ஜாபர் சார். நீங்க திருந்தவே மாட்டீங்களா ?
எத்தனை வாட்டி சார் உங்களுக்கு சொல்றது ?
உங்க சொந்த வேலைக்கு திண்டுக்கல் போறதுக்கு கூட ரகசிய நிதியிலேர்ந்தா டிக்கட் வாங்குவீங்க ?

மதுரையிலேயோ, திண்டுக்கலிலோ அரசுப் பணி எதுவும் கிடையாது. அலுவல் ரீதியான கூட்டமும் கிடையாது. முதலமைச்சர் கிட்டக் கூட சொல்லாம அப்படி என்ன சார் உங்களுக்கு திண்டுக்கல்லுல வேலை ?
சரி நீங்க பெரிய அதிகாரி. நாலு எடத்துக்கு போறது வழக்கம் தான். உங்க சொந்த வேலையா போகும் போதாவது சொந்தக் காசை செலவழிக்க மாட்டீங்களா ?
நீங்க ரகசிய நிதிய ஆட்டையப் போடுறத சாக்கா வைச்சு, ராஜ்குமார் டிஎஸ்பி என்ன பண்ணிக்கிட்டு இருக்கார் தெரியுமா ? யார் கிட்ட என்ன பேசிகிட்டு இருக்கார் தெரியுமா ? அந்த ஆள கூப்புட்டு கேளுங்க.
ஆமா பணத்தை சேத்து சேத்து வச்சு திங்கவா சார் போறீங்க ? அடிக்கடி ப்ளைட்டுல டெல்லிக்கு போறீங்களே ? ஒரு நாள் ப்ளைட் ஆக்சிடெண்ட் ஆனா மொத்தமா போயிடும் சார். “காதற்ற ஊசியும் வாராது கண் கடைவழிக்கே“ ன்ற பாட்ட நீங்க படிச்சதே இல்லையா ?
கொள்ளை அடிங்க. அதுக்கு ஒரு அளவு வேணாமா ? திங்கற சோறு, ரகசிய நிதி. உடுத்துற துணி ரகசிய நிதி. ஊருக்கு போறதுக்கு டிக்கெட்டு ரகசிய நிதி. தொண்டாமுத்தூர் ரேவ் பார்ட்டிக்கு நீங்க செலவு பண்ணல. அது ஓசி. சம்பளம், சம்பளம்னு ஒன்னு கொடுக்கறாங்களே அரசாங்கத்துல. அதை என்னதான் சார் செய்வீங்க ?

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
என்று குரானில் கூறப்பட்டிருக்கிறதே இதை படித்தீர்களா ஜாபர் சேட் சார் ? கடவுள் நம்பிக்கை இருக்கா இல்ல சவுக்கு மாதிரி நாத்தீகரா ?
கடவுளுக்கு உண்மையா இல்லை. உங்கள் மனைவிக்கு உண்மையாக இல்லை. நெருங்கிய நண்பர் காமராஜுக்கு உண்மையா இல்லை. உங்களை இப்படிப்பட்ட இடத்தில் வைத்து தமிழ்நாட்டையே குட்டிச் சுவராக்கிக் கொண்டு இருக்கும் கருணாநிதிக்கும் விசுவாசமாக இல்லை.
யாருக்குத்தான் விசுவாசமாக இருப்பீர்கள் ஜாபர் ?
நீங்க செலவு பண்ற ரகசிய நிதியின் ஒவ்வொரு பைசாவும், சாலையில் குப்பை வாருபவனும், கழிவறையை சுத்தம் செய்பவனும், முடி திருத்துபவனும், சாலையில் கடை வைத்திருப்பவனும் கட்டும் வரிப்பணம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் ஜாபர். அது மக்கள் பணம். நீங்கள் உல்லாசமாக இருக்க வழங்கப் பட்டது இல்லை.
இனிமேலாவது உங்க சொந்த வேலையா போகும் போதாவது, பாக்கெட்லேர்ந்து பணத்தக் கொஞ்சம் எடுங்க சார்.
அனானியாக வந்து கெட்ட வார்த்தையில திட்டியெல்லாம் கமெண்ட் போடாதீங்க சார். நான் பப்ளிஷ் பண்ண மாட்டேன். பெரிய மனுஷன் மாதிரி நடந்துக்கங்க. என்ன ?
நீங்க பெரிய மனுஷன் இல்லண்னு சிபி.சிஐடில பேசிக்கறாங்களாமே சார் தெரியுமா ?
ஏன் சார் ? ஏற்கனவே மதுரவாயல் போலீஸ் ஸ்டேஷன்ல சொல்லி ஒரு பொய் கேசு போட்டீங்க. அதுவே தப்பு. அப்புறம் ஏன் சார் சிபி.சிஐடி ஏடிஜிபி அர்ச்சனா ராமசுந்தரத்துக்கிட்ட பேசி, சைபர் க்ரைம் செல்ல வச்சு சவுக்கு மேல இன்னொரு கேசு போடுங்கன்னு சொன்னீங்க ? உங்களுக்காக ரிஸ்க் எடுக்க அந்த அம்மா என்ன மதுரவாயல் இன்ஸ்பெக்டர் தமிர்வாணன் மாதிரி லூசா ?
உங்களப் பத்தி என்ன கமென்ட் அடிச்சாங்களாம் தெரியுமா ? What happened to IG Intelligence ? Why is he picking up unnecessary fights like this ? Is he out of his mind ? ன்னு சொன்னாங்களாம் சார். போன வாட்டி கோர்ட்டுக்கு வந்தப்போ, சைபர் க்ரைம் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தான் சொன்னாரு. சிபி.சிஐடி பூரா இதுதான் பேச்சாம்.
ஏன் சார் உங்களுக்கு இந்த வேலை ?
அப்புறம் சார். டென்ஷன்ல நெறய்ய சிகரெட் புடிக்கிறீங்க போலருக்கு. கொறச்சுக்கங்க சார். உடம்புக்கு கெடுதி. டென்ஷன் ஏறாம இருக்கணும்னா சவுக்கு படிக்காதீங்க. டென்ஷன் ஏறாது. ஆயிரம்தான் இருந்தாலும், சவுக்குக்கு உங்க மேல ஒரு பாசம் உண்டு சார்.
அடுத்த பதிவுல சந்திக்கலாம் சார். வர்றேன் சார். உடம்ப பாத்துக்கங்க சார்.
சவுக்கு