Flash News

Showing posts with label வழக்கறிஞர். Show all posts
Showing posts with label வழக்கறிஞர். Show all posts

Sunday, August 30, 2009

தமிழக காவல்துறையில் உள்குத்து....!




கடந்த பிப்ரவரி 19 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தினுள் நடந்த வழக்கறிஞர்கள் மீதான கொடூர தாக்குதலை நாம் மறந்திருக்க இயலாது.




ஒட்டுமொத்த வழக்கறிஞர் சமூகமும் இணைந்து, இத்தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பியும், போராடியும் ஒரு காவல்துறை அதிகாரிக்கு எதிராகவும் கருணாநிதி அரசு மறுத்தது மட்டுமல்லாமல், அவர்களைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுத்தது.



பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, சென்னை உயர்நீதிமன்றம், தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு எடுத்து, அவ்வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கையில், அப்போதைய கமிஷனர் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்த அறிக்கையில் தனக்கு சம்பவம் பற்றி மாலை 4 மணிக்கு தகவல் வந்தது என்றும், அதற்குப் பிறகு மாலை 5.14 மணிக்குத் தான் சம்பவ இடத்துக்கு வந்ததாகவும், அதற்கு முன் நடந்த தடியடி மற்றும் வழக்கறிஞர் மீதான தாக்குதலுக்கு அப்போதைய இணை ஆணையர் ராமசுப்ரமணியன் மற்றும் கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரும் தான் முழுப் பொறுப்பு என்று மனுத்தாக்கல் செய்திருந்தார்.




இவரின் அறிக்கையை ஏற்ற உயர்நீதிமன்றம், இணை ஆணையர் ராமசுப்ரமணியன் மற்றும் கூடுதல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகிய இருவரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டு, இவர்கள் இருவர் மீதும் துறை நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது.


மார்ச் 18 அன்று இத்தீர்ப்பு வெளியானதும், மறுநாளே கருணாநிதி, வெளியிட்ட அறிக்கையில், நீதிமன்றத் தீர்ப்பை நான் மதிக்கிறேன், ஆனால், பாதிக்கப் பட்ட அதிகாரிகள் நீதிமன்றம் சென்று நிவாரணம் பெறுவதற்குத் தடையில்லை என்று கூறினார்.




மார்ச் 19 அன்று தமிழகம் முழுவதும் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்று தங்களுக்கு நியாயம் கிடைத்து விட்டது என்று கருதி வெற்றிப் பேரணி நடத்தினார்கள். ஆனால் பனங்காட்டு நரியான கருணாநிதி, வழக்கறிஞர்களைவிட காவல்துறைதான் தனக்கு முக்கியம் என்று, ஏறக்குறைய 4 மாதங்களாக அந்த அதிகாரிகளை இடைநீக்கம் செய்யாமல், “பெண் சிங்கம்“ “சுருளி மலை“ போன்ற படங்களுக்கு கதை வசனம் எழுதும் அதிமுக்கியமான பணியில் ஈடுபட்டு இருக்கிறார்.



இதே காவல்துறை 2001ல் நள்ளிரவில், கருணாநிதியின் கையை முறுக்கி கைது செய்து அழைத்துச் சென்றதை கருணாநிதி வசதியாக மறந்து விட்டார்.


">"
"அய்யோ கொலை பண்றாங்க" நாடகத்தில் இருந்து ஒரு காட்சி


நெடுநாட்களாக விசாரணைக்கு வராமல் இருந்த இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று வழக்கறிஞர்கள் சங்கங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று இவ்வழக்கு 15 நாட்களுக்கு முன் விசாரணைக்கு வந்தபோது, ஏ.கே.விஸ்வநாதன், ராமசுப்ரமணியம் உட்பட அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, கடந்த வியாழனன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த விசாரணையின்போது, ஏ.கே.விஸ்வநாதன் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.



அந்த அறிக்கையில், ஏற்கனவே ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்திருந்த அறிக்கைக்கு மாறாக, தானும், உடன் இருந்த இணை ஆணையர்களும், வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டாம், இருக்கும் காவலர்களை அழைத்துக் கொண்டு வெளியே போய் விடலாம் என்று கூறியதாகவும், அதைக் கேட்காமல், ராதாகிருஷ்ணன் தடியடி நடத்த உத்தரவிட்டதாகவும், கூறியுள்ளார். கிராமத்தில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்

“வித்தாரக் கள்ளி வெறகொடிக்கப் போனாளாம், கத்தாழ முள்ளு கொத்தோட வந்துச்சாம்“ என்று.

கமிஷனர் ராதாகிருஷ்ணன் ஒன்றும் புனிதர் இல்லை என்றாலும், நீதியரசர்களுக்கென்று தனியான பாதை வழியாக உள் நுழைந்து நீதிமன்றக் கட்டிடத்தினுள் இருந்த நீதிபதிகளையும் வழக்கறிஞர்களையும் தாக்கியது இந்த ஏ.கே.விஸ்வநாதன் தான் என்பதை மறந்து விடக் கூடாது. இன்று இவ்வாறு உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ததும், விஸ்வநாதன் ஒன்றும் புனிதராகிவிடவில்லை.

இந்த காக்கிச் சட்டைப் போட்ட பொறுக்கிகள், சமூகத்தின் அநியாயங்களுக்கும், காவல்துறையின் அத்துமீறல்களுக்கும் எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த வழக்கறிஞர் சமூகத்தை அடக்கி ஒடுக்க வேண்டும் என்பதற்காக அனைத்து காவல்துறையினரும் ஒன்று சேர்ந்து நடத்தியது தான் இந்த தாக்குதல்.



நேற்று வரை, அரசு தங்கள் பக்கம் உள்ளது என்ற தைரியத்தில், ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக்கொண்ட, காவல்துறையினர், இன்று நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தது போல், சிதறத் தொடங்கியுள்ளனர். இந்தச் சிதறலில், கருணாநிதி குளிர் காய்வார் என்பதை இந்தக் காவல் துறையினர் அறியவில்லை. தற்போதைக்கு தேர்தல் இல்லை என்பதால், காவல் துறையினரின் தயவு, கருணாநிதிக்கு அவசியம் இல்லை.


"தாக்கப் பட்ட நீதியரசர் ஆறுமுகப் பெருமாள் ஆதித்தன்


ராதாகிருஷ்ணனாகயிருந்தாலும் சரி, விஸ்வநாதனாக இருந்தாலும், சரி, வழக்கறிஞர்களை இப்படி கொலை வெறியோடு தாக்கத் துணிந்த இந்த காவல்துறையினருக்கு தக்க பாடம் புகட்டும் வரை, வழக்கறிஞர்களின் போராட்டம் ஓயக் கூடாது.



/ஒப்பாரி/