Flash News

Saturday, March 13, 2010

குழந்தைக்கு லாலிபாப். கிழவனுக்கு ?



வயது ஆக ஆக, மூளையின் செல் வளர்ச்சி அறவே நின்று போய் முதியவர்கள் குழந்தைகளைப் போல நடந்து கொள்வார்கள் என்பது அறிவியல் உண்மை. இது போல, முதிர்ந்த, தள்ளாத வயதில் இருக்கும் ஒருவரிடம், ஒரு மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்தால் என்ன ஆகும் என்பதை தமிழகம் அனுபவித்து வருகிறது.

ஆயிரக்கணக்கான கோடி மக்கள் பணத்தை நிர்வகிக்கும் ஒருவர் ஒரு குழந்தையைப் போல பிடிவாதத்தோடு நடந்து கொண்டால் என்ன நடக்கும் என்பதன் விளைவுதான் புதிய தலைமைச் செயலகம்.



முதலில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான அவசியம் என்ன ? ஜெயலலிதா ஆட்சியில், ராணி மேரிக் கல்லூரியை இடித்து விட்டு அந்த இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவேன் என்ற அறிவிப்பை எடுத்து, மாணவர்கள் மற்றும் திமுகவினரின் போராட்டங்களாலும், மத்திய அரசின் சுற்றுச் சூழல் துறையால் அனுமதி மறுக்கப் பட்டதாலும், அத்திட்டம் கைவிடப் பட்டது. அப்போது, புதிய தலைமைச் செயலகத்துக்கான அவசியம் ஏதும் இல்லை, தற்போதைய கட்டிடமே நன்றாக இருக்கிறது என்று கூறிய கருணாநிதி, இப்போது, புதிய தலைமைச் செயலகத்தை கட்டி அதற்கு திறப்பு விழா நடத்த இருக்கிறார்.




தற்போதைய தலைமைச் செயலகம், பிரிட்டிஷாரால் கட்டப் பட்டது. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இன்னும் உறுதியாகவும், அழகாகவுமே உள்ளது. இந்நிலையில் புதிய தலைமைச் செயலகம் கட்டியே தீர வேண்டும் என்பதற்கான அத்தியாவசிய காரணங்கள் ஏதும் இல்லாத நிலையில் மக்கள் பணம் 500 கோடிக்கும் மேல் செலவு செய்து இக்கட்டித்தை கட்ட வேண்டிய அவசியத்திற்கு கருணாநிதியின் பிடிவாதத்தைத் தவிர வேறு ஏதும் காரணம் இருக்க முடியாது.

அரசியல்வாதிகளுக்கு, வரலாற்றில் தங்கள் பெயர் இடம் பெற வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. அதற்கு, மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் வாழ யாரும் முயற்சிப்பதில்லை. அதற்கு பதிலாக, புதிய கட்டிடங்களின் திறப்பு விழாவில் இக்கட்டிடத்தை திறந்து வைத்தவர் என்று தங்கள் பெயரை பொரித்துக் கொள்வதில் முனைப்பு காட்டுகிறார்கள். இந்தப் பெயர் பலகையில் தங்கள் பெயர் இருப்பதால், வரலாற்றில் இடம் பிடித்ததாகவும் இறுமாந்து கொள்கிறார்கள்.




எத்தனை பாலங்கள், எத்தனை கட்டிடங்கள், எத்தனை வீடுகளைத் திறந்து வைத்து, தன் பெயரை பொரித்துக் கொண்டாலும், ஈழத்தமிழரை கொன்று குவித்த, சிங்களக் காடையனுக்கு துணை போன துரோகியாகவே கருணாநிதி வரலாற்றில் கருதப் படுவார். தமிழ் மொழி, தமிழ் இனம் உள்ள வரை கருணாநிதிக்கு ஏற்பட்டுள்ள இந்த அவப்பெயர் மாறவே மாறாது.

விலைவாசி உயர்வு கடுமையாக மக்களைத் தாக்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் அதைக் கண்டிக்காமல் மன்மோகனுக்கும் சோனியாவுக்கும் கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறார் கருணாநிதி. ஈழத் தமிழர் விவகாரத்தில் இவர் எழுதிய கடிதங்கள் பிரியங்காவின் மகள் மலத்தை துடைக்க பயன்பட்டது போலவே இந்தக் கடிதங்களும் பயன்படுத்தப் படும் என்பதை கருணாநிதி அறியாதவர் அல்ல. ஆனால் அதற்காக எதிர்த்துக் குரல் கொடுத்தால் புதிய தலைமைச் செயலக கட்டிடங்கள் போல, அடிக்கல் நாட்டு விழாவுக்கும் திறப்பு விழாக்களுக்கும் சென்று, அவர் பெயரை கல்லில் பொரித்துக் கொள்ள முடியாதே … … மேலும், இவரே தள்ளு வண்டியில் செல்வதால், பெட்ரோல் டீசல் விலை ஏறினால் என்ன இறங்கினால் என்ன என்று நினைத்திருப்பார்.

புதிய தலைமைச் செயலகத்தில் கருணாநிதியின் படம் வைக்கப் படப் போகிறது என்று அறிவிப்பு வேறு. இறந்தவர் படங்களைத்தானே வைப்பார்கள். கருணாநிதி உயிருடன் தானே இருக்கிறார் ? கருணாநிதியே தன்னை ஒரு நடை (தள்ளு வண்டி) பிணம் என்று முடிவு செய்து விட்டார் போலிருக்கிறது. கருணாநிதியின் படம் வைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஜெயலலிதா அறிக்கை விட்ட உடனேயே, அவரது ஜால்ரா கோஷ்டிகளான தங்கபாலு, திருமாவளவன் ஆகியோர் படம் வைப்பதை ஆதரித்து அறிக்கை விட ஏற்பாடு செய்தார் கருணாநிதி.

ராணி மேரி கல்லூரி இடிக்கப் படப் போகிறது என்ற உடனேயே, வரிந்து கட்டிக் கொண்டு போராட்டத்தில் இறங்கினார் கருணாநிதி. கல்லூரி இடிக்கப் பட்டால் கூட வேறு இடத்தில் கட்டிக் கொள்ளலாம். மாணவர்கள் பெரும் அளவில் பாதிப்பு அடையப் போவதில்லை. ஆனால் இந்த புதிய தலைமைச் செயலக வளாகத்தால், பேச்சிலர்கள் தங்கும் திருவெல்லிக்கேணி பகுதியில் கடும் நெருக்கடி கொடுத்து, பலரை தங்க விடாமல் நெருக்கடி கொடுப்பதாக விடுதி உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், எலெக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யப் படும் ரிச்சி தெருவில் உள்ள கடைகள் அனைத்தையும் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் வழங்கப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.

ரிச்சி தெருவில் கடை வைத்திருக்கும் முதலாளிகளை விடுங்கள். அங்கு பணியாற்றும் ஏழைத் தொழிலாளர்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கருணாநிதி ? ஒரு நாளைக்கு 15 கோடிக்கு வியாபாரம் நடக்கும் ரிச்சி தெருவில் உள்ள கடைகளால் தங்கள் வாழ்க்கையை ஓட்டும் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார் கருணாநிதி ?



இந்த லட்சணத்தில் இந்தத் திறப்பு விழாவுக்கு கமலஹாசனும் ரஜினிகாந்தும் சிறப்பு அழைப்பாளர்களாம். அரசு விழாவில் சினிமாக்காரனுக்கு என்ன வேலை ? என்ன வேலை என்றால், ஆகா, ஓகோ என்று கருணாநிதியை புகழ்ந்து பேச வேண்டும். மேலும், இவர்கள் இரண்டு பேரும் விழாவுக்கு வந்தால்தானே, கலைஞர் டிவியில் இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி டிஆர்பி ரேட்டிங்கை கூட்ட முடியும்.




இந்த புதிய தலைமைச் செயலக கட்டிடத்தின் வேலைகளை கருணாநிதி 115 முறை நேரில் சென்று ஆய்வு செய்திருக்கிறார் என்று தகவல்கள் கூறுகின்றன. ஜெயலலிதா கோப்புகளை பார்க்காமல் தாமதம் செய்திருக்கிறார் என்று வண்டி வண்டியாக அறிக்கை விட்ட கருணாநிதி, இப்படி கட்டிட வேலைகளை மேற்பார்வையிட்டும், சினிமா விழாக்களில் கலந்து கொண்டும் நேரத்தை வீணடிப்பது மட்டும் முதலமைச்சருக்கு அழகா ?

புதிய சட்டமன்றத்தின் மேற்கூரை இன்னும் கட்டி முடிக்கப் படாத நிலையில், 2 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டு, மேற்கூரையை சினிமா செட்டாக போட்டிருக்கிறார் என்றால் கருணாநிதியின் விளையாட்டின் விபரீதத்தை பாருங்கள்.

கிழவன் உருவில் இருக்கும் குழந்தை இன்று தலைமைச் செயலகம் கட்டி மக்கள் பணத்தை வீணாக்குகிறது. இன்னும் என்னவெல்லாம் நடக்கப் போகிறதோ ?
.





சவுக்கு

11 comments:

Unknown said...

//மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி, கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் வாழ யாரும் முயற்சிப்பதில்லை.//

இப்படி முயற்சித்ததெல்லாம் காமராஜர் அண்ணா காலத்தோடு போய்விட்டது. இப்போது தாங்கள் அடுத்த வரியில் சொன்னதுதான். புதிய சட்டமன்றம் கட்டியதில் தன் பெயர் வர வேண்டும் என்று நினைப்பவர் முன்னால் முதல்வரின் முயற்சிக்கு முட்டுக்கட்டை போட்டதில் ஆச்சரியமொன்றுமில்லை.

கிரி said...

//புதிய சட்டமன்றத்தின் மேற்கூரை இன்னும் கட்டி முடிக்கப் படாத நிலையில், 2 கோடி ரூபாய் மக்கள் பணத்தை செலவிட்டு, மேற்கூரையை சினிமா செட்டாக போட்டிருக்கிறார்//

இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.. இவ்வளவு அவசரமாக திறக்க வேண்டியதன் தேவை என்ன? அநியாயமாக மக்கள் பணம் வீண். இந்த நாளில் தான் திறப்பு விழா செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு தகுந்த மாதிரி வேலைகளை அமைத்து இருக்க வேண்டும். நேரம் போதவில்லை என்று இவ்வாறு அவசர தேவைக்கு இவ்வாறு செய்து இருப்பது... என்னமோ போங்க!

சவுக்கு said...

கருணாநிதியின் விபரீதமான பிடிவாதத்துக்கு தமிழகம் இன்னும் என்னென்ன விலை கொடுக்க வேண்டுமோ தெரியவில்லை

யூர்கன் க்ருகியர் said...

இன்னொரு Award கிடைக்குமா கிடைக்காதா?

aazhimazhai said...

என்ன செய்வது சகோதரரே !! இது நம் கொடுமையான காலம் !!! இப்படி எழுதி நம் மனதை தேற்றிக்கொள்ள முடிகிறது தவிர நம் இயலாமையை நாமே நொந்துகொள்ள வேண்டியதுதான்

aazhimazhai said...

என்ன செய்வது சகோதரரே !! இது நம் கொடுமையான காலம் !!! இப்படி எழுதி நம் மனதை தேற்றிக்கொள்ள முடிகிறது தவிர நம் இயலாமையை நாமே நொந்துகொள்ள வேண்டியதுதான்

Anand said...

தமிழ் இனத்தை அழித்த சோனியாவுக்கு இந்த கூட்டத்தில் நல்ல மரியாதை

சவுக்கு said...

அன்புள்ள தோழர் ஆழிமழை அவர்களே, முத்துராமன் நாகேஷ் நடித்த படத்தில் ஒரு காட்சி வரும். நாகேஷ் ரொம்ப சாதுவாய் இருப்பார். அவரை எல்லோரும் டபாய்ப்பார்கள். அவர்களை நேராக எதிர்த்துப் பேச துணிவு இல்லாத நாகேஷ், அவர்களை படமாக வரைந்து, அறையில் யாரும் இல்லாத தனிமையில் காம்பஸை எடுத்து, அந்தப் படத்தின் மேல் தன் கோபம் தணியும் வரை குத்துவார். இதற்கும், நமது பதிவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும், எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை. என்ன செய்வது ?

Happy Smiles said...

உங்களின் கருத்துக்கள் மிகவும் நேர்மையாக இருக்கிறது. இவை அனைத்தும் உண்மை. இம்மாதிரியான வயதானவர்களின் ஆட்சி இத்துடன் முடிவதோடு அவர்களின் பேராசைகளும் பெயர் பலகைகளுக்காக உருவாகும் எண்ணங்களும் ஒழியட்டும். இனிவரும் தமிழகம் இளைனருக்காக மாற உம்மைபோன்றோரின் கருத்துக்கள் மிகவும் தேவை. வாழ்த்துக்கள்.

சவுக்கு said...

அன்புள்ள தோழர் மேகர், தங்கள் அன்பு வாழ்த்துக்களுக்கு நன்றி. நேர்மை மட்டுமே சவுக்கின் பலம். இறுதி வரை, இந்த நேர்மை மட்டும் தவறாமல் வாழ வேண்டும் என்பது மட்டுமே வாழ்வின் லட்சியம். அன்பு பகிர்வுக்கு நன்றி

www.aazhaimazhai.blogspot.com said...

ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை .....

Post a Comment