![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4jxj9FXeq_T6QkSj4ihLA7NfJ5cnw1_UiFWwy8zKHmkwSkXG_9tRhKabRoZJ6O0XjI6OErAOpFIqgZBZaagp_33ehOpKhYAnZ5bJVRX-3bUPbKM0a0SnjaE4IYukeTQsLoM-myGPFXZk/s400/1.jpg)
ப்ரூட்டஸ்: ஜுலியஸ் சீசரின் ரோமானிய சாம்ராஜ்யத்தில், அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த, சீசரின் நெருங்கிய உறவினர் ப்ரூட்டஸ் செய்த துரோகம், வரலாற்றில் மிகவும் புகழ் பெற்றது. அகில சக்திகளையும் ஒருங்கே கொண்டிருந்த சீசரை, ப்ரூட்ஸ் அவரது மனைவி தடுத்தும் கேட்காமல் கொன்றார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi6UJU8zgZ55MCpXE_PXp0fLiQnVjKEUkHZ5tgeYsjAn-CwsHgurj_GANNAWdAM5HnZTQ4Y2WdDZq0kXimI4HW9lUx9rwnaEWUR6KxQp_R75vvprFPKmTjxd9DXF0iC3k_h_m2inHQpo38/s400/2.jpg)
வாங் ஜிங் வேய்: 1921ம் ஆண்டு பிறந்த சீனரான இவர், நெருக்கடியான நேரத்தில், தன் தாய் நாட்டுக்கு எதிராக ஜப்பானியர்களோடு அணி சேர்ந்ததற்காக இவரும் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiDzjVwaekt-83x8ZGUJb6jY-WP8KRGFRBaG5vgelTbe7kZR8LBdAhqicXXsrGrXrEyZtSGCgkoYk4MjCNWxlrlQQGpqY3uUsSmC_DYfWz3ZlMrEHOuWCqW6h0ILSEDabwQ08QEufYlCoQ/s400/3.jpg)
ரோசன்பர்க் தம்பதியர்: அமெரிக்கா மற்றும் சோவியத் நாட்டுக்கிடையே பனிப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில், அணு மற்றும் பல்வேறு அமெரிக்க ரகசியங்களை சோவியத் நாட்டுக்கு விற்றதாக குற்றம் சாட்டப் பட்டனர். பிறகு இவர்கள் இருவரின் உளவு வேலைகள் கண்டு பிடிக்கப் பட்டு 1953ம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப் பட்டனர்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjFzYTLbPCZRsjsu79ZQVPCcNxKDabwAlLR9j1azpJuFRuMUtN25qIESsx4nywENLQVqGU8vT-A5dOJgxwBk2GN0ZmwFp4Fs8YmVyf5gQaUZ2dxh-uizVCT4tY49gmtyMW7dgiKg7LaZa0/s400/4.jpg)
பெனடிக்ட் அர்நால்ட்:16ம் நூற்றாண்டில் அமெரிக்க தளபதியாக இருந்த இவர் அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே நடந்த போரில், அமெரிக்க ராணுவ தளபதியாக இருந்தாலும், அமெரிக்க கோட்டையை, பிரிட்டனுக்கு விட்டுக் கொடுத்து அமெரிக்காவுக்கு துரோகம் இழைக்க முயற்சி செய்தார். பின்னர் கடல் வழியே தப்பித்து கனடா நாட்டில் 1801ல் இறந்தார். ராணுவ வீரராக இருந்து தாய் நாட்டுக்கு இழைத்த துரோகத்துக்காக இவர் வரலாற்றில் இடம் பெறுகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEja74Ci-KOAZfdTvC3S7EVGKUvqH2dszxY-jnbGBWhNKyeINPV8917OW_7X6yjD4L8MACK4RS0Lq8Nys4UgxlHpUWIiw6qF2FvrVgFInSfXnjJ4ZoMB0I_Tq2RJX7QJ_zO5JbEDSf9PXF0/s400/5.jpg)
ஆல்ட்ரிக் ஏம்ஸ்: அமெரிக்க உளவு நிறுவனமான சிஐஏ வில் முக்கிய பொறுப்பில் இருந்த இவர், 1985ம் ஆண்டு வாஷிங்டன் நகரில் உள்ள சோவியத் தூதரகத்தில் நுழைந்து, அமெரிக்க ரகசியங்களை பணத்துக்காக விற்றார். இவர் விற்ற ரகசியங்களால் ஏறக்குறைய 100 அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு வந்தன. இவ்வாறு விற்ற ரகசியங்களுக்காக 4.6 மில்லியன் டாலர்கள் லஞ்சமாக பெற்றார். அமெரிக்கா சந்தித்த மிகப் பெரிய உளவு தோல்வி இது. இதை நடத்தி வைத்ததற்காக ஏம்ஸ் வரலாற்றில் இடம் பெறுகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj9XV_L91Ui_QcXSH3GEZKQKpBjrUj1NHu_q89OvkGRjkOE2658o89SvJLKRw6iJ3CeJgF35mnUE4q2t1dcYxZhyphenhyphenxJxLQkMIuDgcgvpbhCY4QSJ9H7IP2GnjXZ2FbKpLhRQ7OKE7Lr7JD8/s400/6.jpg)
விட்குன் க்விஸ்லிங்: நார்வே நாட்டைச் சேர்ந்த இவர், 1933ம் ஆண்டு தேசிய ஒற்றுமை கட்சி என்ற ஒரு கட்சியை தொடங்கினார். ஹிட்லரின் விசுவாசியாக இருந்த இவர், ஹிட்லர் படையெடுத்து வரும் முன்பே, நார்வே நாட்டின் ராணுவ யுத்திகள் அத்தனையும், ஹிட்லருக்கு தெரிவித்து விட்டார். இதனால் படையெடுப்பு நடக்கையில் எளிதாக நார்வேயை வென்ற நாஜிக்கள், வென்றதும், க்விஸ்லிங்கை நார்வே நாட்டின் அதிபராக நியமித்தனர். இரண்டாம் உலகப் போர் முடிவடைந்ததும், 1945ம் ஆண்டு, இவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. நார்வே நாட்டை காட்டிக் கொடுத்ததற்காகவும், நார்வே நாட்டு மக்களால் மிகவும் வெறுக்கப் பட்டதற்காகவும், இவர் மிகப் பெரிய துரோகி என்று வரலாற்றில் இடம் பெறுகிறார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgomklhUpAS2xYNCASYicJiC8aKF79JhCVcyomHtrgjwPPztYQaqngt2cKUIR0b-aZ_eSONOHrXYv6TbAArulNRUHnYyEd7FoECBQIsZHee1oWP-qvmRl5MF5I5kYeiH0IwhSSETBswiCk/s400/8.jpg)
யூதாஸ்:ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான யூதாஸ் 30 வெள்ளிக் காசுகளுக்காக ஏசுவை காட்டிக் கொடுத்தார். அதிகாரிகள் வருகையில் “நான் ஏசுவை முத்தமிடுகிறேன் அதை வைத்து ஏசுவை கைது செய்து கொள்ளுங்கள்“ என்று கூறி காட்டிக் கொடுத்ததால், ஏசு கைது செய்யப் பட்டு சிலுவையில் அறையப் படுகிறார். இதனால், வரலாற்றின் புகழ் பெற்ற “துரோகி“ ஆகிறார்.
இவர்களையெல்லாம் விட மிகப் பெரிய துரோகி யாராவது உண்டா ? உண்டு நண்பர்களே. உண்டு.
அந்தத் துரோகிதான் “கருணாநிதி“.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjthICthVA86-NdMM6MzXE7N__rUrtlG70juQ9W3V_V7yGviy81N0RKqF6NvlM0pQGtgeeYDHLgoXB20i0JkJqHE0GIyFFBw2Q-H688knR3AJ2OgCbEYY5Zv9IGV74GlqiJzAKNobwGXrM/s400/27cm7.jpg)
இவர்களெல்லோரையும் விட மிகப் பெரிய துரோகியாக கருணாநிதி பட்டம் பெற என்ன காரணம் ?
ஈழப் போரை கருணாநிதி தடுத்து நிறுத்தவில்லை என்று, தமிழகம் முழுக்க ஓலங்கள் கேட்டபோதெல்லாம், கருணாநிதி ஆதரவாளர்கள் இவர் என்ன செய்ய முடியும் ? எல்லாம் மத்திய அரசின் கையில் தானே உள்ளது, இவர்தான் போராட்டம் நடத்துகிறாரே என்று கூறுவர். ஆனால், தற்போது உள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசை விட, கடந்த அரசில், கருணாநிதிக்கு இருந்த செல்வாக்கு அளவில்லாதது. கருணாநிதி சொன்னால் நடக்காதது எதுவுமே இல்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhvJLE4t0THdGcexbyej9uGHERZst1iK5_FpFOLRrQ8Ul-1zmiQ0X7P8jxyaMVEo0QgH7WSGlCXTkZbkpvGM9wNcXb09sQaODqcxlV9zgHmigGYF3zyEkGTA2-9Mz0xeB-FGcqFvLBa4T0/s400/m-karunanidhi-sonia-gandhi-rahul-gandhi-dayanidhi-maran-2009-5-19-11-53-40.jpg)
கருணாநிதி கடிதம் எழுதினால், உடனே பிரணாப் முகர்ஜி கோபாலபுரத்தில் வந்து மண்டியிடுவார். ஆனாலும், கருணாநிதி, நாடகம் மட்டுமே நடத்துகிறார், உண்மையில் தமிழர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை சோனியா நன்றாகவே உணர்ந்திருந்தார். அதனால்தான், இறுதிப் போரில் அத்தனை தமிழர்கள் மீது குண்டுகள் வீசப்பட்டுக் கொண்டிருக்கும் போதும் கூட கருணாநிதி பல “கண்ணீர்” நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தாரே தவிர, உருப்படியாக எதுவும் செய்யவில்லை.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgMunZYGuUtkj344Y3m_fcOc8vKKq9XnWRBOv3kA2PmyIG03vSHD4LrStuRqb-Vw2UJ74Nc9ad0_OLSIuo9r8rjPgm1NXq3zRsGgDjzNqybtCMHiZ3XQSmJxcwS2el6_eFN_-5Q9X5kPho/s400/4.jpg)
கருணாநிதி நினைத்திருந்தால், யுத்தம் நின்றிருக்கும் என்பது குழந்தைக்குக் கூட தெரியும். ஆனால், கருணாநிதி நினைவில், ஈழத் தமிழர்கள் இல்லை. தன் குடும்பத்தினர் மட்டுமே இருந்தனர்.
மூன்று மணிநேரம் உண்ணாநோன்பு நோற்று ‘இராசபக்சே போர் நிறுத்தத்தை அறிவித்துவிட்டார்’ என்று சொல்லி உண்ணா நோன்பை முடித்து சாதனை படைத்தவர் கருணாநிதி ஒருவர்தான். அவரிடம் ‘இன்று காலையில் கூட விடுதலைப் புலிகள் மீது கன ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடைபெற்றதாக செய்திகள் வந்திருக்கிறதே?’ என்று செய்தியாளர்கள் கேட்ட போது ‘மழை விட்டும் தூவானம் விடவில்லை’ என்று பதில் இறுத்தது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்!
தமிழீழ மக்களுக்காகக் குரல் கொடுத்த தமிழ் உணர்வாளர்கள் இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி, தஞ்சை மணியரசன், நாஞ்சில் சம்பத், கோவை இராமகிருஷ்ணன் போன்றோரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது கருணாநிதியின் அதிகார வெறியல்லவா?
இனமா? பதவியா? என வந்தபோது பதவிதான் முக்கியம் என முதல்வர் கருணாநிதி முடிவெடுத்தார்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiV3HTyzM7Equdg5FLz8xBfYXpAnE6xcUxQ9rInJNly0251efhPi8yxEgOF7zF4QIV8uKxDiy1zwwyYWmEmA5d3i_cxWiyMbDoK5U70tA3tLke5hQKdR34cCsGjDieawfijiAz_EQkTUzc/s400/dmk6.jpg)
தமிழ்நாட்டுக்கு அகதிகளாக ஓடிவந்த ஈழத் தமிழர்களை செங்கல்பட்டு மற்றும் பூந்தமல்லி சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களில் ஆண்டுக்கணக்காக அடைத்து வைத்து அழகுபார்க்கும் ஒரே முதல்வர் கருணாநிதிதான்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjUWsc2tvSz52mPzIRjAxfxjahfEuX48PPS2YzJAt9VSAp_On62LxDeB-73VOz-9jEVqbn5NuDo0H4u_rwogkFdQdG0f2FxmtxrDm5hmryFwCpwtmN872yaoadXNjG8T-AOWkbDvOP6KWs/s400/8_2.jpg)
இலங்கையில் நடந்த இறுதிக் கட்டப் போரில் முன்னணியில் நின்று போரை நடத்திய தளபதி பொன்சேகா தனது பதவியை ராஜினாமா செய்கையில் இராணுவம், சதி முயற்சிகளில் ஈடுபடுவதாக சந்தேகித்து 2009 அக்டோபர் 15ஆம் திகதி இந்திய அரசாங்கத்தை எச்சரிக்கையாக இருக்குமாறும் அந்நாட்டு இராணுவத்தை மிகவும் அவதானமாக செயற்படுமாறும் அறிவிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் இன்று வரை இந்திய அரசாங்கத்தால் மறுக்கப் படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. இப்படி ஈழப் போரில் இந்தியாவின் / சோனியாவின் பங்கு வெளிப்படையாக தெரிந்த நிலையில்தான் பிரணாப் முகர்ஜி இலங்கை சென்று ராஜபஷேவை சந்தித்து, தமிழகம் திரும்பி, சென்னை வந்தும் கருணாநிதியை சந்திக்காமல் திரும்பியுள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-9Osr9UXqyDEaEYkodsYL2Sm4rSOnRQcXVORLDrR6kK4Gna82xvfDCShfJPe_hFbIoWvNFpd8ibxa27pxMXEyl90BlorLbMVA8-g7ZyJT90mCMNwm62-ATaeKaLlYWZDVTT5iXpOS6Qs/s400/rajapakse_pranab.jpg)
இந்தச் சூழ்நிலையில், கருணாநிதி, சென்னையில் நடந்த ஒரு விழாவில் என்ன பேசியுள்ளார் தெரியுமா ?
”திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து மேலும் பல ஆண்டுகள் நீடிக்கும். காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர வேண்டும் என்றும் இந்த கூட்டணி நிலைத்தால்தான் இந்தியாவும், தமிழகமும் வளமாக இருக்க முடியும்.
காங்கிரசுக்கும் திமுகவுக்கும் இடையே எந்த அளவிற்கு ஒற்றுமை உள்ளது என்பது குறித்து விரிவாக பேசுவதற்கு கால நேரம் போதாது.
காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்தால் தான் தமிழகத்திற்கு மேலும் நல்ல பல திட்டங்களை விரைவாக செயல்படுத்த முடியும் என்பது நாடு அறிந்த உண்மை.
சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் கடற்கரையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி, என்னைப் பற்றியும், திமுக பற்றியும் எந்த அளவிற்கு புகழ்ந்து பேசினார் என்று இங்கே சிலர் எடுத்துக் கூறினார்கள். அந்த ஒற்றுமை இவ்விரு கட்சிகளிடையே மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து நீடிக்கும் என்றார். ” என்று பேசியுள்ளார்.
இத்தனையும் செய்து விட்டு, "மொழிக்காக" மட்டும், தமிழ் மொழி மாநாடு நடத்தும் கருணாநிதியை என்ன சொல்லி அழைப்பீர்கள்.
துரோகி அல்லவா ? அதனால்தான் சொல்கிறேன். வரலாற்றில் மிகப் பெரிய துரோகி.. .. ..
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiKHLrWrJlF4ClarzdsPv7Rigc2X-INTdmgWHNSc_s3Cpl9Zh9q_s9qNRqsNnt1MKZaRDGNkF-1cYHSNopY4tOAuv7bOS5GKrNBXb_UbEtXIhZ5sixAR2oRBjp82gICwwduCafQJZnRYAg/s400/karunanidhi_20081124.jpg)
முத்துவேல் கருணாநிதி
சவுக்கு
9 comments:
முன்பு வேறொரு பதிவிற்கு போட்ட பின்னூட்டம் இதற்கும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதை மறுபடியும் பதிவு செய்கிறேன்.
இதில் கருணாநிதியை குறை கூறுவது எந்த நியாயமும் இல்லை. இதற்கு முழு பொறுப்பு ஏற்க வேண்டியவர்கள் தமிழக வாக்காளர்கள். ஆம் 1984 ஆண்டு இலங்கையில் போர் உச்சகட்டத்தில் இருக்கும்போது, அதற்காக எதையும் செய்யாத MGR அரசையும், மத்திய காங்கிரஸ் அரசையும் எதிர்த்து கருணாநிதியும், அன்பழகனும் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தனர். ஆனால் அதன்பின் நடந்த தேர்தலில் அரசாண்ட அதே கட்சிகளுக்கு வாக்களித்து தமிழக மக்கள் தங்களுக்கும் இலங்கையில் நடக்கும் இனபோருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெளிவுபடுத்தினர். இந்திராவோ அல்லது MGR நினைத்திருந்தால் அப்போதே இலங்கை தமிழர்களுக்கு ஒரு விடிவு கிடைத்திருக்கும். இலங்கை தமிழர்களின் முதல் துரோகிகள் இந்திராவும், MGR ம. சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறந்தாலும், தமிழக மக்கள் கருணாநிதியின் தமிழ் உணர்வுக்கு எந்த மதிப்பும் அளிக்கவில்லை. அதன்பின் 1989 ஆம் வருடம் திமுக ஆட்சி வந்ததும், அவர் இலங்கை தமிழர்கள் மேல் காட்டிய பரிதாப உணர்ச்சியை ஜெயலலிதா கொச்சைப்படுத்தி அவர் புலிகளுக்கு ஆதரவாக உள்ளார் என்று அந்த ஆட்சியை கலைகவைத்தார். அதன்பின் நடந்த தேர்தலிலும் தமிழக மக்கள் ஒட்டுமொத்தமாக திமுகவை தோற்கடித்து உண்மையான தமிழன விரோதியான ஜெயலலிதாவுக்கு ஆட்சியை கொடுத்தனர். தமிழகத்தில் காங்கிரஸ் உடன் கூட்டணி வைக்கும கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சூழ்நிலையில், தன கையில் இருக்கும் அதிகாரத்தை இழந்து கருணாநிதி எப்படி இலங்கை தமிழர்களுக்கு நன்மை செய்ய முடியும். அவ்வாறு துணிந்தாலும், முடிவு என்னவோ ஜெயலலிதாவுக்கு சாதகமாகத்தான் முடியும். இவர் இலங்கை தமிழர்களை ஆதரித்தால் உடனே ஜெயலலிதா காங்கிரசுடன் கைகோர்த்துக்கொண்டு மொத்தமாக திமுக ஆட்சியை ஒழித்துவிடுவார். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால், இப்போதிருக்கும் கொஞ்சநஞ்ச இலங்கைதமிழர்கான ஆதரவும் முழுதும் அழிந்துவிடும். வைகோ கைது போன்ற சம்பவங்கள் யாருக்கும் மறந்திருக்காது.
இந்திய அமைதிப்படை பிரேமதாசா அவமானபடுத்தி துரதியடித்ததும், சென்னை துறைமுகம் வந்திறங்கிய அவர்களை வரவேற்க செல்ல முடியாது என மிக துணிவுடன் கருணாநிதி அறிவித்தார். இது இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தாலும், ஆட்சியே இதால் கலைக்கப்படலாம் என்றாலும் மிக துணிவாக அவர் இதை செய்தார். பிரபாகரன் என்றுமே கருணாநிதியை மதித்ததில்லை. அணைத்து தமிழின மூத்த தலைவர்களும் (அமிர்தலிங்கம், சிறி சபாரத்தினம் உட்பட) கருணாநிதியின் பின் அணிதிரள, பிரபாகரன் எதற்குமே உதவியற்ற MGR இன் பின் நின்றார். MGR - இன் தூண்டுதலால் திமுக அளித்த உதவிதொகையையும் வாங்க மறுத்து அவரை அவமானப்படுத்தினார். ஆனால், இதை எதையும் கருணாநிதி பொருட்படுத்தாமல் 1989 இல் ஆட்சிக்கு வந்தவுடன் தன்னால் ஆனா உதவிகள் அனைத்தும் செய்தார். அதற்காக தன ஆட்சியையும் ஜெயலலிதாவின் சூழ்ச்சியால்இழந்தார்.
தமிழக வாக்காளர்கள் ஜெயலலிதா போன்ற குள்ள நரித்தனமான சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளை என்று முழுவதுமாக நிராகரிகிறார்களோ அன்றுதான் இலங்கை தமிழர் வாழ்வில் அமைதி ஏற்படும். இதில் கருணாநிதியை மட்டும் குற்றம் சொல்வதில் எந்தபயனும இல்லை.
நண்பர் சாய் அவர்களே. உங்கள் கருத்தோடு நான் மாறுபடுகிறேன். புலிகள் நல்லவர்களா இல்லையா, இந்திரா காந்தி புலிகளுக்கு உதவி செய்தார்களா இல்லையா என்பது விவாதப் பொருளல்ல. இந்த ஆண்டு ஜனவரி முதல் தமிழர் பகுதிகள் மேல் தொடர்ந்து நடந்த தாக்குதல்களை கருணாநிதியால் நிறுத்தியிருக்க முடியுமா இல்லையா என்பது தான் கேள்வி. தேர்தல் முடிவுகள் வரும் முன், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாவே இப்படி ஒரு வெற்றியை எதிர்ப் பார்க்கவில்லை. திமுக வை பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ். 2004ல், பிஜேபி ஜெயிக்காது என்று தெரிந்ததும் தான், பிஜேபி மதவாத கட்சி என்று திடீர் ஞானோதயம் வந்து கூட்டணியை விட்டு விலகினார் கருணாநிதி. அதே போல், இலங்கையில் போரை நிறுத்தாவிட்டால், ஆதரவு வாபஸ், கூட்டணி இல்லை, தனித்து போட்டி, என்று கருணாநிதியால் அறிவித்திருக்க முடியுமா முடியாதா ? காங்கிரசோடு சேராமல், பாமக, இடது சாரிகளோடு தனித்து நின்றிருந்தால், 40 இடங்களையும் கருணாநிதி பெற்றிருப்பார்.
கருணாநிதி ஏன் இதைச் செய்யவில்லை என்றால், ஈழத் தமிழர்களை விட, அறுபதாயிரம் கோடியை அள்ளித் தந்த தொலைத் தொடர்புத் துறை முக்கியம். கேட்ட இலாகா கிடைக்கவில்லை என்றதும், பிணக்காகி, கோபித்துக் கொண்டு வரத் தெரிந்த கருணாநிதிக்கு, இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இப்படி ஒரு கோபத்தை ஏன் காட்ட முடியவில்லை ? கூறுங்கள் நண்பரே.
ya its true tamil nadu people never never worry about elam
k. saravanan
singapore
கருணாநிதி துரோகி அல்ல...
தமிழினத்தின் முதல் எதிரி கருணாநிதி
தங்கள் மறுமொழிக்கு நன்றி. பாமக, இடதுசாரிகள் தமிழகத்தில் செல்லாகாசுகள். இவர்களால் தமிழகத்தில் எந்த ஆட்சி மாற்றமும் நடைபெறமுடியாது. இந்த கட்சிகளுக்கு சுயமரியாதை இருந்தால் ஏன் ஜெயாவுடன் கூட்டணி வைக்க வேண்டும்? இந்த கட்சிகள் தம்பட்டம் அடிப்பது போல் உண்மையான தமிழுணர்வு இருந்தால் ஏன் இலங்கைத்தமிழர்களின் முதல் எதிரியான அந்த அம்மையாருடன் போய் சேரவேண்டும்? இவர்களின் பச்சோந்திதனமான நிலைபாடுகளை என்றாவது உங்களை போன்றவர்கள் கேள்வி கேட்டதுண்டா? இதுதான் தமிழர்களின் துரதிருஷ்டம். உண்மையான எதிரி எங்கோ நல்லவன் போல் ஒளிந்திருக்க, உண்மை தமிழ் நலன் விரும்பிகளை நாம் வசை பாடுவோம். திமுக நீங்கள் சொல்வது போன்ற நிலையை எடுத்திருந்தால் நிச்சயமாக காங்கிரஸ் அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருக்கும். காங்கிரஸ்சின் 15 சதவீத வாக்குகள்தான் தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கிறது. அப்படி ஒரு நிலை ஏற்பட்டிருந்தால் இப்போது காட்டும் சிறு எதிர்ப்பை கூட இங்கே காட்ட திருமாவளவன் போன்ற வீராதிவீரர்களுக்கு துநிவிருந்திருக்காது. அப்படியே அவர்கள் எதிர்த்தாலும், வைகோ போன்று வேலூர் சிறையில் கலி தின்ன வேண்டியிருந்திருக்கும. காங்கிரஸ்சுக்கு வோட்டு போடும் மக்கள் திருந்தும் வரையில் தமிழகத்தில் தமிழுணர்வுக்கு வழியில்லை. அதிகாரத்தையும் இழந்துவிட்டு ஜெயலலிதாவின் வெறித்தனமான ஆட்சியையும் கருணாநிதி சகித்துக்கொள்ள வேண்டியுருக்கும்
தோழர் சாய் அவர்களே, ராமதாஸ் மற்றும் ஜெயலலிதா கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடமில்லை. ஆனால், சந்தர்ப்பவாத நிலைபாடாக இருந்தாலும், எந்த வகையான நிலைபாட்டை ஒருவர் எடுக்கிறார் என்பது முக்கியம்.
எனக்கு 40 தொகுதிகள் தந்தால், இலங்கைக்கு இந்திய ராணுவத்தை அனுப்பி தனி ஈழம் பெற்றுத் தருவேன் என்று தேர்தலுக்காகவாவது ஜெயலலிதா சொன்னார். மேலும், ஜெயலலிதா, தன்னை உலகத் தமிழர்களுக்கு தலைவி என்று என்றுமே சொல்லிக் கொண்டதில்லை. ஜெயலலிதாவை தமிழர்கள் தங்களுக்கு ஆதரவான நிலை எடுப்பார் என்று என்றுமே நம்பியதில்லை. ஆனால், கருணாநிதியை நம்பினார்கள். அதனால்தான், ஜெயலலிதாவை விட கருணாநிதி மோசமானவர் என்று கூறுகிறேன். கருணாநிதி நம்ப வைத்து கழுத்தறுத்தார். மேலும், போர் முடிவடைவதற்கு முன் கருணாநிதி, இலங்கையில் சுயநிர்ணய உரிமைக்காக நீதிபதிகள் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவை அமைத்தார். நினைவிருக்கிறதா ? இப்பொழுது எங்கே போயிற்று அந்தக் குழு ? அத்தனை பேரும் செத்து மடிந்தாயிற்று. மீதம் உள்ளவர்களை கம்பி வேலிக்குள் அடைத்து வைத்துள்ள இந்த நிலையில், மவுனத்தின் வலி என்று கடிதம் எழுதுகிறாரே கருணாநிதி ! அடி வயிற்றை பிறட்டவில்லை ?
எனக்கு பிறட்டுகிறது தோழரே.
மேலும் அந்தக் கடிதத்தில், மாவீரன் மாத்தையாவிற்கு புலிகள் இயக்கம் மரண தண்டனை விதித்தது என்கிறாரே ? சகோதர யுத்தத்தில், தினகரன் நாளிதழ் ஊழியர்கள் அப்பாவிகள் 3 பேர் உயிரோடு கொளுத்தப் பட்டு 3 ஆண்டுகள் ஆகிறதே. இலங்கையின் சகோதர யுத்தம் பற்றி கேள்வி எழுப்பும் கருணாநிதிக்க், அந்த அப்பாவிகளுக்கு நியாயம் வழங்க வேண்டும் என்று தோன்றுகிறதா ? இப்பொழுது தெரிகிறதா கருணாநிதியின் இரட்டை நிலைபாடு ?
என் மனது ஆறவில்லை. உறுதியாகச் சொல்கிறேன் கருணாநிதி நினைத்திருந்தால் என் தமிழ் மக்களைக் காப்பாற்றியிருக்க முடியும்.
இதே ஜெயலலிதாதான் போர் என்று வந்தால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று தமிழர்களின் உயிரை மிக கொச்சையாக பேசினார். இவ்வாறு அவர் பேசியது இலங்கைக்கு இராணுவம் அனுப்புவேன் என்று கூறிய தினத்திற்கு ஒரு வாரத்திற்கு முன். கச்சதீவை மீட்பேன் என்று சூளுரயிட்ட அவர் அங்கிருந்து ஒரு கருவாட்டைகூட 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் எடுத்துவரவில்லை. இவர்களையெல்லாம் எப்படிதான் நம்புகிறீர்களோ!!! இதுதான் ஏமாளி தமிழர்களின் தலைவிதி.
நண்பர் சாய் அவர்களே, ஈழத் தமிழர்களுக்கு ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, ஒன்றுமே செய்யவில்லை என்பதில் நாம் இருவரும் உடன்படுகிறோம். ஆனால் தமிழினத் தலைவர் என்று சொல்லிக் கொள்ளும் கருணாநிதிக்கு கூடுதல் பொறுப்பு இருக்கிறது, அவர் நம்ப வைத்து கழுத்தறுத்து விட்டார் என்பதில் தான் நாம் இருவரும் வேறுபடுகிறோம் என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள் ?
ivarkalai ellam vida mika periya thuroki oruvar irukkiraar.than paathukappirkkaka thaan sellumidamellam makkalai azaiththu sendru kedayamaaka akki avarkalai pali koduththa pirabakaran ennum sarvaathikaari.ennilla poralikalai sayanaid sappittu saka sonna intha eli (puli)than uyirai kaappatri kolla singalavar mun vellai kodi pidiththu thurokam seitha piraba thaan mika priya thamilina thuroki.
Post a Comment