்து வருகிறது. ஓரிரு நாட்களில் சந்திக்கக் கூடும். சந்தித்த பின் கிடைக்கும் தகவல்கள் சவுக்கு வாசர்களுக்கு அல்லாமல் வேறு யாருக்கு ?

இப்போது சொல்லுங்கள். கமிஷனர் கண்ணாயிரம் என்ற பெயர் இவருக்கு பொருத்தம் தானே ?

சவுக்கு

Sunday, August 22, 2010

சவுக்கை முடக்கு. அடுத்த திட்டம்.



சவுக்கை முடக்க அடுத்த கட்ட திட்டம் தயாராகி விட்டது என நம்பகமான தகவல்கள் வந்துள்ளன. கடந்த 10 நாட்களாகவே, சவுக்கின் கணினியை முடக்க பல்வேறு திட்டங்கள் உளவுத் துறையால் அரங்கேற்றப் பட்டு வருகின்றன.

முதலில் அவர்கள் கையாண்டது, வைரஸை அனுப்புவது. இந்த வைரஸ் வெற்றிகரமாக வெளியேற்றப் பட்டது. அடுத்ததாக, Browser hijacking முயற்சி செய்யப் பட்டது. இதற்கு அடுத்து, ரிமோட் கம்ப்யூட்டர் மூலமாக சவுக்கின் கணினிய ஹேக் செய்யப் பட்டது. இது அத்தனையும் வெற்றிகரமாக சவுக்கால் முறியடிக்கப் பட்டது.

தற்போது உளவுத் துறை ஐஜி ஜாபர் சேட், சென்னை மாநகர ஆணையாளர் ராஜேந்திரனிடம் சொல்லி, சவுக்கையும், வழக்கறிஞர் புகழேந்தியையும், ஏதாவது ஒரு வழக்கில் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கடும் நெருக்கடி கொடுத்து வருவதாக உறுதியான தகவல்கள் வந்திருக்கின்றன.



எப்படி கைது செய்வது, என்ன வழக்கை போடுவது என்று கமிஷனர் ராஜேந்திரன் கடும் யோசனையில் இருப்பதாகவும், எப்படி இருந்தாலும் வரும் வெள்ளிக் கிழமைக்குள் கைது உறுதி என்றும் தகவல்கள் கூறுகின்றன. கைது நடவடிக்கை தவிரவும், சவுக்கு தளத்தை தடை செய்வதற்கும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப் பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திரன் சார். அந்த ஆளு ரொம்ப மெரட்டுனா பயப்படாதீங்க. ஜாபர் சேட் மனைவி மேல மோசடி புகார் இருக்குதாமே உங்ககிட்ட ? அதுல எப்ஐஆர் போடுவேன்னு பதிலுக்கு மிரட்டுங்க. உங்களப் பத்தியும் சவுக்கு தகவல் சேகரிச்சுக்கிட்டு இருக்கு சார். சீக்கிரம் உங்களை இந்த வார “சவுக்கு நட்சத்திரமா“ அறிவிக்கிறோம்.

ஜாபர் சார். எத்தனை வாட்டி சொன்னாலும் உங்களுக்கு மண்டையிலே ஏறவே ஏறாதா சார். இந்த மிரட்டலுக்கெல்லம் சவுக்கு டீம் அஞ்சாது சார். இந்த தளத்தை நீங்கள் தடை செய்தீர்கள் என்றால், அடுத்து savukku.in, savukku.info, savukku.org, savukku.tv அல்லது dubukku.net. dubukku.in, dubukku.info, dubukku.com என்று பல்வேறு பெயர்களில் வந்து கொண்டேதான் இருப்போம். சவுக்கு வெறும் தளமல்ல சார். இது மக்கள் இயக்கம். நல்லவர்களின் ஆதரவு சவுக்குக்கு எப்போதும் உண்டு. இது போல உண்மையை எழுதுபவனை தடை செய்தாலும் செய்வீர்கள், உங்கள் போக்கை மாற்றிக் கொள்ள மாட்டீர்கள். அப்படித்தானே ?



சவுக்கு உங்களை மாதிரி போறவன் வர்றவன்கிட்டயெல்லாம் காசு வாங்கறது கிடையாது சார். சவுக்குக்கு காப்பாத்தறதுக்கு பல கோடி சொத்தெல்லாம் கிடையாது சார். அதனால் தொடர்ந்து உங்களைப் பற்றியும், உங்கள் வண்டவாளங்களைப் பற்றியும் எழுதிக் கொண்டே இருப்போம். உங்க ரூமிலே சவுக்கு ஒட்டுக் கேட்பு கருவி வச்சுருக்கறதா பேசிக்கறாங்களே உண்மையா சார் ?

வைகுண்டராஜனை கைது செய்வதற்காக உளவுத் துறைக்கு நியமிக்கப் பட்டு, பிறகு வைகுண்டராஜனோடு சமாதானம் பேசி, அதிகார மையத்திற்கு 20 கோடி, முதலமைச்சர் செயலாளர்களுக்கு தலா ஒரு கோடி கொடுத்து விட்டு, நீங்கள் 3 கோடியை ஆட்டையை போட்டீர்களே … … இதற்கு ஏற்பாடு செய்து கொடுத்த அரங்கநாயகத்திற்கு ஒரு கோடி கொடுத்தால் குறைந்தா போய் விடுவீர்கள் ? அரங்கநாயகம் பணம் கேட்டவுடன் வெறும் 5 லட்சம் கொடுக்கிறீர்களே ? அவ்வளவு பேராசையா சார் உங்களுக்கு ?

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு இயக்குநர் போலாநாத். ஆனால் நீங்கள் அவர் பெயரைச் சொல்லி பணம் வாங்குகிறீர்களே ? நியாயமா சார். போக்குவரத்து அலுவலகங்களிலும், பதிவுத் துறையிலும், வணிகவரித் துறையிலும், லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனைகளை நடத்துகிறதென்று அந்தத் துறைகளைச் சேர்ந்த ஒரு குழு உங்களைச் சந்தித்து இனிமேல் அதிரடி சோதனைகளை நடத்தக் கூடாது என்று கேட்டுக் கொண்டதும், நீங்கள் லஞ்ச ஒழிப்புத் துறை அடிக்கடி சோதனைகள் நடத்துவதால் அரசு ஊழியர்கள் கடும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள், இது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் என்று கருணாநிதிக்கு ஒரு குறிப்பு அனுப்பி விட்டு, இதற்கு பிரதி பலனாக மாதந்தோறும் ஒரு பெரும் தொகையை வாங்குவது கூட பரவாயில்லை. ஆனால், போலோநாத்துக்கும் சேர்த்து நான் வாங்கிக் கொள்கிறேன் என்று அந்த ஆளை ஏன் சார் தேவையில்லாம மாட்டி விடுறீங்க ? அந்த ஆள் வாங்கினால் பரவாயில்லை. வாங்காத ஆளு பேரை ஏன் இப்படி கெடுக்கறீங்க ?

நீங்க இதுல மட்டுமா சார் மாமூல் வாங்கறீங்க. மணல் அள்ளுபவர்களின் தலைவர் போலச் செயல்படும் கே.சி.பழனிச்சாமியின் மகனிடம் இருந்து ஒரு பெரும் தொகையை மாதந்தோறும் வாங்கிக் கொண்டிருக்கவில்லை ? உங்கள் வீட்டுக்கு மட்டும் அவர் மாதந்தோறும் 25 லட்சம் கொடுக்க வில்லை ?

பொறியியல் கல்லூரிகளின் அட்மிஷன் நடைபெறும் இந்த நேரத்தில் கல்வித் துறை அதிகாரிகளை விட்டு சோதனை நடத்தாமல் இருப்பதற்காக நீங்களும் கர்ம வீரரும் சேர்ந்து ஒரு பெரும் தொகையை வசூல் செய்யவில்லை ? உங்களிடம் பெரும் தொகையை கொடுத்த தைரியத்தில், பொறியியல் கல்லூரிகளில் வசூல் கொடி கட்டிப் பறக்கிறது தெரியுமா ?

டீசல் விலை உயர்த்தப் பட்டதும் சென்னை தவிர இதர நகரங்களில் ஓடும் தனியார் பேருந்துகள் அரசு அனுமதி இல்லாமலேயே, 50 காசுகளை கூடுதலாக வசூல் செய்வது தெரிந்து நீங்களும், கர்ம வீரரும், போலிப் பாதிரியும் இணைந்து 1000 பஸ் அதிபர்களிடம் இருந்து ஒரு பெரிய அமவுண்ட்டை ஆட்டையயை போடவில்லை ?



விதிகளை மீறி கட்டப் பட்டுள்ள சென்னை நகரில் உள்ள கட்டிடங்களை இடிக்கச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. சென்னை மாநகராட்சி இடிப்பு நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதற்கு, இந்த கட்டிட உரிமையாளர்களிடம் நீங்களும் கர்ம வீரரும் ஒரு பெரும் தொகையை வாங்கவில்லை ?

இன்று ஜுனியர் விகடனை மிரட்டிக் கொண்டிருக்கும் பொட்டு சுரேஷ் மீது ரியல் எஸ்டேட்டில் பலரை மிரட்டுவதாக புகார்கள் வருவதாக கூறி, சுரேஷை மிரட்டி நீங்கள் ஒரு பெரிய தொகை பார்க்கவில்லை ?

லாட்டரி அதிபர் மார்ட்டினிடம், கருணாநிதியே வாங்கியிராத ஒரு பெரும் தொகையை நீங்கள் வாங்கவில்லை என்று கூறுங்கள் ?

இதையெல்லாம் எழுதினால், பொய் வழக்கு போடுவீர்கள். சிறையில் அடைப்பீர்கள். சித்திரவதை செய்வீர்கள்.



சவுக்கு சிறைக்கு போனால் போராளியாகத் தான் செல்லும். ஆனால் நீங்கள் சிறைக்கு செல்லும் போது திருடனாக உள்ளே செல்வீர்கள் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இன்று நீங்கள் சர்வ வல்லமை படைத்த கடவுளுக்கு நிகரானவராக இருக்கலாம். ஆனால் மாற்றத்தை தவிர மாறாதது எதுவுமே இல்லை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

உங்களுக்கு நான் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்

பத்துத் திங்கள் சிறையிலிருந்தேன்
பள்ளிக்கூட அறையிலிருந்தேன்
எத்தனையோ சிறைகளை நான் பார்த்துவிட்டேன்

போடா போ

போடா.. போ..

சவுக்கு

Saturday, August 21, 2010

சட்டமும் ஒழுங்கீனமும். பாகம் 2



கடைசியாக எந்த இடத்தில் விட்டோம் ? ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு மாறுதல் செய்த இடத்தில் விட்டோம் அல்லவா ?

ராதாகிருஷ்ணன் லஞ்ச ஒழிப்புத் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு 1ன் தலைவராக நியமிக்கப் படுகிறார். சிறப்பு புலனாய்வுக் குழு 1 என்பது, முன்னாள் முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய வழக்குகளை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப் பட்டது. இந்த பொறுப்பு வந்ததனால் அடிக்கடி இயக்குநரை சந்திக்கவும், தலைமைச் செயலகம் செல்லவும் ராதாகிருஷ்ணனுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. பெயருக்கு கருணாநிதிக்கு எதிரான வழக்குகளை பார்ப்பது என்றாலும், கருணாநிதிக்கு எதிரான வழக்குகள் ஒன்று அல்லது இரண்டு மட்டும் தான். மற்றவை மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த போது நடந்த ஊழல்கள் தொடர்பானவை.

மேம்பாலம் கட்டியதில் ஏற்பட்ட ஊழல் தொடர்பாக கருணாநிதி மீது இருந்த வழக்கு, அவர் நள்ளிரவு கைதுக்குப் பிறகு சிபி.சிஐடிக்கு மாற்றப் பட்டது. கருணாநிதி ராஜ்குமார் கடத்தலில் பணம் வாங்கி விட்டார் என்பது தொடர்பாக ஏற்பட்ட வழக்கு எந்த முன்னேற்றமும் இல்லாமல் கிடப்பில் நெடுநாட்கள் கிடந்தது.

பெரிய அளவில் வேலைகள் இல்லாததால், ராதாகிருஷ்ணன் தனக்கு கிடைத்த இந்த நேரத்தை தன்னுடைய பெருமையை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக் கொண்டார்.

இவர் முதலில் செய்த வேலை இரண்டு காவல்துறையின் உயர் அதிகாரிகள் செய்த ப்ராஜெக்டை தனது ப்ராஜெக்ட் என்று திருடி அதற்காக இங்கிலாந்து அரசு வழங்கும் ராணி விருதை பெற்றது. முதல் ப்ராஜெக்டை உருவாக்கியவர். முதல் ப்ராஜெக்ட் ப்ரதீப்.வி.பிலிப் என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கிய திட்டம்.


இந்தத் திட்டத்தை தான் உருவாக்கியதாக சொல்லி அவர் கோபித்துக் கொள்ளக் கூடாது என்ற அவரும் ஒரு ப்ராஜெக்டை உருவாக்கியதாக சொல்லி இங்கிலாந்து அரசாங்கம் வழங்கும் ராணி விருதை பெற்றார்.

அடுத்த திட்டம் தற்போது சிறைத் துறை தலைவராக இருக்கும் ஜலத குமார் திரிபாதி என்ற ஐபிஎஸ் அதிகாரி உருவாக்கியது. இதையும் பெரும் பங்கு இவர்தான் செய்தது போல சொல்லி, சர்வதேச காவல்துறை தலைவர்கள் சங்கம் வழங்கும் இரண்டாவது விருதையும் பெற்றார்.


முதல் ப்ராஜெக்ட் என்பது என்னவென்றால், மகளிர் காவல் நிலையங்களில் பெண்களின் குறை தீர்ப்பது தொடர்பாக இணைய வழியிலான ஒரு பயிற்சி மென்பொருள். அதாவது என்னவென்றால், பெண்கள் தொடர்பான ஒரு பிரச்சினை மகளிர் காவல்நிலையம் வருகிறது என்றால், அந்த விபரங்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அது அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று சொல்லும். மகளிர் காவல்நிலையங்களுக்கு சென்றவர்களுக்கு, இன்று இந்த மென்பொருள் எந்த நிலையில் இருக்கிறது, முதலில் இப்படி ஒரு மென்பொருள் இருக்கிறதா என்பது தெரியும்.

இந்த மென்பொருளை தயாரித்தவர், ராஜேஷ் சங்கரன் என்ற ஒரு மென்பொறியாளர். இவர் அப்போது தன்னுடைய நண்பரோடு சேர்ந்து சொந்தமாக ஒரு மென்பொருள் தயாரிப்பு நிறுவனம் வைத்திருந்தார். ராணி விருதில் கிடைத்த தொகையை இவருக்கு தராமல், ஒரு சொற்ப தொகையை கொடுத்து விட்டு ராதாகிருஷ்ணன் மொத்தமாக ஆட்டையை போட்டு விட்டார்.


இதில் ராஜேஷ் சங்கரனுக்கு வருத்தம். எனக்கு பேமென்ட் குறைவாக இருக்கிறது என்று. தனது வருத்தத்தை ராதாகிருஷ்ணனிடம் சொல்லுகிறார். ராதாகிருஷ்ணன் உடனே, ராஜேஷிடம் கவலைப் படாதீர்கள், உங்களுக்கு இன்னொரு ஆர்டர் தருகிறேன் என்று நம்பிக்கை அளிக்கிறார். ராஜேஷுக்கு ஆர்டர் தர வேண்டும் என்பதற்காகவே, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு, புதிதாக ஒரு சாப்ட்வேர் தயாரிக்க வேண்டும், அப்போதுதான் வேகமாக வேலை நடக்கும் என்று இயக்குநர் நாஞ்சில் குமரனிடம் சொல்லுகிறார். நாஞ்சில் குமரன், பூம்பூம் மாடு போல தலையை ஆட்டுகிறார். அரசுக்கு மென்பொருள் தயாரிப்பதற்காக ஐந்து லட்சம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பப் பட்டு நிதியும் ஒதுக்கீடு செய்யப் படுகிறது.

ஒரு அரசுத் திட்டம் ஐந்து லட்சத்துக்கு குறைவாக இருந்தால், லிமிட்டெட் டெண்டர். அதிகமாக இருந்தால் ஓபன் டெண்டர். லிமிடெட் டெண்டர் என்றால் ஒரு ஐந்து அல்லது பத்து நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்ப வேண்டும். அதில் யார் டெண்டர் தருகிறார்களோ அவர்களில் குறைவான தொகையை கோட் செய்திருப்பவர்களுக்கு ஆர்டர் கிடைக்கும்.

லிமிடெட் டெண்டர் தொடர்பான வேலைகள் தொடங்கும் முன்பே, ராஜேஷ் சங்கரனை அழைத்து, மென்பொருள் தொடர்பான வேலைகளை தொடங்கும் படி கூறுகிறார் ராதாகிருஷ்ணன். ஏனென்றால், அவருக்குத் தான் டெண்டர் வழங்கப் படப் போகிறது என்பது ராதாகிருஷ்ணனுக்கு தெரியாதா ?



ராஜேஷ் அப்போது தன்னுடைய சொந்த நிறுவனத்தை மூடி விட்டு மாஃபாய் எனப்படும் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். ராதாகிருஷ்ணன் விருப்பப் படியே அந்த நிறுவனத்திற்கே மென்பொருள் ஆர்டர் கொடுக்கப் படுகிறது.



லஞ்ச ஒழிப்புத் துறையில் பல ஆண்டுகள் பணியாற்றி அனுபவம் பெற்றவர்களோடு, இந்த மென்பொருள் எப்படி தயாரிக்க வேண்டும் என்று விவாதம் நடக்கிறது. அவர்கள் சொன்ன அத்தனை யோசனைகளையும் நிராகரித்த ராதாகிருஷ்ணன், அவர் இஷ்டப் படி நடைமுறைக்கு சற்றும் ஒத்து வராத வகையில் மென்பொருளை தயாரிக்க சொல்லுகிறார்.

ஐஜி சொல்லை யார் மீற முடியும் ? அவர் உத்தரவுப் படியே மென்பொருள் தயாரிக்கப் படுகிறது. மென்பொருளை பயன் படுத்திய ஊழியர்கள், இது வேலைப் பளுவை கூட்டுகிறது, இதை பயன்படுத்த முடியாது என்று தங்கள் இயலாமையை தெரிவிக்கின்றனர். ஆனால், இவர் ஆலோசனை சொல்லி தயாரித்த மென்பொருள் அல்லவா ? கட்டாயம் பயன் படுத்தியே ஆக வேண்டும் என்று உத்தரவு போடுகிறார். ஒரு இரண்டு நாட்களுக்கு பயன்படுத்திய ஊழியர்கள், மென்பொருளை பயன்படுத்துவதை தவிர்க்கின்றனர்.

பிறகு மீண்டும் ஒரு முறை மற்ற ஊழியர்களோடு ஆலோசனை செய்கிறார் ராதாகிருஷ்ணன். அவர்கள் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். அந்த மாற்றங்களை செய்ய, மேலும் ஒரு லட்ச ரூபாய் ஆகும் என்று கூறுகிறார்கள் மாஃபா மென்பொருள் நிறுவனத்தார். அரசிடம் நிதி பெற முடியாது என்பதால் ரகசிய நிதியிலிருந்து ஒரு லட்ச ரூபாய் வழங்க ஏற்பாடு செய்கிறார் ராதாகிருஷ்ணன்.

அப்படி மாற்றங்கள் செய்தும் ஊழியர்கள் பயன்படுத்த சிரமப்படும் அந்த மென்பொருள், ராதாகிருஷ்ணன் என்ற ஆணவக்கார அதிகாரியின் பிடிவாதத்தால் ஆறு லட்ச ரூபாய் அரசுப் பணத்தை முழுங்கி விட்டு, இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒருவரும் பயன்படுத்தாமல் உறங்குகிறது.

அடுத்ததாக ஐந்து லட்ச ரூபாய்க்கு உயர் ரக ஸ்கேனர் ஒன்று வாங்க வேண்டும் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். அதன் படியே அரசிடம் உத்தரவு பெற்று வாங்கப் படுகிறது. அவ்வாறு வாங்கிய ஸ்கேனர் கருவியை தன்னுடைய அலுவலக அறையில் வைத்துக் கொண்டு, தான் செய்யும் பிஎச்டி ஆராய்ச்சி படிப்புக்காகவும், லண்டன் ராணி விருது தொடர்பான வேலைகளுக்காகவும் அதை பயன் படுத்திக் கொண்டார்.

லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அப்படிப் பட்ட உயர் ரக ஸ்கேனர் அவசியமே இல்லை. ஆனால் ராதாகிருஷ்ணன் தன் அரிப்பை சொரிந்து கொள்வதற்காக அரசுப் பணத்தில் வாங்கிய ஐந்து லட்ச ரூபாய் ஸ்கேனர், இன்று லஞ்ச ஒழிப்புத் துறையில் தூசி படிந்து கிடக்கிறது.

ராணி விருது தொகையானது ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப் பட்டதன்று. ராதாகிருஷ்ணன் செய்யும் மகளிர் காவல்நிலைய மென்பொருளுக்காக வழங்கப் பட்டது. 50 லட்ச ரூபாய்க்கும் மேற்பட்ட தொகை அது. இந்த தொகையில் ஆட்டையைப் போட வேண்டுமே … அதற்கும் வழி கண்டு பிடித்தார் ராதாகிருஷ்ணன்.

மாதந்தோறும், லஞ்ச ஒழிப்புத் துறையின் ரகசிய நிதியில் இருந்து கம்ப்யூட்டர் ஸ்டேஷனரி 40 முதல் 50 ஆயிரம் வரை வாங்கப் படும். அந்த பில்களை வைத்து, ராணி விருது தொகையில் செலவு வைத்து அந்தப் பணத்தை மொத்தமாக ஆட்டையைப் போட்டார் ராதாகிருஷ்ணன்.

இன்று ராணி விருதுக்கான கணக்கு வழக்குகளை ஆராய்ந்து பார்த்தால், முக்கால் வாசித் தொகை ஸ்டேஷனரி வாங்கியே செலவாகியது தெரிய வரும்.

ராதாகிருஷ்ணன் இப்படிப்பட்ட “டுபுக்கு“ என்பது தெரிந்திருந்தால், ராதாகிருஷ்ணனுக்கு இங்கிலாந்து அரசாங்கம் ராணி விருதுக்கு பதில் சாணி விருது வழங்கியிருக்கும். நியாயமாக அந்த விருது பெறத்தான் தகுதி படைத்தவர் இவர்.

இப்படியெல்லாம் சேர்த்துதான் மணப்பாக்கத்தில் எட்டு க்ரவுண்டுகள் நிலமும், பூந்தமல்லியில் ஆறு க்ரவுண்டுகள் நிலமும் வாங்கி வைத்திருக்கிறார் ராதாகிருஷ்ணன். இதைப் பற்றி பிறகு பார்ப்போம்.

அடுத்து ராதாகிருஷ்ணன் மேற்பார்வை செய்த வழக்குகளில் ஒன்று, கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை புதுப்பித்ததில் நடந்த ஊழல் என்பது. அந்த வழக்கில், 300 கோடிக்கு மேல் ஊழல் நடந்ததாகவும், உடனடியாக எஃப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று மு.க.ஸ்டாலின், சாந்தாஷீலா நாயர், ஜே.ராதாகிருஷ்ணன், கோலப்பன், சி.பி.சிங், ஜோதி.ஜகராஜன், மாலதி, ராஜேஷ் லக்கானி உள்ளிட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் பதிவு செய்ய அனுமதி வேண்டும் என்று அரசுக்கு அறிக்கை அனுப்புகிறார் ராதாகிருஷ்ணன்.

பதினைந்து ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அனுமதி கேட்டு அரசுக்கு அனுப்பினால் அனுமதி கிடைக்குமா ? கிடைக்க வில்லை. ஒரு டெக்னிக்கல் கமிட்டி அமைத்து நன்றாக விசாரித்து மீண்டும் ஒரு அறிக்கை அனுப்புமாறு அரசிடமிருந்து பதில் வந்தது.

இதற்கிடையில் மு.க.ஸ்டாலின் மீது எப்ஐஆர் போட அறிக்கை அனுப்பியது நான்தான் என்று ஜெயலலிதாவிடம் கூறி, மார்க் வாங்காத தனது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் பெற்றார் ராதாகிருஷ்ணன்.

அரசு உத்தரவுப் படி அமைக்கப் பட்ட டெக்னிக்கல் கமிட்டி மீண்டும் மு.க.ஸ்டாலின் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள், பொறியாளர்கள் மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பியது. அந்த அறிக்கையின் மீது அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மாலதி மீது எப்ஐஆர் போட வேண்டும் என்று அறிக்கை அனுப்பி விட்டு, இன்று மாலதியின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருக்கும் ராதாகிருஷ்ணனின் திறமை எப்படி ?

மாலதி ராதாகிருஷ்ணனை கலக்காமல் எந்த முடிவுகளும் எடுப்பதில்லை என்பதுதான் இன்று நிலைமை.

அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறையில் இருந்த போது ராதாகிருஷ்ணன் டெல்லி செல்கிறார். அவரிடம், உள்துறை அமைச்சகத்தின் அதிகாரிகள், சர்வதேச காவல்துறை பணியாக கொசோவோ நாட்டில் அமைதிப் படையில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பத்தை அளித்து, லஞ்ச ஒழிப்புத் துறையில் அவரோடு பணியாற்றும் அஷோக்குமார் என்ற ஐஜியிடம் கொடுத்து விடுமாறு கூறுகிறார்கள். உதாரணத்திற்கு அதற்கான கடைசி தேதி 25 என்று வைத்துக் கொள்வோம்.



22ந் தேதி சென்னை திரும்பிய ராதாகிருஷ்ணன் தனக்கு மட்டும் கொசோவா போஸ்டிங்குக்கு விண்ணப்பம் அனுப்பி விட்டு அஷோக் குமாரிடம் 26ம் தேதி மறந்து விட்டேன் என்று கூறி, அந்த விண்ணப்பத்தை அளிக்கிறார். அஷோக் குமார் இவரை விட சீனியர் என்பதால், அவருக்கு கொசோவா போஸ்டிங் கிடைத்து விடக் கூடாதாம். அவ்வளவு அல்பம்.



மார்க் வாங்காத இவரது மகனுக்கு முதல்வர் கோட்டாவில் அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கியது போலவே, அசோக் குமார் மகளுக்கும் முதல்வரிடம் சொல்லி, அண்ணா பல்கலைகழகத்தில் சீட் வாங்கித் தருகிறேன் என்று கூறுகிறார் ராதாகிருஷ்ணன். நேர்மையான அதிகாரியான அஷோக் குமார் மறுத்து விடுகிறார். இவரது மகள், மேனேஜ்மென்ட் கோட்டாவில் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் படித்து பொறியியல் முடித்தார்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு ஆய்வாளர் பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த ஆய்வாளர் சொந்த வேலையாக விடுப்பு எடுத்து விட்டு அமேரிக்கா செல்கிறார். அமெரிக்கா சென்ற அவர், அங்கிருக்கும் காவல்துறையினர் எப்படி வேலை செய்கிறார்கள், என்னென்ன மாற்றங்களை தமிழக காவல்துறையில் கொண்டு வர முடியும் என்று, அமெரிக்க காவல்துறை அதிகாரிகளிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு உரையாடுகிறார். அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகள், அந்த ஆய்வாளரின் திறமையைக் கண்டு வியக்கின்றனர். அந்த ஆய்வாளர் இந்தியா திரும்பிய பிறகும் தொடர்ந்து அவரோடு ஈமெயிலில் தொடர்பில் இருக்கின்றனர்.

ஒரு நாள் அந்த அமெரிக்க அதிகாரிகள் தமிழகம் வருகை தந்த போது, லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலகம் வந்து, அந்த ஆய்வாளரை சந்திக்க முயற்சிக்கின்றனர். இவர்கள் அமெரிக்காவிலிருந்து வந்து அந்த ஆய்வாளரை சந்திக்க வந்திருக்கின்றனர் என்ற செய்தி ராதாகிருஷ்ணனை எட்டுகிறது. உடனே, அந்த அமெரிக்க காவல்துறை அதிகாரிகளை தன்னுடைய அறைக்கு வரவழைக்கும் ராதாகிருஷ்ணன், அந்த ஆய்வாளர் மாறுதலில் சென்று விட்டதாக கூறி, தான் பெற்ற ராணி விருது தான் செய்யும் ஆராய்ச்சி போன்றவைகளையும், தமிழக காவல்துறையை தனி ஆளாக சீரமைக்க தான் எடுக்கும் முயற்சிகளையும் எடுத்துக் கூறுகிறார்.

அந்த அமெரிக்க அதிகாரிகள் மீண்டும் தொலைபேசியில் அந்த ஆய்வாளரை தொடர்பு கொண்டு விபரங்களை கேட்டறிந்து, ராதாகிருஷ்ணனை இங்கிலீஷில் காறித் துப்பி விட்டு சென்று விட்டனர்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் இருக்கையில், ராதாகிருஷ்ணன், ரகசிய நிதியில், லேண்ட்மார்க் புத்தக கடையில் லேட்டஸ்டாக வந்திருக்கும் புத்தகங்களை வாங்கி தனது இருக்கைக்கு பின்னாலும், மேசையின் மீதும் அடுக்கி வைத்துக் கொள்வார். யாராவது அவரை பார்க்க வந்தால் வருபவர்கள், ராதாகிருஷ்ணன் ஒரு பயங்கரமான படிப்பாளி, பெரிய அறிவாளி என நினைக்க வேண்டும் என்பதால்தான். வரும் விசிட்டர்கள், ராதாகிருஷ்ணனிடம் எப்படி சார் இவ்ளோ பைல் பாத்துக்கிட்டு படிக்க டைம் கிடைக்குது என்று கேட்டால், ஒரு நாளைக்கு 4 மணி நேரம் மட்டுமே தூங்குவதாகவும், மற்ற நேரங்களில் ஆராய்ச்சி என்றும் கூறுவார்.

அடுத்து பூந்தமல்லியில் ராதாகிருஷ்ணன் ஆறு க்ரவுண்டுகள் நிலம் வைத்திருக்கிறார். அங்கே, அரசு ஒரு திட்டத்திற்காக நில ஆக்ரமிப்பு செய்யும் அறிவிப்பு வெளியிடுகிறது. இவர் இடத்தை அரசு எடுத்துக் கொள்ளும் என்பதற்காக இவர் தலையிட்டு அந்த திட்டத்தையே ரத்து செய்ய வைக்கிறார்.

அடுத்து போரூரை அடுத்த மணப்பாக்கத்தில் ராதாகிருஷ்ணன் பெயரில் இருக்கும் இடங்கள் மட்டும் எட்டு க்ரவுண்டுகள். எட்டு க்ரவுண்டுகளையும் திங்கவா போகிறார் ? பேராசைக்கு ஒரு அளவு வேண்டாம் ?

இது போக, லஞ்ச ஒழிப்புத் துறையில் உள்ள ஊழியர்களுக்காக செங்கல்பட்டுக்கு அருகே போடப்பட்டுள்ள வீட்டு வசதி கூட்டுறவு சங்கத்தின் மூலம் ராதாகிருஷ்ணன் வாங்கியுள்ள இடங்கள் இரண்டு க்ரவுண்டுகள்.

லஞ்ச ஒழிப்புத் துறையில் ராதாகிருஷ்ணன் இருக்கும் போது, இவரது கேம்ப் அலுவலகத்தில் மட்டும பணி புரிய 10 கான்ஸ்டபிள்கள். இவர்கள் பத்து பேருக்கும் வேலை, தினத்தந்தி மற்றும் தினகரன் படிப்பது மட்டும் தான். எப்போதாவது கோப்புகள் வந்தால், அதை எடுத்து அறைக்குள் வைப்பது. அறை கதவை திறந்து விடுவது.

இதற்காக இந்த பத்து பேருக்கும் மாதந்தோறும், சிறப்பாக பணி புரிந்தார்கள் என்று ரொக்கப் பணம் பரிசளிப்பார் ராதாகிருஷ்ணன். இரவு பகலாக வழக்கு புலனாய்வு வேலைகளில் உள்ள காவலர்களுக்கு ஒன்றும் கிடையாது. ராதாகிருஷ்ணனுக்கு கைத்தடிகளாக இருப்பதற்காக இந்த பத்து பேருக்கும் ரொக்கப் பணம் பரிசு மாதந்தோறும்.

இந்த பத்து பேரும் என்ன செய்வார்கள். அய்யா தெய்வம். அய்யாவப் போல வராது அய்யாதான் ஒலகத்துலேயே சிறந்த அதிகாரி என்று ஊர் முழுக்க சொல்லிக் கொண்டு திரிவார்கள்.

இதை ராதாகிருஷ்ணன் மிகவும் விரும்புவார். ஆனால் புகழ்ச்சி பிடிக்காதது போல சீன் போடுவார்.

ஒரு மிகப் பெரிய தமாஷ் நடந்தது. சாணி விருது. மன்னிக்கவும், ராணி விருது வழங்கப் பட்டதையொட்டி, விஜய் டிவி ராதாகிருஷ்ணனை பேட்டி கண்டது. அப்போது உங்களுக்கு ரோல் மாடல் யார் என்று கேட்டார்கள். மஹாத்மா காந்தி என்றாரே பார்க்கலாம் ராதாகிருஷ்ணன். இப்படி சொல்லியதற்கு காந்தியை செருப்பாலே அடித்திருக்கலாம்.

ராதாகிருஷ்ணனின் இரண்டு தம்பிகள் என்ற தங்கக் கம்பிகள் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா ? இந்த இரண்டு தங்கக் கம்பிகளும் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா ?

ராதாகிருஷ்ணன் சென்னை மாநகர கமிஷனராக பொறுப்பேற்ற பின், இவர்கள் இருவரும் தான் சென்னை நகரில் கட்டப் பஞ்சாயத்து. அனைத்தும் இவர்கள் இருவரும் தான். எந்தப் பிரச்சியையை வேண்டுமானாலும் இவர்கள் இருவரும் முடித்துக் கொடுப்பார்கள் என்ற இமேஜை ஏற்படுத்தி ஏகப்பட்ட பணத்தை சம்பாதித்து வருகிறார்கள், ராதாகிருஷ்ணனின் ஆசியுடன்.

ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆனவுடன், இப்போது வசூல் எதற்கு தெரியுமா ? இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்களின் மீதான குற்றக் குறிப்பாணையை ரத்து செய்வதற்கு. சமீபத்தில் ஒரு ஆய்வாளர், இரண்டு லட்சம் கொடுத்து தனது தண்டணையை ரத்து செய்தார்.

இன்னொரு டிஎஸ்பி, கோவிந்தராஜிடம் 6 லட்சம் கொடுத்து போஸ்டிங் வாங்கினார். இவரை அந்த இடத்திலிருந்து மாற்றாமல் இருக்க, கோவிந்தராஜ் மாதந்தோறும் இவரிடம் நாற்பதாயிரம் மாத மாமூல் கேட்க, அதையும் வேறு வழியின்றி அந்த டிஎஸ்பி கொடுத்து வருவதாகவும் தெரிகிறது.

சமீபத்தில், மதுரை அருகே ஒரு நிலத்தகராறு. இந்த நிலத்தகராறை சரி செய்கிறேன் என்று இந்த தங்கக் கம்பிகள் செல்கிறார்கள். காவல்நிலையத்திற்கு பஞ்சாயத்து செல்கிறது. அந்த மாவட்ட எஸ்பிக்கு, ராதாகிருஷ்ணனிடம் இருந்து போன். உளவுத்துறை ஐஜி ஜாபர்சேட் தொடர்பான விவகாரம் இது. உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று சொல்லுகிறார். அந்த வேலை மின்னல் வேகத்தில் முடிகிறது.

அந்த வேலையை முடித்துக் கொடுத்த ஆய்வாளர், சென்னைக்கு வேறு வேலையாக வரும் போது, ஜாபர் சேட்டை சந்திக்கிறார். “அய்யா, நீங்க சொன்ன வேலையை முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா“ என்று ஜால்ரா தட்டுகிறார். ஜாபருக்கு பொறி தட்டுகிறது. எந்த வேலை என்றவுடன், அய்யா நீங்க எஸ்பிக்கு போன் பண்ணி சொன்னீங்களாமே… ? அந்த லேண்ட் மேட்டர். அய்யா சொன்ன படியே முடிச்சுக் கொடுத்துட்டேன் அய்யா என்று கூறுகிறார்.

ஜாபர் தன்னுடைய பெயரை பயன்படுத்தி ராதாகிருஷ்ணன் செய்திருக்கும் அயோக்கியத்தனத்தை பார்த்து அதிர்ந்து போகிறார். இது போலவே, இந்த தங்கக் கம்பிகள், தமிழகம் முழுக்க ஒரு நெட்வொர்க்கை ஏற்படுத்தி விட்டதாகவும் தெரிகிறது. எந்த இடத்தில் நிலம் தொடர்பாகவோ, வேறு பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாகவோ, ஏதாவது தகராறு இருந்தால், இந்த தங்கக் கம்பிகள் உள்ளோ புகுந்து காரியத்தை முடித்துக் கொடுத்து ஒரு கணிசமாக தொகையை பெறுகிறார்கள்.

ராதாகிருஷ்ணன் கடைபிடிக்கும் தந்திரம். ஒன்று ஜாபர் சேட் சொன்னார் என்றோ, அல்லது சிஎம் விவகாரம் என்றோ சம்பந்தப் பட்ட காவல்துறை எஸ்பி அல்லது டிஐஜியிடம் கூறுவார். சிஎம் விவகாரமா இல்லையா என்றோ, ஜாபர் விவகாரமா இல்லையா என்றோ, யார் சரிபார்க்க முடியும் ? இப்படித்தான் இந்த நெட்வொர்க் இயங்குகிறது.

இப்போது கூறுங்கள். ராதாகிருஷ்ணன் சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியா ? சட்டம் மற்றும் ஒழுங்கீனத்தின் கூடுதல் டிஜிபியா ?
சவுக்கு