Flash News

Wednesday, July 7, 2010

சந்தனக்காடு to ஜானி ஜான்கான் ரோடு. 1

ப்ரல் மாத இரவு. 2003ம் ஆண்டு. ஒரு பச்சை நிற ஜீப்பில், கோபால் ராயப்பேட்டையில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்து கிளம்புகிறார்.

அந்த ஜீப்பை மோகன் என்ற டிரைவர் ஓட்டிச் செல்கிறார். அலுவலகத்தை விட்டு வெளியில் வந்து சிறிது தூரம் வந்ததும், பாரதி கால் டாக்சி அம்பாசிடர் கார் ஒன்று, அந்த ஜீப்பை வழி மறிக்கிறது. கால் டாக்கிசியிலிருந்து, லட்சுமணன் என்ற ஆய்வாளர் இறங்குகிறார். இன்னும் நான்கு பேர் இறங்குகிறார்கள்.

தாங்கள் சிபி.சிஐடி போலீஸ் என்று தங்களை அறிமுகப் படுத்திக் கொள்கிறார்கள். கோபால், தனது வழக்கறிஞரோடு பேச வேண்டும் என்று சொல்வதை காதில் வாங்கிக் கொள்ளாமல் கோபாலை அந்தக் காரில் ஏற்றுகிறார்கள். ஜீப்பை ஓட்டி வந்த டிரைவர் மோகன், அதே இடத்தில் ஜீப்பை நிறுத்தி பூட்டி விட்டு ஓடி விடுகிறார். கோபால் கைது செய்யப் பட்டு, சென்னை ஓமந்தூரார் மாளிகையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப் படுகிறார்.

தற்காக இந்தக் கைது… ? இதன் பின்னணி என்ன ?

புதிய பறவை படத்தில் சரோஜா தேவி, சிவாஜியைப் பார்த்து, கோபால்.. கோபால்…. என்று கூறுவார். இதைப் போலவே, 2001ல் ஆட்சிக்கு வந்ததும், முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த பல அதிகாரிகள், சரோஜா தேவி போலவே, கோபால், கோபால் என்ற பெயரை பிதற்றிக் கொண்டிருந்தனர்.

2001ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, 96 தோல்விக்குப் பிறகு பாடம் கற்றுக் கொண்டிருப்பார் என்று நம்பியவர்களை ஏமாற்றும் வகையில், படித்த வஞ்சகர்களான அதிகாரிகளை நம்பி மோசம் போனார்.

2001ல் நக்கீரன் இதழில் ஜெயலலிதாவை ஹிட்லர் போல மார்ஃபிங் செய்து அட்டைப் படத்தில் வெளியிட்டனர். இந்த இதழை ஜெயலலிதா பார்வைக்கு, அப்போது முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்த துணைச் செயலாளர் வீர சண்முகமணி கொண்டு சென்றார். இதன் பிறகு, ஜெயலலிதா, கடும் கோபம் கொண்டு, கோபாலை கைது செய்ய வேண்டும், அவ்வளவுதான்.

என்ன செய்வீர்களோ தெரியாது.. என்று தனது அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அப்போது, உள்துறைச் செயலாளராக இருந்த நரேஷ் குப்தா, இந்தக் கைதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இந்தக் கைதின் பாதக அம்சங்கள் குறித்து, ஒரு கோப்பை தயாரித்து முதலமைச்சர் பார்வைக்கு அனுப்புகிறார். அந்தக் கோப்பை தூக்கி கடாசிய ஜெயலலிதா, கைது செய்யுங்கள் என்று உத்தரவிடுகிறார்.


இந்தச் செய்தி, அரசல் புரசலாக கோபால் காதுக்கு வருகிறது. இதையடுத்து கோபால் தலைமறைவாகிறார். கோபால் மீத வழக்குகள் பதியப் பட்டது தெரிந்து, அனைத்து வழக்குகளிலும், முன் ஜாமீன் பெற கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இதன் முதல் கட்டமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் எந்த நீதிபதி முன்னிலையில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் என்று கண்டு பிடிக்கிறார்கள்.

அந்த நீதிபதிக்கு தெரிந்தவர் யார் என்று விசாரிக்கையில் அந்த நீதிபதி கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் போது, அங்கே மாவட்ட ஆட்சியராக இருந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்னால் தட்டாமல் கேட்பார் என்று தகவல் வருகிறது. நக்கீரன் சார்பில், ஒரு குழு, அந்த ஐஏஎஸ் அதிகாரியைச் சென்று சந்திக்கிறது.

அந்த அதிகாரி, மிகவும் சங்கடப் பட்டு, பிறகு நீதிபதியிடம் பேசிவிட்டுச் சொல்வதாகக் கூறுகிறார். மறு நாள், அந்த ஐஏஎஸ் அதிகாரி, நீதிபதியிடம் பேசி விட்டதாகவும், முன் ஜாமீன் கிடைத்து விடும், ஆனால், காவல்துறையினர் அழைத்தால், தவறாமல் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப் போவதாக நீதிபதி தெரிவித்ததாகக் கூறுகிறார்.
அதன் படியே, ஜெயலலிதா அரசாங்கம் பதிந்த அத்தனை வழக்குகளிலும், முன் ஜாமீன் பெறுகிறார் கோபால்.


இந்த முன் ஜாமீன் பெறும் வரை, கோபால் தலைமறைவாக இருக்கிறார். இவ்வாறு தலைமறைவாக இருக்கும் போது, இதழை நடத்தும் பொறுப்பு இன்றைய இணை ஆசிரியர் கர்ம வீரர் காமராஜ் வசம் வந்து சேருகிறது.

கோபால் வழக்கு தொடர்பாக, வழக்கறிஞர்களைச் சந்திப்பது, நீதிமன்றம் செல்வது போன்ற பணிகளை, நக்கீரனில் அப்போத பணியாற்றி, இப்போது வேறு பத்திரிக்கையில் பணியாற்றும், கோபாலின் நண்பர் மேற்கொள்கிறார். இதனால், இதழை நடத்தும் மொத்த பொறுப்பும், காமராஜ் வசம் வருகிறது.

இந்த காலகட்டத்தில், ஜெயலலிதா அரசு எடுத்த வரும் பழிவாங்கும் நடவடிக்கையை எதிர்க்கும் விதமாக, ஆதாரங்களே துளியும் இல்லாமல், அரசுக்கு எதிராக பல்வேறு செய்திகளை நக்கீரன் வெளியிடுகிறது. இந்தக் போக்கு ஜெயலலிதாவை மேலும் கோபம் கொள்ளச் செய்கிறது.


இந்த நிலையில் இதழை நடத்தும் பொறுப்பு வந்ததும், காமராஜுக்கு, இதுதான் சரியான நேரம் என்று உணர்ந்து, அலுவலகத்துக்கு வந்து போக கஷ்டமாக இருக்கிறது என்று தன்னுடைய பழைய அம்பாசிடர் காரை விட்டு விட்டு, புதிய க்வாலிஸ் கார் வாங்கித் தரவேண்டும் என்று கேட்கிறார்.

கோபாலின் சகோதரர் குருசாமி, இந்த நேரத்தில் போய் இப்படிக் கேட்கிறீர்களே, வழக்கு செலவுகளுக்கே பணம் இல்லை என்று தன் இயலாமையைக் கூறுகிறார். ஆனால் காமராஜ், இதை விட்டால் வேறு எப்போதுமே சந்தர்ப்பம் அமையாது என்று, க்வாலிஸ் கார் வாங்கித் தந்தால்தான் ஆச்சு என்று பிடிவாதம் பிடிக்கிறார்.


நாகர்கோயிலைச் சேர்ந்த ஒரு ஆடிட்டர் மூலமாக, வங்கியில் கடன் பெற்று, காமராஜ் இன்றும் பயன்படுத்தும் ஒரு மெரூன் கலர் க்வாலிஸ் கார் அப்போதுதான் வாங்கப் பட்டது.
நண்பரின் நெருக்கடியில் குளிர் காயும் கர்ம வீரரைப் பார்த்தீர்களா ?


உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள், பெருமாள், என்.ஆர்.இளங்கோ, அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் பதிவாளர், கிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர் என்.நடராஜன், ஆகிய பல்வேறு நல்ல உள்ளங்களின் உதவியுடன் கோபால் பல்வேறு வழக்குகளில் பெற்ற முன் ஜாமீன், கோபாலுக்கு உதவவில்லை.

ஜெயலலிதா அரசின் முதலமைச்சர் அலுவலகத்தில் பணியாற்றி ஐஏஎஸ் அதிகாரிகளான ஷீலா பாலகிருஷ்ணன், வீரஷண்முகமணி, வெங்கட்ரமணன் ஆகியோர் தூண்டுதலில், ஜெயலலிதா கோபாலை கைது செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் கொள்கிறார்.
அதன் விளைவு. கோபால் கைது செய்யப் படுகிறார்.

ஜெயலலிதா அரசு இப்படி வழக்கு மேல் வழக்காக கோபால் மீது தொடுத்தன் பின்னணி என்ன ?

பித்தம் தொடரும்



சவுக்கு

9 comments:

Anonymous said...

you should be either a super hero or completly insane ..the guts you have is amazing ..

Anonymous said...

welldone

vasan said...

புதிய‌ ப‌ற‌வை 'கோபால்'
திருவிளையாட‌ல் 'ந‌க்கீர‌ன்'
சேர்ந்து வந்த‌ க‌ல‌வை தான்.
தொட‌க்க‌ம் "ப‌ச்சை" ஜீப்....
என்னென்ன‌ க‌ல‌ரெல்லாம் க‌ல‌க்குமோ?
யாரையெல்லாம் இழுக்குமோ?
நீங்க‌ க‌ல‌க்குங்க‌!! மாட்டுற‌து?

Anonymous said...

AARAMBICHITANGAYYAA.. AARAMBICHITTANGA.... DEEPAWALI VARAI KONDANTAMTHAN.... THOTTA.

Anonymous said...

ஆஹா...சந்தன காடு தொடர் ஸ்டார்ட் ஆயிடுச்சா...அப்போ கோபாலு கதி அதோ கதிதான்......

Anonymous said...

கர்மவீரர் காமராஜின் வீர பராக்கிரமங்களை எழுதும்போது கூடவே பிரகாசின் வண்டவாளத்தையும் சேர்த்து எழுதுங்க

Anonymous said...

savukku editor is the real hero..

Anonymous said...

you have solid guts to write this kind of info to the society,i think you are for better than our intelligence people.

Rafiq Raja said...

கோபாலு கோபாலு... இனிமே உனக்கு பாலு :)

Post a Comment