Flash News

Wednesday, February 24, 2010

W.R.வரதராஜனை கொலை செய்த சிபிஎம்.



இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்.



அது 1991ம் ஆண்டு. மே மாத இறுதி. பதின் பருவ வயதில் இருந்த எங்களுக்கு சைக்கிளை எடுத்துக் கொண்டு காலைக் காட்சி, பகல் காட்சி, இரவுக் காட்சி என்று ஒரு தியேட்டர் விடாமல் சென்று சினிமா பார்ப்பதே வாழ்வின் லட்சியம் என்று சுற்றிக் கொண்டிருந்த காலம்.

எங்களோடு சேர்ந்து சுற்றிக் கொண்டிருந்த நண்பர், “ரெண்டு வாரத்துக்கு சினிமாவுக்கு வரமாட்டேன்“ என்று சொன்னார். எங்களக்கெல்லாம் ஆச்சர்யம். “அப்புடி என்னடா பண்ணப் போற ? “ என்று கேட்டதற்கு “W.R க்கு எலெக்ஷன் வொர்க் பண்ணப் போறேன்“ என்றார். அப்போதெல்லாம் மார்க்சியம், கம்யூனிசம் என்பதெல்லாம் பரிச்சயம் இல்லாத காலம். “எவ்ளோடா துட்டு குடுப்பாங்க“ என்று கேட்டதற்கு நண்பர் அளித்த பதில் இன்னும் ஆச்சர்யம். “துட்டு எல்லாம் கொடுக்க மாட்டாங்க. நம்மதான் செலவு பண்ணணும்“ என்றார்.


W.R என்ற அந்தப் பெயரே பிடிக்கவில்லை எனக்கு. உச்சரிக்க கஷ்டமாக இருப்பது போலத் தோன்றியது. தமிழில் இன்னும் மோசம். உ.ரா.வரதராஜன். என்னடா பேரு இது என்று நாங்கள் அந்த நண்பரை கிண்டல் செய்வோம்.

சில வருடங்களில் மார்க்சியம் எல்லாம் பரிச்சயமாகி W.R கூட்டங்களுக்கெல்லாம் சென்ற பிறகு, W.R என்ற அந்த இரண்டு எழுத்துக்களை உச்சரிக்கையில் தேனாக இனித்தது.

1994ம் ஆண்டு என்று ஞாபகம். தி.நகர் பனகல் பூங்காவில் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார். அவரது பேச்சை W.R வரதராஜன் மொழிபெயர்த்தார். அப்படி ஒரு மொழி பெயர்ப்பை நான் இன்று வரை கண்டதில்லை.

சுர்ஜித், எந்த இடத்தில் அழுத்தம் கொடுக்கிறாரோ தமிழ் மொழி பெயர்ப்பிலும் அதே இடத்தில் அழுத்தம் கொடுப்பார் வரதராஜன். நானும், ஏதாவது ஒரு வார்த்தையையாவது இந்த ஆள் மொழி பெயர்ப்பில் கோட்டை விடுகிறாரா பார்ப்போம் என்று உன்னிப்பாக கவனித்தேன்.

ஆனால், 1 சதவிகிதம் கூட தவறு நேராமல், மொழி பெயர்ப்பில் சிறிது கூட பிசிறு இல்லாமல், ஏற்ற இறக்கங்களோடு செய்யப் பட்ட வரதராஜனின் மொழி பெயர்ப்பு, சுர்ஜித் உரையை விட கூட்டத்தை எழுச்சி கொள்ளச் செய்தது.

சமீபத்தில் இந்திய அமேரிக்காவோடு செய்து கொண்ட அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக, ஒரு பத்திரிக்கையாளர் “இது என்ன சார், எனக்கு புரியலை“ என்று கேட்டார். 20 நிமிடம், குழந்தைக்கு விளக்குவது போல விளக்கி எளிமையாக புரிய வைத்தார் என்று அந்தப் பத்திரிக்கையாளர் சிலாகிக்கிறார்.

W.R வரதராஜன் வைதீக பிராமணக் குடும்பத்தில் பிறந்தவர். முற்போக்கான மனம் படைத்த வரதராஜன், சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார்.

ரிசர்வ் வங்கியில் அதிகாரியாக இருந்த வரதராஜன் 1984ம் ஆண்டு வங்கிப் பணியை துறந்து சிபிஎம்மின் முழு நேர ஊழியரானார்.


W.R வரதராஜனின் ஆற்றல் பன்முகத் தன்மை வாய்ந்தது. கணிதத்தில் நிபுணர். அவர் தொழிலே சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட். சிறந்த பொருளாதார நிபுணர். பட்ஜெட்டை அலசுவதில் அசாத்திய திறமை படைத்தவர். எழுத்தாளர். பேச்சாளர். சுருக்கமாக சொல்லப் போனால், சிபிஎம் கட்சியின் மிக முக்கிய தூணாக விளங்கியவர்.

ஆனால் அதுவே வரதராஜனுக்கு வினையாக முடிந்ததுதான் காலத்தின் கோலம். பொய்யும், புரட்டும், சூதும், சுயநலமும் பல்கிப் பெருகி, பணம் கொடுத்தால்தான் வாக்களிப்பேன் என்ற நிலைக்கு மக்களே மாறிப்போன இச்சூழலில் சிபிஎம் கட்சி மட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன ?

வரதராஜன் மத்தியக் குழு உறுப்பினராக நியமிக்கப் பட்டதிலிருந்தே சிபிஎம்மின் தமிழ்நாட்டு தலைவர்களுக்கு பொறாமை கனன்றது. நம்பள்ளாம் இருக்கும் போது இவன் எப்படி மத்தியக் குழு உறுப்பினராகலாம் என்ற பொறாமை பெரும்பாலான தலைவர்களை பிடித்து ஆட்டியது. சிஐடியு பொதுச் செயலாளராக வேண்டும் என்று விருப்பப் பட்ட வரதராஜனின் ஆசையில் மண்ணை அள்ளிப் போட்டது, சிபிஎம்மின் கொல்கத்தா லாபி.

சிஐடியு எங்களுக்குத் தான் சொந்தம், தென்னிந்தியர் சிஐடியு பொதுச் செயலாளர் ஆவதை விடமாட்டோம் என்று கங்கணம் கட்டினர். பிறகு சிஐடியு பொதுச் செயலாளர் எம்.கே.பாந்தேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக டெல்லியிலிருந்து தமிழகம் திரும்பினார்.


தமிழக சிபிஎம்மில், பி.ராமமூர்த்தி, சங்கரைய்யா, நல்லசிவன், வி.பி.சிந்தன் போன்ற, மக்களிடமும், தொண்டர்களிடமும் அசாத்திய செல்வாக்கு படைத்த தலைவர் இன்று ஒருவர் கூட இல்லை. இப்போதைய தமிழ் மாநிலக்குழு தலைவர் ஜி.ராமகிருஷ்ணன், முன்னாள் தலைவர் என்.வரதராஜன் உட்பட தமிழ் மாநில நிர்வாகிகள் அனைவருமே தொண்டர்கள் செல்வாக்கை பெற்றதேயில்லை.

இன்றைய சிபிஎம்மின் தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகள் ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்ஸ் போல செயல்படுபவர்கள்.

தமிழகம் திரும்பிய வரதராஜன் மீண்டும் தனது வழக்கமான பணிகளைத் தொடர்ந்தார். எழுதத் தொடங்கினார். கூட்டங்களில் பேசத் தொடங்கினார். தொண்டர்களை சந்திக்கத் தொடங்கினார். வரதராஜனின் இந்த நடவடிக்கைகள் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளை மிகுந்த எரிச்சல் அடையச் செய்தது.

இன்று சிபிஎம் தமிழ் மாநிலக் குழுவில் இருக்கும் ஜி.ராமகிருஷ்ணன் மற்றும் டி.கே.ரங்கராஜன் கோஷ்டிகள் இரண்டுக்குமே வரதராஜன் என்றால் வேப்பங்காய். தங்களின் பதவிக்கு வரதராஜனை அச்சுறுத்தலாகவே இந்த இரண்டு கோஷ்டிகளும் பார்த்தது. வரதராஜன் மீது ஒரு புகார் என்றதும் தங்கள் வேறுபாடுகளை மறந்து இந்த இரண்டு கோஷ்டிகளும் வரதராஜனை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று புறப்பட்டன.

ஜனநாயக மாதர் சங்கம் என்ற போர்வையில் கட்டப் பஞ்சாயத்து நடத்தி பல குடும்பங்களை சீரழித்த உ.வாசுகி தலைமையில் வரதராஜனுக்கு எதிரான சதி தொடங்கியது. வரதராஜனின் மனைவி சரஸ்வதியை வைத்து வரதராஜன் மீது ஒரு பொய்யான பாலியல் குற்றச் சாட்டை கட்சியிடம் புகாராக கொடுக்க வைத்தனர்.

புகார் வந்ததும் உடனடியாக ஒரு ஒழுங்கு நடவடிக்கை குழுவை ஏற்படுத்தி, “தேர்ந்தெடுக்கப் பட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் வரதராஜன் நீக்கப் பட்டார்“ என்று முடிவெடுத்து, அனைத்து கட்சிக் குழுக்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பப் பட்டது. கட்சித் தொண்டர்களிடையே எதற்காக நீக்கப் பட்டார், என்ன காரணம் என்று எந்த விளக்கமும் அளிக்கப் படவில்லை. இந்த நீக்கம் கட்சியின் அனைத்து மட்டங்களிலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


முதலாளிகளோடு பேரம் பேசி, தொழிலாளியின் வயிற்றில் அடித்தவர்களெல்லாம் இன்று சிபிஎம்மில் நல்ல பதவிகளில் இருக்கையில், பொய்யான ஒரு பாலியல் குற்றச் சாட்டின் அடிப்படையில் வரதராஜனை நீக்கியதற்கு சிபிஎம்மின் தமிழ் மாநிலக்குழு நிர்வாகிகளில் அகங்காரமும் பொறாமையையும் தவிர்த்து வேறு என்ன காரணம் இருக்க முடியும் ?

ஏறக்குறைய 10 ஆண்டுகளாகவே, மனைவியோடு பிணக்கில் இருந்து வந்ததால், வரதராஜனுக்கு மனைவி சரஸ்வதியின் நடவடிக்கைகள் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை. ஆனால், தான் பெரிதும் நேசித்த கட்சி தன்னை இப்படி அவமானப் படுத்தியதைத் தான் அவரால் தாங்க முடியவில்லை.

தோழர் வரதராஜனின் முடிவில் எமக்கு உடன்பாடு இல்லை யெனினும்

மயிர் நீப்பின் வாழக் கவரிமா அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்

என்ற குறள் போலவே இம்முடிவை எடுத்துள்ளார்.

தோழர் வரதராஜனை கொலை செய்து விட்டு, அவரது இறுதி ஊர்வலத்திலும் வெட்கமில்லாமல் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் தூக்கி எறியப் படும் நாள் வெகு தொலைவில் இல்லை. தோழரின் மரணத்துக்கு காரணமான துரோகிகள் இக்கொலைக்கான தண்டனையை நிச்சயம் அனுபவிப்பார்கள். இதுவும் காலத்தின் கட்டாயமே.



சவுக்கு

11 comments:

tsekar said...

நான் அரிந்தவரைஇல்

தோழர் வரதராஜன் -நேர்மையானவர் -,அவர் மறைவு கட்சிககு இழப்பு.

சரஸ்வதி அம்மாவை எமாற்றி -அவரின் -weaker mind -பயன்படுத்தி -வரதரஜனக்கு எதிராக காய் நகர்த்தி -அவரை tamilnadu cpm- தலைவர் போட்டியில் இருந்து-அப்புரபடிதுவிட்டார்.

த சேகர்

அன்புடன் நான் said...

நேர்மை மிகு வரதராசன் அவர்களின் மறைவுக்கு.... எமது ஆழ்ந்த இரங்கல்.

வரதராஜலு .பூ said...

//சொல் வேறு செயல் வேறாக இல்லாமல், விவாகரத்து பெற்ற தலித் பெண்மணியை மணந்தார். //
இப்படி சாவறதுக்கா கல்யாணம் பண்ணிங்க வரதராஜன். உங்களுக்கு பரந்த மனப்பான்மை இருக்கலாம். ஆனால் நீங்கள் யாரை மணந்தீர்களோ அவருக்கு?
அய்யோ கடவுளே

//சரஸ்வதி அம்மாவை எமாற்றி -//
ஏன், ஒண்ணுமே தெரியாதவங்களா இவங்க? இன்னும் என்னனவோ தோணுது. சே, என்ன மனுஷ ஜன்மமோ இவங்கள்ளாம்.

நேர்மை மிகு வரதராசன் அவர்களின் மறைவுக்கு.... எமது ஆழ்ந்த இரங்கல்.

raghavan kannan said...

"The Indian communism is already dead.The present day leaders of communism in India are only like the dead bodies decorated with flowers and imitation jewels.The decorations are the presentations and gifts from the anti people parties congress and DMK.Com.Varadarajan does not want to remain with the decorated corpses of the Indian communist leaders.Though my statement looks like vulgar. it is the truth.Long live communism.

இரா. கண்ணன் said...

கட்டுரையில் தகவல்கள் நேர்த்தியாக உள்ளது.
தொடர்ந்து எழுதுங்கள் தோழரே.

இரா. கண்ணன்

உண்மைத்தமிழன் said...

நன்று நண்பரே..!

உ.ரா.வரதராசன் என்றொரு நல்லதொரு தலைவரை சக தோழர்களே நயவஞ்ச சதி செய்து ஓரங்கட்டியதால்தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்பதை வருங்காலத்தில் கம்யூனிஸ இயக்கத்தின் வரலாற்றில் நிச்சயம் எழுதப்படும்..!

மரா said...

தோழர் உ.த வின் கருத்துக்களை வழிமொழிகிறேன்.

சவுக்கு said...

பின்னூட்டம் இட்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி. தமிழ் மாநில சிபிஎம், வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாக காத்திருக்கிறது. விரைவில், எரிமலை வெடிக்கும் என்று நம்புகிறேன்.

L Muthuramalingam said...

All armchair/easy chair/A/c room intellectuals want CPI(M) to burst. No, friends, without CPI(M) can't you feel the pinch in the prices. Our BHEL/NLC/SAIL all have been saved only by CPI(M) during the last regime. Of course, party might have erred in Com WRV. But party is great. You know what happened to Com Dange who was one of the founder of Communist Movement in India. Similar thing may happen to Karat and yetchuri also.L Muthuramalingam

சவுக்கு said...

Dear comrade Muthuramalingam, I would like to categoriclly state that, I dont want CPI(M) to burst. On the contrary, I would like the CPM to thrive and grow than any other party. My anguish against the party is that it fails to self criticize and slowly going towards narcissistic suicide.

I completely agree with you that only because of CPM we were able to save our public sector. When you are in the opposition your responsibility more than doubles. Now the country is facing more problems than during UPA.1. But CPM has failed to rise to the occassion due to such kind of inner party bickerings. Per se, I love the party CPM and I want it to grow. My criticism is aimed at correcting the party than banishing it.

L Muthuramalingam said...

Comrade, after reading your comments, I wish to share something with u. I took much pain to contact some of CPI(M) comrades and informed them that Shri Jeyamohan has alleged that Shri N Ram is the only powercentre of TN CPI(M). So, I asked them to counter Jeyamohan either through TN Murpokku ezhuthhaalar Sangam or the Party itself. Everybody has informed me that they were very busy. Again I took printouts of Shri Jeyamohan's pages and sent it to CPI(M) office. But they are yet to do something. So, they have washed off their hands regarding Com WRV. Instead they may be seeking routes to Poes Garden or Gopalapuram.

Hours together, I can speak about CPI(M). Once upon a time, the CITU leaders hold public meetings about the budget proposals. They used to throw away minute details in a small platform.

Gone are those days. But Change is the only word that will not undergo any change. Karat/Yetchuri will vanish.

Post a Comment