![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh0fdgfPErAj2QLXCpIATmsmIlZn1iTAxj_sRg3nwgMx2zde0Ve02oLnXpkRnB9BnpO98E-X21D0fAXHoRXOIpgVINQqpr90OTzNWNlSPeCKYGGxR54X1DChn_uwc4z92-o8pMegA9PQI08/s400/govt+servants.jpg)
படத்தை பெரிதாக்க படத்தின் மீது அழுத்தவும்
சமுதாயத்தில் நடக்கும் எதுவுமே தங்களை பாதிக்காது எங்களுக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல், பாசாங்கு செய்து கொண்டு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால் அது அரசு ஊழியர் கூட்டமே.....
உலகம் எப்படிப் போனால் எனக்கென்ன..... என்னுடைய சம்பளம், எல்.டி.சி, ஜிபிஎஃப், சரியாக வருகிறதா என்பதை மட்டுமே சிந்தித்து, சுவாசித்து, உயிர் வாழும் சுயநலக் கூட்டமாய் இந்த அரசு ஊழியர்கள் மாறிக் கொண்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்த நிலையை மாற்றி ஓரளவுக்கு அரசு ஊழியர்கள் மத்தியில், ஒரு சமூக உணர்வை தோற்றுவிக்க தொடர்ந்து முயன்று கொண்டிருந்தாலும், குறைந்த அளவு வெற்றியைக் கூட அம்முயற்சி தரவில்லை என்பது தான் யதார்த்தம்.
அரசு ஊழியர்கள் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெறுகிறார்கள் என்ற உணர்வு துளியும் இன்றி அரசு அலுவலகத்தை அணுகும் பொது மக்களை இவர்கள் நடத்தும் விதம் என்ன என்பதை சாதி சான்றிதழுக்காகவும், மின் இணைப்புக்காகவும், பத்திரம் பதிவதற்காகவும், பொது மக்கள் நன்கு அறிவார்கள்.
லஞ்சம் கொடுக்காமல், அரசு அலுவலகத்தில் எந்த வேலையும் நடக்காது என்பதும், பெரும்பாலான அலுவலகங்களில், ப்ரோக்கர்களின் தயவு இல்லாமல், காரியம் நடக்காது என்பதும், அனைத்து பொதுமக்களுக்கும் தெரிந்த விஷயம்.
லஞ்ச ஒழிப்புத் துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கருணாநிதி, லஞ்ச ஊழலை ஒழிக்க எடுத்து வரும் நடவடிக்கைகளால், எந்த முன்னேற்றமும் இல்லை என்பதும், மாறாக, திமுக ஆட்சி நடத்தி வரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் தலைவிரித்து ஆடுகிறது என்பதும், நாடறிந்த உண்மை.
அரசு ஊழியர்கள் தங்களுக்கான உரிமைகளுக்காக போராடும் அதே வேளையில், சாமான்ய மக்களின் வரிப்பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள் என்பதையும், மக்களுக்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள் என்பதையும், மனதில் கொண்டால்,
அவர்களுக்கு கொடுக்கப் பட்டிருக்கும் இந்த ஊதிய உயர்வு பொறுத்தமானதே..... இல்லையெனில்... ....
கருணாநிதி அடிக்கும் கொள்ளையில், அவர்களுக்கும் ஒரு பங்கு கொடுக்கப் பட்டிருக்கிறது என்பதே ஆகும்.
/ஒப்பாரி/
2 comments:
துல்லியமான சமூகச்சிந்தனை. நானும் ஓய்வு பெற்ற அரசு சார் ஊழியர்தான். ஆனாலும் இப்படி ஊதியத்தை உயர்த்துவதில் எனக்கு உடன்பாடில்லை.படித்து வேலையின்றித் தவிக்கும் ஆயிரமாயிரம் இளைஞர்களைக் கொண்டிருக்கும் நம் நாட்டில் இது அக்கிரமமான தேசத் துரோகம் என்றே நான் எண்ணுகிறேன்.வாழ்த்துக்கள். இவ்வாறான சமூக சிந்தனை கொண்ட பதிவுகளை நிறைய எழுதுங்கள்..
அன்புடையீர்,
தங்கள் கருத்துக்கு நன்றி. சமூகத்தில் நடக்கும் எந்த அவலங்களைப் பற்றியும் கவலைப்படாமல், எவ்வித சமூக அக்கறை இல்லாமலும் மிகுந்த சுயநலமிகளாக இந்த அரசு ஊழியர்கள் உருமாறி விட்டதால், வரக்கூடிய தேர்தல்களில், இவர்கள் நடுநிலை இழந்து கட்சிகளுடன் சேர்ந்து தேர்தல் முறைகேடுகளில் கூட ஈடுபட வாய்ப்பு உள்ளது என்ற கவலை ஏற்படுகிறது. அரசு ஊழியர்கள் கட்சி சார்பாக தேர்தல் பணியாற்றினால் தேர்தல் எப்படி நடக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்..... ...... மிகவும் கவலையாய் இருக்கிறது.
Post a Comment