கடந்த வருடம் மூன்று தேசியவிருது வாங்கிய " தங்கமீன்கள் " என்ற திரைப்படத்தில் நாயகன் வறுமையிலும் தனது அன்பு மகளை எப்படி பொக்கிஷமாக கருதி சிறப்பாக உருவாக்க முயற்சிக்கிறான் என்பதே கதை.
மேற்கொண்டு நம் பார்க்கப் போகும் நாயகனும் தன் மகள் மேல் உள்ள அளவு கடந்த பாசத்தை எப்படியெல்லாம் காட்டுகிறார். அதற்காக என்னவெல்லாம் செய்கிறார் என்பதை பார்க்கப்போகிறோம். இவர் ஆஸ்கார் விருதுக்கு முழு தகுதி உடையவர். இந்தியாவின் மிகச் சிறந்த குணசித்திர நடிகரும் சிறந்த நடிப்புக் கலை பள்ளியை நடத்தும் அனுப்பம் கேரே அசந்து பாராட்டி "நீங்கள் ஏன் நடிக்க வரக் கூடாது?" என்று இவரிடம் கெஞ்சியதுண்டு. "நான் ஏற்கனவே அதைத்தானே வாழ்கையில் செய்து கொண்டிருக்கிறேன்" என்று அவரது வேண்டுகோளை மறுத்துவிட்டார்.
தெலுங்கரான இவர் மைசூரில் பிறந்து, வளர்ந்து தமிழ்நாட்டுக்கு சேவை செய்ய 1989-ம் ஆண்டு தனது காலடியை வைத்த நாள் முதல் தமிழ்நாடு சுபிக்ஷம் பெற்றுவிட்டது.
பசி, பட்டினி, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, லஞ்சம், பொறாமை, கோபம் போன்றவற்றை தனது *யோகா என்ற ஒரே ஆயுதத்தால் முடிவுக்கு கொண்டு வந்தவர்.
தற்போது தமிழ் மக்கள் எல்லாம் "ஆனந்த அலையில்" சிக்கித் தவிக்க காரணமாய் இருப்பவர்.
தற்போது அவர் தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத தலை சிறந்த சக்தி. அவருடைய வாகனம் தமிழ்நாட்டில் உள்ள எந்த toll gate இல் சென்றாலும் பணம் கூட வசூலிக்காமல் விட்டு விடுவதாகக் கூறி அவரே பெருமை பட்டுக்கொள்கிறார் என்றால் பாருங்களேன்.
அவர் வேறுயாரும் அல்ல... நம்மையெல்லாம் "வாருங்கள் உங்களில் மலருங்கள்" என்று அன்போடு அழைக்கும் சத்குரு என்று தனக்கு தானே பெயர் சூட்டி கொண்ட ஜக்கி வாசுதேவ் அவர்களே.
கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் சுமார் 400 ஏக்கர் நிலத்தில் யானை வழித்தடத்தில் ஆக்கிரமிப்பு செய்து விதியை மீறி அரசை ஏமாற்றி 5 லட்சம் சதுர அடியில் கட்டிடம் கட்டியுள்ளதும் அதை அரசு முழுவதும் இடிக்க உத்தரவு போட்டிருப்பதும் அனைவரும் அறிந்ததே.
சரி அவருக்கென்ன ? கருணாநிதியும் ஜெயலலிதாவும் அவர் காலடியில். அவர் ஏன் கவலைப்பட வேண்டும் ?
தனது கட்டிடத்தை காப்பாற்ற தனது அடிபொடிகளை ஏவி அதற்காக டெல்லிக்கும் சென்னைக்கும் அலறியடித்துக் கொண்டு பறந்து கொண்டிருக்கும் வேளையிலும் செப்டம்பர் 3ம் தேதி நடக்க இருக்கும் தனது மகளின் திருமணத்தை சீரும் சிறப்புமாக நடத்த தற்போது ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.
இது ஒரு தந்தையின் கடமைதானே, இதில் என்ன தப்பு?
இந்த இடத்தில பலர் அறியாத ஒரு பிளாஷ்பேக்.
ஜக்கியின் கோவை பிரவேச(ஷ)த்திற்கு முன் மைசூரைச் சேர்ந்த சமீபத்தில் மறைந்த ‘ரிஷி பிரபாகர்’ என்னும் யோகா குருவிடம் ஆசிரியராக இருந்தவர்தான் ஜகஜ்ஜ்ஜால ஜக்கி. ரிஷி பிரபாகரால் கோவை-திருப்பூருக்கு வகுப்பு நடத்த அனுப்பப்பட்ட ஜக்கி அங்குள்ள செல்வ வளத்தைக் கண்டு ரிஷியின் தொடர்பை துண்டித்து கொண்டார்.
இவரோடு ஒன்றாக ரிஷியிடம் இருந்த மைசூர் ராமகிருஷ்ணன் மற்றும் வித்யாகர் இன்றும் யோகா வகுப்புகள் நடத்திக்கொண்டு இருக்கிறார்கள்.
இவற்றையெல்லாம் மறைத்து விட்டு தன்னை ஒரு வாழும் enlightened குரு என்றும் இது தனது மூன்றாவது பிறவி என்றும் முதல் பிறவியில் பில்வாஸ் என்னும் தாழ்த்த ஜாதியில் பிறந்தவன் என்றும் இரண்டாவது பிறவியில் சத்குரு ஸ்ரீப்ரமா என்ற பெயரில் தேனி அருகில் பிறந்து ஊட்டியில் வாழ்ந்து வெள்ளியங்கிரி மலையில் உயிரை விட்டதாக அள்ளி அள்ளி விடுவார்.
தியானலிங்கம் கோவில் கட்டுவது தான் தனது மூன்று பிறவியின் நோக்கம் என்றும் அது முடிவடைந்த உடன் உயிரை விட்டு விடுவதாக உறுதி கொடுத்திருந்தார். ஆனால் சொன்ன சொல்லை காப்பாற்றாமல் 15 ஆண்டுகளாக பலர் உயிரை எடுத்துவருகிறார்(!) என்பதுதான் உண்மை.
ரிஷி பிரபாகரிடம் யோகா ஆசிரியராக ஜக்கி இருந்தபோது, விஜி என்ற பெண் அங்கு வந்து சேர்ந்தார். முந்தைய மணவாழ்க்கை முறிந்து மனமுடைந்த நிலையில் யோகா வகுப்பில் கலந்து கொள்ள வந்த விஜியோடு ஜக்கிக்கு தொடர்பு ஏற்பட்டு அது திருமணத்தில் முடிந்தது. இயற்கையில் மிகவும் கோபமும் உணர்ச்சிவசப்படுபவருமான விஜி, ஜக்கியோடு ஏற்பட்ட பல பிரச்சினைகளுக்கு இடையேயும் 1998-ம் ஆண்டு வரை அவரோடு தான் வாழ்ந்து வந்தார்.
கோவையில் பாரம்பரிய மிக்க ELGI குரூப்பை சேர்ந்த ELGI வரதராஜ் அவர்களின் மகன் சுதர்சன் வரதராஜ். அவர் ELGI நிறுவனத்தின் செயல் அதிகாரி(EXECUTIVE DIRECTOR). அவருடைய அறிமுகம் ஜக்கிக்கு கிடைக்கிறது. இருவரும் நல்ல நண்பர்களான உடன் தனது மனைவி பாரதி வரதராஜை யோகா கற்றுக்கொள்ள அறிமுகம் செய்து வைக்க விதியின்(ஜக்கியின்) விளையாட்டு சுதர்சன் வரதராஜ் வாழ்வில் ஆரம்பமாகிவிடுகிறது. இவர் நடத்திய 90 நாள் ‘முழு யோகா’ வகுப்பில் தனது அலுவல்களையும் விட்டு தனது மனைவியுடன் கலந்து கொள்கிறார் சுதர்சன். செல்வ சீமாட்டி பாரதி ஆந்திரா முன்னாள் எம்.பி., ஒருவரின் மகள். இரண்டு ஆண் குழந்தைகளுக்கு தாயான பாரதியை ஜகஜால ஜக்கி தனது வலையில் வீழ்த்துகிறார். அது எப்படி ?
பாரதி |
முதல் பிறவியான பில்வாஸ் மத்திய பிரதேஷில் தாழ்த்த ஜாதியில் (பாம்பாட்டி) பிறந்து உயர்ந்த ஜாதிப்பெண் ஒருவரால் காதலிக்க படுகிறான். காதலுக்கு எதிர்ப்பு செய்த உயர்ந்த ஜாதி மக்கள் கட்டிவைத்து அவனை விஷப்பாம்பை விட்டு கடிக்கச் செய்து சாகடிக்க, அப்போது தனது மூச்சை(மூச்சாவை அல்ல) தற்செயலாக அவன் கவனிக்க அந்த ஷணத்தில் அவனது பிறப்பின் நோக்கமும் மற்றும் தியானலிங்க கோவில் கட்டும் எண்ணமும் உருவாகி விடுகிறது. அதையடுத்து அவன் இரண்டாவது பிறவியில் ஸ்ரீ பிரம்ஹா என்ற பெயரில் பிறந்தாரம்.
இரண்டாவது பிறவியில் ஸ்ரீ பிரம்ஹா மிகுந்த கோவக்காரராம், தியானலிங்கம் கட்டுவதற்கு பல தடைகள் இருந்ததாம் (அப்போவே forest dept இருந்திருக்கு). அதனால் மிகுந்த கோபத்தில் இருந்த அவருக்கு விபூதி என்னும் பெண் பணிவிடை செய்து வந்தாராம். சரி அதற்கு இப்போது என்ன என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சரி இதுக்கும் பாரதிக்கும் என்ன ?
அட சாமி, இன்னுமா புரியல ? அந்த உயர்ந்த ஜாதி பணிவிடைப் பெண் தாங்க நம்ம பாரதி. அதாவது பல ஜென்ம தொடர்பாம் !
இந்த கதையை பாரதியிடம் நேரம் பார்த்து அவிழ்த்துவிட யோகாவும் சேர்ந்து வேலை பார்க்க விபூதியுடன் நெத்தியில குங்குமத்தையும் வச்சிட்டன் ஜக்கி.
(கதைக்கு அலையிற சினிமாகாரர்கள் எல்லாம் சத்குருவ எனக்கு நல்லா தெரியும்முன்னு நாளைக்கே வண்டியேறி போயிரதீங்க)
அப்போ விஜி யாரு ?
அதுக்குதா இருக்கவே இருக்கே தங்கச்சி ரோல் என்னும் கேரக்டர் ரோல். விஜி முந்தைய பிறவியில் இவரின் தங்கச்சியாம். உலகம் சுற்றும் வாலிபன் எம்ஜிஆரையே விஞ்சி விடுவான் இந்தத் திருடன்.
இவர்கள் மூவரும் தியானலிங்கம் கட்டுவதற்காக பல கோவில்களை பார்த்துவர இந்திய முழுவதும் காரிலே பயணித்தார்கள். அதற்கு "கர்ம யாத்ரா" என்று பெயர். கருமம் பிடிச்ச யாத்திரை அல்ல. கர்மா.... கர்மா... இவர்கள் நெருக்கம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர விஜிக்கு ஜக்கிமேல் சந்தேகம் வர சண்டையும் வர அது யோகா வகுப்பில் தீட்சை கொடுக்கும் இடம் வரை பரவி, விஜியின் ருத்ர தாண்டவத்தை கண்ட பலர் இன்னும் உயிரோடு உள்ளனர்.
பிறகு விஜி தனது “அணாகத்தா” சக்ராவில் இருந்து தனது உயிரை விட்டதை பார்க்கும் பாக்கியத்தை ஜக்கி யாருக்கும் கொடுக்கவில்லை. விஜியின் தந்தை காங்கன்னா தன் மகளை ஜக்கிதான் கொன்று விட்டதாகவும், ஆசிரமத்தில் ஜக்கியிக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகவும் கொடுத்த புகாரில் இவர் சிக்காமல் 6 மாதம் ஓடி ஒளிந்து, ஏதோ கரூர் மற்றும் திருப்பூர் தொண்டர்களின் தயவால் தப்பி விஜிக்கு ஒரு சமாதியும் எழுப்பிவிட்டார். பாரதியும் தனது கணவர் சுதர்ஷனை விவாகரத்து செய்துவிட்டு குடும்பத்தை துறந்து ஜக்கியுடேனே ஆன்மீக பணியாற்ற வந்தும் விட்டார்.
The following is the Indian Express report as appearing on October 12, 1997 about Police registering a case of murder by Jaggi Vasudev:
Coimbatore, Oct, 11: Close on the heels of scandals relating to fake godmen getting exposed, yet another ashram from Coimbatore is in the limelight with Jaggi Vasudev aliash Jagadeesh of Isha Yoga ashram at Poondi near Coimbatore, being charged with the murder of his wife Viji alias Vijayakumari.A team of police personnel recently visited the premises of Isha Ashram at poondi and interrogated the inmates of the ashram. Godman Jaggi is away in the US.According to police, T. S. Ganganna of Bangalore (father of Viji) had preferred a complaint with the Bangalore Police suspecting foul play in the death of his daughter Viji. The complaintant had stated that his daughter left him last on June 15, 1996. He reportedly received a message on January 23, 1997, from Jaggi Vasudev, stating that Viji was no more.Ganganna said that Jaggi Vasudev had hurriedly completed the cremation on Jan.24 even before they could rush from Bangalore, raising suspicion about the nature of death. He suspected death due to poisoning or strangulation.According to him, Jaggi Vasudev could have caused the death of Viji to facilitate his illicit relationship with yet another inmate of the ashram. Based on the complaint of Ganganna to the Bangalore City Police on Aug. 12, a case was registered.The Bangalore City Police transferred it to the Coimbatore Rural Police.The Coimbatore Rural Police have registered a case against Jaggi Vasudev under Section 302 of IPC (murder) and IPC 201 (suppression of evidence).Later. Isa Yoga Foundatrion has denied reports that Jaggi Vasudev had fled to USA to avoid investigation of ashram. Authorised Signatory of Ashram Kiran stated that Guruji had gone for giving lectures . ENS
விஜிக்கும் ஜக்கியிக்கும் பிறந்த குழந்தை ராதே பள்ளிப்படிப்பை ரிஷி valley என்ற சிறந்த பள்ளியில் துவங்கினார். ஆரம்பத்தில் தனது அம்மாவின் சாவுக்கு தனது தந்தை தான் காரணம்னு இருந்த ராதேவின் மனதை மாற்றி மாமனார் குடும்பத்தோடு நெருங்காமல் பார்த்துக் கொண்டார்.
ஆனால் தங்கமீனை பெற்ற தந்தை என்ற கடமையில் ஜக்கி சிறந்து விளங்கினர். அவளை தனது "பாஸ்" என்றே எல்லோரிடமும் கூறி மகிழ்வார்.
ராதே பள்ளி படிப்பை முடித்தவுடன் இந்தியாவின் தலைசிறந்த நாட்டியப் பள்ளிகளில் ஒன்றான சென்னையில் உள்ள கலாஷேத்திராவில் சேர்த்துவிடுகிறார் ஜக்கி.
அவள் வளர்ந்து வந்த பின்பு அவளுக்கு ஒரு தொழிலும் அமைத்து கொடுக்க திட்டமிடுகிறார் இந்த திட்ட வல்லுநர். அதற்கு கோவையில் சிறப்பாக நடந்துகொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழிலையும் தேர்ந்தெடுத்தார்.
ஈஷாவின் கட்டிடம் அனைத்தும் சிறப்பாக வியக்கத்தகும் வகையில் அமைய உண்மையில் காரணமானவர்கள் கார்த்திக் மற்றும் அவர் மனைவி பாமா ருக்மணி என்ற கட்டிட கலை நிபுணர்களே. கோவையில் துரியா பர்னிச்சர்ஸ்(thuriya furnitures) என்ற பெயரில் சிறப்பாக தங்கள் தொழிலை நடத்தி கொண்டும் எந்த பிரதி உபகாரம் பாராமல் ஈஷாவிற்கு கட்டிடம் கட்ட உதவி புரிந்து கொண்டும் இருந்தார்கள்.
2005இல் architect கார்த்திகை அழைத்து தனது மகள் ராதேக்கு ஒரு தொழில் அமைத்து கொடுக்கும் ஆசையை தெரிவிக்க thrishul shelters என்னும் நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் பங்குதாரர்களாக
1. பாமா ருக்மணி (Managing Director) 2. பாரதி (Director) race course coimbatore 3. v .ஜகதீஷ் (Director) mysore address என்று கோவை registrar of companies (ROC) யில் பதியப்பட்டுள்ளது.
Trishul Shelters Private Limited was registered on 06 July, 2005. Trishul Shelters Private Limited's Corporate Identification Number (CIN) is U45201TZ2005PTC011969, Registeration Number is 011969.
Their registered address on file is 3 V K K Menon Street Velandipalayamcoimbatore, Coimbatore - 641025, Tamil Nadu, India.
Trishul Shelters Private Limited currently have 2 Active Directors / Partners:Bharathi Varadaraj, Ruckmini Karthikeyan, and there are no other Active Directors / Partners in the company except these 2 officials.
Trishul
JAGADEESH
1989இல் இருந்து கோவையில் வசிக்கும் ஜக்கி, தேர்தலுக்கு மறக்காமல் வரிசையில் நின்று ஒட்டு போடும் ஜக்கி எதற்காக கள்ளத்தனமாக மைசூர் விலாசத்தை கொடுக்க வேண்டும்? அதிலும் தனது தொழில் - வியாபாரம் என்று குறிப்பிட்டு உள்ளார். மேலும் பாரதியையும் ஒரு பங்குதாரராக சேர்த்து தங்கள் உறவை உறுதிபடுத்தியும் உள்ளார்.
ஜக்கியின் பிடியில் பாரதி |
அவருடைய economic development பத்தி சொல்றாரு !!
உன் எகனாமிக் டெவலப்மென்ட் பத்தி பேசு மாமூ...... இந்த thrishul shelters துவங்க உனக்கு ஏது பணம் ?
கடை தேங்காயை எடுத்து வழி பிள்ளையாருக்கு உடைத்து அதை contract விடும் திறமை கொண்டவர் அல்லவா.
எப்போதும் வாங்கியே பழக்கப்பட்ட நம்ம நாயகன் பணத்திற்கு கார்த்திக்கின் சொத்துக்களையே கோவை city union bank, oppanakara st branch-ல் வைக்கச் செய்து 6 கோடி கடன் பெற்று தொழில் துவங்கினர்.
ஆகாஷமல்லி போன்ற பல கட்டிடங்கள் வாஸ்து முறைப்படி(வாஸ்து பற்றிய ஜக்கியின் நக்கல் நய்யண்டிகளை ஈஷா cd களில் காண்க) கட்டி விற்பனை செய்து வருவாயை பெருக்கியது நிறுவனம். 2013ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 70 கோடி. கோவை மற்றும் மைசூரிலும் சொத்துக்கள் வாங்கி போடப்பட்டுள்ளது.
இந்த நேரத்தில் தனது மகள் ராதேயும் பரதக் கலையை முழுமையாக கற்று உலகுக்கு அர்பணிக்கும் நேரம் வந்துவிட்டதால் வெறும் ராதேயாக அவளை எப்படிக் களம் இறக்குவது. ஒரு அனிதா ரத்தினம் (TVS group) போல் தன் மகளும் வளர வேண்டும் என்று யோசித்த ஜக்கி தனது மகள் ராதேவை, ராதே ஜக்கியாக ஆக்கி thrishul shelters-ன் Managing Director ஆக்கி விடுமாறு கார்த்திக்கிடம் கூற இவரின் தந்திரம் கார்த்திக்கிற்கு புரிய....... சண்டை தொடங்குகிறது. கவுண்டர் சமுகத்தை சேர்ந்த செல்வாக்கு மிக்க கார்த்திக்கும் தனது பலத்தை காட்ட... விஷயம் கோவை போலீஸ் உயரதிகாரிகள் முன்னிலையில் பஞ்சாயத்துப் பேசி முடியாததால் தற்போது ஹை கோர்ட்டில் கேஸ் நடத்தப்படுகிறது.
தியானம்........அமைதி..........ஆனந்தம்
அதனால் என்ன, ஒரு தந்தையாய் தன் மகளுக்கு செய்யப்பட வேண்டிய கடமை தானே இது என்று கேட்கத்தோன்றும்.
" You can go through life untouched, you can play with life whichever way you want, and still life cannot leave a scratch upon you. That is the miracle that we are working to manifest in every human "
இதைப் படிபவர்களுக்கு ச்சை.. இப்படி ஒரு வாய்ப்பு யாராவது நமக்கு கொடுத்தால் அதை பயன்படுத்தாமல் விடக்கூடாது என்று தானே தோன்றும் ?
இப்படி நம்ம ஜக்கி பல பொன்மொழிகளை அவுத்துவிட்டு கூட்டத்தை கூட்டுவாரு.
http://www.ishafoundation.org/Inner-Transformation/sanyas-brahmacharya-path-of-the-divine-sadhguru-isha-foundation.isa
மேல உள்ள link ஈஷாவின் இணையதளத்தில் சன்யாசம் பற்றியது.
இவரின் வார்த்தையை உண்மையென்று நம்பி 400-க்கும் மேலானோர் இதுவரை துறவறம் எடுத்திருப்பார்கள். துறவறம் கொடுப்பதற்கும் பயங்கர பில்டப் எல்லாம் கொடுப்பாரு. அவர்களுக்கு கேள்வியே பட்டிராத வாயில் நுழையாத பெயர் மாற்றம், அவர்கள் முக்திக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தினர் அனைவரின் முக்திக்கும் (முக்திக்கும் மட்டும்) உத்திரவாதம், மறுபிறவி இல்லை என்ற உறுதி எல்லாம் கொடுப்பார். அவர்களை தனது அங்கங்கள்(ஈஷாங்க) என்று வர்ணிப்பார். உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் அனைவர்க்கும் தான் ஒரு கவசமாக இருந்து காப்பாற்றுவேன் என்றெல்லாம் நம்பவைப்பார்.
ஆனாலும் அனைவருக்கும் வருடம் தவறாமல் health insurance premium கட்டிவிடுவார். இந்த பிக்காளிப் பயல்களும் அவர் சொல்லுவதை ஓவரா புரிஞ்சிகிட்டு கட்டுவானுங்க.
ஆன்மீக பாதைக்கு துறவற வாழ்க்கைதான் சிறந்தது என்றும். குடும்ப வாழ்கை ஒரு சுமையோடு மலை ஏறுவது போல கடினமானது என்றெல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் பொளந்து கட்டுவார். இதை கேட்டு, எதுக்கு சுமை என்று பலர் தங்கள் குடும்பங்களை (கணவன்/மனைவி) கூட துறந்திருக்கிறார்கள். ஆனால் அவர்களிடம் வரும்போது மறக்காமல் அவர்கள் சொத்துக்களை பிரித்து வாங்கி வந்து விடுமாறு அறிவுறுத்தப்படும்.
இந்த குற்றச்சாட்டு சற்று மிகைப்படுத்தியும் நம்ப முடியாததாகவும் தோன்றும்.
கரூரில் பிரபலமான பரமேஷ் என்பவரின் குடும்ப கதையே இதற்கு சான்று. 2006 இல் இது சன் டிவியிலும் அனைத்து பத்திரிகையிலும் வந்ததை நாம் வழக்கம் போல் மறந்து விடுவோம்.
இப்பேற்பட்ட ஆன்மீகத்தின் உச்சமான…
தெய்வீகத்தின் அம்சமான…துறவற வாழ்கையை
யாருபெத்த பிள்ளைகளுக்கோ கொடுக்கும் இவர் தான் பெத்த தங்கமீனுக்கு கொடுக்காமல் வஞ்சிக்கலாமா? எதோ வயசு கோளாறில் சனிக் கிழமையில் நண்பர்களோடு நட்சத்திர விடுதியில் நீராடுவதெல்லாம் ஒரு தப்பா? இவருக்கு பிறந்ததனால் அவளுக்கு அந்த தகுதி இல்லையா ?
பார்ட்டி மூடில் ராதே |
இதற்கு அவர் என்ன சப்பை கட்டு கட்டுகிறார் என்று பார்போம்.
குடும்ப வாழ்கையில் விருப்பம் உள்ளவர்களுக்கு துறவறமோ, ஆன்மீகத்தில் விருப்பம் உள்ளவர்களுக்கு திருமணமோ செய்து வைத்தால் மிகுந்த பாதிப்பு உண்டாகும் என்று கூறுகிறார். மேலும் நான் யாரையும் துறவறத்தில் தள்ளுவதில்லை, விருப்பப்படும் நபர்களை அவர்களின் உயிர் சக்தியை நீண்ட பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்த்தப் பின்னர் தான் துறவறம் வழங்கப்படுகிறது என்றும் கூறுகிறார்.
நிர்பந்தத்தில் துறவறம் கொடுக்கப்படவில்லை என்றல் ஏன் இதுவரை 150-க்கும் மேலான சாமியார்கள் இதுவரை வெளியேறினார்கள்? கோபமே வராத பல மனிதர்களை உருவாக்கி உள்ளேன் என்று பீற்றிக் கொண்டாரே.... அவர்கள் ஏன் கோபித்து கொண்டு ஓடினார்கள்?
குடும்ப வாழ்கையில் இருந்து கொண்டும் ஆன்மீக தொண்டு ஆத்தலாம் வாங்க... டீ ஆத்தலாம் வாங்க... என்று இவர் கூறியதை நம்பி வந்தவர்களில் வெளியே சென்றவர்களின் எண்ணிக்கை மட்டும் ஆயிரத்தை தாண்டும். இதில் தமிழ்நாட்டை சேர்ந்த பாலமுருகன் என்னும் பஞ்சாப் cadre IAS ஆபிசரும் அடக்கம். 5 வருட காலம் ஈஷாவின் CEO வாக சம்பளம் இல்லாமல் தொண்டு புரியும் ஆவலோடு வந்தவருக்கு 2 வருடத்திலேயே ஒரு/பல உண்மை புரிய, ஆள உடுங்கடா சாமின்னு... பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடியே விட்டார்.
பாலமுருகன் ஐஏஎஸ்
இவர் மட்டுமல்லாது ஜக்கியுடன் 20-25 ஆண்டுகள் மேல் மட்டத்தில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த பலர் இன்று வெளியேறிவிட்டார்கள். குறிப்பாக திலிப் அண்ணா என்று ஈஷாவாசிகளால் அன்போடு அழைக்கப்படும் திரு.திலிப் என்ற AUDITOR ராஜரத்தினம் ஈஷாவின் Managing Trustee யாக 1999-2010வரை இருந்து வந்தார். விஜியின் இறப்பின் மர்மத்தில் தான் கைது செய்யபடுவோம் என்று எதிர்பார்த்து அவருக்கு பதிலாக இந்த பதவியில் திலிப்பை அமர்த்தினார். இவரின் ஆன்மீக அறிவுரையை கேட்டு ஒரு குழந்தை கூட பெற்றுக்கொள்ளாமல் தவிர்த்து விட்டனர் திலீப் வித்யா தம்பதியினர். நிலங்கள் வாங்குவதில் ஜக்கி காட்டும் பக்கித்தனதையும், தீவிரத்தையும், குறுக்கு பாதையையும் கண்டு Managing Trusteeயாக கையெழுத்திட பயந்து ஜக்கியை எதிர்க்க, அவரை அந்தப் பதவியில் இருந்து விடுவித்து விட்டார். ஈஷாவில் நடந்த அத்தனை தகிடுதத்தங்களுக்கும் ஒரே சாட்சியாக இருந்தவர் திலீப் ஒருவரே. ஈஷாவில் இருந்து விலகியே இருந்த திலீப் சென்ற வருடம் அக்டோபர் மாதம் கோத்தகிரி மலைப்பாதையில் ஒரு மர்மமான விபத்தில் மரணம் அடைந்தார். இதை பற்றிய ஒரு செய்தி நமது சவுக்கிலும் அப்போது வெளிவந்தது.
கட்டத்துக்குள் திலீப்
இவரே மற்றொரு முறை நமது கலாச்சாரத்தில் 30% பேர் துறவறத்தில் இருந்ததாகவும் தற்போது உள்ள மக்கள்தொகையோடு ஒப்பிட்டால் இப்போதுள்ள துறவிகள் போதாது என்ற புள்ளிவிவர கணக்கை காட்டி பீதியை கிளப்பினார்.
ஏன் இப்படி மாத்தி மாத்தி பேசுகிறீர்கள் என்று கேட்டால் நான் கேள்வி கேட்பவனுக்கு தான் பதில் கூறுகிறேன்... கேள்விக்கு அல்ல... என்று கூறி குழம்பிய குட்டையில் துண்டில் போடுகிறார்.
பெத்த தாய் தந்தையை அனாதையாக விட்டு விட்டு அப்படி என்ன ஆன்மீகம். இது அவசியமா? என்று கேட்டதற்கு "உங்களுக்கு எல்லாம் பக்கத்துக்கு வீட்டு விவேகானந்தரை தான் பிடிக்கும். உங்கள் வீட்டில் உருவாக விடமாட்டீர்கள்" என்று நக்கல் அடிப்பார். உங்கள் மகளை ஏன் ஒரு பெண் விவேகானந்தராக உருவாக்காமல், பப்களில் சரக்கடிக்க வைத்துள்ளீர்கள் என்று கேட்டால் பதில் சொல்லமாட்டேன் என்கிறார்.
இயற்கைக்கு எதிராக எந்தச் செயல் செய்தலும் தவறாகத் தான் போகும் என்று கூறும் இவர், சந்நியாசத்தில் இருக்கும் போது தங்களுக்குள் இயற்கையின் தேவையால் மலர்ந்த காதலை கூறி தங்களுக்கு திருமணம் செய்து வைக்குமாறு வேண்டிய கரூர் வேலாயுதம் சோமு, புதுச்சேரி ஸ்ரீ தேவி அவர்களை தனது சுய லாபத்தை மனதில் கொண்டு மற்றவர்களும் இந்த பாதைக்கு மாறிவிடுவார்கள் என்று பயந்து காதலர்களை பிரித்து தனி அறையில் அடைத்து வைத்தார்.
இருவரும் சேர்ந்தால் சோமு இறந்துவிடுவான் என்றெல்லாம் பூச்சாண்டி காட்டி வந்தார். ஆனால் திருமணம் என்ற முடிவிலும் காதலில் தீவிரத்தோடும் இருந்த அவர்கள் உண்ணாவிரதம் இருக்கத் தொடங்க, ADMINISTRATOR சுவாமி நிசர்கா என்ற ஹெப்பர் என்பவரை வைத்து அடித்து துன்புறுத்தியும் பார்த்தார் ஜக்கி.
ஆனாலும் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்தார் சோமு. அவருக்கு ஏற்கனவே காசநோய்(T.B) இருந்த காரணத்தால் எதிர்ப்பு சக்தி குறைந்து மரணத்தின் தருவாயை எட்டியதும், வடநாட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்கிறோம் என்று சொல்லி கொண்டு சென்றார்கள். போன சோமு போனது தான். அதன் பிறகு இன்று வரை யாரும் சோமுவைப் பார்க்கவில்லை. அவர் என்ன ஆனார் என்ற விபரமும் இல்லை.
சோமுவைவிட காதலில் தீவிரமாக இருந்த பிராமண வகுப்பை சேர்ந்த ஸ்ரீ தேவி கடைசிவரை உண்ணாவிரதத்தை தொடர்ந்து மரணத்தை தழுவினாள் . அவர்கள் குடும்பத்தினரிடம் நல்ல பாம்பு கடித்தது இறந்துவிட்டதாக கூறி உடலை ஒப்படைத்து விடுமாறு கூறிவிட்டார். மேல்மட்டத்தில் உள்ள ஆசிரமவாசிகளுக்கு இந்த விஷயம் கசிய, அதை சரி செய்ய தகுந்த சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தார்.
சுவாமி நிசர்கா என்ற ஹெப்பார்
பின்நாளில் இதே போல் மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தில் லோக்னேத்ரா என்ற சன்யாசி பையன் ஆசிரமத்தின் PUBLIC RELATION அதாவது பணம் யாரிடம் எல்லாம் இருக்குன்னு உளவு பாத்து அதை மொத்தமா புடுங்குற வேல பாத்துக் கொண்டு இருந்தன். இவன் ஒரு மருத்துவம் படித்த பெண்ணை டாவடிச்சு கல்யாணம் பண்ணிவைக்க ஜக்கியை கேட்டான். ஒரே கல்லில் பல மாங்காய் என்ன ஒரு மாந்தோட்டத்தையே அடிச்சி காலி பண்ணும் இவர் இதற்கு ஒப்பு கொண்டார். காரணம் "லோக்னேத்ரவின் சேவை ஆசிரமத்துக்கு தேவை." சோமு / ஸ்ரீ தேவி சாவின் ரத்தக்கறையும் கழுவியாச்சு. எப்பூடி ....
சரி...சரி இந்த பொழப்புக்கு வேற தொழில்.....னு நீங்க திட்றது கேட்குது. இதுக்கேவா... ?
தற்போது லோக்னேத்ரா வெளி மாநிலங்களிலும் டெல்லியிலும் தனது ஆன்மீக சேவையை டாக்டர் அம்மாவோடு ஆத்திக் கொண்டு இருக்கிறார்.
இது போல இன்னும் பல ஜோடிகள் ஈஷாவில் இருந்து முக்தி கிடைத்து வெளியேறி விட்டதை ஈஷா யோகா வகுப்பில் கலந்து கொண்டவர்கள் அறிவார்கள்
"பொறுப்புக்கு எல்லை இல்லை"
"இந்த ஷணம் தவிர்க்க முடியாது"
ஒரு குழந்தையில் ஆரம்பிச்சி படிப்படியா லட்சம்... கோடி... குழந்தைக்கு "தாய் தந்தையா இருக்க முடியுமா... பாருங்க...." அப்படின்னு ரகசிய குரல்ல கேப்பாரு நம்ம ஜக்கி
சரி இப்போ இவரோட பொறுப்பு எந்த அளவுக்கு பருப்பா இருக்குன்னு பாப்போம்.
தலைவருக்கு எப்போதும் எதுலேயும் ஸ்பீடு... ஸ்பீடு... ஸ்பீடு... வேணும்... மாமே!!! இவர் கார் எடுத்தால் பறப்பார்னு எல்லோருக்கும் தெரியும்.
ஸ்பீடு..,ஸ்பீடு...ஸ்பீடு.. வேணும்... மாமே!!!
1997ம் வருடம் அப்போது வச்சிருந்த TATA siearra வண்டியில கோவையில் இருந்து மைசூர் நோக்கி வழக்கம்போல் பறந்து கொண்டு இருந்த போது பண்ணாரி அருகில் வண்டி ஒரு சிறுவனை அடித்து தூக்கியது. பையனை காப்பாற்ற ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டும் ஓடினார். எதோ காரணத்தினால் அன்று இவரின் ஆன்மிக பவர் கம்மியாக இருந்ததினால் பையனை குருஜியால் காப்பாற்ற முடியாமல் சிறுவன் இறந்துவிட்டான்.
இது எல்லோருக்கும் நடக்கும் விபத்து தானே. பாவம் அவர் என்ன செய்வார்னு சொல்வீங்க.
ஒரு விபத்து நடந்தால் ஓட்டுனர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டு நடத்துவது தான் பொது நடைமுறை.
அனால் இவர் வழக்கை எதிர்கொள்ள பயந்து, நெருங்கிக்கொண்டு இருக்கும் தியானலிங்க பிரதிஷ்டை வேலை இதனால் தடைபடும்பா... என்று கூறி ராமு என்ற ஒரு தீவிர பக்தனை இவருக்கு பதிலாக மாட்டிவிட்டு இவர் தப்பித்து கொண்டார். இதில் இந்தியாவில் மக்கள் குழந்தைகளை பன்னிக்குட்டி போல் பெத்துப்போடுகிறார்கள் என்று நக்கல் வேறு.
பன்னிக் குட்டிப் பயலுவ
2010-ல் கோவை நிலாம்பூர் பைபாஸ் ரோட்டிலும் நடந்த விபத்திலும் இதே வழிமுறை தான்.
இதல்லாம் நம்பற மாதிரி இல்லையே. அதெப்படி இதன்னை பேர் இருக்கும் இடத்தில அத்தனை பெரும் ஏமாளிகளா என்று கேள்வி எழும் உங்களுக்கு.
அங்க தான் இருக்கு ஜக்கியின் குள்ள நரித்தனம்.
சந்யாசிகள், முழுநேர யோகா ஆசிரியர்களோடு வருடத்தில் சில மணி நேரத்தை செலவிடுவார். அப்போது தான் இப்பிறவியில் வந்த நோக்கம் முழுமையாக நிறைவேற, இப்போது செல்லும் வேகம் இன்னும் பல ஆண்டுகள் பிடிக்கும். ஆனால் என் விருப்பம் விரைவில் முடித்துக்கொண்டு விடைபெறுவதுதான். சிவன் எனக்கு கொடுத்த காலம் முடிவடைந்துவிட்டது. தற்போது பணிநீட்டிப்பில் இருக்கிறேன். இரவு நேரத்தில் எனது மர்மஸ்தானத்தை ஒரு பெரிய பாம்பு ஒன்று வந்து கடிக்குது, அதை பாரதி கூட பாத்தது, ஒரு பெண் யோகி ஆவி இங்க சுத்துது, பல ஆவிகள் இங்க டிராபிக் ஜாம் பண்ணுது, என்னுடன் வந்த யோகிகள் எல்லாம் என்னை விட்டுவிட்டு போகுது, அமெரிக்க டாக்டர் என் மூளையை பரிசோதித்து விட்டு இவர் இறந்து பலவருடம் ஆகுது என்று கூறினார்கள் என்று உருகி உருகி பல விதமான கதைகளை அள்ளி விடுவார்.
இப்ப வேல பாக்கிற வேகமும், ஆட்களும் பத்தாது. அதுக்கு உங்களால என்ன செய்ய முடியும்னு பாருங்க அப்படின்னு நாசுக்கா சொல்லிவிட்டு கும்பிடு போட்டு ரெண்டு சொட்டு கண்ணீரையும் விட்டுட்டு போயிருவாரு. இத கேக்குற நம்ம பய பக்கிங்க நாம மாட்னது பத்தாது, இன்னு எத்தன பேர மாட்ட வைக்கலாம்னு அப்போவே யோசிக்க ஆரம்பிடிச்சு விடுவாங்க. ஆனால் என்ன பண்ணவேண்டும் என்கிற திட்டத்தை மேல்மட்டத்தில் அதற்கு முன்பே கொடுத்திருப்பார் ஜக்கி. திட்டத்தை மீட்டிங் போட்டு கேட்டுவிட்டு நம்ம மொட்டைகளும் பக்கிகளும் கோவணத்தை இறுக்கி கட்டிவிட்டு விஸ்வருபம் எடுத்து வேலை பார்க்க தொடங்கிவிடுவார்கள்.
யோகா வகுப்பிற்கு வரும் துடிப்பான தன்னர்வத் தொண்டர்களிடம் மெல்ல பேசி ஆசிரமத்துக்கு வாங்கோன்னா அட.. வாங்கோன்னா என்று வலை விரிக்க எலியும் வலையில் சிக்க, ஆரம்பத்தில் சற்று குறைவான வேலைகளை கொடுத்து தியானலிங்க கோவிலில் அதிக நேரம் செலவிட வைப்பார்கள்.
மெல்ல மெல்ல அவர்கள் மனம் அந்த சூழ்நிலையால் ஆக்கிரமிக்க பட்டு முடிவில் மொட்டை போட்டு சந்யாசம் எடுக்கும் எண்ணத்திற்கு வருவார்கள்.
தங்கள் பிள்ளைகள் யோகா தியானம் கத்துக்கொள்வதில் பெருமை அடையும் பெற்றோர்கள் பிள்ளைகள் பல மாதம் வருவதும் இல்லை போனும் பண்ணுவது இல்லை என்றவுடன் சந்தேகம் வந்து நேரில் பார்க்க வருபவார்கள் தலையில் இடியாய் விழும் இந்த செய்தி. கத்தியும், கூச்சல் போட்டும் பார்ப்பார்கள் பெற்றோர்கள். பிள்ளைகள் வர மறுப்பார்கள். ஊரில் உள்ள மாமன் மாச்சான்களை கூட்டி வந்து அடிதடியில் இறங்குபவர்களுக்கு பிள்ளைகளையும் கண்ணில் காட்டாமல் ரூமுக்குள் விட்டு தனி கவனிப்பு தான். அடுத்த கட்டமாக தங்கள் ஊரில் உள்ள காவல் நிலையத்தில் சொல்லி ஒரு ஏட்டுடன் வருவார்கள் பிள்ளையை பெற்றவர்கள். தமிழ்நாட்டின் எங்கோ ஒரு மூலையில் உள்ள உத்தமபாளையத்து ஏட்டுக்கு இவர்கள் பலம் எங்கே தெரியபோகிறது. வீரமாக வரும் ஏட்டு, ஆலந்துறை ஸ்டேஷன் லிமிட்டோடு வண்டியை திருப்பிவிடுவார். இதை எல்லாம் சமாளிக்கவே பயிற்சி கொடுக்கப்பட்ட கை தேர்ந்த ஒரு குழு அங்குண்டு.
அப்போதும் மனம் தளராத பெற்றோர் இந்திய ஜனநாயகத்தின் ஒரு தூணில் சென்று மோதுவார்கள். கோவை குதிரைவண்டி கோர்ட்டில் வழக்கு வரும், ஆசிரம எஸ்கார்ட் உடன் வரும் பிள்ளை 20-22 வருஷம் வளர்த்த பெற்றோர் முகத்தை கூட பார்க்காமல் நிதிபதியின் முகத்தை பார்த்து 18 வயது பூர்த்தியான நான் எனது விருப்பபடியே இந்த சன்யாச பாதையில் செல்கிறேன். எனது குருவோ, ஈஷாவோ என்னை கட்டாயப் படுத்தவில்லை என்று வாக்குமூலம் அளிக்க வழக்கு தள்ளுபடி செய்யப்படும். கடைசியாக பார்த்து கதறும் பெற்றோரிடம் பிள்ளைகள் கூறும் சமாதனம் "நான் மிகுந்த சந்தோஷத்தில் இருக்கிறேன். என்னை தொல்லை செய்யாமல் எப்போவாது வந்து பாருங்கள்"
http://www.ishafoundation.org/component/option,com_newscomponent/Itemid,222/act,view/id,2882/
சந்நியாசம் எடுக்கும் அந்த தருணம்
ஒரு சில வசதியான செல்வாக்கு மிக்க பெற்றோராய் இருந்தால் பிள்ளைகளை விட்டு கடைசி ஆயுதமாக "என்னை இப்படியே விட்டால் உயிரோடு இருப்பேன் இல்லை தற்கொலை செய்து கொள்வேன்" என்று மிரட்ட வைக்க கண்ணீருடன் சென்று விடுவார்கள் பெற்றோர்.
18 வயது ஆனவர்கள் எப்படி தங்கள் வாழ்கை பாதையை அமைத்து கொள்ளும் உரிமையை எந்த சட்டம் கொடுக்கிறதோ, அதே சட்டம் தான் வயதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளின் மேல் நடவடிக்கை எடுக்க முடியும் என்று முதியோர் நல சட்டம் கூருகிறது. ஆனால் பெற்றோர்கள் பாசத்தால் இவர்கள் மேல் புகார் கொடுக்க மாட்டார்கள் என்பது தான் இவர்களுக்கு வசதி.
சந்நியாசிகள் தங்கள் பெற்றோர்கள் உயிருடன் இருந்தாலும் கூட அவர்களுக்கு செய்ய வேண்டிய கடைசி காரியங்களை செய்துவிட்டுதான் இந்த பாதைக்கு வருவார்கள் என்று பெருமையாக கூறி கொள்வார் ஜக்கி.
சந்நியாசம் எடுத்தபின் அவர்கள் குடும்ப தொடர்பு முழுவது நிறுத்தப்படும். ADMINISTRATOR என்ற தலைமை சந்நியாசிகள் கண்காணிக்கப்படுவார்கள். கல்விச்சான்றிதழ்கள் அனைத்தும் வாங்கிவைத்துக் கொள்ளப்படும். அவர்கள் பெயரில் இருக்கும் சொத்து, வண்டி வாகனம், தங்க நகைகள் போன்றவற்றை வாங்கி வரும்படி அறிவுறுத்துவார்கள்.
கர்மா, விழிப்புணர்வு, சம்போ, சிவசம்போ, அண்ணா, அக்கா போன்ற வார்த்தைகளை மட்டுமே அதிகம் பயன்படுத்த பயிற்சி அளிக்கப்படும். அவர் வளர்க்கும் சித்தா, மல்லி, லீலா சம்சன் போன்ற பெயர் கொண்ட பல ஜாதி நாய்கள் முதல் மாடுகள் வரை மேய்க்கும் பொறுப்புகள் கொடுக்கப்படும். இவர்களுக்கு என்று கொடுக்கப்படும் சில தனிப்பட்ட பயிற்சிகள் எப்போதும் இவர்களை ஒரு அரை போதையிலே வைத்திருக்கும்.
நாய்க்கு காவல் சாமி
நாள் ஒன்றுக்கு 18 மணிநேரம் வேலை வாங்கப்படும். தங்கள் கர்மாவை வேகமாக கழிக்க பல மணிநேரம் வேலை செய்யவேண்டும் என்று ஜக்கி அறிவுறுத்துவார். அதாவது ஒரு ஆள் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் கழியும் கர்மாவை 18 மணி நேரம் செய்து 18 நாள் கர்மாவை ஒரே நாளில் கழிக்க முடியும் என்று 1-ஆம் கிளாஸ் கணக்கு பாடம் சொல்லித்தருவர். ஆனால் அவர் கணக்கோ வேறு. “ ideal mind is devils kitchen” இதுகளை சும்மா திரியவிட்டா பல விதமான பசி எடுக்கும். ஒரு ஆளுக்கு 3 ஆள் வேலை கொடுத்து விரட்டுவார். காலை 5மணி முதல் இரவு 12-1 மணி வரை வேலை. இரண்டு வேலை உணவு, தீவிர ஹட யோகா என்று உடலை பிழிந்து எடுத்து இரவு படுத்தால் பிணம் போல் கிடப்பார்கள். ஓய்வு என்று கொடுக்கும் காலத்தில் கூட மௌனத்தில் (silence) இருக்க செய்து விடுவார். இப்படியாக அவர்கள் கவனத்தை சிதற விடாமல் ஒரே திசையில் வைத்திருப்பார்.
இதுபோல சுமார் 10-20 வருடம் வேலை செய்தும் கர்மாவை முழுவதும் கழிக்க முடியாமல் பலர் வயதாகி திணறிக்கொண்டு இருக்கிறார்கள். யாராவது எனக்கு கைவலி கால்வலி என்று ஜக்கியிடம் கேள்வி கேட்டால் தொலைந்தது. உன் கர்மா மூட்டை வெயிட் அதிகம். உனது முக்திக்கு இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என்பார். இதைக்கேட்கும் மற்றவர்கள் அடுத்து யாரும் அப்படி கேட்க மாட்டார்கள் இல்லையா.
சந்நியாசிகளுக்குள் பிணக்கு ஏற்படும்போது அவரிடம் முறையிடும் நபரை நீ ஏன் அவன் கர்மாவை சுமக்கிறாய்? போச்சு போ உன் அக்கௌண்டில் புது கர்மாவும் சேர்த்துவிட்டது. கோட்டை அழி மொதல்ல இருந்து புரோட்டா தின்னு என்று கூறி விடுவார். இனி அடுத்து எவனாவது இதுபோல சண்டை போடுவான் ?
இத்தனைக்கு பிறகும் இயற்கையின் தேவையால் வருடத்திற்கு சந்நியாசிகளுக்குள் ஜோடிகள் உருவாகி விடுவதாலும், பலர் தனியாகவும் வெளியே பறந்து விடுவதாலும் தனது சூப்பர் மூளையை கசக்கி ஒரு தீர்வை கண்டு பிடித்தார். வெளி உலக சுகத்தை அனுபவித்து வருவதால் தானே மீண்டும் அதைத்தேடி ஓடிவிடுகிறார்கள். குழந்தை பருவத்தில் இருந்தே வெளி உலக/குடும்ப தொடர்பில்லாமல் வளர்த்தால் ?
அதனால் உருவாகிவிட்டது சம்ஸ்கிருதி என்னும் குருகுல பள்ளி.
6-10 வயதுக்கு மேல் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ரூ.7,00,000 கட்டி சேர்க்கை. எந்த பாடத்திட்டத்திலும் வராத குருகுல கல்வி, இரண்டு வேலை மட்டும் உணவு, அதிகாலை 5 மணிக்கு எழுந்து தீர்த்த குண்டம் என்னும் குளத்தில் 10-12 டிகிரி குளிர்ந்த நீர் குளியல், கடும் யோகா பயிற்சி, களரி பயிற்சி இதன் இருப்பிடங்கள் ஒவ்வொன்றையும் அடைய சுமார் 2-3 கீ.மீட்டர் நடை,இவை அனைத்தும் முடிய காலை மணி 8.15. மீண்டும் ஒரு குளியல்.
இந்நிலையில் அந்த குழந்தையின் வயிற்றில் நெருப்பு எரிவது போல் பசி எடுக்கும். காலை/மாலை உணவு இவர்களுக்காக பிரத்யோகமாக தயாரிக்கபடும் பழம் காய்கறி உணவு. அதாவது எளிதில் செரிமானம் ஆககூடிய உணவு. பால் தயிர் கிடையாது. மீண்டும் மாலை 7 மணிக்கு தான் அடுத்தவேளை உணவு. இடையில் ஒன்றும் கிடையாது.
வளரும் குழந்தைக்கு இத்தனை பயிற்சிக்கு பிறகு 10 மணி நேர உணவு இடைவேளை இருந்தால் அந்த பிஞ்சுகள் எப்படி பசியை பொறுத்துக் கொள்ளும்,அதனால் குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்னும் உண்மையை அடுத்தவர் உழைப்பில் வயிறு வளர்க்கும் இந்த பரதேசிப்பயலுக்கு தெரியாதா?
சம்ஸ்கிருதி பள்ளி பிஞ்சுகள்
பல குழந்தைகளுக்கு இதனால் வயிற்றுப்புண் வந்து பெற்றோர்களால் திருப்பி எடுக்கப்பட்டு விட்டார்கள்.அவர்களின் 7 லட்ச ரூபாய் பணத்தை திருப்பி தாராமல் ஆட்டையை போட்டுவிட்டான் இந்த மர்மயோகி.
இந்த குழந்தைகளுக்கு 11ம் வயதில் பிரமச்சரியம் வழங்கப்படும்.19 வயது வரை ஆசிரமத்தில் எந்த படிப்பும் இல்லாமல் பாட்டு, தாளவாத்தியம் களரி மட்டுமே பயிற்றுவிக்கப்படும். அதன் பின் அவர்களாக விருப்பப்பட்டால் சன்னியாசத்தை தொடரலாம். வேண்டாம் என்றால் பெற்றோருடன் செல்லலாம். வெளி உலகத்தில் கோடி வாய்ப்பு காத்திருக்க இவர்களுக்கு மட்டும் இரண்டே வாய்ப்பு என்பது கொடுமையிலும் கொடுமை அல்லவா? இது அந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் செய்யும் துரோகம் அல்லவா?
வருடத்தில் 6 மாதத்திற்கு ஒரு முறை தான் பெற்றோர்களுடன் இருக்க அனுமதி, இடையில் பார்க்க அனுமதி இல்லை. வீட்டிலும் சாக்லேட் போன்ற தின் பண்டங்கள் கொடுக்க கூடாது. TV காட்டக்கூடாது. முக்கியமான கட்டுப்பாடு குழந்தையை பெற்றோர் உட்பட யாரும் கொஞ்சவோ, முத்தம் கொடுக்கவோ கூடாது. வேற்று நபர்கள் யாரும் அவர்களுடன் பேசக்கூடாது.
இதையெல்லாம் செய்தால் குழந்தையின் " ஆரா " கலைந்து விடுமாம். ஆனால் உண்மையான காரணம் அவர்களை பந்த பாசங்களை அறுத்து சன்னியாசப் பாதைக்கு தயார் செய்வதே.
இவர் "ஆரா" கலையாதா ?
தன் பிள்ளையை சகல வசதியும் செல்வாக்கோடும் வளர்க்கும் இவனுக்கு இவனை நம்பி தங்கள் செல்வங்களை அர்ப்பணித்திருக்கும் அடிமைகளுக்கு எப்படி தான் துரோகம் செய்ய மனம் வருகிறதோ?
கலாச்சார முறைப்படி வளர்க்கப்பட்ட மகள் ராதே
"குழந்தைகள் உங்கள் முலம் இந்த உலகிற்கு வந்த ஒரு உயிர் மட்டுமே. அதை தாண்டி அவர்களிடம் உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அவர்களுக்கு நீங்கள் எதையும் கற்றுக்கொடுக்க முயற்சிக்காதீர்கள்,அவர்களை நீங்கள் அதிகாரம் பண்ண முயற்சிக்காதீர்கள் " என்றெல்லாம் பத்தி பத்தியாக ஜக்கி எழுதி கிழித்து தள்ளியுள்ளார்.
அப்படி என்றால் அறியாத வயதில் அவர்கள் வாழ்கை பாதையை தீர்மானிக்க இவரோ அல்லது பெற்றோர்களோ யார்? பிற்காலத்தில் அந்தக் குழந்தை ஏதோவொரு காரணத்தினால் வெளியே வர நேர்ந்தால் அவர்களின் நிலை என்ன? ரோட்டை கூட கடக்க தெரியாமல் ஒரு காட்டுவாசி போல் உணர்வார்கள் .
குழந்தை நல சட்டம் மற்றும் RIGHT TO EDUCATION (RTE) சட்டம் என்ன சொல்கிறது என்றால் 8ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு எதோ ஒரு பாட திட்டப்படி கண்டிப்பாக இலவசமாகப் பாடம் கற்றுக்கொடுக்க வேண்டியது அந்தந்த மாநில அரசின் கடமை. (free and compulsory education up to 8th std) இதை UNICEF அமைப்பும் கண்காணிக்கும். ஆகவே இந்த பள்ளி நடத்துவதே சட்டப்படி குற்றம் .
இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கு பூவுலகின் நண்பர்களின் அமைப்பு மூலம் போடப்பட்டது. அதை விசாரணை செய்ய வந்த கோவை CWC (CHILD WELFARE COMMITTE) ஆபீசரிடம் தந்திரமாக இந்த சம்ஸ்கிருதி பள்ளிக் குழந்தைகளை காட்டாமல் மற்றொரு பள்ளியான ஈஷா ஹோம் ஸ்கூல் என்ற international school ICSE syllabus-ஐக் காட்டி யாரோ பொய்யான தகவல் கொடுத்து வழக்கு தொடர்ந்து விட்டார்கள் என்று கூறி கோவில் பிரசாதத்தையும் கையில் கொடுத்து அனுப்பி விட்டார்கள்.
நாம் இதுவரை கண்ட குற்றச்சாட்டுகள் ஈஷாவில் நடக்கும் அநியாயத்தின் மிகைப்படுத்தாத ஒரு சிறு அத்தியாயமே. இன்னும் எழுத ஒரு சவுக்கு பத்தாது, தண்டிக்க எமலோகத்தில் உள்ள உபகரணங்களும் பத்தாது.
~~~ ராதே....கல்யாண....வைபோகமே.... ~~~
தற்போது இந்த அயோக்கியன் தனது ஆசை மகளுக்கு அவள் காதலித்த மணாளனையே கைபிடிச்சுக் கொடுக்கப் போகிறான். மாப்பிளை கர்நாடக இசைப்பாடகன் சந்தீப் நாராயண். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து இந்தியாவில் தற்போது கச்சேரிகள் நடத்திக்கொண்டு இருக்கிறான் .மிகுந்த ஆச்சாரமான பிரமாண குடும்பத்தைச் சேர்ந்தவன்.
சிவன் பார்வதியின் தெய்வீக திருமணத்தை கைலாயத்தில் காணும் வாய்ப்பு நமக்கு கிடைக்கவில்லையே என்று ஏங்கும் சிவ பக்தர்கள் இனி கவலைப்படவேண்டாம்.தென் கைலாயத்தில் நடக்கப்போகும் இந்த "ராதே சந்தீப் " கல்யாணத்தை வந்து நேரில் கண்டு பிறவிப்பயனை அடையுங்கள்.
தேவர்களும் (பணம் கொட்டுபவர்கள் ) அசுரர்களும் (உடல் உழைப்பை கொடுக்கும் தன்னார்வத்தொண்டர்கள்) வந்து வாழ்த்தப்போகும் இந்த கும்பாபிஷேகத்திற்கும்(consecration) ஜக்கிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.(திருமண பத்திரிகையில் அப்படித்தானே போட்டிருக்கிறது) வெறும் வாழ்த்து மட்டுந்தான். என்னா ஒரு வில்லத்தனம் ?
இந்நிகழ்வுக்காகவே உயிரை பிடித்துக் கொண்டிருக்கும் ஜக்கியின் தந்தை தான் ராதேவிற்கு கன்னிகா தானம் செய்ய போகிறார்.
ஈஷாவில் தன்னார்வத் தொண்டு
முக்திக்கு முக்க வேண்டாம்
சந்யாசிகள் யாரும் முக்திக்கு இனி எங்கும் பொய் குத்த வச்சு முக்க வேண்டாம். இந்த திருமண முஹுர்த்தம் மற்றும் சாந்தி முஹுர்த்தம் போன்ற நிகழ்ச்சிக்காக 24 மணி நேரம் உழைக்கப் போவதால் கண்டிப்பாக முக்தி உறுதி செய்யப்படும்.
இந்த திருட்டுசாமியரிடம் கேட்க தோன்றும் கேள்வி
எத்தனை பெற்றோர்கள் தங்கள் ரத்தமும்,வேர்வையும் சிந்தி தங்கள் குழந்தைகளை ஒரு டாக்டராகவோ என்ஜினியராகவோ உருவாக்க ஆசைப்பட்டிருப்பார்கள்? உன்னை போல் தானே அவர்களும் தங்கள் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைக்க கனவு கண்டிருப்பார்கள். பேரன் பேத்திகளோடு வாழ்ந்து தாங்கள் குலம் தழைத்து அதை பார்த்து கண்மூட வேண்டும் என்று ஏங்கி இருப்பார்கள். வயதான காலத்தில் தங்கள் பிள்ளைகள் தங்களை பார்த்து கொள்வார்கள் என்று நம்பி கொண்டிருந்திருப்பார்கள்.
இவை அத்தனையையும் உன் சுய லாபத்திற்காக சூறையாடி சூன்யம் ஆக்கி விட்டு நீ மட்டும் உன் மகளுக்கு தெய்வீக கல்யாணம் நடத்தியுள்ளாய். குழந்தை பெற்றுக் கொள்வதே ஒரு பாவச்செயல் போல் சித்தரித்து விட்டு நீ மட்டும் உன் மகள் வழியாக உன் குலம் தழைப்பதை பார்க்கப் போகிறாயா ?
கடைசியாக சந்தீப்பின் பெற்றோர்களுக்கு நாம் கூறிக் கொள்வதெல்லாம் இந்த அயோக்கியனின் மகளை மருமகளாக அடைவதால் உங்கள் குடும்பம் நிம்மதி இழந்து தவிக்க போகிறீர்கள். இவனால் நாதியற்று இருக்கும் பெற்றோர்களின் வயிற்றெரிச்சல் உங்களையும் உங்கள் சந்ததியையும் நாசம் செய்யும். இவனால் மரணம் அடைந்த அத்தனை ஆத்மாக்களுக்கும் நீங்களும் பதில் சொல்ல வேண்டும்.
56 comments:
Dear Savukku, please try to bring back your site online soon. I don't want you to lose this blogger or your google account. Your previous posts in a savukku site can be re-published in a new site using your backup (as you did with creating many savukku sites), but i'm not sure all your previous posts (2009, 2010) in this blog can be re-posted, if this is blocked. There are many free hosting sites, try something like that to publish your backup including all your new posts in this blog.
well done sankar & liers. keep spinning stories for your missionary bosses.
people who visit here know whats the truth.
இந்த கட்டுரைக்காண உழைப்பிற்க்கு மிகப்பெரிய நன்றி மற்றும் வணக்கங்கள்.
தங்கள் கட்டுரைக்கு பின்னுடமிடவே பயப்படும் என்னைக்போல் "வேடிக்ககை மனிதர்களிள்"
மிக துணிச்சலாக வெளியிட்டதற்கு வாழ்துக்கள் வணக்கங்கள்...
Shocking Article. Hinduism never advocates celibacy/monks life. In fact family life is the best place to be in to attain the so called moksha. These kind of criminal fourth rated self styled godmen are trying to talibanise the free thinking liberal Hindu society. I request Savukku to carry an investigation on their money laundering and black money conversion exercises.
யார்க்கும் அஞ்சோம்
…எதற்கும் அஞ்சோம்
…
…
இன்னும் எழுத ஒரு சவுக்கு பத்தாது, தண்டிக்க எமலோகத்தில் உள்ள உபகரணங்களும் பத்தாது
Dear Savukku, This is an clear article, but as a middle class working man only can get angry and frustration, but can't do anything. Every where corruption, misconduct etc. politicians, teachers, business giants, and Jakki kind of peoples. But all of them are somehow living happily, how it is possible?
In Kamal film "Mahanathi" one dialogue, How a bad person get all the respects like a good person gets, how it is possible. That dialogue delivered in frustration. Now whenever I read an article only frustration comes Mr.Savukku.
But you are doing a great job, but I don't know how many people reading it.
பதிவு அருமை... என்றாலும், நீங்கள் ஆன்மீக பாரம்பரியம் நிறைந்த இந்தியா என்ற சொலவடைக்கு எதிராக கட்டுரையை எழுதுவதாக கூறி, உங்களை இந்து பக்தர்கள் நிந்திக்க அனேக வாய்ப்புகள் உள்ளனவே.. எப்படித் தாங்கிக் கொள்ள போகீறிர்களோ??... ஹர ஹர ஜக்கி வாசுதேவ்..
வர வர நீர் கொடுக்கும் புகைப்படங்களின் தரம் மிகவும் குறைவாக இருபது போல தோன்றுகிறது. மற்றபடி இன்னும் சுடு இருக்கு ..
நடக்கட்டும்.. இன்னும் ஒரு தொடர் இதனை தொடர்ந்து எழுதி துங்குரவன எல்லாம் எழுப்பு
1) Jaggi Vasudev already belongs to a rich family ,his grandfather was a land lord,his father was a famous EYE Doctor in mysore....no wonder in starting the TRISHUL PVT Ltd ...
2) The Lady which is shown in the picture is not Bharathi
3) He didnt force any parents to join in isha samskriti....parents are willing to admit their childrens in isha samskrithi school
4) Isha Ashram is for SPRITUAL WELBEING so he can allow the person inside the asrahm to love each other and enjoying...that is not the honeymoon spot..
5) Every Body in ashram are volunteers..No body is forcing there to work ...Even if u go also u will get free food
6) Ashram is not the place to enjoy your life..so the person who dont feel good may gone out of that place...
1) Jaggi Vasudev already belongs to a rich family ,his grandfather was a land lord,his father was a famous EYE Doctor in mysore....no wonder in starting the TRISHUL PVT Ltd ...
2) The Lady which is shown in the picture is not Bharathi
3) He didnt force any parents to join in isha samskriti....parents are willing to admit their childrens in isha samskrithi school
4) Isha Ashram is for SPRITUAL WELBEING so he can allow the person inside the asrahm to love each other and enjoying...that is not the honeymoon spot..
5) Every Body in ashram are volunteers..No body is forcing there to work ...Even if u go also u will get free food
6) Ashram is not the place to enjoy your life..so the person who dont feel good may gone out of that place...
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
நாசமா போன சாமியார், திருட்டு சாமியார், டொக்கு சாமியார், X சாமியார், XX சாமியார், XXX சாமியார்,.............
i am a follower of isha,,,, cant expect this,,, dont know to believe or not
Isha already benefited thousands of students through education, lakhs of people by teaching yoga, benefiting the society by planting more than 1 crore saplings, so far. For a such a reputed organization, baseless allegations are published in the article.
why allowed this fraud to ruin our generation?
super....
There is a big foot like him.. in Trichy subramaniapuram area. He is the founder & sole proprietor of "Good shepherd church" pastor Gideon Jacob.
He is running an orphanage where only girls are admitted. He pimps them to VIPs.. so that he can escape from law enforcement. Doing it this for more than 2 decades..
HE IS A TOOL OF SATAN,PRAYER TO GOD ONLY SAVE OUR PEOPLE,YOUNGSTERS AND CHILDREN FROM THIS CULPRIT.....LET US PRAY TO GOD TO DESTROY THIS KINGDOM OF SATAN...
wow jolly jakki
Dear Savukku, just got notification from Change.org petitioner that Pothi Kalimuthu got bail after 40 days. I request you to write in detail about why it took 40 days for getting bail?. What i don't understand is, how can an he be held for maintaining Savukku server? The content in the site is not his and how can be held liable for it?. Even if he can be held, why it took 40 days?. I just can't image spending single day in jail, let alone 40+ days. I feel the pain and certainly want answers! Hope you write about it and expect Kalimuthu get justice!
PLS READ CHRISTIAN SISTER STOREY
மத வெறியனாக..
சாதீ வெறியனாக ..
இன வெறியனாக இருந்த என்னை
என் ஆளுமையை உடைத்து அனைத்தையும் ஒன்றாக அனுகும் மனப்பான்மை ஈஷாவில்தான் கிடைத்ததது..
ஆரம்ப பயிற்சி முடித்தால் எப்போது வேண்டுமானாலும் போய்வரலாம்,
எதுவுமே அங்கு கட்டாயம் கிடையாது..
மற்றபடி சவுக்கின் வாசகரான நான் இந்த கட்டுரையில கொஞ்சம் முரண்பாடு எனக்கு..
நன்றி
Can you please translate this article in English because many of the followers of Jaggi don't know Tamil.
More than anything, wont the people who follow think even for a sec that if GOD is there somewhere why would we need a postman to do the courier service... Fellows like this jaggi will say, can you see your face by your own, can you touch your back etc, all these are hopeless philosophies....
Basic fact which people need to use to Judge these silly Swami jis is "what do they do to their own families, why do they live with their famlies, why do they live like Maharajas etc"""
you are posting the comment which are favor to your article at the first and which are not favor at the last......post this comment in first if u really interested in social well being without changing the words.
1) Jaggi Vasudev already belongs to a rich family ,his grandfather was a land lord,his father was a famous EYE Doctor in mysore....nothing wrong in starting the TRISHUL PVT Ltd for her daughter in his own money ...
2) The Lady which is shown in the picture is not Bharathi
3) He didnt force any parents to join in isha samskriti....parents are willing to admit their childrens in isha samskrithi school
4) Isha Ashram is for SPRITUAL WELBEING ..so he can't allow the person inside the asrahm to love each other and enjoying...that is not the honeymoon spot..
5) Every Body in ashram are volunteers..No body is forcing there to work ...Even if u go also u will get free food
6) Ashram is not the place to enjoy your life..so the person who dont feel good may gone out of that place..
7) first you attend the 7 days yoga program and do the yoga practise for one month .Then you will come to know what yoga and mediataion is doing for you ..
finally he is doing many social service to the society why u forget to highlight in this blog...
The woman bharathi looks gorgeous. Even viswamithra was in orvasi's trap. So nothing wrong in it.
Excellent article, even though I know many of these facts I am unable to leave the ashram because my wife. She believes him like god.if I speak against I may lose my wife and family.
1) Jaggi Vasudev already belongs to a rich family ,his grandfather was a land lord,his father was a famous EYE Doctor in mysore....no wonder in starting the TRISHUL PVT Ltd ...
2) The Lady which is shown in the picture is not Bharathi
3) He didnt force any parents to join in isha samskriti....parents are willing to admit their childrens in isha samskrithi school
4) Isha Ashram is for SPRITUAL WELBEING so he can allow the person inside the asrahm to love each other and enjoying...that is not the honeymoon spot..
5) Every Body in ashram are volunteers..No body is forcing there to work ...Even if u go also u will get free food
6) Ashram is not the place to enjoy your life..so the person who don't feel good may gone out of that place..
சொல்வதற்கு நிறைய உண்டு.. மூடர்கூடமாக மக்களும், மூடநம்பிக்கைகளின் காரணமாக ஜக்கிகளும் ஆர்ப்பரிக்கிறார்கள்.இவன் சத்குருவாம்...!. 1998களில் திருப்பூர் முட்டாள் நண்பர்கள் என்னையும் இழுத்தபோது, பெரியாரின் பற்றன் என்ற காரணத்தால் விலகி பின்னர் அவர்களே திருந்தி வந்தபோது சிரித்தேன். செத்தகுரு என்று நான் அழைப்பதை எதிர்ப்பவர் பலருண்டு. இவனால் சீரழிந்த குடும்பங்கள் பல் உண்டு. சவுக்கில் இவனைப்பற்றி எழுதப்ப்படும்போதேல்லாம் எனக்குத் தெரிந்த இந்த சிகையானின் தொண்டர்களுக்கு அனுப்பி வைத்து என்னாலான உதவி செய்து சில குடும்பங்களை காப்பாற்றியுள்ளேன். அந்தவகையில் அவர்களின் நன்றிகளை சங்கருக்கு அர்ப்பணிக்க கூறினேன்.
Excellent. Unmai
Radhe loved a rich bramin guy and married. and she will have children.
But followers of isha is warned by Jaggi vasudev not to have children and just dedicate whole life for isha.
please send this article to all followers and warn them. send it in their facebook page
Dear Sir,
. I was into Isha some 12 years back itself. These points you have explored were something that gone thru my mind within 1 or 2 years itself after my entry into Isha...Literally we are compelled to accept what Isha is telling since we find good number of people are already accepting the same there. I came to understand soon that this is a sort of basic human mind set up that we start doing one thing if we find a good number of people are already doing something. Something in this article may be exaggerated and something may be good also with Isha. But I cannot avoid some questions running in my mind like why Jaggi has not brought his daughter into Sanyasam...why these ashram inmates behaving hard to people when some mistakes happen..since they are into sanyasam, they are supposed to behave with kind heart if not of very kind to people...why these ahram inmates are subjected to suppress their basic human feelings...we can find a readymade answers for all these sort of questions there which may not satisfy our heart..as I told already something good may be there with Isha like these yoga, pranayama, samyama etc...but when our inner consciousness raise these above said questions, we cannot deceive ourselves by accepting the readymade answers offered from Isha
Jaggi Vasudev is giving all the views /living methods explained in Gita and other religious scripture in different capsule. nothing new.But why the so called devotees singing songs praising him as God during the event . I attended the event in Los Angeles.too much hype.
அருமையான பதிவு. தங்களது சமூக பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.
பட்டினத்தார்,பத்திரகிரியார் ஆகிய மகான்கள் எல்லோரும் ராஜவாழ்க்கை வாழ்ந்து பரதேசிகளாய் வாழ்ந்து முற்றுப்பெற்றர்கள்
ஆனால் இவனும்,இவனைப்போல சிலரும் பரதேசியாய் இருந்து ராஜாவாக வலம் வருகிறார்கள். இதனால்தான் மழை பெய்யாமல் வறண்ட பூமியாக மாறிவருகிறது நமது தமிழகம்.இவனைபோன்றோர் ஒழிய இதுபோல உண்மைகளை தெரியப்படுத்துங்கள் . மிக்க நன்றி .
எனது நண்பர் ஒருவர் இஷாவுடன் முன்று வருடத்திற்கு முன்பு வியாபார தொடர்பில் இருந்தார்..அப்போது குற்றாலம் என்ற ஒரு பையன் ஒரு சாமியார் பெண்ணை காதலித்தான். இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர். இதை அறிந்து கொண்ட இஷா குருஜி இருவரையும் தனிமையில் அடைத்து வைத்துவிடும்படி கூறிவிட்டார். அவனை பல நாள் உடம்பில் துணியில்லாமல் அடைத்து வைத்திருந்தனர். உணவு கொடுக்க கதவை திறந்து வைக்கையில் தப்பி இருட்டுபள்ளம் வரை ஓடிவந்துவிட்டேன். எனது நண்பர் தான் அவனுக்கு பைசா கொடுத்து பஸ்ஸில் அவனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
இவனை போல் அயோக்கியனை இன்னும் அரசாங்கம் விட்டு வைக்க கூடாது.
its so true...even 2 of my girl cousins from Karur have got trapped in Isha...He looted all their property. He takes only rich and educated people for sanyasam as they will work for free in his ashram.
well written article...everything is very true. he was hiding in karur only when his wife's murder case was going on.
What happened to those 1 crore saplings ..Are you tracking??
I have been a moderate follower of Isha and had attended Inner Engineering, Isha Hata, Shoonya and Shakti Chalana and found immense benefits. I have seen Sadhguru personally and he does not encourage people to become a Sanyasi or Monk and he does not want people to crowd his ashram. I live alone and I asked him whether I can join his ashram. He flatly refused permission for me and asked me to convert my own home and living space as ashram. For those who forced him to allow them and admit them in the ashram, he gives as many as 2,3 years for one to think and decide.
He gave freedom to his daughter and asked her to make her own decision. That should be appreciated, instead of his forcing idea upon her.
"NIkhgil "has commented against your posts.But no where he/she proved that you are wrong.SATHGURU
MIGHT PREACH GOOD BUT NEVER FOLLOWS HIMSELF.Is there any proof against this?
Interesting Story Mr. Savuku.. Better start writing mega serial script. you have very good potential. நீ ஒரு Convertu களின் அடிமை என்று நிரூபித்து விட்டாய்.
The woman bharathi should be careful now. She looks pretty old now. If he lose the interest on her she will also leave her body from ANAHATHA and merge with viji. So one more samathi to be made and he will look for a new charming one like the girl in his hand in the picture. Before that bharathi you elope with some good guy.
Excellent article savukku
LOOK BEFORE YOU LEAP!!
Apadiya??? Un pera muthalla solluda panni... atha solla vakkila.. pesaran.. ivan friend irunthaanam.... thu... tharuthala
Apa neee partinathar maari maaruda naaye... oru pichakaaranukku ssooru potrupaya nee... pichakaara payale
Mr.dubukku... oh sorry un blog peru savukkilla... Negative comments ellam potratha..... naa anupina comment ah yenda nee podala.... approve panna maataya... dubukku.... koomutta....
Savukkam.. savukku... unakellam yeluthu tharmam irukka da... avan ivanu yeluthirukka... mundam... moothevi... naasama poiruva neee... un kudumbam urupadama poirum da.. unnaku kai velangaathu... naaku alukirum... unakku nalla saavae varathu....
Savukkam.. savukku... unakellam yeluthu tharmam irukka da... avan ivanu yeluthirukka... mundam... moothevi... naasama poiruva neee... un kudumbam urupadama poirum da.. unnaku kai velangaathu... naaku alukirum... unakku nalla saavae varathu....
Savukkam.. savukku... unakellam yeluthu tharmam irukka da... avan ivanu yeluthirukka... mundam... moothevi... naasama poiruva neee... un kudumbam urupadama poirum da.. unnaku kai velangaathu... naaku alukirum... unakku nalla saavae varathu....
Savukkam.. savukku... unakellam yeluthu tharmam irukka da... avan ivanu yeluthirukka... mundam... moothevi... naasama poiruva neee... un kudumbam urupadama poirum da.. unnaku kai velangaathu... naaku alukirum... unakku nalla saavae varathu....
Savukkam.. savukku... unakellam yeluthu tharmam irukka da... avan ivanu yeluthirukka... mundam... moothevi... naasama poiruva neee... un kudumbam urupadama poirum da.. unnaku kai velangaathu... naaku alukirum... unakku nalla saavae varathu....
Great article, I am sure as you told, INternet medium will be insufficient to write about these spiritual shysters
Why you want my name mottai? You want me to murder and kill like Dhilip sir.
NAMASKARAM Hat's off to savukku - for your well twisted presentation. Keep going until you face the consequences for your mean work. Why don't you able to see the real things. For every simple act you try to hype it as a negative presentation to show off your self. The truth is not in your savukku blog - it's in the heart.. Try to leave a life that brings harmony to your self first and to the people whom you leave with. Pranam
Post a Comment